Showing posts with label Engineering. Show all posts
பத்தாம் வகுப்பு தேர்வு
முடிவு வெளிவந்தவுடனும் அடுத்து வந்த இரண்டு நாட்களிலும் செய்தித் தாள்களைப்
பார்த்தவர்கள் சற்றே கவலையுற்றிருக்கலாம். காரணம் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த
சில பள்ளிகளின் விளம்பரம்.
1150க்கு மேல்,
1100க்கு மேல்,
மெடிக்கல் கட் ஆஃப்பில் இத்தனை, பொறியியல்
கட் ஆஃப்பில் இத்தனை என மாணவர்களின் புகைப்படங்களோடு முழுப் பக்கத்தையும்
ஆக்ரமித்து பல பள்ளிகள் விளம்பரப் படுத்தி இருந்தன. இவர்களே அனைத்து முக்கிய
கல்லூரிகளையும் பிடித்து விடுவார்களே?
என்ற கவலை பலருக்கும் வந்திருக்கும்.
ஆஹா பேசாமல் இந்தப் பள்ளிகளில்
நம் குழந்தைகளை சேர்த்து விட்டால் நல்ல மார்க் எடுத்து நல்ல கல்லூரி கிடைத்து
லைப்பில் செட்டில் ஆகி விடுவார்கள் நம் பிள்ளைகள்
என்று கருதும் சராசரி பெற்றோர்களுக்கு சில தகவல்களை தெரிவிக்கவே இந்த
பதிவு.
இந்த விளம்பரங்களிலேயே ஒரு
ஆஃபரையும் நீங்கள் கவனித்து இருக்கலாம். பத்தாம் வகுப்பில் 485/500 க்கு மேல் எடுத்தவர்களுக்கும்,
இரண்டு பாடங்களில் செண்டம் எடுத்தவர்களுக்கும் பள்ளிகட்டணம், விடுதி
கட்டணம் கிடையாது என்பதே அது. (இந்தளவு மதிப்பெண் எடுத்திருந்தால் அல்லது இரண்டு பாடங்களில் செண்டம் எடுத்திருந்தால் அவர்கள்
நியர் பெர்பெக்ட் மார்க் டேக்கிங் மெஷின் ஆகவே இருப்பார்கள். அவர்களை மதிப்பெண்
வாங்க வைப்பது எளிது)
பின் 450க்கு
மேல் எடுப்பவர்களுக்கும் சலுகை உண்டு. இப்படி சேரும் மாணவர்களை முதல் முன்று செக்ஷன்களில்
வைத்துக் கொள்வார்கள். பின் இப்பள்ளிகளின் ரிசல்டால் கவரப்பட்டு சேரும் ஆயிரம்
மாணவர்களை பின் உள்ள பத்து பதினைந்து செக்ஷன்களில் அடைத்து வைத்துக் கொள்வார்கள்.
பல ஆண்டு அனுபவம் உள்ள
ஆசிரியர்களின் நேரடி கவனிப்பு அந்த முதல் மூன்று செக்ஷன்களுக்கே. அந்த பையன்களே
பின் செய்திதாள் விளம்பரத்தையும் அலங்கரிப்பார்கள்.
மற்ற பையன்கள் அனைவரும் 100ல்
இருந்து 160 வரை மட்டுமே கட்டாஃப் மார்க் எடுப்பார்கள். பெற்றோர்கள் இந்த உண்மை அறியாமல்
தங்கள் பையன்களை திட்டி சித்திரவதைப் படுத்துவார்கள்.
இந்த ஆண்டு எனக்குத்
தெரிந்த பையன்களே பத்து பேர் வரையில் நாமக்கல் பள்ளிகளில் படித்து 800
மதிப்பெண்களுடன் திரும்பியிருக்கிறார்கள். இதை அவர்கள் இங்கிருந்தே
எடுத்திருக்கலாம்.
சரி இந்தப் பள்ளிகள்
எப்படி வளர்ச்சியடைந்தன?
இதற்கும் 84ல்
சுயநிதிப் பொறியியல் கல்லூரிகளின் தோற்றத்திற்கும் நெருங்கிய சம்பந்தம் உண்டு.
எம்ஜியார் ஆட்சிக்காலத்தில் தொழிற்கல்வி பயில இண்டர்வியு முறை ஒழிக்கப்பட்டு
நுழைவுத்தேர்வு முறை கொண்டு வரப் பட்டது. அதன் பின்னரே மதிப்பெண் மோகம்
எல்லாருக்கும் பரவியது.
80களின் மத்தியில் பல மாவட்டங்களில் தலைசிறந்த பள்ளிகள் என்றால் மூன்று
நான்குதான் இருந்தன. அவை பெரும்பாலும் அரசு உதவி பெற்று வந்த பள்ளிகள். அவற்றில்
குறைந்த அளவே மாணவர் சேர்க்கைக்கு வாய்ப்பிருந்தது. எனவே அவை பத்தாம் வகுப்பில் 400க்கு
மேல் எடுத்தால் தான் பிளஸ் 1 முதல் குரூப் என்று அறிவித்தன. அதே பள்ளியில் படித்து 399
எடுத்த பையன் வேறு வழியில்லாமல் அரசுப் பள்ளிக்கோ அல்லது வேறு தனியார் பள்ளிக்கோ
செல்ல வேண்டியிருந்தது. இவை மாணவர்களை மன ரீதியில் பாதிப்புக்குள்ளாக்கியது.
இதன்பின் பல தனியார்
மெட்ரிகுலேஷன் பள்ளிகள் பிளஸ் 1 படிப்பிற்கு இடங்களை அதிகரித்தன. ஆனால் அவை அடிமாட்டு விலைக்கு ஆசிரியர்களை
நியமித்ததால் எதிர்பார்த்த மதிப்பெண்களை அவர்களால் பெற்றுத்தர முடியவில்லை.
இந்நிலையில் நாமக்கல்
மாவட்டத்தில் தனியாரால் ஆரம்பிக்கப்பட்ட பள்ளிகள் ஆசிரியர்களுக்கு நல்ல சம்பளம், துணை
விடுதி காப்பாளர் கூட மிக தகுதி வாய்ந்த ஆசிரியர் என்று களமிறங்கின.
போதாக்குறைக்கு விடைத்தாள் திருத்தக்கூட தனி ஆசிரியர்கள். அவர்கள் பொதுத்தேர்வில்
எம்முறையில் திருத்துவார்களோ அதே முறையில் திருத்தி மாணவர்களின் சாதக
பாதகங்களையும் எழுதித்தருவார்கள். இதனால் பலரும் தங்கள் பிள்ளைகளை இங்கே
சேர்ப்பதில் மிகவும் ஆர்வம் காட்டினார்கள்.
சரி அவ்வளவு தானே? முடிஞ்சா
மார்க் எடுக்கட்டும். இல்லையின்னா நன்கொடை கொடுத்துக்குறோம். இதுக்கு ஏன் ஒரு
பதிவு என்று கேட்கலாம். இவர்கள் மாணவர்களை படிக்க வைக்கும் முறை ஆபத்தானது. அதனால்
தான் இந்த புலம்பலே.
நான் பனிரெண்டாம் வகுப்பு
வரை சிற்றூரிலேயே வசித்து வந்தேன். கல்லூரியில் முதலாமாண்டு படிக்கும்போது, என்
தந்தையின் பணிஉயர்வு மற்றும் இட மாறுதல் காரணமாக மாவட்டத்தலைநகர் ஒன்றிற்கு இடம்
பெயர்ந்தோம். நாங்கள் குடியிருந்த வீட்டின் உரிமையாளர் கீழ் வீட்டிலும், மாடியில்
நாங்களும். ஓனரின் மகன் பிளஸ் ஒன் படித்துக் கொண்டிருந்தான். ஒரு நாள் டியூசனில்
இருந்து வந்தவன் 138 மார்க் எடுத்துட்டேன்,
என வீட்டில் சலம்பிக் கொண்டிருந்தான்.
பின் அவனிடம்
விசாரித்தபோது இயற்பியலுக்கு டியூசன் செல்வதாகவும், பிளஸ் டூ பாடத்தை இந்த
ஆண்டே படிப்பதாகவும் கூறினான். காலையில் நடந்த இயற்பியல் பொதுத் தேர்வின்
வினாத்தாளுக்கு மதியம் 2-5 தேர்வு எழுதியதாகவும் அதில் 138/150 என்றும் கூறினான். பின்னர் இந்த விடுமுறையில் கணித டியூசன் என்றும், பள்ளி
தொடங்கிய பின் வேதியியலில் கவனம் செலுத்தப் போவதாகவும் கூறினான். இது எனக்கு 91ல்
கடும் அதிர்ச்சி. ஆனால் இன்று சர்வ சாதாரணம். அப்போது கிராமத்தில் பிளஸ் 1
பாடத்தை மாங்கு மாங்கு என்று படிப்பவனின் கதி?
பின்னர்தான் தெரிந்தது 9ஆம்
வகுப்பிலேயே பத்தாம் வகுப்பு பாடங்களையும்,
11ல் 12ஐயும் முடிக்கும் வசதி.
இதனால் என்ன நஷ்டம்?
ஒன்பதாம் வகுப்பில்
வேதியியல், இயற்பியல் பகுதிகளை நன்கு படித்தால் அது நல்ல அடித்தளத்தைக் கொடுக்கும். அதே
போலவே 11லிலும். அதைவிட முக்கியம் 11ஆம் வகுப்பில் படிக்கும் கணிதம். இண்டக்ரேஷன், டிஃப்ரனிசியேஷன், பார்சியல் டிஃப்ரனிசியேஷன், மேட்ரிக்ஸ்
போன்றவற்றில் அடித்தளமே இருக்காது 11ஆம் வகுப்பை ஸ்கிப் செய்வதால்.
சரி அதாவது தொலையட்டும், பிளஸ் 2
பாடமாவது சரியாக படிக்கிறார்களா?
என்று பார்த்தால் அதுவும் இல்லை. பெற்றோர் ஆசிரியர் கழகம்
வெளியிடும் நோட்ஸ்,
மாதிரி வினாத்தாள்,
பொதுத்தேர்வில் கேட்கப்படும் கேள்விகள் எந்தப் பகுதியில்
இருந்து கேட்கப்படும் என்பதைச் சொல்லும் புளு பிரிண்ட் இவற்றைக் கருத்தில் கொண்டே
படிக்கிறார்கள்.
திருக்குறள் படித்தால்
நாலடியார் தேவையில்லை என்பது போன்ற பெர்முடேஷன் காம்பினேஷனிலேயே மாணவர்கள்
படிக்கிறார்கள். இயற்பியல்,
கணிதத்தில் இப்படி குறிப்பிட்ட பகுதியை மட்டுமே படிப்பதால்
இவர்களின் பேஸ்மெண்ட் படு வீக்காக இருக்கிறது.
புளூபிரிண்ட் படி படித்து
மார்க் எடுத்து வருபவர்களால் பொறியியலில் சிறப்பாக படிக்க முடியாது. அங்கும் வந்து
மார்க் எடுக்கும் படி படித்து ஏதாவது மென்பொருள் நிறுவனத்தில் ஐக்கியமாகி
விடுகிறார்கள். கோர் இண்ட்ஸ்ட்ரீஸ் என்று சொல்லப்படும் நிறுவனங்களில் இவர்களின்
பங்கு மிகக் குறைவே. நல்ல திறமை வாய்ந்த பொறியாளர்கள் உருவாவதை இம்மாதிரி பள்ளிகள்
தடுக்கின்றன என்றே சொல்ல வேண்டும்.
அதனால் தான் கேட், ஐ ஈ
எஸ் போன்ற தேர்வுகளில் தமிழக மாணவர்களின் தேர்ச்சி விகிதம் குறைந்து கொண்டே வருகிறது. டி ஆர் டி ஓ, ஐ எஸ்
ஆர் ஓ போன்றவற்றில் கேரள,
ஆந்திர மாணவர்களின் பங்கு அதிகரித்துக் கொண்டே வருகிறது.
எனக்குத் தெரிந்த பையன்
ஒருவன், பத்தாம் வகுப்பில் 412 மதிப்பெண்கள் எடுத்தான். அவன் பெற்றோரும் மூன்று லட்சம் வரை செலவு செய்து
நாமக்கல்லில் படிக்க வைத்தார்கள்.
தொடர்ந்து குறைவான
மதிப்பெண்களியே அவன் பெற்று வந்தான். தேர்வு நேரத்தில் டென்ஷன், உடல்நிலை
சரியில்லை என காரணங்கள் சொல்லி வந்தான். பிளஸ் 2 அரையாண்டுத் தேர்வில் நான்கு பாடங்களில் பெயில். காரணம்
கேட்டு பெற்றோர் அங்கு விரைந்த போது,
அங்கே நூற்றுக்கும் அதிகமான பெற்றோர்களை அதே குறையுடன்
அங்கே பார்த்தனர்.
அவன் 11 ஆம்
வகுப்பு சேரும் போது தெருவே அவனை எதிர்பார்தது. பெற்றோர், உறவினர்
எதிர்பார்ப்பு அவன் சுமையைக் கூட்டியது. அங்கே இணக்கமான சூழல் இல்லாத காரணத்தால்
அவனால் பிரகாசிக்க முடியவில்லை. அது தாழ்வு மனப்பான்மையைக் கொடுத்தது. மனச்
சிதைவுக்கு ஆளாக்கியது. பின் அந்த பெற்றோர் மூன்று மாதம் விடுப்பு எடுத்து, அங்கே
வாடகைக்கு வீடு பிடித்து,
அவனை அமைதிப்படுத்தி தேர்வு எழுத வைத்தனர். 700
மதிப்பெண்களுடன் அவன் திரும்பியிருக்கிறான். இப்போது அவன் வயது நண்பர்களுடன் பழக
மனத்தடை. சிறிது சிறிதாக இயல்பாகி
வருகிறான்.
இப்படி எத்தனை பேர்?
நன்றி திரு.முரளிகண்ணன்
பொறியியல் படிக்க கொள்ளை ஆசையுடன் விண்ணப்பித்தபோதும், படிப்பிற்கான கட்டணம் செலுத்த முடியாத அளவுக்கு வறுமை வாட்டுவதால், எஸ்.சி., - எஸ்.டி., பிரிவு மாணவர்களின் பொறியியல் படிப்பு, எட்டாக்கனியாக மாறியுள்ளது. எஸ்.சி., பிரிவில், 18 ஆயிரம் பேர், எஸ்.டி., பிரிவில், 481 பேர் விண்ணப்பித்த போதும், கவுன்சிலிங், 50 சதவீதம் நிறைவடையும் நிலையில், இதுவரை, எஸ்.சி., பிரிவில், 271 மாணவர்களும், எஸ்.டி., பிரிவில், வெறும் இரண்டு மாணவர்களும், எஸ்.சி., அருந்ததியர் பிரிவில், 22 மாணவர்களும் மட்டுமே பொறியியல் படிப்பில் சேர்ந்துள்ளனர். பொறியியல் படிப்பில் சேர, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவைச் சேர்ந்த மாணவர்களே அதிகளவில் விண்ணப்பித்துள்ளனர். கவுன்சிலிங்கில், இதுவரை இந்த பிரிவைச் சேர்ந்த மாணவர்களே அதிகளவில் சேர்ந்து வருகின்றனர். மற்ற பிரிவைச் சேர்ந்த மாணவர்களைப்போல், சமுதாயத்தில் பொருளாதார ரீதியாக அடி மட்டத்தில் உள்ள எஸ்.சி., மற்றும் எஸ்.டி., பிரிவு மாணவர்களுக்கும், உயர்கல்வி படிக்க வேண்டும் என்று அதிக ஆர்வம் இருக்கிறது. பொறியியல் படிப்பதற்கு அதிகளவில் இந்த பிரிவு மாணவர்கள் விண்ணப்பித்திருப்பதன் மூலம், அதை உணர முடிகிறது. இந்த ஆண்டு எஸ்.சி., அருந்ததியர் பிரிவில், 2,106 மாணவர்கள், எஸ்.சி., பிரிவில், 17 ஆயிரத்து, 928 மாணவர்களும், எஸ்.டி., பிரிவில், 481 மாணவர்களும் விண்ணப்பித்தனர். கடந்த மாதம் 30ம் தேதி முதல், அண்ணா பல்கலையில் நடந்து வரும் கவுன்சிலிங்கில், எஸ்.சி., - எஸ்.டி., மற்றும் எஸ்.சி., அருந்ததியர் ஆகிய மூன்று பிரிவைச் சேர்ந்த மாணவர்களைத் தவிர, மற்ற அனைத்து பிரிவைச் சேர்ந்த மாணவர்களும், கவுன்சிலிங்கில் பங்கேற்று, "சீட்' பெற்று வருகின்றனர்.
50 சதவீத கவுன்சிலிங் விரைவில் முடிய உள்ளது. ஆகஸ்ட் 11ம் தேதியுடன் கவுன்சிலிங் முடிந்துவிடும் என, அண்ணா பல்கலை தெரிவித்துள்ளது. இதுவரை நடந்த கவுன்சிலிங்கில், 12ம் தேதி வரை, 11 ஆயிரத்து 10 மாணவர்களுக்கு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
இதில், ஓ.சி.,- 5,397 பி.சி., முஸ்லிம்- 277, பி.சி.,- 3,354, எம்.பி.சி.,-1,657, எஸ்.சி., அருந்ததியர்-22, எஸ்.சி.,- 271, எஸ்.டி.,-2, முற்பட்ட வகுப்பினர்-30 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
மற்ற பிரிவினரை விட, எஸ்.சி.,-எஸ்.சி., அருந்ததியர் மற்றும் எஸ்.டி., பிரிவு மாணவர்கள் மிகக் குறைந்த அளவில் பொறியியல் படிப்பில் சேர்ந்துள்ளனர். விண்ணப்பித்த மாணவர்களில், இதுவரை, 2 சதவீத மாணவர்கள் கூட சேரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பொறியியல் படிக்க, இந்த பிரிவு மாணவர்கள் ஆர்வமாக உள்ளபோதும், வறுமை மிகப்பெரிய முட்டுக்கட்டையாக உள்ளது. அரசு கல்லூரிகளில் இடம் கிடைத்தால் கூட, அரசு நிர்ணயித்துள்ள குறைந்த கட்டணத்தைக் கூட கட்ட முடியாத நிலையில், இந்த பிரிவு மாணவர்கள் உள்ளனர். இதனால், இந்த பிரிவு மாணவர்களின் பொறியியல் கனவு, கானல் நீராகவே உள்ளது.
முதல்வர் மனது வைத்தால்... :
கடந்த, 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, தமிழகத்தின் மொத்த மக்கள் தொகை, 6 கோடியே, 24 லட்சத்து, 5,679ஆக உள்ளது. இதில், எஸ்.சி., சமுதாயத்தின் மக்கள் தொகை, 19 சதவீதமாகவும் (1,18,57,079), எஸ்.டி., சமுதாய மக்கள் தொகை, 1.04 சதவீதமாகவும் (8,73,679) உள்ளது.
இந்த சமுதாய மக்கள், சமூக, பொருளாதார ரீதியாக முன்னேறுவதற்கு, தமிழக அரசு காலம், காலமாக பல்வேறு சிறப்புத் திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. எனினும், இந்த சமுதாயத்தைச் சேர்ந்த மாணவர்கள், கல்வியில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை எட்டாதவர்களாகவே உள்ளனர். பள்ளிக் கல்வியை முடித்து, உயர்கல்வி படிக்கட்டில் காலடி எடுத்து வைக்கும் சொற்ப மாணவர்களும், வறுமையின் காரணமாக கல்விக் கட்டணம் கட்ட முடியாமல் தவிக்கின்றனர். எஸ்.சி., - எஸ்.டி., மற்றும் எஸ்.சி., அருந்ததியர் பிரிவு மாணவர்களின் பொறியியல் கனவு நனவாவதற்கு, முதல்வர் ஜெயலலிதா மனது வைத்தால் நடக்கும் என்று, இந்த சமுதாய மாணவர்கள் எதிர்பார்க்கின்றனர்.
நன்றி: தினமலர்
Summary: it's only a dream for sc students to pursue higher education
பொறியியல் பட்டப்படிப்புகளாக கீழ்க்கண்ட
பாடப்பிரிவுகள் உள்ளன
பாடப்பிரிவுகள் உள்ளன
1. வானூர்திப் பொறியியல் (Aeronautical Engineering)
2. வேளாண்மை மற்றும் நீர்ப்பாசன பொறியியல்
(Agriculture and Irrigation Engineering)
3. தானியங்கிப் பொறியியல் (Automobile Engineering)
4. பயோ- இன்பர்மேட்டிக்ஸ் (Bio –informatics)
5. பி.ஆர்க் - கட்டடக்கலை மற்றும் உள்வடிவமைப்பு
(B. Arch, - Interior Design.)
6. உயிரிமருத்துவ பொறியியல் (Bio-Medical Engineering)
7. உயிரித் தொழில்நுட்பம் (Bio-Technology)
8. வேதியியல் மற்றும் மின் வேதிப் பொறியியல்
(Chemical and Electro Chemical Engineering)
9. கட்டடப் பொறியியல் (Civil Engineering)
10. வேதிப் பொறியியல் (Chemical Engineering)
11. மண் பொருள் தொழில்நுட்பம் (Ceramic Technology)
12. கணினி அறிவியல் மற்றும் பொறியியல்
(Computer Science and Engineering)
13. மின்னணு மற்றும் தகவல் தொடர்பு பொறியியல்
(Electronics andCommunication Engineering.)
14. மின்னியல் மற்றும் மின்னணுப் பொறியியல்.
(Electrical and Electronics Engineering)
15. மின்னியல் மற்றும் கருவியியல்
(Electronics and instrumentation Engineering)
16. உணவுத் தொழில்நுட்பம் (Food Technology)
17. பேஷன் டெக்னாலஜி (Fashion Technology)
18. ஜியோ இன்பர்மேட்டிக்ஸ் (Geo – informatics)
19. கருவி மற்றும் கட்டுப்பாட்டு பொறியியல் ( Instrumentation and Control)
20. தொழிற் பொறியியல் (Industrial Engineering)
21. தகவல் தொழில்நுட்பம் (Information Technology)
22. இண்டஸ்டிரியல் பயோ டெக்னாலஜி (Industrial Bio-Technology)
23. தோல் தொழில்நுட்பம் (Leather Technology)
24. உற்பத்திப் பொறியியல் (Manufacturing Engineering)
25. மரெய்ன் பொறியியல் (Marine Engineering)
26. மெட்டிரியல் என்ஜினியரிங் (Material Science and Engineering)
27. எந்திரவியல் பொறியியல் (Mechanical Engineering)
28. எந்திர மின்னணு பொறியியல் (Mechatronics)
29. மருத்துவ மின்னணுவியல் (Medical Electronics)
30. உலோகப் பொறியியல் (Metallurgical Engineering)
31. சுரங்கப் பொறியியல் (Mining Engineering)
32. பெட்ரோவேதிப் பொறியியல் (Petro Chemical Technology)
33. பெட்ரோலிய சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோலிய
வேதிப்பொருள் தொழில்நுட்பம்(Petroleum Refining and Petrochemical Technology)
34. பெட்ரோலியம் பொறியியல் (Petroleum Engineering)
35. பாலிமர் தொழில்நுட்பம் (Polymer Technology)
36. மருத்துவ தொழில்நுட்பம் (Pharimaceutical Technology)
37. ரப்பர் மற்றும் பிளாஸ்டிக் தொழில்நுட்பம். (Rubber and Plastic Technology)
38. நெசவுத்தொழில் வேதியியல் (Textile Chemistry)
39. நெசவுத்தொழில்நுட்பம் (Textile Technology)
40. அச்சுத் தொழில்நுட்பம் (Printing Technology)
41. உற்பத்திப் பொறியியல் (Manufacturing Engineering)
பிற பொறியியல் படிப்புகள்
1. தீயணைப்பு மற்றும் பாதுகாப்பு பொறியியல் ( Fire and Safety Engineering)
2. சர்க்கரைத் தொழில்நுட்பம் (Sugar Technology)
3. நேவல் ஆர்க்கிடெக்ட்சர் மற்றும் ஓசன் என்ஜினியரிங்
(Naval Architecture and Ocean Engineering.)
4. விண்வெளி தொழில்நுட்பம்
5. நானோ டெக்னாலஜி (Nano Technology)
6. ஏரோஸ்பேஸ் (Aerospace)
7. அகௌஸ்டிக்ஸ் (Acoustics)
8. அணுப் பொறியியல் (Nuclear Engineering)
9. டெய்ரி டெக்னாலஜி (Dairy Technology)
10. எனர்ஜி என்ஜினியரிங் (Energy Engineering)
11. எண்ணை மற்றும் தாள் தொழில்நுட்பம் (Oil & Paper Technology)
12. பல்ப்ஸ் மற்றும் பேப்பர் டெக்னாலஜி (Pulps & Paper Technology)
13. போக்குவரத்து தொழில்நுட்பம் (Transportation Technology)
பொறியியல் பாடப்பிரிவுகள் விளக்கம்.
1. பி.இ.பொதுப்பொறியியல் (கட்டிடப்பொறியியல்)
(B.E.Civill Engineering)
சிவில் என்ஜினியரிங் என அழைக்கப்படும் பொதுப் பொறியியல் பிரிவில் கட்டிடம் கட்டுதலை உள்ளடக்கிய கட்டுமானப் பணிகள் கற்றுத்தரப்படுகின்றன. பி.இ.பொதுப்பொறியியல் (கட்டிடம் பொறியியல்) படித்தவர்கள் எம்.இ., எனப்படும் (மாஸ்டர் ஆ.ப் என்ஜினியாஜீங); மாஸ்டர் ஆப் டெக்னாலஜி எனப்படும். எம்.டெக் படிப்பிலும் சேர்ந்து மேற்படிப்பு படிக்கலாம்.
2. பி.இ எந்திரவியல் பொறியியல் (Mechanical Engineering)
பி.இ எந்திரவியல் என அழைக்கப்படும் மெக்கானிக்ல்
என்ஜினியரிங் படிப்பு தமிழ்நாட்டிலுள்ள பெரும்பாலான
பொறியியல் கல்லூரிகளில் நடத்தப்படுகிறது. இந்த
படிப்பு தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும்
உபகரணங்கள் எந்திரங்கள், கொதிகலன்கள் மற்றும்
மின் உற்பத்தி சாதனங்கள் ஆகியவற்றைப்பற்றி
அறிந்து கொள்ள உதவுகிறது. தற்போது கம்ப்யூட்டர் பற்றி
கல்வியும், அதன் பயன்பாடும் இந்தக்கல்வியில் சேர்க்கப்பட்டுள்ளது. வடிகால் வாரியங்கள் மத்திய மாநில அரசு வழங்கும்வேலை வாய்ப்புகள் போன்றவைகளும் இப்படிப்பை முடித்தவர்களுக்கு உள்ளன.
3. பி.இ மின்னியல் மற்றும் மின்னணுவியல் பொறியியல
(Electrical and Electronics Engineering)
இந்தப்படிப்பில் மின்சாரம் சம்பந்தப்பட்ட இந்திரங்கள்,
இந்தப்படிப்பில் மின்சாரம் சம்பந்தப்பட்ட இந்திரங்கள்,
மின் உபகரணங்கள், மின்உற்பத்தி ஆகியவற்றைப்பற்றி கற்றுத்தரப்படுகிறது. இந்தப் படிப்பை முடித்தவர்களுக்கு சிமெண்ட் ஆலைகள், ராணுவ தளவாட நிறுவனம், தேசிய வெப்ப மின் ஆற்றல் நிறுவனம், பாரத் கனரக மின் சாதன நிறுவனம் போன்றவற்றில் வேலைவாய்ப்பு உள்ளது. கம்ப்ïட்டர் நிறுவனங்களிலும் வேலை கிடைக்கும்.
4. பி.டெக் வேதிப் பொறியியல் (Chemical Engineering)
பி.டெக் கெமிக்கல் என்ஜினீயரிங் என்பது பெட்ரோலியம், உரம்,
சர்க்கரை, மருந்துகள், சாயம், சிமெண்ட் தொழிற்சாலைகளில் வேலை வாய்ப்புகள் உள்ள படிப்பாகும். கண்ணாடி தயாரிக்கும்
நிறுவனத்திலும் வேலைவாய்ப்பு உள்ளது.
5. பி.இ.பொதுப் பொறியியல் புவித் தகவல் வரைவு (B.E.Geo Informatics)
புவித்தகவல் வரைவு இயல் என்னும் பிரிவு பொதுப் பொறியியல்
துணையோடு இணைந்த பிரிவு ஆகும். இந்தியாவில் சில
கல்வி நிலையங்களில் மட்டும் இப்பிரிவு உள்ளது. இப்படிப்பில்
தேர்ச்சி பெற்றவர்களுக்கு வான்வெளித்துறை, நேஸனல்
ரிமோட் சென்சிங் ஏஜென்சி சர்வே ஆஃப் இந்தியா
ஆகிய அமைப்புகளில் வேலைவாய்ப்பு அதிகம் உள்ளது.
6. பி.இ உற்பத்தி பொறியியல் (Production Engineering)
உற்பத்திப் பொறியியல் துறை என்பது இயந்திரவியல் துறையைப்
போன்றதே ஆகும். இருப்பினும் தொழிற்சாலைகளில் உருவாகும்
பொருட்களின் உற்பத்தி முறைகள், பொருட்களின் உற்பத்திக்குப்
பயன்படும் சாதனங்கள், உற்பத்தி சாதனங்களை ஆராய்ந்து
தெளிவு செய்யும் வழிகள், மேலாண்மை நெறிகள் போன்றவற்றை
இப்படிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம். இப்படிப்பை முடித்தவார்ளுக்குத் தனியார் மற்றும் அரசுத் துறைகளில் வேலை வாய்ப்புகள் உள்ளன.
7.பி.இ சுரங்கவியல் பொறியியல் ( Mining Engineering)
பி.இ.மைனிங் என்ஜினியரிங் படிப்பில் வெற்றி பெற்றவர்களுக்கு
அரசுத்துறை சுரங்க நிறுவனங்களிலும் தனியார் சுரங்க நிறுவனங்களிலும் வேலை வாய்ப்பு உள்ளது. சுரங்க சட்டத்தின்படி பெண்களை வேலைக்கு அமர்த்தக் கூடாது என்பதால் பெண்கள் இத்துறைப்படிப்பில் சேர்த்துக் கொள்ளப்பட மாட்டார்கள்.
8. பி.டெக் தோல் தொழில் நுட்பம் ( Leather Technology)
இத்துறையில் படித்துப் பட்டம் பெற்றவர்கள் தோல் வேதிப் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்கள், தோல் பதனிடும் தொழிற்கூடங்கள், தோல் ஆராய்சசி நிறுவனங்கள் ஆகியவற்றில்
வேலை வாய்ப்பினைப் பெறுவார்கள்.
9. பிடெக் நெசவுத் தொழில் நுட்பம் (Textile Technology)
பி.டெக்டெக்ஸ்டைல் டெக்னாலஜி என்னும் நெசவுத் தொழில் நுட்பப் பட்டம் பெற்றவர்கள் தேசிய ஜவுளி நிறுவனம் மற்றும்
தனியார் அரசு நெசவுத் தொழிற்சாலைகளிலும் வேலை பெற வாய்ப்பு அதிகம் உள்ளது.
10. பி.டெக் ஏரோநாட்டிக்கல் என்ஜினியரிங் (Aeronautical Engineering)
இந்த பி.டெக் ஏரோநாட்டிக்கல் என்ஜினியரிங் படிப்பு முடித்தவர்களுக்கு இந்திய விமானப்படை, விக்ரம் சாராபாய் விண்வெளி ஆராய்ச்சி மையம், ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல், ஐ.எஸ்.ஆர்.ஓ.விமான தொழில் நிறுவனங்கள், தேசிய ஆய்வகங்கள் போன்ற பல்வேறு அமைப்புகளில் வேலை வாய்ப்புகள் உள்ளன.
11.பி.இ. மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்பு பொறியியல்
Electronics and Communication Engineering)
இந்தப் படிப்பை தமிழகத்திலுள்ள பெரும்பாலான பொயிறியல்
இந்தப் படிப்பை தமிழகத்திலுள்ள பெரும்பாலான பொயிறியல்
கல்லூரிகள் நடத்துகின்றன. இந்தப் படிப்பில் சிறப்பிடம் பெற்றவர்கள் தேசிய விமானவியல் கூடம், தேசிய மின்னணுவியல் தொழிலகம்,பாரத அணுக்கதிர்; ஆராய்ச்சி நிலையம், பாரத மின்னணு தொழிற்சாலை போன்ற பல அமைப்புகளில் வேலை பெற வாய்ப்பு உள்ளது. இவை தவிர பல தனியார் நிறுவனங்களிலும் வேலை வாய்ப்பு ஏராளம் உள்ளன.
12. பி.இ.கணிப்பொறிஅறிவியல்மற்றும்பொறியியல்
(Computer Science andEngineering)
இப்படிப்பை முடித்தவர்களுக்கு உள்நாட்டு, வெளிநாட்டு
இப்படிப்பை முடித்தவர்களுக்கு உள்நாட்டு, வெளிநாட்டு
வேலை வாய்ப்புகள் உள்ளன. இந்தப் படிப்பு தமிழகத்திலுள்ள
பெரும்பாலான பொறியில் மற்றும் தொழில் நுட்பக் கல்லூரிகளில் உள்ளன. விப்ரோ, எச்.சி.எல. போன்ற அமைப்புகளும் இப்படிப்பை முடித்தவர்களுக்கு வேலை வழங்குகின்றன.
13. தொழிலியல் பொறியியல் (Industrial Engineering)
தொழிற்சாலையில் பணிபுரியத் தேவையான
பணியாளர்களையும், இயந்திரங்களையும் எந்தெந்த
வகையில் சிறப்பாகப் பயன்படுத்த முடியும் என்பதைஅறிந்து
கொள்ளவும் இந்தப் படிப்பு உதவியாக அமைந்துள்ளது.
14.அச்சுத் தொழில் நுட்பம் (Printing Technology
பி.இ.பிரிண்டிங் டெக்னாலஜி படிப்பில் அறிவியல், கணிதம்,
பேக்கேஜிங் (Packaging)Ùமட்டீரியல்; சயின்ஸ் (Material Science)
இயந்திரவியல், மின்சாரவியல் பாடங்கள் கற்றுத் தரப்படுகின்றன.
இந்தப் படிப்பை வெற்றிகரமாக முடித்தவர்களுக்கு பெரிய அச்சகங்கள், பத்திரிக்கைகள், விளம்பர நிறுவனங்கள் அச்சு இயந்திர உற்பத்தி நிறுவனங்கள் ஆகியவற்றில் வேலைவாய்ப்பு உள்ளது.
15. பி.ஆர்க் படிப்பு (B.Arch)
கட்டிடக்கலை பொறியியல் படிப்பை (Architecture Engineering) கல்லூரி
கட்டிடக்கலை பொறியியல் படிப்பை (Architecture Engineering) கல்லூரி
மூலம் கொடுப்பதே பி.ஆர்க் படிப்பின் நோக்கமாகும். இந்தப் படிப்பில் நவீன அறிவியல் கூடம், உடல் ஊனமுற்றோர் நிலையம் அமைத்தல்,
தேசிய விமானம் நிலையம், கலாச்சார நிலையங்கள், தொழிற்பயிற்சி
மையங்கள், மருத்துவ நிலையங்கள் முதலிய முக்கியமான
கட்டிடங்களை உருவாக்கத் தேவையான பயிற்சிகள்
வழங்கப்படுகின்றன. இப்படிப்பை முடித்தவர்களுக்குப்
பொதுப்பணித்துறை, ரயில்வே, வீட்டு வசதி வாரியம்,
தபால் தந்தி இலாக்காக்கள் போன்றவற்றில் வேலை வாய்ப்புகள் உள்ளன.
16. பி.இ.மின்னணு மற்றும் கருவிநுட்பவியல்
(Electronics and Instrumentation)
பி.இ.எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் இன்ஸ்டுருமென்டேசன் என்னும்
மின்னணு மற்றும் கருவி நுட்பவியல் படிப்பில் பொருளாதாரம்
மற்றும் மேலாண்மை, பொருள் தயாரித்தல் சுற்றுப்புற மாசு கட்டுப்பாடு (Pollution Control) ஆகிய பாடங்கள் கற்றுத் தரப்படுகின்றன.
(Electronics and Instrumentation)
பி.இ.எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் இன்ஸ்டுருமென்டேசன் என்னும்
மின்னணு மற்றும் கருவி நுட்பவியல் படிப்பில் பொருளாதாரம்
மற்றும் மேலாண்மை, பொருள் தயாரித்தல் சுற்றுப்புற மாசு கட்டுப்பாடு (Pollution Control) ஆகிய பாடங்கள் கற்றுத் தரப்படுகின்றன.
17.தகவல் தொழில்நுட்பம் (Information Technology)
இன்றைய உலகில் மிகவும் அதிகவேக வளர்ச்சியடைந்து
இன்றைய உலகில் மிகவும் அதிகவேக வளர்ச்சியடைந்து
வருவது தொழில்நுட்பத் துறையாகும் . கம்ப்ïட்டர்
உதவியுடன் தகவல்களை ஓரிடத்திலிருந்து மற்ற இடத்திற்கு அனுப்பும் முறை தகவல் சேகரிப்பு மற்றும் சேமிப்பு பற்றியும் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. இண்டர்நெட் மூலம் தகவல் பரிமாற்றம் செய்தல் போன்றவையும் இப்படிப்பில் இடம் பெறும்.
நன்றி: தினத்தந்தியில் வெளியானதை மின்னஞ்சல்
அனுப்பிய திரு. ஆகாஷ் அவர்களுக்கு,
















