சமத்துவபுரத்தில் ஜாதியை காரணம் காட்டி நரிக்குறவர் குழந்தைகளின் பள்ளியை அபகரித்ததால், 35 குழந்தைகளின் கல்வி கேள்விக்குறியாகி உள்ளது.

பள்ளி அபகரிக்கப்பட்ட நிலையில், 35 குழந்தைகளும் வீட்டில் முடங்கி உள்ளனர். இது குறித்து திருவாடானை தாசில்தார் சுகுமாறனிடம் புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை. இதனால் கொதித்து போன நரிக்குறவர்கள் ராமநாதபுரம் வந்து, கலெக்டர் ஹரிஹரனை அவரது வீட்டில் சந்தித்து முறையிட்டனர். மல்லிகா கூறியதாவது: எங்கள் குழந்தைகள் கல்வி கற்க கூடாது என்பதற்காக திட்டமிட்டு சதி செய்து வருகின்றனர். சமத்துவபுரத்தில் ஜாதி பார்ப்பது எந்த வகையில் நியாயம் என தெரியவில்லை, என்றார். கலெக்டர் ஹரிஹரனிடம் கேட்டபோது,"" குழந்தைகளுக்கு பாடம் எடுத்த ஆசிரியர் ஓய்வு பெற்றுவிட்டார். அவரை திரும்பவும் நியமிக்கும் கோரிக்கையின் அடிப்படையில் இப்பிரச்னை எழுவதாக தெரிகிறது. பிரச்னை சுமூகமாக தீர்க்கப்படும்,'' என்றார்.
நன்றி: தினமலர்