வாக்குகளுக்காகஎத்தனையே திட்டங்களை அரிவிக்கு அரசுக்கு மாணவர்களில் பிரச்சனை  சென்னை மேடவாக்கம் அரசு உயர்நிலைப் பள்ளியில், சத்துணவு திட்டம் செயல்படுத்த, பல ஆண்டுகள் கோரியும், கல்வித்துறை அதிகாரிகளின் அலட்சியப் போக்கால், இன்றளவும் செயல்படுத்தப்படவில்லை. இதனால், நூற்றுக்கணக்கான ஏழை, எளிய மாணவ, மாணவியர், மதிய உணவு கிடைக்காமல், பசியுடன் கல்வி கற்கும் நிலை உள்ளது.
சென்னை, மேடவாக்கத்தில் அரசு உயர்நிலைப் பள்ளி செயல்படுகிறது. இங்கு, 697 மாணவர்கள், 749 மாணவியர் என, 1,446 பேர், கல்வி பயில்கின்றனர். சித்தாலப்பாக்கம், பெரும்பாக்கம், மாடம்பாக்கம், வேங்கைவாசல், அரசன்கழனி, ஒட்டியம்பாக்கம் உள்ளிட்ட, பல கிராமங்களைச் சேர்ந்த ஏழை, எளியவர்களின் மாணவ, மாணவியர் இங்கு படிக்கின்றனர். இப்பள்ளி, 2005ம் ஆண்டு வரை, நடுநிலைப்பள்ளியாக செயல்பட்டு வந்தது. இங்கு, எட்டாம் வகுப்பு வரை படித்த மாணவர்கள், பின், வெளியில் சென்று படிக்க முடியாததால், மேற்கொண்டு படிக்க வழியில்லாமல் அவர்கள் கல்வி தடைபட்டது. இது குறித்து, "தினமலர்' நாளிதழ் விரிவான செய்தி வெளியிட்டது. அதன் பலனாக, அப்பள்ளிக்கு உயர் நிலை அந்தஸ்து கிடைத்தது. இதனால், மாணவர்களின் சேர்க்கையும் அதிகரித்தது. மேலும், பள்ளி ஆசிரியர்களின் திறமையால், அப்பள்ளியின் தேர்ச்சி சதவீதமும் உயர்ந்தது.

கடந்தாண்டு, 10ம் வகுப்புத் தேர்வில், இப்பள்ளி, 98 சதவீத தேர்ச்சி பெற்றது குறிப்பிடத்தக்கது. இங்கு படிக்கும் பெரும்பாலான மாணவ, மாணவியரின் பெற்றோர், கூலித் தொழில் மற்றும் விவசாயம் பார்த்து வருகின்றனர். எனவே, மாணவ, மாணவியருக்கு மதிய உணவு வழங்க வேண்டும் என, பல ஆண்டுகளாக கோரிக்கை விடப்படுகிறது. இது தொடர்பாக, பள்ளி நிர்வாகமும், சம்பந்தப்பட்ட கல்வித்துறை அதிகாரிகளுக்கு பல முறை மனு அனுப்பியுள்ளது. ஆனால், இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், மாணவ, மாணவியர் பலர், மதிய உணவு சாப்பிடாமல், பட்டினியோடு கல்வி பயிலும் அவலம் உள்ளது. மதிய உணவு உண்ணாததால், பலர், வகுப்பறையில் மயங்கி விழுந்த சம்பவங்களும் அரங்கேறியுள்ளன.

பாதிக்கப்படும் மாணவ, மாணவியர் கூறுகையில், "எங்களின் பெற்றோர், கூலித் தொழில் பார்த்து வருகின்றனர். அதனால், பெரும்பாலான நாட்கள், மதிய உணவு எடுத்து வர முடியாத சூழ்நிலை ஏற்படும். மேலும், நாங்கள், பல கிலோ மீட்டர் தொலைவில் இருந்து பள்ளிக்கு வரவேண்டியுள்ளது. "இதனால், ஒரு மணி நேரம் முன்னதாக வீட்டில் இருந்து கிளம்பிவிடுவோம். அந்நேரம் எங்கள் வீட்டில் உணவு தயாராக இருக்காது. மதிய இடைவேளையின் போது வீட்டிற்கு சென்று சாப்பிட்டு வரவும் நேரம் இருக்காது. "இதனால், சக மாணவ, மாணவியர் கொண்டு வரும் உணவை பகிர்ந்துக் கொள்வோம். எங்களுக்கு மதிய உணவு அளித்தால், நாங்கள் படிக்க உதவியாக இருக்கும்' என்றனர். பள்ளி ஆசிரியர்கள் சிலர் கூறுகையில், "இந்த பள்ளியில் படிக்கும் பெரும்பாலானோர் மதிய உணவு சாப்பிட விரும்புகின்றனர். அவர்களிடம் கையெழுத்து வாங்கி, கடந்த மூன்று ஆண்டுகளாக சம்பந்தப்பட்ட கல்வித் துறை அதிகாரிகளுக்கு மனு அனுப்பினோம்.

"பள்ளியிலேயே சத்துணவு தயாரிக்க மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினரின் நிதியில், 1.30 லட்சம் ரூபாய் மதிப்பில் உணவுக்கூடம் கட்டப்பட்டுவிட்டது. ஆனால், சத்துணவிற்கான அனுமதி கிடைக்கவில்லை. "இங்கு படிக்கும் மாணவர்கள் பெரும்பாலானோர் ஏழை குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தான். அவர்களுக்கு மதிய உணவு கிடைத்தால், பள்ளியின் தேர்ச்சி விகிதம் மேலும் அதிகரிக்கும்' என்றனர். மேடவாக்கம் பள்ளியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவ, மாணவியரின் பசி உணர்வுகளை புரிந்து கொண்டு கல்வித்துறை அமைச்சரும், மாவட்ட கலெக்டரும் உடனடி நடவடிக்கை எடுத்தால், பசியின் கொடுமையில் இருந்து மாணவர்களுக்கு விமோசனம் பிறக்கும்.

கையேந்தும் கொடுமை: மேடவாக்கத்தில் உள்ள யாகவா முனிவர் வீட்டில், ஒவ்வொரு வியாழக் கிழமையும் இலவச உணவு வழங்கப்படுகிறது. அப்போது, ஏராளமான பள்ளி மாணவ, மாணவியர் போட்டி போட்டுக் கொண்டு கையேந்தி, மதிய உணவு சாப்பிடுகின்றனர். இதேபோல், பள்ளியிலிருந்து 1 கி.மீ., தொலைவில் அமைந்துள்ள சாய்பாபா கோவிலில் வழங்கப்படும் அன்னதானத்தையும் வாங்கி உண்டு, மாணவர்கள் தங்கள் பசியை போக்கிக் கொள்கின்றனர். மாணவர்களை, ஒருவேளை சோற்றுக்கு கையேந்தும் கொடுமையில் இருந்து மீட்க, கல்வித் துறையின் கண் திறக்க வேண்டும்.

-  நன்றி: தினமல்ர்- 4.2.11


நிதியளிப்பீர்
உறவுகளே!

                          வெளிச்சம் மாணவர்களின் வணக்கங்கள்,  2004 ஆண்டு முதல் வெளிச்சம் அமைப்பானது சென்னையை மையமாக கொண்டு, ஏழை மாணவர்களின் உயர்கல்விக்கு உழைத்து வருகிறது. ஏனெனில் ஏழை மாணவர்கள் பணமில்லை என்கிற  ஒரே காரணத்திற்காக தங்கள் வாழ்க்கையையும், படிப்பையும் இழக்கக் கூடாது என்பது மட்டும் தான் வெளிச்சத்தின் நோக்கம்.  உங்களை போன்ற உதவும் உள்ளங்களின் உதவியால் வெளிச்சம் இன்றுவரை  தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து கண்டறியப்பட்ட 515 முதல்தலைமுறை ஏழை மாணவர்களில் 6 மாணவர்கள் பொறியாளராகவும்,  36 மாணவர்கள் ஆசிரியராகவும், 22 மாணவர்கள் வழக்கறிஞராகவும் படிப்பை முடித்து இருக்கிறார்கள் மேலும் 86 மாணவர்கள் பொறியியல் துறையிலும், 11 மாணவர்கள் மருத்துவத்துறையிலும் மற்ற மாணவர்கள் பல்வேறு துறைகளில், பல்வேறு கல்லூரிகளில் படித்துக்கொண்டு இருக்கிறார்கள்..   வெளிச்சத்தின் முதல் மாணவர்  செந்தில் என்பவர் இப்போது ஜூனியர் சயிண்டிஸ்டாக பணிபுரிகிறார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம்..
இது ஒருபுறமிருக்க அவசர உலகில் பெருகிவரும் மாணவர்களின் தற்கொலைகளை தடுத்திடவும், இது போன்ற மாணவர்களுக்கு உதவிட மாணவர்களே முன்வரவேண்டும் என்று  முடிவெடுத்து  எங்களுக்கு கிடைத்த வெளிச்சம் மற்ற மாணவர்களுக்கு கிடைக்க வேண்டும் என்பதற்காக,  எந்த மாணவர்களும் எந்த காரணத்திற்காகவும்  படிப்பை இழக்கும் சூழலுக்கு ஆளாகி விடக்கூடாது. என்பதற்காக மாணவர்கள் ஆலோசனை மையம் (Students  Help Line) 9698151515 ஆரமித்து.  தமிழகம் முழுவதும் கடந்த 15.07.2010 முதல் 5.09.2010 வரை    55 நாட்களாக பிரச்சாரப்பயணமாக மேற்கொண்டு விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கிறோம். அதன்மூலம் இது நாள் வரை 26000 க்கும் மேற்பட்ட தொலைப்பேசி அழைப்புகளை சந்தித்து மாணவர்களின் கல்வி மற்றும் வாழ்கைக்கு ஆலோசனைகளும் உதவிகளும் செய்து வருகிறோம். Students Help Line ல் தொடர்பு கொண்டவர்களில் 156  மாணவர்கள் கல்லூரி கட்டணம் செலுத்த முடியாத சூழலில் அவர்களின் படிப்பை இழக்கும் சூழலில் இருக்கிறார்கள். கல்லூரிக்கட்டணம் செலுத்தாததால் அவர்கள் பல்வேறுவிதமான மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள். அவர்களின் கல்விக்கு உதவிட உங்கள் முன் நிற்கிறோம்.. உங்கள் பங்களிப்பு எங்களை போன்ற மாணவர்களின்  தலையெழுத்தை மாற்றும் என்கிற நம்பிக்கையில்…
வெளிச்சம் மாணவர்கள்
http://velichamedu.wordpress.com/
http://velicham.org/
+919698151515
+919500162127
வங்கி கணக்கு எண்:
Thaai Neri Educational Trust
Account no. 007701019408
Branch . ICICI Bank ,Ashok nagar Branch
City. Chennai
உதவி செய்பவர்கள் velicham.students@gmail.com இந்த மெயிலுக்கு தகவல் அனுப்பவும்..அல்லது கல்லூரிக்கே டி.டி. கொடுக்கலாம்..
நன்கொடைகளுக்கு இந்திய வருமான வரிச்சட்டத்தின் கீழ் வருமானவரி தள்ளுபடி 80G பெறப்பட்டுள்ளது .


ஒரு நிமிடம் எம் வாழ்கையை தொலைக்காட்சியை பார்க்க


பள்ளிக்கு டிமிக்கி கொடுத்து விட்டு தியேட்டருக்குள் ஒளிந்திருந்த மாணவ-மாணவிகளை ஊழியர்கள் அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். இப்போது பயங்கரமான கலி காலம் நடந்து கொண்டுக்கிறது என்பதை நாள் தோறும் நடக்கும் சம்பவங்கள் நிரூபித்து வருகின்றன. அதிலும் காதல் விவகாரத்தில் நடக்கும் சம்பவங்கள் கொடுமையிலும் கொடுமை?

காதலுக்காக 25 வருடம் கஷ்டப்பட்டு வளர்த்த பெற்றோரை உதறிவிட்டு ஓடும்மகள், மகனை போலீஸ் நிலையத்தில் வைத்து அழுது அடம் பிடிக்குது மீட்க போராட்டத்தில் ஈடுபடும் பெற்றோருக்கு தோல்விதான் மிஞ்சுகிறது.

சமீபத்தில் மதுரையை சேர்ந்த போலீஸ் ஏட்டு மகள் காதலனுடன் திருச்சி கண்டோன்மெண்ட் போலீசில் தஞ்சம் அடைந்து விட்டார். விஷயம் தெரிந்து ஏட்டு வந்து மகளை கண்ணீர் மல்க அழைத்தார்.

ஆனால் இறுதியில் காதல்தான் ஜெயித்தது. மகளுக்கு மாப்பிள்ளை பார்த்து நாள் பார்த்து நட்சத்திரம் பார்த்து, திருமணம் செய்து வைக்க கனவு கண்ட ஏட்டுவின் கனவு எட்டாமல் போய்விட்டது. அழுது கொண்டே மதுரைக்கு ஏறினார்.

இன்னொரு சம்பவம் அது கல்லூரியில் படிக்கும் ஒரு மாணவி ஒரு வாலிபருடன் போலீசில் தஞ்சம் அடைந்தார். போலீசார் விஷயம் கேள்விபட்டு 2 தரப்பு பெற்றோரையும் அழைத்து பேசினர்.

பெண்ணின் பெற்றோர் மகளை தங்களோடு வா... உன்னை பெத்து வளர்த்து படிக்க வைத்தோமே... கல்யாணமும் நாங்கள் செய்து வைக்க மாட்டோமோ...! என “ஓ”வென்று அழ... ம்கூம்... காதலனே... எனக்கு என அந்தமாணவி கம்பி நீட்டினாள்.  25 வருட பெற்றோரை தூக்கி உதற காரணமான காதல்... எங்கு முளைத்தது. பள்ளிகள்தான் என்று பகிர் குண்டை தூக்கி போடுகிறார்கள் விஷயத்தை நன்கு உணர்ந்தவர்கள்.

காதல் பள்ளிகளில்தான் உதிக்கிறது என்பதை திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகே உள்ள தியேட்டர் வளாகத்தில் நடந்த சம்பவம் அதை நிரூபித்தது. மத்திய பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு தியேட்டரில் உள்ளே காலைக்காட்சி ஓடிக்கொண்டிருந்தது. அப்போது 1மணிக்கு மத்திய பஸ் நிலையம் அருகில் உள்ள பள்ளி ஒன்றில் படிக்கும் ஒரு அழகான மாணவனும் அழகான மாணவியும் (8அல்லது 9ம் வகுப்பு) , சீருடை, பேக்குடன் வந்தனர். தியேட்டரில் ஓரமாக போய் அமர்ந்து கொண்டனர்.

நெருக்கமாக உட்கார்நது கொண்ட அவர்கள் குழைந்து குழைந்து பேசுவதும் தொட்டு தொட்டு சிரிப்பதும் அங்கு நின்றவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஆனால் 4 பேர் நம்மை பார்க்கிறார்கள் என்ற கவலை அந்த காதல்ஜோடிக்கு இல்லை.

இதற்கிடையே அந்த பள்ளி நிர்வாகத்துக்கு மாணவ- மாணவி ஒரே நாளில் வராததை விசாரித்த போது ஜோடி தியேட்டர் பக்கமாக சென்றதை சக மாணவர்கள் “போட்டு” கொடுத்தனர். பெற்றொர்களும் தகவல் தெரிந்து வந்தனர்.

உடனே தியேட்டருக்கு பள்ளி ஊழியர்கள் பெற்றோருடன் தேடி வந்தனர். தியேட்டருக்குள் ஜோடி இருக்கிறதா என பார்க்க வேண்டும் என கூறினர். உடனே சென்ற போது ஜோடி சிக்கவில்லை. அதற்குள் சிலர்...பள்ளி நிர்வாகம் பெற்றோருக்கு தெரிந்து ஜோடி கையில் சிக்கினால்...  அம்பிகாபதி-அனார்க்கலி “ரோமியோ ஜுலியட் ” கதை போல...  விபரீதத்தில் முடிந்துவிடும் என பயந்தனர்.

எனவே பள்ளி நிர்வாகம் பெற்றோருக்கும் தெரியாமல் ஜோடியை எச்சரித்து ஆலோசனை கூறி, பள்ளி பாடம் படியுங்கள் காதல் பாடத்தை தள்ளி வையுங்கள் என கூறி அனுப்பி வைத்தனர். நன்றி சொல்ல உனக்கு வார்த்தை இல்லை எனக்கு... என்று சின்னக்கவுன்டர் விஜயகாந்திக்கு நன்றி கூறுவது போல... கண்ணீருடன் கைகூப்பி நன்றி, கூறிய ஜோடி அந்த தியேட்டர் வளாகத்தை விட்டு... ஓடி எஸ்கேப் ஆனது.

அதன்பிறகு... வீட்டில் என்ன நடந்ததோ?... கிளைமேக்ஸ் தெரியாமல்.. போக்கிரி வடிவேலு கணக்காக வடைபோச்சே...  என்று சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் புலம்பியது தான் “ஹைலைட்

நன்றி: மாலைமலர் 11.12.10


  பள்ளியில் இருந்த ஆவணங்கள் மர்மமான முறையில் கிழிந்தன. இதனால் ஆத்திரமடைந்த பள்ளி விளையாட்டு ஆசிரியர், நான்காம் வகுப்பு மாணவர்கள் 24 பேரை வரிசையாக நிற்க வைத்து, இரு கைகளையும் மேல் நோக்கி தூக்கச் செய்து, "பின்புறத்தில்' பிளாஸ்டிக் பைப்பால் சரமாரியாக தாக்கியுள்ளார். இதனால், குழந்தைகளின் பெற்றோர், பள்ளியை நேற்று முற்றுகையிட்டனர்.


மேட்டுப்பாளையம் - காரமடை ரோடு, காந்திநகரில், "பிருந்தாவன் வித்யாலயா' என்ற சி.பி.எஸ்.இ., பள்ளி செயல்படுகிறது. இப்பள்ளியில் 300 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். நேற்று முன்தினம் பள்ளியில் இருந்த, "ரெக்கார்டு' மர்மமான முறையில் கிழிந்திருந்தது. இதை, நான்காம் வகுப்பு மாணவ, மாணவியரில் ஒருவர்தான் கிழித்திருக்க வேண்டும் என்று, ஆசிரியைகள் சந்தேகமடைந்தனர். விளையாட்டு ஆசிரியர் சதீஷ்குமாரை அழைத்து, குழந்தைகளை விசாரிக்குமாறு கூறியுள்ளனர். இவர், வகுப்பு அறையில் வைத்து குழந்தைகளை விசாரித்துள்ளார். "தாங்கள் யாரும் ரெக்கார்டை கிழிக்கவில்லை' என்று கூறி குழந்தைகள் அழுதன. ஆத்திரமடைந்த ஆசிரியர் சதீஷ்குமார் 17 மாணவர்கள், 7 மாணவியரை விளையாட்டு மைதானத்துக்கு அழைத்துச் சென்று வெயிலில் நிற்க வைத்துள்ளார். இரு கைகளையும் மேல்நோக்கி தூக்கி நிற்குமாறு கூறி, குழந்தைகளின் "பின்பகுதி'யில் பிரம்பு, பி.வி.சி., பைப் கொண்டு ஆத்திரம் தீர வெளுத்துள்ளார். போலீஸ் பாணியில் குற்றவாளிகளை விளாசுவது போல் தாக்கியுள்ளார். குழந்தைகள் துடிதுடித்து கதறி அழுதுள்ளனர். பின்பகுதியில் உள்காயம், ரத்தக்கட்டு ஏற்பட்டு நடக்கக்கூட முடியாதவகையில் குழந்தைகள் தவித்துள்ளனர்.


மாலையில் குழந்தைகளை அழைத்துச் செல்ல வந்த பெற்றோர், "நடந்த சம்பவத்தை' கேள்விப்பட்டு பதறினர். அடிதாங்க முடியாமல் சில குழந்தைகளுக்கு காய்ச்சல் ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர் நேற்று காலை பள்ளிக்கு வந்து, கொடூர ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி முற்றுகை போராட்டம் நடத்தினர். பாதிக்கப்பட்ட நான்காம் வகுப்பு மாணவர்கள் கூறுகையில், "பி.டி., மாஸ்டர் அடித்ததால் வலி தாங்க முடியாமல் அழுது கொண்டே வகுப்புக்கு சென்றோம்; அங்கு இருக்கையில் அமர முடியாமல் நின்று கொண்டிருந்தோம். அப்போது அங்கு வந்த பள்ளி முதல்வர் அன்புலட்சுமி, "உட்காருகிறீர்களா, இல்லை... மீண்டும் பி.டி.,மாஸ்டரை கூப்பிடட்டுமா?' என, மிரட்டினார். வலிதாங்க முடியாத நிலையிலும் இருக்கையில் அமர்ந்தோம்' என்றனர்.


பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர் கூறுகையில்,"நான்காம் வகுப்பு பயிலும் குழந்தைகளை ஈவு, இரக்கம் கொஞ்சமும் இல்லாமல் பள்ளி ஆசிரியர் அடித்திருக்கிறார். வீட்டுக்குச் சென்ற குழந்தைகளில் சிலர் இதை பெற்றோரிடம் கூட சொல்லவில்லை. சீருடையை கழற்றும்போது "பின்புறம்' ஏற்பட்டிருந்த ரத்தக்கட்டை பார்த்த பிறகே விஷயம் தெரிந்து அதிர்ச்சியடைந்தோம். குழந்தைகளை கம்பாலும், பிளாஸ்டிக் பைப்பாலும் தாக்கிய ஆசிரியர், அவ்வாறு செய்ய உத்தரவிட்ட முதல்வர் உள்ளிட்ட அனைவர் மீதும் கிரிமினல் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்' என்றனர்.


இதுகுறித்து பள்ளி நிர்வாகிகளில் ஒருவரான வக்கீல் சம்பத்குமார் கூறுகையில், ""விளையாட்டு ஆசிரியர் இப்படி அடித்த விவரம் எங்களுக்கு தெரியாது. குழந்தைகளை நேரில் பார்த்த பிறகு உடனடியாக அந்த ஆசிரியரை, "டிஸ்மிஸ்' செய்து விட்டோம். சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க, முதல்வர் அன்புலட்சுமி மூலமாக போலீசில் புகார் செய்ய உள்ளோம்,'' என்றார்.

 நன்றி : தினமலர் 10.12.10

The VELICHAM STUDENTS has conducted “Enlighten Your Life-Motivation Training Program” in ‘Chennai Girls Higher Secondary School’ at Market Street, Perambur. The program has given an inspiration to all students and motivated them for the further education. ‘Confidence’ is the key to achieve a higher goal and VELICHAM STUDENTS has built a foundation to achieve a higher success and confidence among the students by giving them inputs on confidence building, importance of higher education, and made students to realize the potential qualities which they have. Apart from that VELICHAM STEUDENTS has also sensitized the students about the issue of AIDS and Disability and also oriented them about giving them equal treatment and opportunities to HIV + and Disable persons. The ongoing issue of school students kidnapping reveals that in last one month six students has been kidnapped so far. Therefore, VELICHAM STUDENTS has taken an initiative to spread awareness among the students orientating them about how to stay conscious and aware to avoid such events, and also preparing them to fight against such anti-social activities.