Showing posts with label கல்லூரி கட்டணம். Show all posts


கடந்த ஆகஸ்ட் மாதம் 16ம் தேதி சென்னை உயர்நீதி மன்றத்தில் இரு பொதுநல வழக்குகளை வெளிச்சம் பதிவு செய்த இரு வழக்குகளில் ஒரு வழக்கில் வெளிச்சம் வெற்றி பெற்றுள்ளது.. என்பதை தங்களுக்கு மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்வதோடு…. வழக்கில் வெற்றிக்கான நிமிடங்களையும், அனுபவங்களையும் உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியாக கருதுகிறோம்.
வழக்குகள் விபரம்:
முதல்தலைமுறை மாணவர்களின் கல்விக்கான வழக்கு ஒன்று,மற்றொன்று தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கான உயர்கல்விக்கான வழக்கு. இந்த இரு வழக்குகளிலும் வழக்கறிஞரி வைக்காமல், எங்களின் கல்வித்தாய் வெளிச்சம் செரின் அவர்கள் வாதாடினார். இதை முதல் வெற்றி எனும் பதிவில் தங்களுக்கு தெரிவித்திருந்தோம்.. (படிக்க: முதல்வெற்றி).. மற்றும் (படிக்க: வழக்கு குறித்த முழு விபரத்தையும் )
திருப்பங்களை கொண்டு வந்த எமது வாதங்கள்;
இந்த வழக்குகளில் தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கான கல்விக்கட்டணத்தை அரசே ஏற்கும் எனும் அரசாணையை செயல்படுத்த கோரிய இரண்டாவது வழக்கில்..  ஆகஸ்ட் 28ம் தேதி தமிழ்நாடு ஆதிதிராவிடர் நலத்துறை எதிர்வாதம் செய்தது. அப்போது  தமிழகத்திலுள்ள கல்லூரிகள் அரசாணை எண் 6ஐ ஏற்றுக்கொள்ள மறுப்பதாகவும் எடுத்துரைத்தனர்.
இதை மறுத்த வெளிச்சம் செரின் அவர்கள், அரசாங்கத்தின் ஆணையை மக்களாட்சி நடக்கும் இந்த ஜனநாயக நாட்டில் அரசாணையை தனியார் நிறுவனங்கள் ஏற்க மறுக்கிறது என்பதை எந்த சாதாரண மனிதனும் ஏற்கமாட்டான். இது ஜனநாயத்திற்கான அச்சுறுத்தல் இந்த நிலை நீடித்தால் கல்வி வியாபாரமான இந்த சூழலில், அரசாங்கத்தை இந்த தனியார் நிறுவனங்கள் மிரட்ட்டக்கூடும் என வாதிட்டோம்.
இதை ஏற்றுக்கொண்ட தலைமை நீதிபதி.இக்பால் அவர்கள், பதிலளிக்க அரசுக்கு நோட்டீஸ் அனுப்பினார். நீதி மன்றத்தில் பதிலளிக்க தடுமாறிய அரசு தரப்பு சுற்றறிக்கையை அனைத்து தனியார் சுயநிதிகல்லூரிகளுக்கும் அனுப்பியது. இதையடுத்து நீதிமன்றத்தில் நடந்த வாத, பிரதிவாதங்களுக்கு இடையே எமது கோரிக்கையான தெளிவான அரசாணை வெளியிட வேண்டும் எனும் வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதியரசர் தெளிவான அரசு அரசாணை வெளியிட வேண்டும் என உத்தரவிட்டார்.
அதன்படி 1.09.2012 அன்று அரசாணை எண்: 92 ஐ அரசு வெளியிட்டுள்ளது அதில், வெளிச்சம் மனுவில் குறிப்பிட்டது போல, 11வது அறிவுறுத்தலில், நீதிபதி என்.வி. பாலசுப்பிரமனியன் கமிட்டி வரையறுத்த, கல்லூரிக்கட்டணங்களை எந்த கல்லூரியும், வசூலிக்கக்கூடாது, மேலும் முதல்தலைமுறை மாணவர்ளுக்கு கல்விக்கட்டணத்தை அரசிடமிருந்து பெறுவதை போன்று தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கான கட்டணத்தை அரசே வழங்கும் என அறிவுறுத்தப்பட்டுள்ளதுதான்.. எங்களுக்கு பெரும் மகிழ்ச்சியை கொடுக்கிறது..
அந்த மகிழ்ச்சியை தங்களிடம் பகிர்ந்து கொள்வதோடு…. இந்த அரசாணையையும் தங்கள் பார்வைக்கு சமர்ப்பிக்கிறோம்.. இந்த ஆணையை பல மாணவர்களின் கல்விகாக பரவலாக்குங்கள்..உங்கள் நண்பர்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்..
இந்த வழக்கின் வெற்றிக்காக நீங்கள் கொடுத்த வழிகாட்டுதலும், ஊக்கமும் தான் எங்களை இன்னும் பலமடங்கு பயணப்பட வைக்கிறது…  அதே நம்பிக்கையில் தான்… முதல்தலை முறை மாணவர்களின் உயர்கல்விக்கான பொதுநல வழக்கில் வெற்றி பெற உழைக்க்கிறோம்.. அந்த வெற்றிச்செய்தியை உங்களுடன் விரைவில் பகிர்ந்து கொள்வோம்..

நன்றியுடன்
வெளிச்சம் மாணவர்கள்
(கல்வி என்பது கடைச் சரக்கல்ல… அது ஒரு சமூக மாற்றத்திற்கான ஆயுதம் )

SUMMARY :

Won Poor Students Higher education Public Litigation Case…
Velicham is a movement which helps the first generation poor students or their higher education. We helped more than 700 students for making them as an engineer, doctor, teacher etc., During this year, more than 300 application came us for asking help for their higher education.
As per the Tamilnadu government ordered on April 16, 2010. That order for the government will reimburse the education costs of a college student if he comes from a family which has never had a graduate.
According to GO No.6, the govt will pay the fees on behalf of the students to the institutions from 2012 onwards. Students who got admission through management quota and govt quota in private colleges are also eligible for this scholarship.
But the colleges insist on the full payment of the fee at the time of admission. Due to their family economical status, most of the students are not able to pay full fee at the time of admission. This results in several students are not able to use this scholarship to pursue in their higher education.
We spoke to the colleges and requested to admit the students in their respective courses without demanding the fees mentioned in fee structure list fixed by the government appointed “fee fixing committee for self-financing institutions and mentioned about the said GO. But they are informed that they have not received any such Govt orders.
So we have filed two Public Litigation cases in the Chennai High court on August 16, 2012. We wanted the court to direct the institutions to admit students without insisting on full payment initially. On August 28, 2012 counter party said that the Tamilnadu Adi Dravidar and Tribal welfare Department didn’t send any circular to the colleges. But that department sent a circular mentioned that not to collect fee from SC/ST/Converted Christians on August 24, 2012. We brought this news to the court’s notice.
Finally we won one of our cases is for SC/ST/Converted Christian students. High court gave a direction stated that the Government and other authorities not to insist on payment of fees at the time of admission and to know about the government orders to the students, a copy of the same has to be displayed in the notice board.  Our another case is for first generation student is going on. We will win this case too for helping them for their higher studies.

With regards
Velicham

'''இன்ஜினீயரிங் படிப்புக்கு எதிர்காலம் கிடையாதா?' என்றெல்லாம் அக்கறையாக ஆராய்ச்சி செய்பவர்கள், என் போன்ற பி.எட் மாணவிகளின் கண்ணீரையும் கொஞ்சம் கவனிக்க வேண்டும்..''
- தமிழகத்தின் கடைக்கோடியில் இருந்து ஒரு கிராமத்து மாணவி நமக்கு எழுதியிருந்த கடிதம் இது. கடிதம் படித் ததும் அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டோம். நெஞ்சை உருக்கி யது அந்த ஏழைப் பெண்ணின் பேச்சு.
''எங்க ஊருலயே நான்தானுங்க நல்லா படிக்கிற பொண்ணு. ஆனா, இன்ஜினீயரிங் மாதிரி பெரிய படிப்பெல்லாம் படிக்க வைக்கிற நிலைமையில எங்க வீடு இல்லைங்க. அப்பா சின்ன வயசுலயே இறந்துட்டார். அம்மாவும் நானும் மட்டும்தான். பி.எட் படிச்சு டீச்சரானா போதும்னு நான் ப்ளஸ் டூ படிக்கும்போதே அம்மா முடிவெடுத்துட்டாங்க. நானும் டீச்சர் ஆகி, அம்மாவை சந்தோஷப்படுத்தணும்னு உறுதி எடுத்துக்கிட்டு பி.எஸ்சி படிச்சேன். பி.எட் ஸீட்டுக்காக ஒரு காலேஜ்ல 70 ஆயிரம் கேட்டாங்க. எங்க அம்மாவும் டீச்சர் வேலை கிடைச்சுடும்ங்கிற நம்பிக்கையில கொஞ்ச நஞ்சம் இருந்த நகைகளை வித்து பணத்தைக் கட்டினாங்க.
இப்போ, கிளாசுக்குள்ள நுழைஞ்ச பிறகுதான் எனக்கு உலகமே தெரியுது.. தமிழ்நாடு முழுக்க நூத்துக்கணக்குல தனியார் பி.எட் காலேஜுங்க இருக்காம். அதுல இருந்து வருஷத்துக்கு கிட்டத்தட்ட அறுபதாயிரம் பேரு வெளிய வருவாங்களாம். அவங்கள்ல அஞ்சு சதவிகிதம் பேருக்குக் கூட கவர்மென்ட்டால வேலை கொடுக்க முடியாதாம். சரி, கவர்மென்ட் உத்தியோகம் வேண்டாம்.. தனியார் ஸ்கூல்லயே டீச்சரா போகலாம்னா, அங்கல்லாம் ஆயிரம் ரூபாய்க்கு மேல தர்றதில்லையாம். இதுக்காகவா நான் நாலு வருஷம் காத்துட்டிருந்தேன்? இதுக்காகவா எங்க அம்மா தாலியை வித்தாங்க?'' - அந்தப் பெண் பேசப் பேச, நமக்குள் என்னவோ செய்தது.
பி.எட் காலேஜ் பற்றி அந்தப் பெண் சொல்வது உண்மையா? - சில அனுபவசாலிகளிடம் விசாரித்தோம்.
''எல்லாமே உண்மைதாங்க..'' என்று ஆரம்பித்தார், சென்னையைச் சேர்ந்த பி.எட் மாணவி ஒருவர். இவர் ஏற்கெனவே தொடக்கப்பள்ளி ஆசிரியருக்கான 'டீச்சர் டிரெய்னிங்' படிப்பை முடித்துவிட்டு, அதில் பலன் ஏதும் இல்லாததால் டிகிரியையும் முடித்து, தற்போது பி.எட் படித்துக் கொண்டிருப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.

''நான் நிறையவே அனுபவப்பட்டுட்டேங்க.. முன்னேயெல்லாம் அரசுக் கல்லூரிகள்லயும் அரசு உதவி பெறுற கல்லூரிகள்லயும்தான் பி.எட் இருக்கும். தமிழ்நாடு முழுக்க மொத்தமே 1,000 ஸீட்தான் இருக்கும். அதுல ஒருத்தரா செலக்ட் ஆகுறது பெரிய விஷயமா இருந்தது. ஆனா, ஸீட் கிடைச்சுப் படிச்சுட்டா, ரெண்டு மூணு வருஷத்துக்குள்ள கண்டிப்பா வேலை கிடைச்சுடும்னு ஒரு நிச்சயம் இருந்துச்சு. 'பொண்ணை பி.எட் மட்டும் படிக்க வச்சுடுங்க.. நகை, பணமெல்லாம் கூட வேண்டாம்'னு அப்போ சம்பந்தமே பேசுவாங்கன்னா பார்த்துக்கங்களேன்..
ஒரு பி.எட் ஸீட்டுக்கு எத்தனை லட்சம் செலவானாலும் பரவாயில்லைனு சில பேர் குறுக்கு வழியில ஸீட் வாங்குற கூத்தும் அப்போ நடந்தது. ஆனா, 2003-ம் வருஷத்துக்கு அப்புறம் யாரு வேணும்னாலும் பி.எட் காலேஜ் ஆரம்பிச்சுக்கலாம்னு ஆயிடுச்சு. அவ்வளவுதான்.. 'லட்சக்கணக்குல தர வேண்டாம். அறுபதாயிரம், எழுவதாயிரம் தந்தா போதும். நாங்க உனக்கு பி.எட் டிகிரியைத் தர்றோம்'னு தனியார் காலேஜ்காரங்க வியாபாரம் பேச ஆரம்பிச்சுட்டாங்க.
சரி, இப்படி தனியார்கிட்ட வாங்குற டிகிரிக்கும் கவர்மென்ட் டிகிரிக்கும் என்ன வித்தியாசம்னு கேட்டா, ஒண்ணுமேயில்ல.. வேலை வாய்ப்பு அலுவலகத்துல பதிவு செஞ்சு வச்ச சீனியாரிட்டி அடிப்படையிலதான் வேலை கிடைக்கும்னு கவர்மென்ட் சொல்லிடுச்சு. முன்னே ஒரு வருஷத்துக்கு 1000 பி.எட் மாணவர்கள் படிப்பை முடிச்சுட்டு வெளிய வந்தாங்கன்னா, இப்போ கிட்டத்தட்ட அறுபதாயிரம் மாணவர்கள் வர்றாங்க. ஆனா, அரசாங்க வேலை என்னவோ வருஷத்துக்கு 3,000 பேருக்குக் கூட கிடைக்கிறதில்ல..
பெரும்பாலும் பொண்ணுங்கதான் பி.எட்-ஐ விரும்பிப் படிக்கிறாங்க. அதனால இதுல அதிகம் பாதிக்கப்படுறதும் அவங்கதான். எனக்குத் தெரிஞ்ச ஒரு அக்கா2004-ம் வருஷம் பி.எட் முடிச்சாங்க. இப்ப வரைக்கும் அவங்களுக்கு வேலை கிடைக்கலை. அவங்களுக்கு அப்புறம் நூத்துக்கணக்கான தனியார் காலேஜ்ல பி.எட் முடிச்சவங்களே கிட்டத்தட்ட மூணு லட்சம் பேர் இருப்பாங்க. அவங்களுக்கெல்லாம் வேலை கிடைச்சு, எனக்கு எப்போ வேலை கிடைக்கும் நினைச்சாலே தலையை சுத்துது. வேலை கிடைக்காதுங்கறது கூட பெரிய விஷயமா தெரியல.. இப்படிப்பட்ட ஒரு நிச்சயமில்லாத படிப்பை கிட்டத்தட்ட ஒரு லட்சத்துக்கு வித்துடறாங்க பாருங்க.. அதுதான் தனியார் கல்லூரிகளோட திறமை'' என்று காட்டமாகவே பேசி முடித்தார் அவர்.
தனியார் கல்லூரிகள் பற்றிப் பேசினாலே கொதித்துப் போகிறார்கள் முன்னாள் மற்றும் இன்னாள் பி.எட் மாணவ- மாணவிகள். ஆனால், பெயரையோ புகைப்படத்தையோ வெளியிட யாருமே முன்வரவில்லை. அந்த அளவுக்குப் பெரிய இடத்துப் பொல்லாப்பு இதில் இருப்பதாகச் சொல்கிறார்கள்.
தமிழ்நாடு பி.எட் பட்டதாரிகள் சங்கத்தின் தஞ்சை மாவட்டத் தலைவர் பாஸ்கரனிடம் இதைப் பற்றி விவாதித்தோம். ''கடந்த நாலு வருஷமா நிறைய தனியார் நிறுவனங்கள் இந்த பி.எட் 'பிஸினசு'க்குள்ள வந்துடுச்சு. இன்ஜினீயரிங் மாதிரி பி.எட்-ம் வேலை கொடுக்கும்னு அவங்க விளம்பரம் பண்றாங்க. அதையெல்லாம் மக்கள் நம்பக் கூடாது. ஏற்கெனவே லட்சக்கணக்கான பி.எட் பட்டதாரிகள் க்யூவுல நிக்கிறாங்க. இதுல அரசாங்கப் பள்ளிகள்ல 30 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர்ங்கற விகிதாசாரம் மாறி, இப்போ 40 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் போதும்னு முடிவெடுத்துட்டாங்க. இந்த உண்மைகளை மக்கள் புரிஞ்சுக்கணும்'' என்றார்.
''சரி, இத்தனை பி.எட் கல்லூரிகளுக்கு அனுமதி கொடுத்தது ஏன்?'' தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடியிடமே கேட்டோம்.. ''கல்லூரிகளுக்கு அனுமதியை தமிழக அரசு மட்டுமே கொடுப்பதில்லை. தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில்(என்.சி.டி.இ)தான் அனுமதி கொடுக்கிறது. தமிழக அரசு மட்டுமே அதைத் தடுத்து நிறுத்தி விட முடியாது'' என்றார் அவர்.
பெங்களூருவில் உள்ள தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சிலைத் தொடர்பு கொள்ள முயன்றோம். பெயர் வெளியிட விரும்பாத அதிகாரிகள் சிலர் மட்டுமே வெகு ஜாக்கிரதையாகப் பேசினர்.. ''ஏற்கெனவே புதுவை, மகாராஷ்ட்ரா, குஜராத், ஆந்திரா, அரியானா, கேரளா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் 5 ஆயிரத்துக்கும் அதிகமான பி.எட் கல்லூரிகளுக்கு அனுமதி கொடுத்துவிட்டதால் நெருக்கடி முற்றி, பிரதமர் வரை புகார்கள் பறந்து விட்டன. அதனால், அந்த ஏழு மாநிலங்களில் இனி புதிய கல்லூரிகளுக்கு அனுமதி தருவதில்லை என்று தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சிலே அறிவித்திருக்கிறது. மற்ற மாநிலங்களிலும் அந்த நெருக்கடி ஏற்படும் நாள் வெகுதூரத்தில் இல்லை'' என்றார்கள் அவர்கள்.
இதற்கெல்லாம் தனியார் கல்லூரிகள் என்ன பதில் சொல்கின்றன என்பதை அறிய செஞ்சி அருகேயுள்ள ஆலம்பூண்டி ரங்கபூபதி பி.எட். கல்லூரி சேர்மன், பூபதியிடம் பேசினோம்.. ''முறைகேடுகள் கல்லூரிகளில் மட்டுமல்ல.. சமூகத்தில் எல்லா தளத்திலும் நடக்கிறது. அதைப் பற்றி என்னிடம் கருத்து ஏதுமில்லை'' என்றவர், தொடர்ந்தார்..
''பி.எட் கல்லூரி நடத்த தனியாருக்கு அனுமதி வழங்கக் கூடாது என்று ஏற்கெனவே சென்னை உயர்நீதி மன்றத்தில் தமிழக அரசு வழக்குத் தொடர்ந்தது. அப்போது வழங்கப்பட்ட தீர்ப்பில், பி.எட் படித்தவர்கள் தமிழக அரசு வேலையை மட்டுமே நம்பியிருக்க வேண்டியதில்லை.. அவர்கள் டுடோரியல் கல்லூரி நடத்தலாம், டியூஷன் எடுக்கலாம், வெளி மாநிலத்திலும் வெளி நாட்டிலும் ஆசிரியர்களாக வேலை பார்க்கலாம்.. அதனால் தனியார் கல்லூரிகளுக்கு அனுமதி தருவது தவறில்லை' என்றுதான் சொல்லப்பட்டது. எனவே, பி.எட். பயின்றாலே, ஆசிரியராக அதிலும் அரசுப் பள்ளிகளில்தான் வேலை பார்க்க வேண்டும் என்ற எண்ணம் தவிர்க்கப்பட வேண்டும். இப்போதெல்லாம் சில தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளிகளே திறமையான பி.எட் ஆசிரியர்களுக்கு ரூ.25 ஆயிரம் முதல் 30 ஆயிரம் ரூபாய் வரை சம்பளம் வழங்குகின்றன'' என்றார்.
பி.எட் முடித்துவிட்டு கல்லூரி ஒன்றில் விரிவுரையாளராக இருக்கும் ஜெயந்தியிடம் இதைச் சொன்னபோது விரக்தியான புன்னகைதான் முதல் பதிலாக வந்தது. ''தனியார் கல்வி நிறுவனங்கள்ல இன்னிக்கு என்ன சம்பளம்னு நினைக்கிறீங்க? வெளிய ஆயிரக்கணக்கான பேர் அதே வேலைக்காகக் காத்திருக்கும்போது, ரொம்ப குறைவான சம்பளத்தைத்தான் தனியார் எல்லாரும் தருவாங்க. நாம அதுக்கு சம்மதிக்கலைன்னா, வேற ஒருத்தவங்க அங்கே வர ரெடியா இருப்பாங்க. டியூஷன் எடுக்குறதெல்லாம் நிலையான வருமானமா? டுடோரியல் நடத்த யார் லோன் தருவா? இந்த பிராக்டிகல் கஷ்டமெல்லாம் அனுபவிக்கிறவங்களுக்குத்தான் தெரியும்!'' என்று பெருமூச்சோடு முடித்தார் அவர்.
சென்னை மாணவி சொன்ன அந்த முத்தான வாக்கியங்கள்தான் மீண்டும் நம் நெஞ்சில் ரீங்காரமிட்டன.. ''இப்படிப்பட்ட ஒரு நிச்சயமில்லாத படிப்பை கிட்டத்தட்ட ஒரு லட்சத்துக்கு வித்துடறாங்க பாருங்க.. அதுதான் தனியார் கல்லூரிகளோட திறமை!''


ஜெயபிரகாஷ் காந்தி, கல்வியாளர், சேலம்:
''பி.எட் படிக்கிறவர்கள் எந்த சப்ஜெக்ட் படிக்கிறார்கள் என்பதிலும் விஷயம் இருக்கிறது. தற்போதைய நிலையில், ஆங்கில இலக்கியம், கணக்கு மற்றும் கெமிஸ்ட்ரி பாடங்களுக்கான ஆசிரியர்களுக்கு எதிர்காலம் நன்றாகவே உள்ளது. எனவே, மாணவ மாணவிகள் டிகிரி படிக்கும் போதே பி.எட்-க்கான தேவை என்ன என்பதை அறிந்து பாடத்தைத் தேர்வு செய்ய வேண்டும்''
பேராசிரியர் ஆரோக்கிய சாமி, முதல்வர், ஞானமணிகல்வியியல் கல்லூரி, ராசிபுரம்:
''வெளி நாடுகளில் 18 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற நிலை இருக்கிறது. ஆனால், இங்கே 40 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர்தான் இருக்கிறார். அது மாற்றப்பட்டால் வேலை இல்லை என்ற பிரச்னை ஓரளவு தீரும்.''


நன்றி: அவள் விகடன்

வெளிச்சம் மாணவர்களின் போஸ்டரின் வலிகள்.. விளக்கிய தினமலர் செய்தி       


ஊரிலேயே,வீட்டிலேயே பஸ்ட் படிச்சி வேலைக்கு போனோம்.அதோடு சரி எல்லாம் மறந்து போனார்கள் எங்கள் போன தலைமுறை… ஆனால் இப்போதிய மாணவர்களின் நிலை மிக மோசமாக போனது…
              கடந்த வாரம் வெளிச்சம் மாணவர்களால் சென்னையெங்கும் ஒருவருடத்திற்கு பிறகு மீண்டும் ஒட்டப்பட்ட போஸ்ட்டரின் வலியை 29.12.2010 தினமலர் செய்திதாள் செய்தியாக்கியது…தினமலருக்கு நன்றி சொல்ல கடமை பட்டவர்களாய் முதல்தலைமுறை ஏழை மாணவர்களின் உயர்கல்விக்காக வெளிச்சம் மாணவர்களின் போராட்டத்தினை உங்களுக்கு சமர்ப்பிக்க வேண்டிய கட்டாயமிருக்கிறது…  
              மாணவர்களின் கல்வியை காப்பாற்றுவதற்காக வெளிச்சம் மாணவர்களால் முதல் தலைமுறை மாணவர்களின் படிப்பைப் பாதுகாக்க “திரைப்பட நடிகர் ஜெயம் ரவி” அவர்களோடு சென்னை பத்திரிக்கையாளர் சந்திப்பு நடத்தியது அதற்கும் பலனடையவில்லை..ஆனால் கல்லூரிகள் கல்விக்கட்டணம் செலுத்தமுடியாததால் மாணவர்களை படிக்க விடாமல் கல்லூரியை விட்டு வெளியே அனுப்ப இருக்கிற சூழலில் வேறு வழியில்லாமல் 40 வெளிச்சம் மாணவர்கள் தமிழக காவல்துறை இயக்குநரிடம் தமிழகம் முழுக்க உண்டியல் குலுக்கி நிதி வசூலிக்க அனுமதி வாங்கினோம்..அதன்படி சென்னை முழுவதும் உண்டியல் ஏந்தினோம்..இச்செய்தி “தமிழக அரசியல்”,”டெக்கான் குரேனிக்கல்”,”என்.டி,டிவி” போன்ற ஊடங்கங்களிலும் வெளியானது..  அதன் பின் தான் தமிழக அரசால் முதல் தலைமுறை ஏழை மாணவர்களுக்கான இலவச உயர்கல்விக்கான அரசாணை வெளியிடப்பட்டது.GO_First_Graduate

                               
                            கல்விக்கட்டணம் மட்டுமல்லாமல் ஏழை மாணவர்களின் அனைத்து கட்டணங்களையும் அரசே ஏற்க வேண்டும் எனவும்..நாம் மேலும் போராடினோம்.. நம் பயத்தினை தினமணி நாளிதழ் செய்தியாக்கியது.. படிக்க
இன்னும் ஓர் கோரிக்கை முதல்வரய்யா….என்கிற தலைப்பில் நாம் எழுதிய கோரிக்கை மனுவினை உங்களிடம் வைக்கிறோம்..http://velichamedu.wordpress.com/2010/04/24/110/
அதை சென்னை முழுக்க போஸ்ட்டர் ஒட்டினோம்..கடந்த பிப்ரவரி 22ம் தேதி உயர்கல்வி மானிய கோரிக்கை விவாத நாள் என்பதால் இச்செய்தி விவாதிக்கப்பட வேண்டும் என நாம் திட்டமிட்டோம் போஸ்டரில் உள்ள செய்திகளையே மனுவாகவும் சில சட்டமன்ற உறுப்பினர்களிடம் கொடுத்திருந்தோம்..(மனுவின் நகலை இணைத்துள்ளோம்)
இதற்காக நாம் பலவகையான முயற்சிகளை நாம் மேற்கொண்டும்..அரசு மாணவர்களுக்கு ஒதுக்கிய 50 கோடி ரூபாய் மாணவர்களின் கல்விக்கு போய்சேருகிறது என்பதை கண்காணிக்கவும்,திட்டம் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 65 நாட்கள் வெளிச்சம் மாணவர்கள் தமிழகம் முழுக்க பிரச்சாரப்பயணம் மேற்கொண்டார்கள்..அதன் தொடர்ச்சியாகத்தான் மாணவர்கள் உதவி எண் 9698151515 துவங்கி மாணவர்களுக்கு உதவிவருகிறோம்…
நாம் என்ன பயந்து இந்த பணியை செய்தோமோ. அது நடக்க துவங்கியது.. என்னவெனில் ஆளுநர் சுர்ஜித்சிங் பர்ணாலா அவர்கள் கடந்த2010 ஜனவரி 6 ம் தேதி அறிவித்த அறிவிப்பில் மொத்த கட்டணத்தையும் அரசே ஏற்கும் என இருந்தது. இதை நம்பி அப்பாவியான 78883 முதல்தலைமுறை மாணவர்கள் பொறியியல் கல்லூரி கவுன்சிலிங்கிக்கு விண்ணப்பித்தார்கள்.. ஆனால் கவுன்சிலிங் நடைபெற்று கொண்டிருந்தபோது தான் அரசு முதல்தலைமுறை மாணவர்களுக்கான அரசாணை நிர்ணயித்த தொகையை வெளியிட்டார்கள்..குறிப்பாக அரசு பொறியியல் கல்லூரிகளில் சேரும் மாணவர்களுக்கு ரூ 5000 ம்.. சுயநிதி கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு ரூ 20000 என அறிவிக்க… இதனால்கவுன்சிலிங்க் விண்ணபித்த 78883 முதல்தலை முறை மாணவர்களில் நாற்பத்தியெட்டாயிரம் மாணவர்கள் மட்டுமே கல்லூரியில் சேர்ந்தார்கள்.அரசை நம்பி கல்லூரி கனவு கண்ட மற்ற மாணவர்கள் கனவுகள் கருகிபோனது.. ஏனெனில் இந்த மாணவர்களின் கல்விக்கு உதவ வேண்டிய அரசு குறைந்த பணத்தினை ஒதுக்கிவிட்டு தனது கையை விரித்து கொண்டது..
இது ஒருபுறமிருக்க கல்லூரிகளில் சேர்ந்த மாணவர்களின் நிலமை மோசமானது… கல்லூரியில் சேர்ந்த மாணவர்களிடமிருந்து நம்மை உருகுலைய வைத்தது..கல்லூரி நிர்வாகங்கள் பணம் கவர்மெண்ட் கொடுக்கிறப்போ நாங்க திருப்பி தருகிறோம்.. நீங்க பணத்தை கட்டுங்க என கல்லூரிகள் மிரட்டுகிறார்கள் என்றும், கட்டணத்தை விட அதிகமாக பணம் கேட்பதாக நம் students Help line 9698151515 ல் தகவல் வந்துகொண்டே இருக்கிறது… விடாது பயணித்தோம்…ஏனெனில் வெளிச்சம் என்பது முதல்தலை மாணவர்களுக்கான கல்வி இயக்கமாக அறிவித்தோம்..இன்று வரை வெளிச்சம் மாணவர்கள் 515 மாணவர்கள் முதல்தலை முறை மாணவர்கள் என்பதையும் உங்களுக்கு தெளிவு படுத்துகிறோம்..
நாம் பயந்ததை போன்று பிரச்சனையை வெளியிட்ட தினமலர் கட்டுரை
தலைப்பு: கல்வி உதவித் தொகை வழங்க அரசு தாமதம்: கல்லூரி நிர்வாகம் கெடுபிடி
http://kalvimalar.dinamalar.com/tamil/NewsDetails.asp?id=8812
எதை எதையோ பேசும், அறிக்கையாக்கும்,போராட்டமாக்கும் கட்சிகளே,இயக்கங்களே,ஒத்தகருத்துடைய சிந்தனையாளர்களே..இந்த விசயத்தில் மட்டும் உங்கள் கவனம் படவே யில்லையா…
சுதந்திரமடைந்து இவ்வளவு காலங்களில் நாங்கள் தான் முதன்முதலில் கல்லூரிகளில் சேர்ந்தோம் என்பது எங்களுக்கு பெருமை..இந்த நாட்டின் முன்னேற்றத்திற்க்கான கேள்விகுறி…எப்போதுதான் எமக்காகவும் உம்குரல் எழும்ப போகிறது….பார்ப்போம்..
ஏழைகளின் உயர்கல்விக்கான பணியில்
வெளிச்சம் மாணவர்கள்
(இணைப்புகளை இடையிடையே போட்டதற்க்கு மன்னிக்கவும்…எங்கள் வலிகள் அப்படியே பதிவு செய்ய முனைந்தோம்)…
இணைப்புகள்:
பிரச்சாரப்பயணப்படங்கள்:http://velichamedu.wordpress.com/%E0%AE%
பிரச்சாரப்பயண பத்திரிக்கை செய்திகள்:
http://velichamedu.wordpress.com/%E0%A
வெளிச்சம் மாணவர்கள் சட்ட மன்றத்தில் கொடுத்த மனு:http://velichamstudents.blogspot.com/2010/04/22.html