Archive for March 2010
ஜூனியர் சயிண்டிஸ்ட்…செந்தில்
அரியலூர்
மாவட்டம், பிழிச்சுகுழி கிராமம்தான் எனக்கு சொந்த ஊர். சின்ன வயசிலயே அப்பாவை இழந்த
என்னை தொடர்ந்து படிக்க வைக்க அம்மாவால் முடியவில்லை. வறுமையின் காரணமாக பத்தாம் வகுப்பு
முடித்து நல்ல மதிப்பெண் பெற்றிருந்த நான், தொடர்ந்து படிக்க முடியாத சூழலில், குடும்ப
வறுமையால், முந்திரிக்கொட்டை பொறுக்கும் கூலி வேலை சென்றுகொண்டிருந்தேன். என் சூழலை
தெரிந்துகொண்ட வெளிச்சம் இயக்குநர் செரின் அவர்கள், என் தாயிடம் வந்து, பேசி என்னை பதினென்றாம் வகுப்பு
சேர்த்து படிக்க வைத்தார்கள். 12ம் வகுப்பில் 1000த்திற்கு மேல் மதிப்பெண் பெற்ற நான், காரைக்குடி மத்தியஅரசின் வேதியல் ஆராய்ச்சி மையத்தில் (சிக்ரி)
கொமிக்கல் இஞ்ஜினியரிங் படித்த நான் , இப்போது
ஓமன் நாட்டில் ஜூனியர் சயிண்டிஸ்டாக பணிபுரிகிறேன். எனக்காக வெளிச்சம் பட்ட வலிகளை என்னால் வார்த்தைகளால் பதிவு செய்ய முடியவில்லை.
ஆனால் என் வாழ்வு வெளிச்சத்துக்கு வந்தது வெளிச்சத்தால் தான்…..
ஆசிரியர்
ஆண்டோ ,
பெற்றோர்கள்
யாருமில்லாத ஆதரவற்றவனாக நான் குழந்தையில் இருந்தே, மதுரையில் உள்ள சிஸ்ட்டர்ஸ் காண்வெண்டில்
வளர்ந்தேன். ஆதரவற்றவனாக பிறந்ததே பாவம், கொஞ்சம் பார்வையில்லாத என்நிலையை கொஞ்சம் யோசித்து பாருங்கள்.
நண்பர்கள் செய்த உதவியால் பி.ஏ. ஆங்கிலம் முடித்த எனக்கு தொடர்ந்து படிக்க வசதியில்லாமல்
தவித்தேன். பி.எட் படித்தால் ஆசிரியராகிவிடலாம் என்றால் உதவி செய்ய யாருமில்லை. அந்த நேரத்தில்
தான் நண்பர்கள் மூலம் வெளிச்சம் அறிமுகமானது.. இன்று நான் திருவள்ளூர் இந்திரா கல்லூரியில் பி.எட்
படித்து த னியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிகிறேன். பார்வையற்ற எனக்கு கல்வி வெளிச்சத்தை
கொடுத்தது வெளிச்சம் தான். எனக்கு உதவிய முகம் தெரியாத உள்ளங்களுக்கு நன்றி.
நன்றியுடன்
- ஆண்டோ, பார்வையற்ற மாணவர்
இன்னிக்கு
நான் பொறியாளர், ஆனால் ஐந்து வருடத்திற்கு முன் குடும்ப வறுமையால் பதெட்டு வயதிற்குள்
திருமணம் முடிக்கப்பட்ட ஒரு கிராமத்து பெண்.
அரியலூர் மாவட்டம் உடையார் பாளையம் கிராமம்தான்
எனக்கு சொந்த ஊர். 12ம் வகுப்பு பொதுதேர்வு எழுதிய அன்று மனநோயாளியாக
இருந்த அப்பா இறந்து போனார். பரிட்சை ஒரு பக்கம்
அப்பா மரணம் ஒரு பக்கம், ஆனாலும் வலியோடு எழுதினேன். +2வில் நல்ல மதிப்பெண் எடுத்தேன்..
ஆனால் அப்பா இழந்த நிலையில் இருந்த அம்மா, மேற்கொண்டு என்னை படிக்க வைக்க முடியாது
என சொல்லிவிட கதறி அழுதேன். எங்கே வாழ்கை படிக்க முடியாமல் கூலியாகவே
போய்விடுமோ என பயந்துகிடந்தேன். எங்கே .அப்பாவை போலவே நானும் பைத்தியமாகி விடுவோமான்னு
நினைத்து கொண்டிருந்த பொழுதுதான், எனக்கு வெளிச்சம் தெரியவந்தது. வெளிச்சத்தின் மூலம்
முகம்தெரியாத உள்ளங்கள் செய்த உதவியில் தஞ்சாவூர் அரசு பொறியியல் கல்லூரியில் படித்து
இன்று என்ஜினியராக இருப்பதற்கு வெளிச்சம் தான் காரணம். எனக்கு உதவி செய்கிறவர்களின்
கனவுகளை நான் நிச்சயம் நிறைவேற்றுவேன்.. என்னை போன்ற மாணவர்களுக்கு நிச்சயம் உதவுவேன்..
நன்றியுடன்
- ராசாத்தி
என்னோட
பெயர் மாரி, திருவண்ணாமலை மாவட்டம், வடகரிம்பலூர் கிராமத்தில் பிறந்தவன். அப்பா குடிபழக்கத்தால்
பறிகொடுத்தேன். படிப்பறிவில்லாத என் அம்மாவிடம்,
இந்தகாலத்தில் படிப்புதான் வாழ்கை என எவ்வளவோ போராடியும் அம்மாவுக்கு புரியவே
இல்லை.. அதனால் பனிரெண்டாம் வகுப்பு முடித்த நான், பெயிண்டி அடிக்கும் வேலைக்கு சென்றுகொண்டிருந்தேன்.
அதோடு அம்மாவுக்கு தெரியாமல் சென்னை பல்கலைகழத்தில், தொலைதூரக்கல்வியில் யூஜி படித்தேன்.
அதன்பிறகு வெளிச்சத்தின் மூலம், பெரம்பலூர் பாரதிதாசன் பல்கலைகழக கல்லூரியில் முதுகலை
சமூகப்பணி முடித்தேன். கடந்த காலங்களில் யாருக்கும் புண்ணியமில்லாத நிலையில் இருந்த
நான், இன்று பலருக்கு உதவிட, சென்னை வீதிகளில் என்னை போன்று காசில்லாமல் பாதிக்கப்படும்
மாணவர்களின் கல்விக்காக உண்டியல் ஏந்தி, தமிழக அரசு முதல்தலைமுறை மாணவர்களின்
உயர்கல்விக்கு உதவும் அரசாணை கொண்டு வர காரணமானவர்களில் நானும் ஒருவன்.. என்பது மகிழ்ச்சிதான்.
என்னை பலருக்கு உதவ வாய்ப்பளித்தது வெளிச்சம்தான்.
மு.மாரி,
திருவண்ணாமலை
நான்
கருப்பையா. பெரம்பலூரிலிருந்து 28 கிலோமீட்டர்
தூரத்தில் உள்ள சின்ன ஊரான சிறுநிலா என்னோட ஊர். பஸ் வராத எங்க ஊரிலிருந்து பள்ளி படிப்புக்காக பெரம்பலூர் போய்வரவே
ரொம்ப கஸ்டப்பட்டேன்.. பணிரெண்டாம் வகுப்பு முடித்த எனக்கு அரியலூர் அண்ணா யுனிவர்ஸ் சிட்டியில் கம்யூட்டர்
இஞ்சினியரிங் சீட் கிடைத்தது.. நான் எங்க தங்குவதென தெரியாமல் தவித்தேன்.. அதோடு ஆட்டோ
ஓட்டும், எனது அண்ணனால், என் கல்விக்கு உதவமுடியவில்லை. வங்கி கடன் போக மீதி கட்டணம்
செலுத்த முடியாமல் கஸ்டப்பட்டோம். இன்று வெளிச்சத்தின் மூலம் அரியலூர் அலுவலகத்தில்
தங்கி, தினமும் கல்லூரிக்கு 6 கிலோ மீட்டர் மூன்று சக்கரத்தில் போய்வருகிறேன்.. ரொம்ப
கஸ்ட்டப்பட்டு தான் படிக்கிறேன்.. ஆனால் வெளிச்சம் இருக்கும் நம்பிக்கையில் தன்னம்பிக்கையோடு
நிற்கிறேன்.
கருப்பையா…பொறியியல் கல்லூரி மாணவர்
என்னுடைய பெயர் அஸ்வினி.. நான் பெரம்பலூர் மதன்கோபாலபுரம்தான் எனக்கு சொந்த ஊர். பன்னிரெண்டாம் வகுப்பில் 986 மதிப்பெண் பெற்ற எனக்கு திருச்சி பாரதிதாசன் இன்ஸ்டிடுயூட் ஆப் மேனேஜ்மென்ட் கல்லூரியில் பி.டெக் இடம் கிடைத்தது. ஆனால் பணம் கட்ட வசதியில்லை. அம்மாவின் மருத்துவ செலவுக்கே வழியில்லாத சூழலில் குடும்பம் சிக்கிதவித்த நிலையில், வெளிச்சம் மாணவர்களிடம் உதவி கோரினோம். பலவிதமான ஆய்வுக்கு பின் என்னை தேர்தெடுத்து கல்லூரியில் சேர்த்து விட்டார்கள். கல்லூரி படிப்பை முடித்த நான், இன்று பெங்களூரில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறேன் என்றால் வெளிச்சத்தின் மூலம் உதவிய உள்ளங்களையே சாரூம்
நன்றியுடன்
அஸ்வினி
வெளிச்சம் மாணவர்களின் விண்ணப்பம்...
SC / ST Students For Free Higher education GO 6 |
Circular for SC / ST Students For Free Higher education GO 6 |
வங்கி கல்விக்கடன் வட்டி தள்ளுபடிக்கான அரசாணை
உறவுகளே!
வெளிச்சம் மாணவர்களின் 2 பக்கம் விண்னப்பத்தை பூர்த்தி செய்து விண்ணப்பத்தில் உள்ள முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.... வெளிச்சம் மாணவர்கள் மேற்கொள்ளும் ஆய்வின் அடிப்படையிலும் அவர்களின் முடிவுகளுக்கு உட்பட்டு சமூகத்திற்க்கு, சக மனிதற்களுக்கு உதவும் மனமுள்ளஏழை மாணவர்களுக்கு உதவ முடியும்...
* விதி முறைகளுக்கு உட்பட்டது
படத்தை கிளிக் செய்யுங்கள்
நாங்கள் படிப்பிருந்தும்,சீட் கிடைத்தும் தகுதியிழக்கயிருந்தவர்கள். குடிசை வீட்டில் எரிந்த சிமிலி விளக்குகளில் படித்து, படிப்பையே கேள்வி குறியாக்கியவர்கள் ... இன்று வெளிச்சம் அமைப்பால் வாழ்கை வெளிச்சம் பெற்றவர்கள். சகமனிதனை மனிதனாக நேசிக்கிற மனிதர்கள் உருவாக்குகிற வெளிச்சத்தின் வழிகாட்டுதலில் உதயமாகிறது எங்கள் வாழ்கை பயணம்...
தோழர்களே!
சமூகத்தின் அவலங்களை கண்டுகொதிக்கும் நீ நானும் தோழர்கள் தான்..
நீங்கள் பாக்கெட்டில் பணமில்லாமல் என்றைக்காவது சாப்பிட போகாமல்
பச்ச தண்ணியில் வயிறை நிறப்பி வாழ்கையை நடத்தியதுண்டா…
பர்சை தவறவிட்டுவிட்டு பணமில்லாமல் பஸ்ஸில் பயணம் பண்ணியிருக்கிறீர்களா…
ஊர் திருவிழாவில் உறவுகளை தொலைத்துவிட்டு விழிகளை நம்பி அழுது நின்றிருக்கிறீர்களா…
இந்த அவலங்களை அனுபவித்த நீங்கள்..
காலேஜி பீஸை இன்சால்மெண்ட்ல கட்டுவதற்கு டைம் கேட்டதுண்டா..அதையும்
கட்டமுடியாமல் காலேஜி பீஸ்கட்ட முடியாத உனக்கெல்லாம் எதுக்குடாண்ணு
அசிங்கப்பட்டதுண்டா….ஹால்டிக்கட் கொடுக்காமல் ஆப்சண்ட் போட்ட கல்லூரியை
நியாயம் கேட்ட போது கல்லூரி நிர்வாக உங்களைப் பார்த்து “நா” கூசாமல் அவன்
லீவு போட்டுட்டான் ,அவன் பரிச்சை எழுத வரவில்லைன்னு சொன்னதுண்டா…
பச்ச தண்ணியில் வயிறை நிறப்பி வாழ்கையை நடத்தியதுண்டா…
பர்சை தவறவிட்டுவிட்டு பணமில்லாமல் பஸ்ஸில் பயணம் பண்ணியிருக்கிறீர்களா…
ஊர் திருவிழாவில் உறவுகளை தொலைத்துவிட்டு விழிகளை நம்பி அழுது நின்றிருக்கிறீர்களா…
இந்த அவலங்களை அனுபவித்த நீங்கள்..
காலேஜி பீஸை இன்சால்மெண்ட்ல கட்டுவதற்கு டைம் கேட்டதுண்டா..அதையும்
கட்டமுடியாமல் காலேஜி பீஸ்கட்ட முடியாத உனக்கெல்லாம் எதுக்குடாண்ணு
அசிங்கப்பட்டதுண்டா….ஹால்டிக்கட் கொடுக்காமல் ஆப்சண்ட் போட்ட கல்லூரியை
நியாயம் கேட்ட போது கல்லூரி நிர்வாக உங்களைப் பார்த்து “நா” கூசாமல் அவன்
லீவு போட்டுட்டான் ,அவன் பரிச்சை எழுத வரவில்லைன்னு சொன்னதுண்டா…
சுதந்திரம் வாங்கி 63இய கடந்த போதும் வீட்டுல அப்பா-ஆத்தா யாரும்
பள்ளிகூடம் பக்கம் கூட போகாத கூலிகளாய் கிடக்க..நீங்கள் கரணட் இல்லாத
வீட்டில் படித்து கல்லூரி கனவு கண்டதுண்டா..வலிகளும் வேதனைகளும்
அனுதினமும் ரணமாய் வலிக்க…..
பள்ளிகூடம் பக்கம் கூட போகாத கூலிகளாய் கிடக்க..நீங்கள் கரணட் இல்லாத
வீட்டில் படித்து கல்லூரி கனவு கண்டதுண்டா..வலிகளும் வேதனைகளும்
அனுதினமும் ரணமாய் வலிக்க…..
படிக்க நினைப்பது தப்பா தோழர்களே…
எங்களை போன்ற 515 மாணவர்களை பிச்சை எடுக்கும் நிலை வந்தபோதும் பிச்சை எடுத்தும் வெளிச்சம் படிக்க வைக்கிறது…
நீங்கள் உங்களது பெற்றவர்களின் உதவியின் உழைப்பில்
படித்திருப்பீர்கள்…(உங்கள் DD கள் எங்கள் தலையெழுத்தை மாற்றி எழுதும்)
உங்கள் உதவியில் மற்றவர்களை படிக்க வழி செய்யுங்கள்…
நீங்கள் உங்களது பெற்றவர்களின் உதவியின் உழைப்பில்
படித்திருப்பீர்கள்…(உங்கள் DD கள் எங்கள் தலையெழுத்தை மாற்றி எழுதும்)
உங்கள் உதவியில் மற்றவர்களை படிக்க வழி செய்யுங்கள்…
உங்களை உயிருள்ளவரை மறக்க மாட்டோம்…..
நாம் பெற்ற கல்வி இச்சமூகத்திற்கு கல்விகொடுக்க பயன்படவில்லையெனில் நீ இருப்பதை விட இறப்பதே மேல் -என்கிறது வெளிச்சம்
கல்விகொடுக்க உறவாகிடுவோம் உதவிடுவோம்….
வெளிச்சம்(முதல் தலைமுறை ஏழை )மாணவர்கள்…
+919500162127:
Velicham Students Help Line :9698151515.
Contact Address : 39/2 Foxen St, Perambur,Chennai-11
Web: http://velicham.org/
Email; edu.dignity@gmail.com, velicam.students@gmail.com