Archive for 2011


இன்று யூத மக்களின் அடிமை விலங்கை உடைத்தெரிந்து உலகத்தில்  அவமான  சின்னமாயிருந்த  சிலுவையை புனிதமாக்கிய ஏசு கிருஸ்து பிறந்த  தினம், உலகின் எல்லா மூலையிலும் கொண்டாட்டங்கள் கோலாகலமாய் அரங்கேறிக்கொண்டிருக்கிறது ஒரு பக்கம். நீங்கள் உங்கள் குடும்பத்தோடு சந்தோசமாயிருக்கும் சமயத்தில்  எல்லா பண்டிகைகளுக்கும் போல உங்களுக்கும் ஒரு வேண்டுகோள் வைக்கிறோம்.

நாங்கள் பணமில்லாமல் கல்லூரி படிப்பை இழக்கயிருந்த முதல் தலைமுறை ஏழை மாணவர்கள், இப்போது உயர்கல்வி என்பது ஒரு சிலருக்கு மட்டும் கிடைத்தால் அது இந்த தேசத்தின் சாபம் எனும் நோக்கத்திற்க்காக ஏழை மாணவர்களின் உயர்கல்விக்காக உழைக்கும் இயக்கம் தான் வெளிச்சம் மாணவர்கள் எனும் அமைப்பு..

மாணவர்களின் உயர்கல்விகாக 7 வருட களப்பணியில் ஒரு  மாணவனில் இருந்து துவங்கிய எமது கல்வி பயணம் இன்று 615 யை கடந்து நிற்கிறது. நிச்சயம் இது நீளுமே தவிர நின்று விடாது...

நாங்கள் படித்த (மார். 19:10)   சமூக, பொருளாதார, அரசியல் ஒடுக்குதலால் வெளிக்கு தெரியாமல் அடக்கப் பட்டிருந்தவர்களை மீட்கவே கிறிஸ்து இவ்வுலகில் பிறந்தார் என்பதாகும்.

இந்த தினத்தில் மனிதனேயமுள்ளவர்களாக எங்கள் பயணத்தில் நீங்களும் பங்கெடுத்துக்கொள்ள  எங்களை போன்ற மாணவர்களுக்கு உதவிடுங்கள்..

உதவி செய்ய நினைப்பவர்கள் :  https://spreadsheets.google.com/viewform?formkey=dFR0MFJtbllsNUNrRk9CTG82ZlJxOWc6MQ இந்த இணைப்பிலும் தெரிவிக்கலாம்  
அல்லது 

மின்னஞ்சல் அனுப்பலாம்.

நன்றியுடன்
கல்விக்கான களப்பணியில்
வெளிச்சம் மாணவர்கள்

கடந்த 13 அன்று சரியாக 11 மணியளவில் வேலூர் வாலாஜா நகராட்சி அரங்கத்தில் பெண்கள் சிசுவை  கொல்வதற்காக தன் மனைவியிடம் ஒருவர் தகறாறு செய்து கொண்டிக்க  அவன் காலை பிடித்து குழந்தையை  உயிரோடு இருந்து போகட்டும் என கெஞ்சி கதறி கொண்டிருந்தாள் அவனின் மனைவி..

அப்போது அங்கே ஓடி வந்த பெண்  எங்க வீட்டு மாடு பசு கண்ணு போட்டிருக்கு, எங்க வீட்டுல ஆடு பொட்ட குட்டி போட்டிருக்கண்ணு சொல்ல பக்கத்து வீட்டு ரஞ்சிதம்  பொம்பளை பெத்துட்டான்னு வெசன த்தோடு நின்றுகொண்டிருக்க அடுத்தடுத்த நிகழ்வுகள் பெண்களுக்கு எதிரான எதார்த்தமான அடக்கு முறைகளில் விளக்க அந்த நிகழ்வு . என் தங்கம் என்னுரிமை விளம்பரம் முதல் எல்லாவற்றையும் அம்பலபடுத்தியது..

தினம் தினம் அரங்கேற வரிசையாக உட்கார்ந்திருந்த பெண்கள் பொம்பளை சிரிச்சா போச்சாம் புகையிலை விரிஞ்சா போச்சுன்னு பழமைமொழியை சொல்லி எங்க வாய கட்டிட்டாங்கன்னு ஒரு பொண்ணு கத்த, படி தாண்டினா பத்தினியில்லைன்னு சொல்லி வீட்டுகுள்ளேயே போட்டிங்க அதையும் மீறி  வெளியில கிளம்பினா எங்கள வேசின்னு சொல்லுறீங்க...

சாப்பாட்டுல கூட பெண்களுக்கு வித்தியாசம் காட்டுறீங்க உங்களையறியாமலே பெண்பிள்ளைக்கு பாசம் வைப்பதில் கூட ஓரவஞ்சனை செய்றீங்க... பாசத்துக்கு ஏங்கும் ஒரு பொண்ணு பேசனாகி போன காதலுக்கு மயங்கி ஐஞ்சி நிமிச பழக்கம் அடுத்து பத்தாவது நிமிசத்துல தன்னை இழக்குற தொலைக்காட்சியும்,சினிமாவும் சொல்லுவதை நிஜமென நம்பி காதல் போதையில் மயங்கி சீரழிவது தான் பெண்களுக்கான நாகரீகமா இதை உருவாக்கியது யார்?

வரதட்சனை கொடுத்து கல்யாணம் செய்து கொண்ட பெண்ணொருத்தி அதன் பின்னால் அனுபவிக்கும் கொடுமைகளை அனுபவித்து அழுது நிற்க  மெல்லிய ஒரு குரல்....

 பூமுடிச்சி பொட்டு வச்சி பொன்னகையும் போட்டுவச்சு கல்யாணம் முடிச்சி வச்ச அம்மா நான் கண்கலங்கி திரும்பு றேனே அம்மா சீதனமா நீ எனக்கு நூறுவகை தந்தாலுமே பேராசை பிடிச்ச கூட்டம் அம்மா என்னை பிச்சு புடிங்கி எரியுறாங்க அம்மா
                                    எனும் வரிகள் ஒலிக்க தங்க விலை தினம் தினம் ஏறுது கையல இருக்கு தங்கம் கவலை விடுடா சிங்கம்னு விளக்கும் விளம்பரத்துல விஜயும்,விக்ரமுன்னு எல்லா நடிகர்களும் போட்டி போட்டுகிட்டு  நடிச்சி தங்கம் வாங்கணும்கிறாங்க, இதுல ஒருபடி மேல போன பிரபு என் தங்கம் என்னுரிமைன்னு சொல்லி முடிக்கும் விளம்பரத்துக்கு அடுத்ததாகவே அதே விளம்பரத்தில் அடகு வைப்பதற்கு வழி சொல்லும் முத்தூட் பைனாஸ் விளம்பரம்..  தங்க புரட்சியை டாராக்கினார்கள் வெளிச்சம் மாணவர்கள்.. அந்த காலத்துல  யார்ரா வரதட்சணை கொடுத்து கல்யாணம் பண்ணுனா  பொம்பளைங்க எல்லாரும் வரதட்சனை கொடுத்து கல்யாணம் செய்யமாட்டோனா என்ன பண்ணுவாங்க இந்த ஆம்பளைங்க புதிய விசயத்தை பற்றவைக்க நமக்கு பகீர்ன்னு தூக்கி வாரி போட்டது..

பொம்பளை பிள்ளைகிட்ட எந்த விசயத்துலயும்  விருப்பமிருக்குதான்னு கேக்குறதும் முடிவெடுக்குற உரிமை அவர்களுக்கு கொடுக்கறதே இல்லை அதுவும் வீட்டுல சின்ன பையன் தன்னோட அம்மாவை உனக்கு ஒன்னு தெரியாதும்மா கம்முனு கிடன்னு சொல்லுறதும் எதார்த்தம் ஆனால் பெண்களுக்கு தெரியாமலேயே நீ அடிமையாக கிடக்கிறாய் எனும் அடிமை விலங்கு பூட்டப்பட்டிருக்கிறது இதை எதார்த்தமான விசயங்களில் கூட காணலாம் குறிப்பாக பெம்பளைபுள்ள பெறப்புல இருந்து இறக்குற வரைக்கும் எங்களை ஒதுக்குறதும், அடிக்கறதும்,கொடுமை படுத்த படுறதும், தொடர்கதையாக கிடக்கிறது இந்த கொடுமைகள் இன்னைக்கு வன்கொடுமைகளாக மாறி நிற்கிறது, இதை மாற்றிட பெண்ணினமே விழித்தெழு சரித்திரம் உன் காலடியில் என குழு பெண்கள் ஒலிக்க ஒவ்வொரு பெண்ணாக  

நான் தலைமைத்துவத்துடன் இருப்பேன்,
நான் சுய சிந்தனையுடன் இருப்பேன்
நான்  பெண்ணான எனது வலியை ஆண்களுக்கு உணர்த்துவேன்
நான்  விழிப்புணர்வுடன் இருப்பேன்
நான்  நாட்டை முழுமையாக ஆளுவேன்
நான்  என் திறமைகளை வெளிப்படுத்துவேன்
நான்  ஒழுக்கத்துடன் இருப்பேன்
            என்ற சொல்ல பெண்கள் விழித்தெழுந்தால் சரித்திரம் உண்டாகும்.... என முடிவடைந்தது அந்த நிகழ்வு...

தொடர்ந்து பேசிய வெளிச்சம் செரின் அவர்கள் இந்தியா நம் தாய் நாடுங்குறோம் நாம பெத்த தாயை மதிக்கறோமான்னு யோசிச்சு பாருங்க ஒவ்வொரு பெண்ணும் இந்த சமூகத்தை உருவாக்குகிற மாபெரும் சக்தி அவர்களை பூஜை செய்ய சொல்ல குறைந்த பட்சம் உணர்வுகளுக்கு அங்கிகாரம் கொடுங்கண்ணு சொல்லுறோம் என்று பேசி முடித்ததும்..

பார்வையாளர்கள் வரிசையிலிருந்து மேடைக்கு வந்த சுகந்தி என்கிற பெண் இது நாள் வரை  நாளு பேருக்கு முன்னால நான் பேசியது கூட இல்லை இப்பதான் மைக்கே பிடிச்சி பார்க்கிறேன்னா பாருங்க கண் கலங்கிய படி தன் வலிகளை பதிவு செய்ய ஆண்களும் உணர்ந்தார்கள்..

இறுதியாக பெண்களின் தலைமைதுவம் &  பெண்கள் அனுபவிக்கும் வன்கொடுமைகள் என்ற தலைப்பில் வெளிச்சம் மாணவர் அமைப்பின்  விழிப்புணர்வு  நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வேலூர் நகராட்சியின் 8 ஆண் கவுன்சிலர்கள் 4 நாளு பெண் கவுன்சிலர்களும், சேர்மென்,டி.எஸ்.பி, உட்பட்ட பலரும் கலந்து கொண்டார்கள். அவர்கள்  ஆண்கள் இது வரை எங்களை அறியாமல் நடந்து கொண்டிருந்த தவறான புரிதலுக்கு நாங்கள் வருந்துகிறோம், இனி என் மகளை என் மனைவியின் உணர்வுகளுக்கு நிச்சயம் மதிப்பளிப்பேன்னு வருந்தி சொல்ல  மாற்றம் அங்கிருந்தே ஆரம்ப மானது...
  
நிகழ்ச்சி தொகுப்பு :
வெளிச்சம் நந்தினி..





இந்த பதிவை பற்றி உங்கள் விமர்சனம் வரவேற்கிறோம்..
ஏன்னா இது எங்களுக்கான பணியல்ல சமூகத்துக்கான பணி..
உங்கள் விமர்சனம் எம்மை பக்குவ படுத்தும்..

நாம் இணைவோம்: படிவம்



பாராட்டு
முதன் முதலில் மைக் பிடித்து பேசும் பெண்

இசைப்பயணம்
பயணங்கள் முடிவதில்லை

         சமூக அவலங்களை தீர்ப்பதும் சமூகத்திற்காக வேலை செய்து என்பது சலுகைகளாலோ அல்லது நாற்காலிகள் மீது அமர்ந்து கொண்டு கனவு காண்பதால் சாத்தியபடும் என்று கனவுகண்டால் உங்கள் கற்பனையை தூக்கியெறியுங்கள்..
மனித உரிமைகள் தினமான 10.12.11 அன்று பாண்டிச்சேரி பல்கலை கழக சமூக பணித்துறை மாணவர்கள் ஒருங்கிணைத்த பெண்கள் உரிமை பற்றிய விழா  விழுப்புரம் மாவட்டம்  கொடுர் கிராமத்தில்  நடந்தது. விழாவின் சிறப்பு அழைப்பாளரான வெளிச்சம்  செரின் அவர்கள்  தனக்கு வழங்கப்பட்ட தலைப்புகளின் கீழ் பெண்கள் உரிமை,கிராம மக்களின் வாழ்நிலை, தாழ்த்தப்பட்டோர் உரிமைகள் ஆகிய தலைப்புகளில் மூன்று மணி நேரத்திற்கு மேல் உரையாற்றினார். செரின் அவர்கள் பேசி முடித்த பின் இறுதியாக பேசிய பல்வேறு மாநிலத்தை சேர்ந்த மாணவர்கள் பெரும்பாலானவர்கள் சமூகத்தை பற்றிய தங்களின் தவறான புரிதலை மாற்றிகொள்வதோடு இதுவரை கொண்டிருந்த தவறான புரிதலுக்கு வெட்கப்படுவதாகவும் நிகழ்ச்சியின் இறுதியில் பேசியவர்கள் இனி சமூகத்திற்கு வெறும் விளம்பரத்திற்காகவும்,சம்பளத்திற்காக மட்டும் பணியாற்றாமல் சமூகத்திற்கு உண்மையாக உழைப்போம் என மனமுவந்து பேசினார்கள்...

(வெளிச்சம் செரின் அவர்களின்  ஆங்கில உரையை தங்களுக்கு தமிழில் மொழிப்பெயர்த்து வழங்குவதில் மகிழ்கிறோம்..)
                                  
சமூக மாற்றம் குறித்து பேசுபவர்கள் முதலில் தன்னளவினான மாற்றத்திற்கு முதலில் தயாராகவேண்டும் அப்படி மாறலைன்னா இந்த தலைப்புகள் எல்லாம் வெறும் பேச்சாவேதான் இருக்கும் இங்கே நடக்கிற போராட்டங்களை போல் இங்கிருக்கிற சில தலைவர்கள்  ஊழலுக்கு எதிரா குரல் கொடுக்கிற இன்றைய காந்திகள் மாறி போராடுரவங்க பெரும்பாணமையான மக்களின்  பிரச்சனைகளை குறித்து பேச மறுப்பது காலகாலமாக இந்தியாவிலிருக்கிற இருக்கிற பிரச்சனை..

 குறிப்பா தன்னோட வீட்டுல தனக்கு பிரச்சனை வந்தா பிரச்சனையாகவும் பக்கத்து வீட்டுல பிரச்சனை வந்த நமக்கு ஏன் வம்புன்னு வீட்டுக்குள்ள போய் கதவடைத்து கொள்கிற நிலை சமீப காலமாகதான் அதிகரித்துள்ளது. குறிப்பாக தமிழர்களுக்கான பிரச்சனையானாலும், கூடங்குளப்பிரச்சனை,முல்லை பெரியாறு பிரச்சனையானாலும் மக்கள் தங்களுக்கான  பிரச்சனையாக இன்னும் உணரவில்லை அப்படி உணருவதை சிலர் விரும்பவில்லை,  தலைவர்களெல்லாம் தனக்கு பின்னால் ஒரு கூட்டம் வருனும் நினைக்கிறாங்களே தவிர மக்களிடம் போய் பிரச்சனைகளை விளக்கி  மக்களை உசுப்பி ஒரே குடையின் கீழ் நிறுத்தி போராட வைக்காதது தான் நமக்கு வேதனையளிக்கிறது..

கிராம வாழ்வு முறை மற்றும் சாதியம் குறித்து பேசியதாவது...

   இந்த நாட்டின்  பெரும்பாண்மையான  பகுதி கிராமங்களை கொண்டது விவசாயமே நவீன மயமாதலில் எல்லாம் தொலைத்துவிட்ட நாம் விவசாயத்தையும் இழந்துவிட்டோம் அதுபோல் நாம் இங்கு நிலங்களை போல உரிமைகளும் சிலரின் பாக்கெட்டுக்குள்  கிடக்கிறது

மனித உரிமைன்னா என்னான்னே தெரியாத நபர்கள் இன்னமும்  இருக்கிறார்கள்  ஆனால் அவர்களுக்கு எல்லா நடிகர்கள்  பத்தியும் தெரிந்திருக்கும்,  இன்னைக்கு கிராமத்தில  இருக்கிற சூழலே வேற   மக்கள் தங்களோட தினசரி வாழ்க்கைகே ரொம்ப கஸ்ட போது மற்ற பிரச்சனைகளை காது கொடுத்து கேட்பதோடு நிறுத்தி கொள்கிறார்கள். இது ஒரு பக்கம் நகரத்தில் வீடுகளாக பிரிந்து கிடப்பவர்கள் கிராமங்களில் சாதிகளாகவும் பிரிந்து கிடக்கிறார்கள். கல்வியிலும் சமூக பொருளதர சமத்துவம் கிடைக்காதவரை  அனைவரும் சமம் என்பது வார்த்தையாகவே தான் இருக்கும்.

அதனால் தான் சமூகத்திற்கு வேலை செய்பவர்களின் பணி இன்னும் கடுமையாக உள்ளது உண்மையான மாற்றத்தை கொண்டுவருவதுதான் நம் வேலை அதுவரை தூக்கமிருக்க கூடாது.

பெண்ணுரிமை குறித்து பேசியதாவது..

 சமூக மாற்றத்தில் பெண்களின் பங்கு மிக அவசியம் ஆனால் இந்திய சூழலில் பெண்களை ஒரு ஜடப்பொருளாய் பார்க்கும் மனோ பாவம் நாகரீக சூழலிலும்  இன்னும் மாறவில்லை இன்னும் ஒருபடி மேலே சொல்ல போனால் படிக்கிற பசங்க  கூட பெண்களை வெறும் போதை பொருளாய் பார்க்கிற  மனநிலையில் இருப்பதுதான் கேவலத்துக்குறிய விசயம். ஒரு பொம்பல புள்ளையோட  ஓரப்பார்வைக்காக  கொலை  செய்யும் அளவிற்கு போதையில் கிடக்கிறார் என்றால் இவர்களின் எதிர்காலத்தை பற்றி நினைச்சா நெஞ்சம் பதறுகிறது..
இந்த சூழல் சின்ன வயசுல குடும்பத்துல  சண்டையின்னா அப்பா அம்மாவை அடிக்கறதை அப்பாவின் வீரமாகவே பார்த்து பழகுற பசங்களுக்கு தான் காதலிக்கும் பெண் அல்லது திருமணம் செய்து கொள்ளும் பொண்ணு வாய்திறக்காகமல் உடல் சுகத்தை மட்டும் தரும் வெறும் சதைக்கூடா பார்க்கிறத முதல்ல மாத்திக்கோங்க பொம்பளைங்களும் மனுசிங்கதாண்னு நினைங்க..

பழைய வரலாற்றின் கொஞ்சம் புரட்டினா சமூகமாற்றதுல பெண்களின் பங்கு நிறைய இருந்திருக்கு ஆனால் பெண்கள அடக்க ஒடுக்கமா ஊட்டுல சோறாக்க, அடுப்பூத விட்டுட்டு இப்ப எல்லாத்தையும் வெறும் வாந்தியெடுக்கிற இந்த படிப்பை படிக்க வச்சி எல்லா பொண்ணுகளுக்கு சுதந்திரம் கிடச்சிடுச்சுன்னு டிவியில பேசுறாங்க. இதுதான் சுதந்திரமா ஆணுக்கு கொடுக்கப்படுகிற உரிமைகள் இங்கு பெண்களுக்கு கொடுக்கப்படுகிறதா கொஞ்சம் யோசித்து பார்த்தால் தெரியும் இல்லவே இல்லை.  எல்லா வீட்டுயும் செல்போன் இருக்கு ஆனா டாய்லட் இருக்கான்னு பார்த்தா இல்லை ஒரு கிராமத்து பொண்ணு டாய்லெட்  போகனும்னா எப்படா பொழுது போகும்னு காத்திருக்கனும் இந்த கொடுமை  எல்லா சாதி பொண்ணுக்கும் உண்டு பெண்களுக்கான உரிமைகளை பறிப்பதில் எல்லா  சாதி ஆண்களும் ஒரே மாதிரிதான் இருக்கிறார்கள். இதில் பெண்களுக்கு தாங்கள் பாதிக்கபடுவதே தெரியாமலிருப்பதுதான் வேதனைக்குறியது அதற்காக எல்லாத்தையும் தூக்கி மிதிங்க பெண்களேன்னு சொல்லும் அளவுக்கு நான் கேவலமானவள் அல்ல..

வலிகளை உணர்ந்தவர்களால் மட்டுமே  வழிகாட்ட முடியும் வலியை உணர்ந்த, அடுத்த சமூகத்தை படைக்கிற ஆற்றல் பெற்ற பெண்ணினம் இப்படியே கிடப்பதுதான் வலிக்கிறது.. ஆக இந்த சமூகத்திற்கு வேலை செய்ய துடிக்கிற அல்லது சமுத்திற்காக உழைக்க படிக்கிற நீங்கள் ஒரு சாதாரண என்.ஜி.ஓ வாதிகளாக யாரிடமோ பணம் வாங்கிகிட்டு வேலை செய்கிற நபர்களாய் மட்டுமில்லாமல் பெண்களை தன்னளவில் உண்மையாகவே மதிக்கிற,சமூகத்தில் சாதியை கடந்து மனிதர்களை நேசிக்கிற நபர்களாக மாறாமல் விளம்பரத்துக்காக, நான் இதெல்லாம் பண்ணினேன்னு போஸ் கொடுத்து போட்டா எடுத்துக்கலாம் அது எல்லாம் வெறும் படமாதான் இருக்கும்...

இழந்த உரிமைகளை இலவசமாகவோ அல்லது சலுகையாகவோ பெறமுடியாது போராடிதான் பெறமுடியும்  ஆம் ஒட்டு மொத்த சமூக மாற்றமென்பது தனிமனித மாற்றத்திலிருந்துதான் ஆரம்பமாகிறது..

உரை தொகுப்பு
வெளிச்சம் மாணவர்கள்

மக்களுக்காக உழைக்க நீங்கள் ரெடியா நாம் இணையலாமே...  விண்ணப்பம்







வெளிச்சம் மாணவர்கள் வலைபூ வாசகர்களே!

நாங்கள் கடந்த 7 வருடமாக ஏழைகளுக்கான கல்விப்பணியோடு தமிழகத்தின் பல்வேறு பள்ளி- கல்லூரிகளில் மாணவ மாணவிகளுக்கான பாலியல் மற்றும் உளவியல் தொடர்பான பயிற்சி வகுப்புகளை நடத்தி மாற்றத்தை ஏற்படுத்தி வருவதை வலைபூ வழியாக தாங்கள் அறிவீர்கள் ஆனால் கீழே நீங்கள் படிக்க போகும்  சம்பவம் எமது 7 ஆண்டு வேலைக்கு சவால் இந்த மண்ணில் சீரழிந்து போகும் மாணவனையும் எமக்கான அவமானம்...

இந்த சம்பவம் எம் தூக்கத்தை கலைத்தது, வலியால் துடித்து போனோம், பெற்றோர்கள் ஆசிரியர்கள் எப்படி இருக்க்கூடாது என்பதற்கு இந்த சம்பவம் 
ஒரு பாடம்..


    வயசுக் கோளாறு, பெற்றோர் - ஆசிரியர்கள் கவனிப்பு இன்மை காரணமாக டீன் ஏஜ் மாணவ, மாணவிகள் நடத்திய 'மன்மதலீலை’யால் ஓர் உயிர் பலியாக, பலரது வாழ்க்கை கேள்விக்குறியாகி உள்ளது. 

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப் பூண்டியை அடுத்த பாதிரிவேடு கிராமத்தில் அரசினர் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு படிக்கும் ப்ளஸ் டூ மாணவர்கள் ஐந்து பேரும், ப்ளஸ் ஒன் மாணவிகள் இருவரும் நட்போடு பழகி இருக்கிறார்கள். இந்த நட்பு அளவுக்கு மீறி, 'விபரீத’ எல்லைக்குள் நுழைந்திருக்கிறது. கடந்த 17-ம் தேதி சனிக்கிழமை பள்ளி விடுமுறை. ஸ்பெஷல் கிளாஸ் என்று பொய் சொல்லிவிட்டு பள்ளிக்கு வந்த ஏழு பேரும், எசகுபிசகான பாடம் படித்திருக்கிறார்கள். அதனை அவர்களில் ஒரு மாணவன் செல் போனில் படம் பிடித்தும் வைத்துள்ளான். பேச்சுவாக்கில், அந்தப் படங்களை சில மாணவர்களிடம் காட்டி இருக்கிறான். அது மற்றவர்களுக்கும் பரவிப் பரவி, இன்டர்நெட் வரை படம் போயேவிட்டது.


உடனே, தலைமை ஆசிரியர் சம்பந்தப்பட்ட மாணவ, மாணவி கள் அத்தனை பேரையும் பள்ளியை விட்டு நீக்கியுள்ளார். இந்த விவகாரத்தில் சிக்கியவர்களில் செதில்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த திலகவதியும் ஒருவர். அவர், 21-ம் தேதியன்று தனது வீட்டில் பிணமாக தொங்கினார். 'ஆபாசப் பட விவகாரத்தால்தான் மனமுடைந்து திலகவதி தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு காரணமாக ஐந்து மாணவர்களையும் கைது செய்ய வேண்டும்’ என்று, மாணவியின் பெற்றோரோடு சேர்ந்துகொண்டு, ஏரியாவாசிகளும் ஆர்ப்பாட்டத்தில் இறங்கினர். அதனால், தற்கொலைக்குத்தூண்டியதாக ஐந்து மாணவர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்த பாதிரிவேடு போலீஸார், கங்கா, சுமன், கார்த்திக் என்ற மூன்று மாண வர்களைக் கைது செய்தார்கள். தங்கராசு மற்றும் செல்வகுமார் ஆகிய இருவரும்  தலைமறைவாகி விட்டார்கள். இந்த நிலையில், வடக்கு மண்டல ஐ.ஜி-யான சைலேந்திரபாபு ஸ்பாட்டுக்கே வந்து விசாரணை நடத்த, திலகவதி மரணத்தில் திகில் திருப்பம்.

'திலகவதியை அவரது சித்தப்பா ஹரி கொலை செய்து விட்டார்’ என்று அறிவித்திருக்கும் பாதிரிவேடு போலீஸாரிடம் விசாரித்தோம். ''திலகவதியின் மரணம் பற்றி தகவல் அறிந்து நாங்கள் ஸ்பாட்டுக்குச் சென்றபோது, அவரது பிணம் கீழே இறக்கி வைக்கப்பட்டு இருந்தது. அப்போதே எங்களுக்கு சந்தேகம். ஸ்பாட்டுக்கு வந்து விசாரணை நடத்திய ஐ.ஜி. சைலேந்திரபாபு, 'இது தற்கொலையாகத் தெரியவில்லை. நன்றாக விசாரியுங்கள்’ என்று அறிவுறுத்திவிட்டுச் சென்றார். அதனையடுத்து திலகவதியின் உறவினர்களிடம் கும்மிடிப்பூண்டி டி.எஸ்.பி. குமார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்த.... உண்மை வெளிவந்தது.

'குடும்பத்துக்கே பெரிய அவ மானத்தை ஏற்படுத்தி விட்டார் திலகவதி என்று, அண்ணி பத்மாவதி அழுதார். அதனால், இந்தக் களங்கத்தைத் துடைக்க எனக்கு வேறு வழி தெரியவில்லை. சம்பவத்தன்று அண்ணன் வீட்டுக்குச் சென்று திலகவதியிடம் விசாரித்தேன். ஏதேதோ சொல்லி மழுப்பினார். ஆத்திரத்தில் ஓங்கி அடித்தேன். மயங்கி விழுந்து விட்டார். வீட்டில் இருந்த புடவையால், கழுத்தை இறுக்கிக் கொலை செய்தேன். பின்னர், மின் விசிறியில் பிணத்தை தொங்கவிட்டுவிட்டு கிளம்பி வந்துவிட்டேன்’ என்று வாக்குமூலம் கொடுத்து இருக்கிறார் ஹரி. இந்தக்
கொலைக்கு உடந்தையாக இருந்த காரணத்தால் திலகவதியின் அம்மா பத்மாவதியையும் கைது செய்திருக்கிறோம்'' என்று சொன்னார்கள்.

பள்ளியின் தலைமை ஆசிரியர் செல்வராஜி டம் பேசினோம். ''இந்த ஐந்து மாணவர்களும் செய்த அடாவடி  அதிகம். நான் இந்தப் பள்ளிக்கு வந்தே நான்கு மாதங்கள்தான் ஆகிறது. இந்த ஐந்து மாணவர்களையும் பலமுறை பள்ளியை விட்டு துரத்தி இருக்கிறேன். பின்னர், மன்னிப்புக் கடிதம் கொடுத்து சேர்ந்து விடுவார்கள். சரி... இன்னும் நாலு மாசத்துல ப்ளஸ் டூ முடிச்சுட்டுப் போயிடுவாங்க... வாழ்க்கையைக் கெடுக்க வேண்டாம் என்று நினைத்துதான் விட்டு வைத்தேன். ஆனால், அதற்குள் இப்படி நடந்து விட்டது'' என்றார் வருத்தமாக.

முதன்மைக் கல்வி அலுவலர் மோகன் குமாரை சந்தித்தோம். ''குறிப்பிட்ட ஐந்து மாணவர்களும் கடந்த ஆண்டும் இதேபோன்று ஒரு பாலியல் புகாரில் சிக்கினார்கள். அப்போதே டி.சி. கொடுத்தோம். பின்னர், மாணவர்களின் பெற்றோர் மன்னிப்புக் கேட்டதால் மீண்டும் பள்ளியில் சேர்த்தோம். திருந்தி விடுவார்கள் என்று நினைத்தோம், ஆனால், இந்த அளவுக்குக் கெட்டுப் போய், தீராத அவமானத்தை வாங்கிக் கொடுத்திருக்கிறார்கள். மாணவர்கள் செய்யும் தவறுகளை ஆசிரியர்கள் சுட்டிக் காட்டிய பிறகும், பெற்றோர் பொறுப்பு இல்லாமல் இருந்திருக்கிறார்கள். இனி, பள்ளிகளில்  கண் காணிப்பை தீவிரப்படுத்துவோம்'' என்றார்.

இந்த விவகாரம், பருவ வயதில் குழந்தைகளை வைத்திருக்கும் ஒவ்வொரு பெற்றோருக்கும் பாடம்!



நன்றி: ஜூனியர் விகடன் - 28.12.11
_____________________________________________________________________________________________
Summary :


Thiruvallur District, Taluka kummitippunti,patirivetu to the government secondary schoolstudents in five, girls are getting together with friends. This friendship is overloaded, sex goes up, a few days ago, a special class that parents lied to me, the school hall to go where the students at ease sexually,The scenes recorded on mobile phone by students and that sex videos publishing on the Internet, the problem was issue leakage on parents, in this matter knowing  the student  THILAGAVATHI.S Uncle Hari, Harry killed her in rage,So he and other students were arrested by police

                          கிராமத்துல படிச்சவங்க எல்லாம் அவங்க அவங்க வேலையை பார்த்துக்கிட்டு தான் உண்டு தன் வேலையுண்டுன்னு பட்டணத்துக்கு போயிட்டதால என்னை மாதிரி ஏழ பசங்களுக்கு என்னத்த படிச்சா வேலைக்கு போகலாம்னு யாரும் சொல்ல நாதியில்லை. இப்படிதான் என்னோட வாழ்க்கையும் படிக்கும் வேகத்தில் வழிகாட்ட ஆளில்லாமல் கடிவாளமில்லாத நிலையில் பயணமானது என்றபடி தன்னோட படிப்பின் வழியை பகிர்ந்து கொண்டார் கருணா மூர்த்தி.

அரியலூர் மாவட்டம் கங்கை கொண்ட சோழபுரம்தான் என்னோட ஊர் அப்பா ராஜேந்திரன் கூலி விவசாயி எங்க குடும்பத்துக்காக உழைத்து உழைத்து ஓடாய் போனவர் தேய்வதற்கு ஏதுமில்லைன்னு உயிரை விட்டார் அந்த சோகத்தில் அம்மா நோயில் படுத்த படுக்கையாக உள்ளார். எனக்கு ஒரு அண்ணன் இருக்கிறார் அவருக்கு காது கேட்காது அவர் கூலி வேலைக்கு போய் அந்த வருமானத்தை குடும்ப செலவுக்கே போத சூழலில்..

 வழிகாட்ட யாருமில்லாமல் தகப்பனையும் இழந்த நிலையில் நானே என்னை தேற்றிக்கொண்டு அங்காங்கே வேலை செய்து தமிழில் முதுகலை பட்டப்படிப்பு வரை படித்து முடித்தேன்.  படிக்கிற காலங்களில் எனக்கு உதவ முன் வராதவங்க நீ! என்ன படிச்சிருக்கன்னு கேட்டும் போது தமிழ் படிச்சேன்னு நான் சொன்னா பார்ப்பாங்க பாருக்க கேவலமா ஒரு லுக்கு... தூக்குல தொங்க விட்டுடலாம்னு இருக்கு ஆனா  எனக்குள்ள ஓர் ஆர்வம் எப்படியாவது தமிழாசிரியராக ஆக வேண்டும் என்பதுதான். எல்லாருக்குமுள்ள கனவை போலத்தான் எனக்கும்.

ஆனால் என் வறுமை என்னை வாட்டியது அம்மாவிடம் நான் படிக்க போகிறேன் என்று சொன்ன போது என்னாப்பா இன்னும் படிக்கிற குடும்பத்தோட கஸ்டத்தை நினைச்சு பாருப்பான்னு சொல்லி அனுப்பிட்டாங்க..

எத்தனையோ நாள் தூக்கமில்லாமல் யோசித்தேன் எப்படியாவது படிக்கனும் பி.எட் படிச்சிட்டா படிக்காத எங்கம்மாவ எல்லோரும் வாத்தியாரோட அம்மான்னு சொல்லுவாங்க அம்மா அண்ணனுக்கு ஏதாவது ஒத்தாசியா இருக்கும்னு எனக்குள்ள ஆசை அந்த ஆசைக்கு உயிர்கொடுக்க நினைத்து வெளிச்சத்தை அனுகினேன். நீண்ட முயற்சிக்கு பின்னர் திருச்சி எஸ்.பி.ஜி சான்ஸ்கிருட் மிசன் கல்லூரியில் பி.எட் படிப்பதற்கு கல்வி கட்டணத்தை தவணை முறையில் கட்டுவதாக கல்லூரி நிர்வாகத்திடம் கேட்டு கொண்டு கல்லூரியில் சேர்ந்தேன்.

ரவு நேரங்களில் திருச்சியிலேயே ஒரு நிறுவனத்தில் இரவில் பணியாற்றிக் கொண்டே  படிப்பை தொடர்கிறேன் அங்கு கொடுக்கும் பணத்தை சேர்த்து 10,000 கல்லூரிக்கு கட்டணமாக செலுத்தியிருந்தேன். மீத கட்டணங்களை என்னுடைய கனவுகளுக்கு உயிர் கொடுக்கும் வெளிச்சத்தின் உதவியோடு இன்று வரை கல்லூரி படிப்பை தொடர்ந்து கொண்டிருந்த சமயத்தில் கல்லூரி கட்டணம் கட்டச் சொல்லி கட்டாயப்படுத்த நான் பட்ட அவமானங்களை உணர்ந்த வெளிச்சம் மாணவர்கள் முயற்சியில் என் நிலமையை உணர்ந்து முகம் தெரியாதவர்கள் செய்தவர்கள் உதவியின் மூலம் எனக்கு ரூபாய் 15000 த்துகான காசோலையை வெளிச்சத்தின் மாணவர்களின் பொறுப்பாளர் என்னிடம் கொடுத்து அதை கல்லூரியில் கொடுத்து படிப்பை தொடர்ந்து கொண்டிருக்கிறேன்.. மீத  கட்டனம் செலுத்த முடியுமோ இல்லையோ என்கிற பயத்தில் கல்லூரிக்கு போகும் போதெல்லாம் எனக்குள் வலியாகவே இருக்கிறது இது போன்ற வலி யாருக்கும் வரக்கூடாது என நினைத்து கொண்டே படிப்பை தொடர்கிறேன். எனக்காக  வெளிச்சம் பலரிடம்  உதவி கோரி வருகிறது உங்களால் முடிந்தால் உதவுங்கள்..

உங்கள் உதவியால் இவர் படிக்கும் தமிழ் இவரின் குடும்பத்தையாவது காப்பாற்றட்டும்...

நன்றியுடன்
இரா.கருணா மூர்த்தி எம்.ஏ தமிழ்…


இவருக்கும் இவரை போன்ற மாணவர்களுக்கும் உதவிட :

Email:velicham.students@gmail.com




படங்கள்:

கொடுக்கப்பட்ட டிடி





உறவுகளே!
வணக்கம், வெளிச்சம் பற்றிய கட்டுரை ஒன்று தற்போதைய புதியதலைமுறை இதழில் வெளியாகியுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொண்டு கட்டுரை இணைப்பை தங்கள் பார்வைக்கு சமர்ப்பிக்கிறோம்..
நன்றியுடன்
வெளிச்சம் மாணவர்கள்


மற்றவருக்கு ஏதேனும் வகையில் உதவ/வழிகாட்ட நினைப்பவரா... சமூக

 மாற்றத்தில் அக்கறையுள்ளவரா..... நாமெல்லாம் ஒன்றாக இணையலாமா? 

...   ஏழை மாணவர்களின் உயர்கல்விக்காக கரம் கோர்ப்போம் 

Members Application  …



Dear  Sir/Madam,
                  Greeting from Velicham.. We would like to let you
know that Velicham Actives and Students’ Help Line 9698151515 for
prevention of student suicide. The details were published in Current The Puthiya
Thalai Murai Magazine.

Thank you for your Continue Support
With Regards
Velicham students


இன்று தினத்தந்தி நாளிதழின் முத்துச்சரம் பகுதியில்
தன்னம்பிக்கை வளர்க்கும் வெளிச்சம் எனும் தலைப்பில் வெளியான கட்டுரை உங்கள் பார்வைக்கு….



Dear Friends,
         Our  interview  Published on Daily Thanthi-MUTHUCHARAM magazine kindly read it..


 21.09.11  அன்று ஜெயா தொலைக்காட்சியின்  காலைமலர் நிகழ்ச்சியில்  வெளிச்சம் அமைப்பின் இயக்குனர்   வெளிச்சம் செரின் அவர்களின் நேர்காணல் ஒளிபரப்பானது.. நிகழ்ச்சியில்  பேசிய செரின் அவர்கள்  மாணவர்கள் உளவியல் மற்றும் செக்ஸ் சார்ந்த     பிரச்சனைகளை பற்றி  பேசினார்.. குறிப்பாக 
  • ஏன் படிக்கும் வயதில் பிள்ளைகளுக்கு  காதல் வருகிறது
  • பெற்றவர்களை ஏன் பிள்ளைகள் வெறுக்கிறார்கள்    
  • மாணவர்களுக்கு செக்ஸ் கல்வி அவசியமா?   

 1போன்ற மாணவர்கள் பிரச்சனை குறித்து விவாதிக்கப்பட்டது.  இந்த நிகழ்ச்சியை  பார்த்த  நிறைய நண்பர்கள் நம்மை தொடர்பு கொண்டு வாழ்த்தினர்.  நிறைய பேர் பார்க்க முடியவில்லை என்று வருத்தப்பட்டார்கள்.  ஒரு நண்பர் பதிவேற்றியிருக்கிறார் என  தகவல் கிடைத்தது அவருக்கு நன்றி சொல்லி கொள்கிறோம்..

நன்றியுடன்
வெளிச்சம் மாணவர்கள்





Tomorrow (21.09.11) Velicham sherin interview telecast in Jaya tv - Kalai malar Program. this program discussed about psycho- social problems and sex affair of the students


"பணம் கொடுத்தால் போதும் பட்டம் பெற்று விட முடியும்' என்ற நிலை, பி.எட்., கல்லூரிகளில் நடக்கும் தில்லுமுல்லு காரணமாக உருவாகியுள்ளது. கல்வித் துறை அதிகாரிகள் மற்றும் தலைமை ஆசிரியர்கள், தனியார், பி.எட்., கல்லூரிகளின் பண மழையில் நனைகின்றனர். பணத்தை மட்டும் கொடுத்து பி.எட்., பெறுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், எதிர்கால ஆசிரியர்களின் தரம் கேள்விக்குறியாகியுள்ளது.


பொதுவாக ஆசிரியர் பணியை, சேவை செய்ய கிடைத்த உன்னதப் பணியாகக் கருதிய காலம் மாறிவிட்டது. இன்று, அரசு ஆசிரியர் பணியில் சேர்ந்து விட்டால், மாதத்துக்கு 20 ஆயிரத்துக்கும் குறையாத சம்பளம், இதர சலுகைகள், அதிக விடுமுறை என, வாழ்க்கையில் செட்டிலாகி விடலாம் என்ற எண்ணமே அனைவரிடமும் காணப்படுகிறது.இதன் காரணமாக, சில ஆண்டுகளாக ஆசிரியர் பணிக்கு அடிப்படை தேவையான, பி.எட்., பட்டப்படிப்பை படிக்க விரும்புபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம் செயல்படுத்தப்பட்ட பின், புதிதாக 2,000 உயர்நிலைப்பள்ளிகளும், 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்களும் உருவாக்கப்படும் என, அறிவிக்கப்பட்டது.

இதனால், பி.எட்., படிக்க விரும்புவோரின் எண்ணிக்கையும் இரு மடங்காக அதிகரித்துள்ளன. தமிழகத்தில், 650க்கும் மேற்பட்ட கல்வியியல் கல்லூரிகள், கல்வியியல் பல்கலையின் கீழ் செயல்பட்டு வருகின்றன. இவற்றில், அரசு மற்றும் உதவி பெறும் கல்லூரிகளில் உள்ள இடங்கள் மட்டும் அரசு ஒதுக்கீட்டு இடங்களாக கவுன்சிலிங் மூலம் நிரப்பப்படுகின்றன. சுயநிதி கல்லூரிகளில், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களாக பூர்த்தி செய்து வருகிறது.ஓராண்டு பி.எட்., படிப்புக்கான கட்டணமாக, 1 லட்சம் ரூபாய் வரை வசூல் செய்யப்படுகிறது. அரசு சார்பில் எவ்வித கட்டணமும் நிர்ணயிக்காததால், ஒவ்வொரு கல்வி நிர்வாகமும், அவரவர் இஷ்டத்துக்கு கட்டணத்தை நிர்ணயித்து வசூல் செய்து வருகின்றனர்.அதிக வசூலுக்கு ஆசைப்படும் கல்லூரி நிர்வாகங்களில் ரெகுலர், இர்ரெகுலர் என, இரண்டு முறைகளை கடைபிடிக்கின்றனர். இதில் ரெகுலர் முறையில், கல்லூரி வேலை நாள் அனைத்திலும் வகுப்புக்கு முழுமையாக வர வேண்டும் எனவும், இர்ரெகுலர் முறையில், வகுப்புக்கு வரத் தேவையில்லை எனவும் கேன்வாஸ் செய்கின்றன.

ஆய்வு மற்றும் தேர்வு நேரங்களில் மட்டும் கல்லூரிக்கு வந்தால் போதும் என்ற நிபந்தனையுடன் இச்சேர்க்கை நடத்தப்படுகிறது. இதற்கு ரெகுலர் முறை மாணவர்களை விட, 50 ஆயிரம் ரூபாய் முதல், 1 லட்சம் ரூபாய் வரை அதிகமாக வசூல் செய்யப்படுகிறது.வேறு இடங்களில் வேலை செய்து வரும் பலரும், இம்முறையில் பணத்தைப் பற்றி கவலைப்படாமல், சேர்ந்து வருகின்றனர். இவற்றையெல்லாம் தெரிந்த அரசு அதிகாரிகள் இவற்றை கண்டு கொள்ளாமல் இருக்க தனி, "ரேட்' நிர்ணயித்துக்கொண்டனர்.பி.எட்., பட்டப்படிப்பில் ஒவ்வொரு மாணவ, மாணவியரும், 40 நாள் அரசுப் பள்ளிகளில் நேரடி ஆசிரியர் பயிற்சி எடுத்துக்கொள்ள வேண்டும். இதற்காக பி.எட்., கல்லூரிகள் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட கல்வி அலுவலரிடம் அனுமதி பெற வேண்டும். இவற்றை பெற வேண்டும் எனில், மாணவ, மாணவியரின் எண்ணிக்கைக்கு ஏற்ப, ஒவ்வொரு கல்வி நிறுவனமும், 50 ஆயிரம் முதல், 1 லட்சம் ரூபாய் வரை கல்வி அலுவலர்களுக்கு லஞ்சம் வழங்கினால் மட்டுமே அனுமதி கிடைக்கிறது. பி.எட்., கல்லூரிகள் மூலம் மட்டுமே ஆண்டுக்கு, 15 லட்சம் ரூபாய்க்கும் மேல் கல்வித் துறை அலுவலர்களுக்கு, "பரிசாக' கிடைக்கிறது.

இப்பயிற்சி பெறவில்லை எனில், மாணவ, மாணவியர் பல்கலைத் தேர்வுகளில் கலந்து கொள்ள முடியாது என்பதால், கல்வி அதிகாரிகளுக்கு வழங்கும் தொகையையும் சேர்த்து மாணவ, மாணவியரிடம் கல்லூரிகள் வசூலித்து விடுகின்றன. பள்ளிகளில் பயிற்சி எடுத்ததற்கான சான்றிதழில் தலைமை ஆசிரியர் கையெழுத்திடவும், 5,000 முதல், 10 ஆயிரம் ரூபாய் வரை தர வேண்டியுள்ளது. பயிற்சிக்கு வராமலேயே சான்றிதழ் பெற, அதற்கு தனி ரேட் நிர்ணயித்துள்ளனர்.தனியார் கல்லூரியில், பி.எட்., படிப்பின் ஒவ்வொரு அங்கமும், இப்படி பணத்தையே பிரதானமாகக் கொண்டுள்ளதால், இதில் உருவாகும் ஆசிரியர்களின் தரம் எப்படியிருக்கும் என சொல்ல வேண்டியதில்லை. இந்த முறைகேடுகளைத் தடுக்க முன் வருமா அரசு?