நடிகர்கள் உங்கள் ரோல் மாடலா ?

Posted by Unknown - -


யார் உங்களுக்கு ரோல் மாடல் என்கிற கேள்வி எல்லோருடைய ஆழமான தேடல் தான்….. ஆனால் குழந்தைகளுக்கு யார்  ரோல் மாடலாக இருக்க வேண்டும் என்பதிலும், மாணவர்களால் தான் மாற்றம் வரும் என்பதிலும் வெளிச்சம் மாணவர்கள்  மிகச்சரியாக  இருக்கிறொம் என்பதும், அதற்காக நாம் மேற்கொள்ளும்  முயற்சிகளை தாங்கள்  அறிவீர்கள் . அந்தவகையில்  அரியலூர் மாவட்டம்  முத்துவாஞ்சேரி என்கிற கிராமத்தில்  குழந்தைகளோடு பேசிடும் வாய்ப்புகிடைத்து. குழந்தைகளிடம் பேசினோம்  அவர்கள் பேசிய வார்த்தைகள் நம்மை அதிர வைத்தன ..

அப்படியே பதிவு செய்கிறோம்:  
                 
           30க்கும் மேற்ப்பட்ட குழந்தைகள்  நீண்ட  நேரம் பேசினார்கள்.  நாம் முதலில் கதைகள் மூலம்  படிப்பின் அவசியமும், பெற்றோரை நேசிக்கணும், கெட்டவார்த்தைகள் பேச கூடாது, உடம்பை சுத்தமாக  வைச்சிக்கணும்னு  சொன்னோம்.

கூட்டத்தில் இருந்த ஒரு  மாணவி நம்மை நோக்கி நாங்க படிக்கணும்னா காசு பணம் வேணும், எங்கப்பா எப்ப பார்த்தாலும் குடிக்கிறாங்க , அம்மாவை போட்டு அடிக்கிறாங்க, நாங்க எப்படி படிக்க முடியும் சொல்லுக்கா… நைட்டு முழுக்க  அப்பா அம்மா கிட்ட வம்பு பண்ணுவார்  அழுதாஎன்னை போட்டு அடிப்பார் எத்தனையோ நாள் நானும்  அம்மாவும் அழுதுகிட்டே உக்காந்திருக்கோம்னு தெரியு மாக்கா,  அதை அனுபவிச்சாதான் தெரியும்க்கா ரொம்ப கஸ்டம்க்கா, காலையில அம்மா என்னை  ஸ்கூலுக்கு  போகலைன்னு அடிப்பாங்க,  எப்படியோ என்னை  பள்ளிகூடத்துக்கு அனுப்பும்  அம்மா நீயாச்சி படிச்சிக்கம்மான்னு சொல்லும்  பள்ளிகூடத்துக்கு போனா  தூக்கம்தான் வரும் படிப்பு வராது… பள்ளிகூடத்துல மிஸ் பெற்றவர்கள்  நமக்கு தெய்வனு சொல்லுறாங்க…. நானும்  ரொம்ப நாளா டீச்சர்கிட்ட கேக்கனும்னு தோணுது.. 

எங்கம்மாவ போட்டு அடிக்கிற அப்பாவ எப்படி தெய்வமா  மதிக்கமுடியும் சொல்லுங்க டீச்சருன்னு அவங்ககிட்ட ஒரு நாளாவது கேட்பேன் என்றாள்  3 வகுப்பு பயிலும்  சரசு..  

நாம் அவளின் வருங்கால கனவை விளக்கினோம் அதன்பிறகு  நான் கலெக்டருக்கு படிச்சி, பெரிய ஆளா   ஆகி சாராயத்தை  ஒழிப்பேன் என்றாள் மிக வேகமாக… 

கூட்டத்தை நோக்கி நாம் அப்பா செய்றதை யார் யார்  அவர போலவே திருப்பி செய்றா சொல்லுங்கணு கேட்டோம்.   சிலர் எங்கப்பா போல தலை சீவி பார்ப்பேன் என்றனர்.. சில பொண்ணுங்க நான் அம்மா போல சேலைகட்டி விளையாடிவேன் என்றனர்.  

இந்த சிவா!  அவங்க தாத்தா  சொன்னார்னு கடையில பீடி வாங்கிட்டு வர சொன்னார்னு  பொய் சொல்லி  பீடி வாங்கி  குடிச்சிக்கிட்டு இருக்கும் போது அவனை  நாங்க பார்த்துட்டோம். என சொல்லும் போது சிவாவின் முகத்தில் கலக்கம்  தெரிந்தது.. அக்கா நான் மட்டுமில்லக்கா இவனுங்க எல்லாரும் எங்க ஊர் வயசு அண்ணங்க சூப்பர் பாக்கு, ஹன்சு வாங்கிட்டுவர சொல்லுவாங்க , வாங்கிகிட்டு வர்ற சில சமயம் நாமலும், போட்டு பாக்கலாமுனு தோணும்  அதனாலையே சில பசங்க போடுவாங்க,  நான் எங்க தாத்தா  தினமும் பீடி வாங்கிட்டு  வர சொல்லுவார் அப்போ வாங்கிகிட்டு வருவேன் அப்ப பீடிகுடிக்கணும்னு தோணுச்சு  குடிச்சேன் என்றான் குழ ந்தை குணம் மாறாமல்,

இனிமேட்டுக்கு குடிக்க மாட்டங்கா,எங்க தாத்தாவ என்னை  கடைக்கு அனுப்பகூடாதுண்ணு சொல்லுக்கா,எங்க ஊர் அண்ணன்களுக்கிட்டயும் சொல்லுங்க என்றான் சிவா, அவன் சொன்னது அந்த ஊர் இளைஞர்கள் காதுகளிலும் அவன் தாத்தாக்கள் காதுகளிலும் விழுந்தது, நாம் பின்பு  நடந்த கூட்டத்தில் விளாவாரியாக பேசினோம்.. இனி சிறுவர்கள் தவறு செய்யமாட்டார்கள் அப்படி செய்தால் ஹெல்ப் லைனுக்கு சொல்லுங்கண்ணு  9698151515 நம்பர் கொடுக்க அதை ஒரு குழந்தை வீட்டு சுவரில் குறிப்பதை கண்முன்னே பார்த்துவிட்டு  கிளம்பினோம்..

 நம்மிடம் பேசிய சிவா மற்றும் சரசுவின் வாழ்க்கை மட்டுமல்ல கிராமங்களில் படிக்கும் பல மாணவர்களின் உள்ளகுமுறளாக நாம் பார்க்க முடிகிறது.. கிராமங்களில் சாதி பேதமின்றி குடியில் மட்டும் சமத்துவத்துடன் விளங்கும் குடும்பத்து குழந்தைகளில் குரல்கள்தான் இவை..

பெற்றவர்களே! உங்கள் நீங்கதான் பிள்ளைகளுக்கு நல்ல ரோல் மாடலாக இருக்க வேணும், இல்லைண்ணா தற்போதைய  சினிமா கதாநாயகன்களாக இருக்ககூடாது என்பது  நம்நம்பிக்கை ஏனெனில் ரோல்மாடல்கள் தான்  லட்சியங்களை தீர்மானிக்கும்….
  


One Response so far.

  1. நல்ல கட்டுரை. விசயங்களை விளங்கிக் கொள்ள உதவுகிறது.

Leave a Reply