தூக்குதண்டனை கைதிகளான முருகன், பேரறிவாளன் +2 தேர்வில் அதிக மதிபெண் பெற்று சாதனை

Posted by Unknown - -




தமிழகத்தில் 12வது பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.  இதில் நாமக்கல் தனியார் மேல்நிலைப்பள்ளிகள்  முதல் 4 இடங்களையும் தட்டிச்சென்றன. எஸ்.கே.வி.  பள்ளி மாணவி சுஷ்மிதா  முதலிடம் பிடித்தார்.
 
இந்த பெற்றி பெரிய வெற்றியாக தமிழகத்தில் கொண்டாடப்பட்டாலும்... நமக்கு இதில் உடன்பாடில்லை...

இந்த கல்வி முறையில் நமக்கு உடன்பாடில்லை என்றாலும், எந்த வசதியுமில்லாமல் குடிசைகளில் சிமிலி விளக்கில் படித்து நல்ல மார்க் வாங்கினால் அவர்கள்தான் வெற்றியாளர்களாக வெளிச்சம் கருதுகிறது.

அந்த வகையில் வேலூர் மத்திய சிறையில் உள்ள ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தூக்குதண்டனை கைதியான முருகன், பேரறிவாளன் இருவரும் இந்த ஆண்டு தனித்தேர்வராக சிறையில் இருந்தபடியே படித்து 12வது தேர்வு எழுதினர்.

வணிகவியல் பாடத்திட்டத்தை முதல்நிலை பாடமாக எடுத்து தேர்வு எழுதியிருந்தார்கள்.  தேர்வு முடிவுகளை ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டு இருந்தார்கள். நேற்று தேர்வு முடிவுகளை அவர்களுக்கு சிறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


பேரறிவாளன் மதிப்பெண் விபரம்:

தமிழில் 185, ஆங்கிலத்தில் 169, வரலாறு 183, பொருளாதாரம் 182, வணிகவியல் 198, அக்கவுண்டன்சி 179 என மொத்தம் 1096 மார்க் எடுத்துள்ளார்.

முருகன் மதிப்பெண் விபரம்:

986 மார்க் எடுத்து வெற்றி பெற்றுள்ளார். இதில் முருகன் வணிகவியல் பாடத்திட்டத்தில் 200க்கு 200 மார்க் எடுத்து வெற்றி பெற்றுள்ளார்.

இவர்களைப்போல் சிறையில் இருந்தபடி தேர்வு எழுதிய மேலும் 4 கைதிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இதில் மகிழ்ச்சியான விசயம்ம் என்ன வெனில் சிறை தண்டனை கைதியான பேரறிவாளன், அங்குள்ள படிக்காதவர்களுக்கு ஆசிரியரைபோல் பாடங்களை நடத்தி வருகிறார்  என்பது குறிப்பிடதக்கது.


வாழ்த்துங்கள் இவர்களை...

2 Responses so far.

  1. கண்ணீர்கள்கள் அறுபட்டு கன்னத்தில் விழுந்து கொண்டு அறுந்தாலும்
    வாழ்த்துக்கள் சொல்லாது இருக்க முடியவி்ல்லை

    அன்புள்ள அண்ணா விடுதலை அடைந்து
    வெளியில் வரவேண்டும்.
    அத்துடன் இந்த மகிழ்சிகள் ஒரு வகையில் பெரிய மனத்தேற்றல்கள் தான்.
    வாழ்த்துக்கள் அண்ணா
    மற்றும் பகிர்ந்த- வெளிச்சம் மாணவர்களுக்கு நன்றி.

Leave a Reply