வெளிச்சம் குறித்த கேள்விகளுக்கு?

Posted by Velicham Students - -


1 ,மாணவர்களுக்கு நேரடி  பண உதவி செய்வது எப்படி  ? அது அவர்களை சென்று அடைவதை நாங்கள்  எப்படி உறதி செய்வது?
இதுவரையிலான நடைமுறையில் மெய்யாக பணம் கட்ட முடியாமல் உதவி என்று நாடி வரும் மாணவர்களுக்கு கட்டணம் கட்டுவதற்காக உங்களை போன்ற உள்ளங்களை நாடி, மாணவர்களது சிக்கலை எடுத்துச் சொல்லி, உதவ செய்ய ஒப்புக் கொள்ளும் நபர்களிடம் நேரடியாக கல்லூரியின் பெயரிலேயே வரைவோலையாகவோ(DD), காசோலையாகவோ(Cheque) வாங்கி கல்லூரிக்கே நேரடியாக செலுத்திவிடுவதையே இதுவரையிலான நடைமுறையாக கொண்டுள்ளோம். வெகுச்சில நேரங்களில் பணமாகவே சில அன்பர்கள் தருவதுமுண்டு.

பல சந்தர்ப்பங்களில் உதவும் உள்ளம் கொண்ட நபர்கள் தங்கள் ஆற்றலுக்குட்பட்டோ, சில நேரங்களில் மீறீயோ உதவினாலும் கூட மாணவர்களின் கல்லூரி கட்டணத்திற்கான பணம் போதாமையாக இருந்திருக்கிறது. அவ்வேளைகளில் மெரீனா கடற்கரையிலும், சில கல்லூரிகளிலும் அனுமதி வாங்கி உண்டியல் ஏந்தி பணம் சேகரித்துதான் கட்டணம் கட்டியிருக்கிறோம்.

உதவி தேவையான மாணவர்களை நாங்களே உங்களுக்கு  அடையாளப்படுத்துகிறோம்.

வெளிச்சம் நிர்வாகத்தின் பொருட்டு…………
மேற்கண்ட நடைமுறையை வாசித்தவர்களுக்கு, வெளிச்சத்திற்கு எங்கிருந்து பணம் வருகிறது? என்ற கேள்வி எழக்கூடும், இதுவரையில் வெளிச்சத்தை நம்பி வெளிச்சத்தின் நிர்வாகத்திற்கென தங்களால் ஆன அரிசியோ, மின்விசிறியோ இன்னபிற அலுவலகம் நடப்பதற்கான அடிப்படைகளையோ எம்மை நம்பும் தோழர்கள் உதவி செய்திருக்கின்றனர்.
ஆனால், இந்த உதவும் கரங்களுக்கு சலிப்பு வரும். வெளிச்சத்தின் உயரிய நோக்கத்திற்காக தம்மை அர்பணித்துக் கொண்ட மாணவர்களுக்கு தங்களது அன்றாட தேவை, அலுவலக நடைமுறைக்கான தேவையும் போன்றவையும் இருக்கும் என்பதை தாங்கள் உணர்வீர்கள் என்று நம்புகிறோம்..

அதோடு, மாணவர்களில் சிலர் திடீரென்று கல்லூரிக்கு கட்டணம் செலுத்த பணம் கேட்டு வந்து நிற்கும் சூழலில் உடனடியாக உதவி செய்ய கூடியவர்கள் அகப்படாத விட்டால், அம்மாணவர்களுக்கு வெளிச்சம் உதவி செய்ய முடியாமல் போவதற்கான அத்தனை வாய்ப்புகளும் உண்டு. ஆக, வைப்பு நிதியாக வெளிச்சத்தையும், வெளிச்சத்தின் சமூக நோக்கத்தையும் நம்பி உதவி செய்யும் அன்பர்களின் நம்பிக்கைக்கு மாறாக வெளிச்சம் ஏதும் செய்துவிடப் போவதில்லை என்றாலும், சான்றாக வெளிச்சத்தின் மாதந்திர செலவுக் கணக்கு இணையத்திலேயே வெளியிடப்படும்.

எம்மை நம்பாத சமூகத்திற்காக முழு அர்ப்பணிப்போடு எத்தனை காலம் பணி புரிய முடியும் என்பதனையும் ஒரு கேள்வியாக தமக்கு  தாமே  இதை வாசிக்கும் நண்பர்கள் கேட்டுக் கொள்ளுங்கள்.

அரசு சாரா நிறுவனங்கள் என்ற பெயரில் சமூகத்தில் உலவி வரும்  அமைப்புகளுக்கு, சமூகத்தை சீரழிவு பாதை நோக்கி நகர்த்து கொண்டு செல்லும், மக்களின் வளங்களை சுரண்டும் நிறுவனங்கள்தான் உதவி செய்கின்றன.

எ.கா: தாமிரபரணியில் தண்ணீரை உறிஞ்சு நச்சுப்பொருளை சேர்த்து ஊடக வெளிச்சத்தில்  விளம்பரப்படுத்தி மக்களின் நலனுக்கெதிராக செயல்படும் நிறுவனங்களிடமும்  உதவி பெறும் நிறுவனங்களுக்கு சமூகத்தில் அனுமதி உண்டு.

ஆனால், அவை எந்தளவிற்கு மக்களின் நன்மை என்ற இலக்கில் நேர்மையாக இயங்கும் என்பதை தோழர்கள் சிந்தனைக்கே விட்டு விடுகிறோம்.

வெளிச்சம் எந்த பன்னாட்டு நிறுவனங்களிடமும் பணம் வாங்க போவதில்லை. மக்கள் நலனை நேசிக்கும் நபர்களை நம்பி களத்தில் இறங்கியிருக்கிறோம்.

2 , வங்கி கணக்கு என் ? இனைய பண மாற்றம் செய்ய தேவையான code No ? 
Account number:  31654850476
Branch Name: STATE BANK OF INDIA, PERAMBUR, CHENNAI
IFSC Code: SBIN 0002256
SWIFT Code: SBININBB458
3 , உங்களையோ ,மாணவர்களையோ நேரில் சந்திப்பது எப்படி ? எங்கு ? (சென்னையில் இருப்பவர்கள் )

எம்மை அலுவலகத்திலேயே சந்திக்கலாம். முகவரி கீழே தரப்பட்டிருக்கிறது.
39/2, Foxen Street, Near Perambur Carriage Works Station, Perambur.
அலுவலகத்தில் தங்கி படிப்போடு, மாணவர்களுக்கு உதவி செய்வதில் அலுவலத்திலேயே தங்கி ஈடுபடுத்திக் கொண்டிருக்கும் மாணவர்களை அலுவலகத்திலேயே சந்திக்கலாம்.

மற்ற மாணவர்களை கல்லூரியிலோ அல்லது சந்திப்பை சென்னையிலே நிகழ்த்த விரும்பினால் சென்னைக்கு அலுவலத்திற்கு அழைத்தே சந்தித்துக் கொள்ளலாம்.

கைப்பேசியில் அழைக்க விரும்புபவர்கள்: +919698151515

4 , ஒரு மாணவன் அல்லது மாணவியின் படிப்பு செலவு முழுவதையும் ஏற்று கொள்ள முடியுமா   ? அப்படி செய்வதனால் , எந்த படிப்புக்கு எவ்வளவு பணம் தேவை இருக்கும் என ஒரு பட்டியல் கிடைக்குமா(estimation ) ?
கண்டிப்பாக ஏற்றுக் கொள்ளலாம், இதில் முரண் இருக்க என்ன வாய்ப்பிருக்கிறது.  பட்டியலை பொறுத்தளவில் அரசு நிர்ணயித்திருக்கிற தொகை ஒன்றிருக்க, கல்லூரியில் ஒரு கட்டணத்தை வசூலிக்கிறார்களே….இந்த முரண்களையும் சேர்த்தே கேள்வி கேட்பதற்குத்தான் சமூக பொறுப்புள்ள மாணவர்களை உருவாக்க முயற்சி செய்து வருகிறோம். உதவி என்று  வரும் மாணவர்களை நேரடியாகவே உங்களுக்கு அறிமுகப்படுத்தி வைக்கிறோம், நீங்கள்  வெளிச்சத்தின் மூலம் அவர்களுக்கு செய்ய நினைத்த உதவி அவர்களிடம்  சரியாக போய் சேர்ந்திருக்கிறதா? என்பதனை சரி பார்த்துக் கொள்ளலாம்.
மேற்கொண்டு கேள்விகளுக்கு: velicham.students@gmail.com

தொடர்புக்கு:
வெளிச்சம்  செரீன்            : 9500162127
வெளிச்சம் ஆனந்த் குமார் : 9894969118
வெளிச்சம் மாரி                 : 9841248440

Leave a Reply