மகனின் பள்ளிக்கட்டணம் செலுத்த முடியாமல் தாய் தீக்குளிப்பு

Posted by Velicham Students - -


இலவசங்களை மட்டுமே நம்பி ஆட்சியை பிடிக்கும் திராவிட இயக்கங்கள் இரண்டும் கல்வியினை வியாபரமாக்கபடுவதை வேடிக்கை பார்க்கத்தான் செய்கிறது. 

மகனுக்கு பள்ளிக்கட்டணம் செலுத்த பணம் இல்லாமல் 
தாய் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதால்  கோவை பகுதிகளில் பதற்றம் காணப்பட்டது.. (இது எல்லோருக்கும் சாதாரண செய்தி)

 கோவை பீளமேடு மசக்காளிபாளையத்தை சேர்ந்தவர் தர்மராஜ். பஞ்சு குடோன் கலாசி தொழிலாளி. மனைவி சங்கீதா(29). தனியார் நிறுவன தொழிலாளி. நேற்று முன்தினம் இரவு சமையலறையில் சங்கீதா, மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். அவரை தர்மராஜ் காப்பாற்ற முயன்றார். இருவரும் படுகாயமடைந்தனர். கோவை அரசு மருத்துவமனையில் இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. 


இதில் சங்கீதா சிகிச்சை பலனின்றி நேற்று இரவு இறந்தார். 

சங்கீதா சாவதற்கு முன்னதாக அவர் கோவை கிழக்கு போலீசாரிடம் அளித்த மரண வாக்குமூலம்: 

           நானும், கணவரும் காதலித்து கலப்பு திருமணம் செய்தோம். இருவரும் வேலைக்கு செல்கிறோம். கடின உழைப்பாளிகள்.

கணவர் எந்த கெட்டப்பழக்கமும் இல்லாதவர். அவரது சம்பளத்தை அப்படியே என்னிடம் கொடுத்து விடுவார். இருவரின் வருமானத்தை கொண்டு மகன் தர்ஷனை உப்பிலிபாளையத்திலுள்ள ஒரு தனியார் பள்ளியில் எல்கேஜி, யுகேஜி படிக்க வைத்தோம். எங்கள் வருமானத்தின் பெரும்பகுதி பள்ளிக் கட்டணத்துக்கே சென்று விடுகிறது. 

இந்நிலையில் இந்த ஆண்டு அதே பள்ளியில் மகன் முதல் வகுப்பு செல்கிறான். ரூ.12 ஆயிரம் கட்டணம் செலுத்துமாறு கூறினர். 

சேமித்த பணத்தில் ரூ.5 ஆயிரம் செலுத்திவிட்டோம். மீதி தொகையை செலுத்த முடியவில்லை. பணத்தைக் கட்ட வழி தெரியவில்லை. இதனால் தீக்குளித்தேன்’’ என்று தெரிவித்துள்ளார். போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்

 நன்றி: நக்கீரன்

3 Responses so far.

  1. மிகவும் கண்டிக்கதக்கது

  2. நல்ல வசதியுடனும், தரத்துடனும் கூடிய அரசுப் பள்ளிகள் இருக்கையில் தனியார் பள்ளிகளை நோக்கி ஓடும் மனநிலையை உருவாக்கிய ஊடகங்களும், பொதுப்புத்தியுமே கண்டனத்திற்குரியவை. மடத்தனமாக அந்தப் பள்ளியில் சேர்க்காவிட்டால் எல்லாமே பாழ் என்பதைப் போல மனநிலையைக் கொண்ட பெண்தான் கண்டனத்திற்குரியவர். இதில் எளிய மக்களுக்கும், நல்ல கல்வியைக் கொண்டு சேர்த்திருக்கும் திராவிட இயக்கங்களை இழுத்து இழித்துப் பேசுவது கண்டனத்திற்குரியது. கல்வி வியாபாரமாகியிருக்கிறது என்பதை நான் கண்டனத்துடன் ஒப்புக் கொள்கிறேன். ஆனால், அரசுப்பள்ளிகளை புறக்கணித்தது யார் குற்றம்?

  3. அரசுப் பள்ளிகளின் லட்சணம் தெரியாமல் பேசக் கூடாது.

Leave a Reply