அறுபதாயிரம் மாணவர்களை தோற்கடித்த மாணவிகள்

Posted by Unknown - -

பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவ, மாணவிகளின் முடிவுகள் இன்று காலை வெளியிடப்பட்டன. இதில் மொத்தம் தேர்வு எழுதியவர்களில் 6 லட்சத்து 15 ஆயிரத்து 590 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் தேர்வு எழுதிய மாணவர்கள் 58 ஆயிரத்து 887 பேர் பெயில் ஆகியுள்ளனர். மாணவிகள் பெயிலானது மொத்தம் 42 ஆயிரத்து 63 பேர் . கடந்த ஆண்டை தேர்ச்சி விகிதம் மிதமாக உயர்ந்திருந்தாலும், மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை விட மாணவிகள் தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது.

இன்றயை ரிசல்ட்டில் மாணவியே முதலிடத்தை பிடித்து அபார சாதனை படைத்துள்ளார். விழுப்புரம் கள்ளக்குறிச்சியை சேர்ந்த மாணவன் வேல்முருகன் இரண்டாமிடத்தை பிடித்தார். 3 வது இடத்தை மாணவ, மாணவிகள் 4 பேர் பிடித்துள்னர்.

3 வது இடத்தை பிடித்த 4 பேர்: வித்தியா சகுந்தலா ( எஸ்.‌ஜே.எஸ்.எஸ்.,‌ஜே மெட்ரிக்., பள்ளி , மகாராஜநகர் , திருநெல்வேலி) ரகுநாத் (டி.எச்.எம்.என்.யு., மேல்நிலப்பள்ளி முத்துதேவன் பட்டி பெரியகுளம்), சிந்துகவி (குறிஞ்சி மெட்ரிக்., மேல்நிலைப்பள்ளி நாமக்கல்) , பி.எஸ்., ரேகா (ஸ்ரீ விஜய்வித்யாலயா மெட்ரிக்., மேல்நிலப்பைள்ளி ஓசூர்). இந்த நான்கு பேரும் ஆயிரத்து 186 மார்க்குகள் பெற்றுள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த ஒசூர் விஜய்வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ரேகா என்பவர் ஆயிரத்து 190 மார்க்குகள் பெற்று முதலிடத்தை பிடித்துள்ளார். கணிதத்தில் 2 ஆயிரத்து 720 பேர் 200க்கு 200 மார்க்குகள் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

பாடவாரியாக 200க்கு 200 மார்க்குகள் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை விவரம் வருமாறு: இயற்பியல் : 646, உயிரியியல்: 615 , வணிகவியல்: ஆயிரத்து 166, வேதியியல்: ஆயிரத்து 243 பேர். கம்ப்யூ., சயின்சில் 223 பேர், தவாரவியலில் 14 பேர் விலங்கியலில் யாரும் 200க்கு 200 மார்க்குகள் பெறவில்லை.

தமிழ் மொழிப் பாடத்தில் முதல் 3 இடங்களை பிடித்தவர்கள் பட்டியல் : விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி .கே.டி., அகடெமி மெட்ரிக்குலேஷன் பள்ளி மாணவர்கள் தமிழில் மாநில அளவில் முதல் 3 இடத்தையும் பிடித்து சாதனை படைத்துள்ளனர். மாணவன் கோகுலகிருஷ்ணன் 198 மார்க்குகள் பெற்றுள்ளார். அவரது மொத்த மதிப்பெண் 1172. 2வது இடம் பிடித்த மாணவர் எஸ். மகேஸ்வரன் 198 மதிப்பெண்கள் தமிழில் பெற்றுள்ளார். அவரது மொத்த மார்க்குகள் 1156. 3வது இடம் பிடித்த மாணவர் தினகரன் . எம். தமிழில் 198 மார்க்குகள் பெற்றுள்ளார். அவரது மொத்த மதிப்பெண் 1144 ஆகும்.

இன்று வெளியான பிளஸ் 2 தேர்வில் முதலிடத்தை மாணவியும், இரண்டாவது இடத்தை மாணவியும் பிடித்தனர். வழக்கம்போல் மாணவிகளே முந்தி நிற்கின்றனர். இந்த முறை மாணவன் 2 வது இடத்தை பிடித்துள்ளார் . ஆனாலும் தேர்வு எழுதிய 3 லட்சத்து 33 ஆயிரத்து 84 மாணவர்களில் 2 லட்சத்து 74 ஆயிரத்து 197 பேர் தேர்ச்சி ( 82. 3 சதம் ) பெற்றுள்ளனர். பெயிலான மாணவர்கள் 58 ஆயிரத்து 887 பேர். மாணவிகளில் தேர்வு எழுதிய மொத்தம் 3 லட்சத்து 83 ஆயிரத்து 459 பேர்களில் 3 லட்சத்து 41 ஆயிரத்து 396 (89.0 சதம்) பேர் வெற்றி பெற்றுள்ளனர்.பெயிலான மாணவிகள் 42 ஆயிரத்து 063 பேர். ஒட்டுமொத்த தேர்ச்சி சதவீதம், கடந்த ஆண்டை(85.15%) விட ( 85.9 சதம்) அதிகரித்துள்ளன

தமிழகம் மற்றும் புதுச்சேரியில், மார்ச் 2 முதல், 25ம் தேதி வரை, பிளஸ் 2 தேர்வுகள் நடந்தன. பள்ளிகள் சார்பில், ஏழு லட்சத்து, 23 ஆயிரத்து, 545 மாணவ, மாணவிகளும், தனித்தேர்வு வகையில், 57 ஆயிரத்து, 86 மாணவர்களும் தேர்வெழுதினர். ஆயிரத்து,890 மையங்களில் தேர்வுகள் நடந்தன.

மாணவர்கள் ஆவலுடன் எதிர்பர்த்த இந்த முடிவுகளை இன்று காலை 9.00 மணிக்கு கல்வி துறை இயக்குனர் வசுந்தராதேவி வெளியிட்டார். இதே நேரத்தில், அந்தந்த பள்ளிகளில், மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளும் ஒட்டப்பட்டன.

Leave a Reply