வழக்கின் முதல் வெற்றி..

Posted by Unknown - -


 வழக்கின் முதல் வெற்றி..

 வெளிச்சம் அமைப்பு கடந்த சிலவாரங்களுக்கு முன் சென்னை உயர்நீதி மன்றத்தில் முதல் தலை முறை மாணவர்களின் உயர்கல்விக்காகவும்,
தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவர்களின் உயர்கல்வி கட்டணத்தை அரசே ஏற்கும் எனும் தமிழக அரசின் ஆணை எண் 6யை வலியுறுத்தியும், மேற்கண்ட இரண்டு பொதுநல வழக்குகளை தொடுத்துள்ளதையும்,

இந்த வழக்கில் எங்கள் அமைப்பின் தலைவர் திருமதி வெளிச்சம் செரின் வழக்கறிஞர் வைக்காமல் வாதாடியதையும்,..

எமது வாதத்தை கேட்டுக்கொண்ட  தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் ஆகியோர் மனுக்கள் மீது தமிழக அரசு 2 வாரங்களுக்குள் பதில் மனு தாக்கல் செய்யுமாறு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளதையும்,  ,  இந்த பதிவின் மூலம் தெரிவித்து இருந்தோம்… படிக்க கட்டுரை: ஏழைகளின் உயர்கல்விக்காக உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் வைக்காமல் வாதாடும் வெளிச்சம் செரின்.

இந்த வழக்கில் தற்போது தமிழக ஆதிதிராவிட நலத்துறை தமிழகத்தில் உள்ள கல்லூரிகளுக்கு 24.08.2012 அன்று ஒரு சுற்றறிக்கையை அனுப்பியுள்ளதாக தெரிவித்துள்ளது. அந்த சுற்றறிக்கையில் தங்கள் கல்லூரியில் பயிலும் தாழ்த்தப்பட்ட மாணவர்களின் கல்விக்கட்டணத்தை மாணவர்களிடமிருந்து வசூலிக்ககூடாது எனவும், அரசாணை எண் 6 மற்றும் இந்த சுற்றறிக்கைகளை மாணவர்களின் பார்வையில் படும்படி அறிவிப்பு பழலகையில் வைக்கும்படி சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது ஆனால் எந்த கல்லூரியும் இந்த ஆணையை மாணவர்களுக்கு தெரியும் படி வெளியிடவில்லை. அதனால் தங்களுக்கு எமது வெற்றியை தெரிவித்துக்கொள்ளும் இதே நேரத்தில்..

உங்களுக்கு தெரிந்த தாழ்த்தப்பட்ட பழங்குடியின மாணவர்களிடம்
சொல்லி இந்த ஆணையை கல்லூரிகளிடம் கொடுத்து கட்டண விலக்கு கோரும்படி அவர்களுக்கு எடுத்துச்சொல்லி அவர்களின் கல்விக்கு உதவுங்கள்…



இன்னும் வழக்கு நடந்து கொண்டிருக்கிறது.. அதிரடிகள் தொடரும்..

இந்த வழக்கிழும்,முதல்தலைமுறை மாணவர்களின் கல்விக்கான வழக்கிழும் உங்கள் ஆதரவோடு, ஏழைகளின் உயர்கல்விக்காக தொடர்ந்து போராடுகிறோம்..

நன்றியுடன்
வெளிச்சம் மாணவர்கள்






One Response so far.

  1. அருமையான தளம் நன்பரே.கருப்பு நிற பின் புலத்தில் உங்கள் தளத்தை வடிவமைத்துள்ளீர்கள்.இருட்டில் வெளிச்சம் பரவட்டும் என்பதை சொல்லாமல் சொல்கிறது உம் தளம்.தங்களை தொடர்வதில் மகிழ்கிறேன்

Leave a Reply