கருணாமூர்த்தியின் உயர்கல்விக்கு உதவிய வெளிச்சம்

Posted by Velicham Students - -

                          கிராமத்துல படிச்சவங்க எல்லாம் அவங்க அவங்க வேலையை பார்த்துக்கிட்டு தான் உண்டு தன் வேலையுண்டுன்னு பட்டணத்துக்கு போயிட்டதால என்னை மாதிரி ஏழ பசங்களுக்கு என்னத்த படிச்சா வேலைக்கு போகலாம்னு யாரும் சொல்ல நாதியில்லை. இப்படிதான் என்னோட வாழ்க்கையும் படிக்கும் வேகத்தில் வழிகாட்ட ஆளில்லாமல் கடிவாளமில்லாத நிலையில் பயணமானது என்றபடி தன்னோட படிப்பின் வழியை பகிர்ந்து கொண்டார் கருணா மூர்த்தி.

அரியலூர் மாவட்டம் கங்கை கொண்ட சோழபுரம்தான் என்னோட ஊர் அப்பா ராஜேந்திரன் கூலி விவசாயி எங்க குடும்பத்துக்காக உழைத்து உழைத்து ஓடாய் போனவர் தேய்வதற்கு ஏதுமில்லைன்னு உயிரை விட்டார் அந்த சோகத்தில் அம்மா நோயில் படுத்த படுக்கையாக உள்ளார். எனக்கு ஒரு அண்ணன் இருக்கிறார் அவருக்கு காது கேட்காது அவர் கூலி வேலைக்கு போய் அந்த வருமானத்தை குடும்ப செலவுக்கே போத சூழலில்..

 வழிகாட்ட யாருமில்லாமல் தகப்பனையும் இழந்த நிலையில் நானே என்னை தேற்றிக்கொண்டு அங்காங்கே வேலை செய்து தமிழில் முதுகலை பட்டப்படிப்பு வரை படித்து முடித்தேன்.  படிக்கிற காலங்களில் எனக்கு உதவ முன் வராதவங்க நீ! என்ன படிச்சிருக்கன்னு கேட்டும் போது தமிழ் படிச்சேன்னு நான் சொன்னா பார்ப்பாங்க பாருக்க கேவலமா ஒரு லுக்கு... தூக்குல தொங்க விட்டுடலாம்னு இருக்கு ஆனா  எனக்குள்ள ஓர் ஆர்வம் எப்படியாவது தமிழாசிரியராக ஆக வேண்டும் என்பதுதான். எல்லாருக்குமுள்ள கனவை போலத்தான் எனக்கும்.

ஆனால் என் வறுமை என்னை வாட்டியது அம்மாவிடம் நான் படிக்க போகிறேன் என்று சொன்ன போது என்னாப்பா இன்னும் படிக்கிற குடும்பத்தோட கஸ்டத்தை நினைச்சு பாருப்பான்னு சொல்லி அனுப்பிட்டாங்க..

எத்தனையோ நாள் தூக்கமில்லாமல் யோசித்தேன் எப்படியாவது படிக்கனும் பி.எட் படிச்சிட்டா படிக்காத எங்கம்மாவ எல்லோரும் வாத்தியாரோட அம்மான்னு சொல்லுவாங்க அம்மா அண்ணனுக்கு ஏதாவது ஒத்தாசியா இருக்கும்னு எனக்குள்ள ஆசை அந்த ஆசைக்கு உயிர்கொடுக்க நினைத்து வெளிச்சத்தை அனுகினேன். நீண்ட முயற்சிக்கு பின்னர் திருச்சி எஸ்.பி.ஜி சான்ஸ்கிருட் மிசன் கல்லூரியில் பி.எட் படிப்பதற்கு கல்வி கட்டணத்தை தவணை முறையில் கட்டுவதாக கல்லூரி நிர்வாகத்திடம் கேட்டு கொண்டு கல்லூரியில் சேர்ந்தேன்.

ரவு நேரங்களில் திருச்சியிலேயே ஒரு நிறுவனத்தில் இரவில் பணியாற்றிக் கொண்டே  படிப்பை தொடர்கிறேன் அங்கு கொடுக்கும் பணத்தை சேர்த்து 10,000 கல்லூரிக்கு கட்டணமாக செலுத்தியிருந்தேன். மீத கட்டணங்களை என்னுடைய கனவுகளுக்கு உயிர் கொடுக்கும் வெளிச்சத்தின் உதவியோடு இன்று வரை கல்லூரி படிப்பை தொடர்ந்து கொண்டிருந்த சமயத்தில் கல்லூரி கட்டணம் கட்டச் சொல்லி கட்டாயப்படுத்த நான் பட்ட அவமானங்களை உணர்ந்த வெளிச்சம் மாணவர்கள் முயற்சியில் என் நிலமையை உணர்ந்து முகம் தெரியாதவர்கள் செய்தவர்கள் உதவியின் மூலம் எனக்கு ரூபாய் 15000 த்துகான காசோலையை வெளிச்சத்தின் மாணவர்களின் பொறுப்பாளர் என்னிடம் கொடுத்து அதை கல்லூரியில் கொடுத்து படிப்பை தொடர்ந்து கொண்டிருக்கிறேன்.. மீத  கட்டனம் செலுத்த முடியுமோ இல்லையோ என்கிற பயத்தில் கல்லூரிக்கு போகும் போதெல்லாம் எனக்குள் வலியாகவே இருக்கிறது இது போன்ற வலி யாருக்கும் வரக்கூடாது என நினைத்து கொண்டே படிப்பை தொடர்கிறேன். எனக்காக  வெளிச்சம் பலரிடம்  உதவி கோரி வருகிறது உங்களால் முடிந்தால் உதவுங்கள்..

உங்கள் உதவியால் இவர் படிக்கும் தமிழ் இவரின் குடும்பத்தையாவது காப்பாற்றட்டும்...

நன்றியுடன்
இரா.கருணா மூர்த்தி எம்.ஏ தமிழ்…


இவருக்கும் இவரை போன்ற மாணவர்களுக்கும் உதவிட :

Email:velicham.students@gmail.com
படங்கள்:

கொடுக்கப்பட்ட டிடி
Leave a Reply