Archive for 2012
கடந்த ஆகஸ்ட் மாதம் 16ம் தேதி சென்னை உயர்நீதி மன்றத்தில் இரு பொதுநல வழக்குகளை வெளிச்சம் பதிவு செய்த இரு வழக்குகளில் ஒரு வழக்கில் வெளிச்சம் வெற்றி பெற்றுள்ளது.. என்பதை தங்களுக்கு மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்வதோடு…. வழக்கில் வெற்றிக்கான நிமிடங்களையும், அனுபவங்களையும் உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியாக கருதுகிறோம்.
வழக்குகள் விபரம்:
முதல்தலைமுறை மாணவர்களின் கல்விக்கான வழக்கு ஒன்று,மற்றொன்று தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கான உயர்கல்விக்கான வழக்கு. இந்த இரு வழக்குகளிலும் வழக்கறிஞரி வைக்காமல், எங்களின் கல்வித்தாய் வெளிச்சம் செரின் அவர்கள் வாதாடினார். இதை முதல் வெற்றி எனும் பதிவில் தங்களுக்கு தெரிவித்திருந்தோம்.. (படிக்க: முதல்வெற்றி).. மற்றும் (படிக்க: வழக்கு குறித்த முழு விபரத்தையும் )
திருப்பங்களை கொண்டு வந்த எமது வாதங்கள்;
இந்த வழக்குகளில் தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கான கல்விக்கட்டணத்தை அரசே ஏற்கும் எனும் அரசாணையை செயல்படுத்த கோரிய இரண்டாவது வழக்கில்.. ஆகஸ்ட் 28ம் தேதி தமிழ்நாடு ஆதிதிராவிடர் நலத்துறை எதிர்வாதம் செய்தது. அப்போது தமிழகத்திலுள்ள கல்லூரிகள் அரசாணை எண் 6ஐ ஏற்றுக்கொள்ள மறுப்பதாகவும் எடுத்துரைத்தனர்.
இதை மறுத்த வெளிச்சம் செரின் அவர்கள், அரசாங்கத்தின் ஆணையை மக்களாட்சி நடக்கும் இந்த ஜனநாயக நாட்டில் அரசாணையை தனியார் நிறுவனங்கள் ஏற்க மறுக்கிறது என்பதை எந்த சாதாரண மனிதனும் ஏற்கமாட்டான். இது ஜனநாயத்திற்கான அச்சுறுத்தல் இந்த நிலை நீடித்தால் கல்வி வியாபாரமான இந்த சூழலில், அரசாங்கத்தை இந்த தனியார் நிறுவனங்கள் மிரட்ட்டக்கூடும் என வாதிட்டோம்.
இதை ஏற்றுக்கொண்ட தலைமை நீதிபதி.இக்பால் அவர்கள், பதிலளிக்க அரசுக்கு நோட்டீஸ் அனுப்பினார். நீதி மன்றத்தில் பதிலளிக்க தடுமாறிய அரசு தரப்பு சுற்றறிக்கையை அனைத்து தனியார் சுயநிதிகல்லூரிகளுக்கும் அனுப்பியது. இதையடுத்து நீதிமன்றத்தில் நடந்த வாத, பிரதிவாதங்களுக்கு இடையே எமது கோரிக்கையான தெளிவான அரசாணை வெளியிட வேண்டும் எனும் வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதியரசர் தெளிவான அரசு அரசாணை வெளியிட வேண்டும் என உத்தரவிட்டார்.
அதன்படி 1.09.2012 அன்று அரசாணை எண்: 92 ஐ அரசு வெளியிட்டுள்ளது அதில், வெளிச்சம் மனுவில் குறிப்பிட்டது போல, 11வது அறிவுறுத்தலில், நீதிபதி என்.வி. பாலசுப்பிரமனியன் கமிட்டி வரையறுத்த, கல்லூரிக்கட்டணங்களை எந்த கல்லூரியும், வசூலிக்கக்கூடாது, மேலும் முதல்தலைமுறை மாணவர்ளுக்கு கல்விக்கட்டணத்தை அரசிடமிருந்து பெறுவதை போன்று தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கான கட்டணத்தை அரசே வழங்கும் என அறிவுறுத்தப்பட்டுள்ளதுதான்.. எங்களுக்கு பெரும் மகிழ்ச்சியை கொடுக்கிறது..
அந்த மகிழ்ச்சியை தங்களிடம் பகிர்ந்து கொள்வதோடு…. இந்த அரசாணையையும் தங்கள் பார்வைக்கு சமர்ப்பிக்கிறோம்.. இந்த ஆணையை பல மாணவர்களின் கல்விகாக பரவலாக்குங்கள்..உங்கள் நண்பர்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்..
இந்த வழக்கின் வெற்றிக்காக நீங்கள் கொடுத்த வழிகாட்டுதலும், ஊக்கமும் தான் எங்களை இன்னும் பலமடங்கு பயணப்பட வைக்கிறது… அதே நம்பிக்கையில் தான்… முதல்தலை முறை மாணவர்களின் உயர்கல்விக்கான பொதுநல வழக்கில் வெற்றி பெற உழைக்க்கிறோம்.. அந்த வெற்றிச்செய்தியை உங்களுடன் விரைவில் பகிர்ந்து கொள்வோம்..
நன்றியுடன்
வெளிச்சம் மாணவர்கள்
(கல்வி என்பது கடைச் சரக்கல்ல… அது ஒரு சமூக மாற்றத்திற்கான ஆயுதம் )
SUMMARY :
Won Poor Students Higher education Public Litigation Case…
Velicham is a movement which helps the first generation poor students or their higher education. We helped more than 700 students for making them as an engineer, doctor, teacher etc., During this year, more than 300 application came us for asking help for their higher education.
As per the Tamilnadu government ordered on April 16, 2010. That order for the government will reimburse the education costs of a college student if he comes from a family which has never had a graduate.
According to GO No.6, the govt will pay the fees on behalf of the students to the institutions from 2012 onwards. Students who got admission through management quota and govt quota in private colleges are also eligible for this scholarship.
But the colleges insist on the full payment of the fee at the time of admission. Due to their family economical status, most of the students are not able to pay full fee at the time of admission. This results in several students are not able to use this scholarship to pursue in their higher education.
We spoke to the colleges and requested to admit the students in their respective courses without demanding the fees mentioned in fee structure list fixed by the government appointed “fee fixing committee for self-financing institutions and mentioned about the said GO. But they are informed that they have not received any such Govt orders.
So we have filed two Public Litigation cases in the Chennai High court on August 16, 2012. We wanted the court to direct the institutions to admit students without insisting on full payment initially. On August 28, 2012 counter party said that the Tamilnadu Adi Dravidar and Tribal welfare Department didn’t send any circular to the colleges. But that department sent a circular mentioned that not to collect fee from SC/ST/Converted Christians on August 24, 2012. We brought this news to the court’s notice.
Finally we won one of our cases is for SC/ST/Converted Christian students. High court gave a direction stated that the Government and other authorities not to insist on payment of fees at the time of admission and to know about the government orders to the students, a copy of the same has to be displayed in the notice board. Our another case is for first generation student is going on. We will win this case too for helping them for their higher studies.
With regards
Velicham
வணக்கம், அவள் விகடன் இதழில் வாரம் ஒரு சிறப்பு விருந்தினர் சொல்லும் கருத்துக்களை தொலைபேசியில் இலவசமாக கேட்கலாம்..
இந்த வாரம் கலங்காதிரு மணமே எனும் தலைப்பில் வெளிச்சம் அமைப்பின் தலைவர்- வெளிச்சம் ஷெரின்…
அறிவை காதலிக்க தொடங்கினா ஒவ்வொரு முயற்சியும் சக்ஸஸ் தான். போன்ற தன்னம்பிக்கை விசயங்களை குறித்து பேசுகிறார்… ஜஸ்ட் டையல் பண்ணுங்க 044-6680 8024…
எங்களுக்காக மூனு நிமிசம் ஒதுக்குங்க….என்ன தான் சொல்லுறாங்கண்ணு கேளுங்க..
நன்றியுடன்
வெளிச்சம் மாணவர்கள்
வழக்கின் முதல் வெற்றி..
வெளிச்சம்
அமைப்பு கடந்த சிலவாரங்களுக்கு முன்
சென்னை உயர்நீதி மன்றத்தில் முதல் தலை
முறை மாணவர்களின் உயர்கல்விக்காகவும்,
தாழ்த்தப்பட்ட
மற்றும் பழங்குடியின மாணவர்களின் உயர்கல்வி கட்டணத்தை அரசே ஏற்கும் எனும்
தமிழக அரசின் ஆணை எண் 6யை வலியுறுத்தியும், மேற்கண்ட இரண்டு பொதுநல வழக்குகளை
தொடுத்துள்ளதையும்,
இந்த
வழக்கில் எங்கள் அமைப்பின் தலைவர் திருமதி வெளிச்சம் செரின் வழக்கறிஞர் வைக்காமல் வாதாடியதையும்,..
எமது
வாதத்தை கேட்டுக்கொண்ட தலைமை நீதிபதி இக்பால்,
நீதிபதி சிவஞானம் ஆகியோர் மனுக்கள் மீது தமிழக அரசு 2 வாரங்களுக்குள் பதில் மனு தாக்கல்
செய்யுமாறு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளதையும், , இந்த
பதிவின் மூலம் தெரிவித்து இருந்தோம்… படிக்க கட்டுரை: ஏழைகளின்
உயர்கல்விக்காக உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் வைக்காமல் வாதாடும் வெளிச்சம் செரின்.
இந்த
வழக்கில் தற்போது தமிழக ஆதிதிராவிட நலத்துறை தமிழகத்தில் உள்ள கல்லூரிகளுக்கு 24.08.2012
அன்று ஒரு சுற்றறிக்கையை அனுப்பியுள்ளதாக தெரிவித்துள்ளது. அந்த சுற்றறிக்கையில் தங்கள்
கல்லூரியில் பயிலும் தாழ்த்தப்பட்ட மாணவர்களின் கல்விக்கட்டணத்தை மாணவர்களிடமிருந்து
வசூலிக்ககூடாது எனவும், அரசாணை எண் 6 மற்றும் இந்த சுற்றறிக்கைகளை மாணவர்களின் பார்வையில்
படும்படி அறிவிப்பு பழலகையில் வைக்கும்படி சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது ஆனால்
எந்த கல்லூரியும் இந்த ஆணையை மாணவர்களுக்கு தெரியும் படி வெளியிடவில்லை. அதனால் தங்களுக்கு
எமது வெற்றியை தெரிவித்துக்கொள்ளும் இதே நேரத்தில்..
உங்களுக்கு
தெரிந்த தாழ்த்தப்பட்ட பழங்குடியின மாணவர்களிடம்
சொல்லி
இந்த ஆணையை கல்லூரிகளிடம் கொடுத்து கட்டண விலக்கு கோரும்படி அவர்களுக்கு எடுத்துச்சொல்லி
அவர்களின் கல்விக்கு உதவுங்கள்…
இன்னும்
வழக்கு நடந்து கொண்டிருக்கிறது.. அதிரடிகள் தொடரும்..
இந்த
வழக்கிழும்,முதல்தலைமுறை மாணவர்களின் கல்விக்கான வழக்கிழும் உங்கள் ஆதரவோடு, ஏழைகளின்
உயர்கல்விக்காக தொடர்ந்து போராடுகிறோம்..
நன்றியுடன்
வெளிச்சம்
மாணவர்கள்
பெண்கள் வாழ தகுதியற்ற நாடு இந்தியா என உலகநாடுகள் மத்தியில் அவமானப்பட்டோம்.. அடுத்ததாக சத்துணவு இல்லாமல் இந்தியாவில்தான் அதிகமாக குழந்தைகள் இறக்கிறது எனும் அதிர்ச்சியையும், தலைகுனிவையும் கொடுடத்திருக்கிறது 2012 ம் ஆண்டிற்கான ஐ.நாவின் யுனிச்செப் நிறுவனத்தின் Child Mortality Estimates அறிக்கை.
அரசு மருத்துவமனைகளில் குழந்தைகளை எலிகள் குதறிய சம்பவம் அறங்கேறிய அவலம் எம்தேசத்தை தாண்டி வேறெந்த நாட்டிலும் இல்லை.
2012 ம் ஆண்டிற்காக (Child Mortality Estimates ) அறிக்கையில் சொல்லப்பட்டுள்ள அதிர்ச்சியான உண்மைகள்:
2012 ம் ஆண்டிற்காக Child Mortality Estimates அறிக்கையை யுனிசெப் வெளியிட்டது. உலகத்தில் போதிய சத்துணவின்றி ஒவ்வொரு நாளும் 5 வயதிற்குட்பட்ட 19,000 குழந்தைகள் உயிரிழக்கிறார்கள் எனவும்,
உலகிலேயே இந்தியா, நைஜீரியா, காங்கோ, பாகிஸ்தான், சீனா ஆகிய 5 நாடுகளில் மட்டும்தான் குழந்தைகள் இறப்பு விகிதம் அதிகமாக உள்ளது. குறிப்பாக மற்ற நான்கு நாடுகளை விடவும் அளவிற்கு அதிகமாக உணவு தானியங்களை கையிருப்பு வைத்துக்கொண்டு, அவற்றை மட்கிப் போக செய்துகொண்டிருக்கும் இந்தியாவில்தான் குழந்தை இறப்பு விகிதம் உலகத்திலேயே அதிகமாக உள்ளது என குறிப்பிட்டுள்ளது..
இந்தியாவில் மரணமடைந்த குழந்தைகள் எண்ணிக்கை:
2011ம் ஆண்டில் மட்டும் போதிய அடிப்படை வசதியும், சத்துணவும் இல்லாமல் உடல்நிலை பாதிக்கப்பட்டு இந்தியாவில் மட்டும் சுமார் 15.55 லட்சம் குழந்தைகள் உயிரிழந்துள்ளனர் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நைஜீரியாவில் 7.56 லட்சம் குழந்தைகளும், காங்கோவில் 4.65 லட்சம் குழந்தைகளும், மற்றும் பாகிஸ்தானில் 3.52 லட்சம் குழந்தைகளும் உயிரிழந்துள்ளனர். மக்கள் தொகை அதிகமுள்ள சீனாவில் 2.49 லட்சம் குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.
குழந்தைகள் இறப்பிற்கான காரணங்கள்:
உலக அளவில் குழந்தைகளுக்கு மரணம் ஏற்படுத்தும் காரணிகளாக ஐந்தினை யுனிசெப் பட்டியலிட்டுள்ளது. குறைப்பிரசவத்தினால் 14 சதவிகிதம் பேறும், டயாரியாவினால் 11 சதவிகிதம் பேரும், மலேரியாவினால் 7 சதவிகிதம் பேரும் எதிர்பாராத நோய்களினால் 9 சதவிகிதம் குழந்தைகளும் உயிரிழக்கின்றனர்.
பல லட்சம் கோடிகளை ஊழல் செய்து பதுக்கி வைத்திருக்கும் அரசியல்வாதிகள் வாழும் இந்தியாவில் போதிய சத்துணவும், அடிப்படை வசதிகளும் இல்லாமல் பல லட்சக் கணக்கில் குழந்தைகள் இறப்பதை தடுக்க முடியாது.
இந்தியாவில் குழந்தைகள் மரணிப்பதை தடுக்கவேண்டுமெனில் நாட்டின் உணவுக்கிடங்குகளில் அபரிமிதமாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் உணவுப் பொருட்களை சீராக விநியோகித்தாலே போதும் செய்யுமா அரசு..
குழந்தைகள் என்பது வெறும் உயிர்மட்டுமல்ல… இந்த தேசத்தின் எதிர்காலம்.
- வெளிச்சம் நந்தினி
பல தலைவர்களை உருவாகிய வரலாறு கொண்ட சென்னை மாநில கல்லூரி மாணவர் பேரவை தேர்தலில் கத்திக்குத்து கலவரம் என செய்தி நமக்கு கிடைத்த சில நிமிடங்கள் அதிலிருந்து மீளவே முடியவில்லை..
ஜனநாயகம் எனும் வார்த்தையை காப்பதற்காக கொண்டுவரப்பட்ட இந்த தேர்தல் முறைக்காக எத்தனையோ பேர் இரவு பகல் பாராமல் கஸ்டப்பட்டிருப்பார்கள். அதையெல்லாம் இளைய தலைமுறை தெரிந்து கொள்ளக்கூடாது என நினைக்கும் நேற்றைய மாணவர்களும் இன்றைய தலைவர்களுமாக இருக்கிறவர்களே இதற்கு காரணம் எனலாம்.
காலத்தை கொஞ்சம் பின்னோக்கி தள்ளிபாருங்கள். சென்னை டாக்டர் அம்பேத்கர் சட்டக்கல்லூரியில் படித்த வைகோ, தேர்தலில் வெற்றி பெற்றார். திமுகவின் தலைமை பொறுப்பேற்கும் அளவுக்கு வளர்ந்தவர் இன்று மதிமுக எனும் அரசியல் இயக்கத்தை நடத்தி வருகிறார். மேலும் அதே கல்லூரியில் நடந்த ராதாரவி போட்டியிட்டபோது வன்முறை வெடித்தது, அதுவே கடைசி தேர்தல்.
இந்தி எதிர்ப்பு போராட்டத்திற்கு மாணவர்கள் தேவைப்பட்டார்கள் ஆனால் அதன்பிறகு மாணவர்கள் போராடவே கூடாது என எம்மை ஆண்டவர்கள் நினைப்பதுபோல், தங்களை தலைவர்களாக்கிய கல்லூரி தேர்தல்களை அரசியலாக்கினார்கள் அரசியல்வாதிகள்.
கடந்த 2000ல் திருச்சி ஈவேரா கல்லூரி தேர்தலில் ஒரு மாணவர் வெட்டி கொல்லப்பட்டபோது, இந்த தேர்தல் தமிழகமெங்கும் பேசப்பட்டது அதன்பிறகு தேர்தல் குறித்து எந்த பேச்சும் இல்லை.
இப்போதும் கூட சென்னையில் உள்ள கிருஸ்டியன் கல்லூரி, நியூ கல்லூரி, ஜெயின் கல்லூரி போன்ற கல்லூரிகளில் மாணவர் சங்க தேர்தல் நடக்கிறது. அந்த மாணவ பிரதிநிதிகள் மாணவர்களுக்கும் கல்லூரி நிர்வாகத்திற்கு பாலமாக இருக்கவேண்டும்.. ஆனால் இவர்கள் அரசியல் வாதிகளை பார்த்து கற்றுக்க்கொண்ட பந்தாவை கல்லூரியில் காட்டுவதால் பிரச்சனை ஆரம்பமாகிறது. ( இந்த வருடம் நியூ கல்லூரியில் நடந்து முடிந்த மாணவர்கள் தமிழகத்தின் முக்கிய தலைவர்களை சந்தித்தார்கள் அப்ப அடுத்த வருசத்துல இருந்து இங்கேயும் பிரச்சனை வரலாம் என்கிறார்கள் ஆளும்கட்சியினர், ஏனெனில் ராணிமேரி கல்லூரியில் நடந்த போராட்டங்களை கொச்சை படுத்தியவர்கள் தான் இவர்கள்)
கல்லூரி தேர்தலும் பொது தேர்தலும்..
கோட்டர்,பிரியாணி, பணம் என மாறுப்போன பொதுதேர்தல் முறைபோல, ஏரியா பாலிடிக்ஸ், ரூட் பாலிடிக்ஸ், டிப்பார்ட் மெண்ட் பாலிடிக்ஸ் இருக்கும், குறிப்பா ஹாஸ்டல் என்றால் டிஸ்டிக்ட் பாலிடிக்ஸ் என இடைத்தேர்தல் கணக்கான ஆயிரம் பிரச்சனைகள் வலம் வரும் கல்லூரிதேர்தல்களில்..
சென்னை கடற்கரை சாலையில் உள்ள மாநில கல்லூரி மாணவர் பேரவை தேர்தல் என்பது பல தலைவர்களை உருவாகிய கவரலாறு கொண்ட கல்லூரி.
இங்கேயும் ரூட் பிரச்சனை அடிக்கடி இருக்கிறது. சிலவருடங்களுக்கு முன்னால் போலீஸாரால் சுட்டுக்கொல்லப்பட்ட அயோத்தியா குப்பம் வீரமணி தீர்மானிக்கும் சிலர் கல்லூரி தேர்தலில்ல் வெற்றி பெற்றார்கள் என்பது பலருக்கு தெரியும்.
ஆனால் இந்த வன்முறை இன்று நேற்று திணிக்கப்பட்டதல்ல. மாணவர் சமூகத்தின் போராட்ட குணத்தை அழிப்பதற்காக புகுத்தப்பட்டது. விதையாய் விழுந்து இன்றூ கத்தி குத்துவரை மரமாய் வளர்ந்து நிற்கிறது.
கடந்த 31-ந்தேதி நடந்த தேர்தலில் மொத்தம் உள்ள 2106 வாக்குகளில் ஞானகார்த்திக் 1487 வாக்குகள் பெற்று மாணவர் ஞானகார்த்திக் தலைவராக வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட ஜெயகிருஷ்ணன் தோல்வி அடைந்தார்.
தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டதும் வெற்றி பெற்ற ஞானகார்த்திக் ஆதரவு மாணவர்கள் வெற்றியை கொண்டாடினர். இதை பொறுத்து கொள்ளாத தோல்வியடைந்த மாணவர் ஜெயகிருஸ்ணனின் ஆதரவாளர்கள் கல்வீச்சு நடத்தினர். பதில் தாக்குதல் தொடரவே, கடந்த 1 முதல் 4ம் தேதி வரை கல்லூரிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் 4.9.12 அன்று காலை தடுப்பு சுவர் மீது ஏறி குதித்த சில மாணவர்கள் கல்லூரிக்குள் எதையோல் ஒளித்து வைப்பதை பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் கவனித்து, அவர்களை சோதித்தபோது 5 பட்டாக்கத்திகள் இருந்தது. கத்திகளை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
நேற்று பெருங்களத்தூரை சேர்ந்த மாணவி செவ்வந்தி உடல்நலமின்றி இறந்ததால் கல்லூரிக்கு விடுப்பு அளிக்கப்பட்டது. தகவல் தெரியாமல் வழக்கம்போல மாணவர்கள் கல்லூரிக்கு வந்தனர். விடுமுறை என்று தெரிந்து வீடுகளுக்கு புறப்பட்டனர். அப்போது தேர்தலில் தோற்ற கோஷ்டிக்கும் வெற்றி பெற்ற கோஷ்டிக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது. அதுவே கைகலப்பாகி மோதலானது. மறியலில் ஈடுபட மாணவர்கள் சிலர் முயன்றனர். பாதுகாப்பு பணியிலிருந்த போலீசார் அவர்களை கல்லூரிக்குள் அனுப்பினர். அங்கிருந்து வெளியே வந்த சில மாணவர்கள் சாலையோர கடைகளில் இருந்த கரும்பு, குச்சிகளை கொண்டு எதிர் கோஷ்டியினரை தாக்க தயாரானார்கள். ஆனால் ஏற்கனவே மறைத்து வைத்த (போலீஸாரின் கண்ணில் படாத கத்திகளை ) கொண்டு குத்தியதில் ஒரு மாணவர் கத்தி குத்து விழுந்தது. மேலும் 2 பேர் காயமடைந்தனர்.
மாணவர்கள் கையில் பேனாவிற்கு பதிலாக கத்தி வந்ததற்கு யார் பொறுப்பு..
எம்புள்ள படிக்கும்னு கஸ்டப்படும் பெற்றோர்கள் நிச்சயமில்லை.. எல்லாம் பாழாபோன அரசியல்தான்…
தொகுப்பு: வெளிச்சம்-நந்தினி.
( மாணவர்கள் வன்முறையல்லாத அரசியல்வாதிளாகவும், மக்கள் நலனுக்காக மாணவர்கள் போராட வேண்டும் என்பதுதான் வெளிச்சம் அமைப்பின் கொள்கைகளில் ஒன்று )
இன்று
காலையில் இயல்பாக செய்தித்தாள வாசித்த உங்கள் கண்ணில் இந்த செய்திகள் பட்டிருக்கலாம்..
இவைகள் வெறும் செய்திகள் மட்டுமில்லை. பலநூறு
வருடமாக கல்விக்காக ஏங்கும் எழைகளின், முதல்தலைமுறையினரின் வலிகள்…
நமது
வெளிச்சம் அமைப்பு இன்று தமிழகத்தில் அமலில் இருக்கும் முதல் தலை முறை மாணவர்களின்
உயர்கல்விக்கான கட்டணத்தை அரசே ஏற்கும் ஆணை பல்வேறு பிரச்சனைகளை சந்தித்திருக்கிறது.
குறிப்பாக தமிழகம் முழுவதும் பிரச்சாரப்பயணம், சென்னை வீதிகளில் உண்டியல் ஏந்தியது
போன்றவை. வெளிச்சம் அமைப்பின் மாணவர்கள் உண்டியல் ஏந்தியபோது பல்வேறு விதமான அவமானங்களை
சுமந்தோம் ஆனால் அந்த அவமானங்களுக்கு வெகுமதியாக முதல் தலைமுறை ஏழை மாணவர்களின் கல்விக்கட்டணத்தை
அரசே ஏற்கும் ஆணை வெளியானது.. Read
இந்தவிசயம்
இப்போது பல்லாயிரக்காணக்கான மாணவர்கள் பயன்பெருகிறார்கள். அதில் எத்தனைபேருக்கு இந்தஆணை வெளிச்சம் அமைப்பின் போராட்டத்தால்தான் கிடைத்தது என எத்தனை மாணவர்களுக்கு தெரியும்
பரவாயில்லை..
இந்த
வருடம் பாலசுப்பிரமணியன் கமிட்டி உயர்த்திய, கல்வி கட்டணத்தை ஏற்காமல் ஏற்கனவே வழங்கப்பட்ட
உதவிதொகையை மட்டும் தமிழக அரசு வழங்கியுள்ளது. இதனால் பல்லாயிரங்கணக்கான முதல்தலைமுறை
மாணவர்கள் மீதி பணம் கட்டமுடியாமல் தவிக்கும்
நிலை ஏற்பட்டுள்ளது. இதற்காக தமிழக நலனுக்காக
போராடுவதாக சொல்லிக்கொள்ளுகிற அசியல்வாதிகள் யாரும் இதற்காக பேசவோ, இதற்காக அறிக்கை
விடவோ இல்லை ஏனெனில் அவர்களுக்கு மாணவர்களின் நலனில் அக்கறையில்லை எனலாம்.
அதேபோன்று
கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவர்களின் உயர்கல்விக்கட்டணத்தை
அரசே ஏற்கும் எனும் தமிழக அரசின் ஆணைபடி கல்விக்கட்டணத்தை அந்த் வருடத்தின் கடைசியில்
பணமாக திருப்பி தராமல் முதல்தலைமுறை மாணவர்களுக்கு
முதலில் கல்விக்கட்டண சலுகை வழங்குவதுபோல் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவர்களின்
உயர்கல்விக்கட்டணத்தை தரவேண்டும் என்று தமிழகத்தில் பல அமைப்புகள் குரல் கொடுத்து வந்தது.
மேற்கண்ட
இரண்டு பிரச்சனைக்கும் வெளிச்சம் தீர்வு காண முயற்சி செய்து வந்த நீதி மன்றத்தை நாட
திட்டம்மிட்டோம். அதன்படி சென்னை உயர்நீதி மன்றத்தில் இரண்டு பொதுநல வழக்கை தாக்கல்
செய்தோம். வழக்கறிஞர் வைத்து வாதிட நினைத்தபோது எங்களிடம் அதற்காக பணம் உதவி ஏதுமில்லை.
அந்த நேரத்தில் தான் ஏன் வழக்கை நாமே நடத்தக்கூடாது என நினைத்தோம்.
கடந்த
வாரம் தனித்தனியே பதிவு செய்யப்பட்ட வழக்கில் தாழ்த்தப்பட்டவர்களுக்கான வழக்கு விசாரணைக்கு
வந்தது..
எம்மை
நோக்கி கேள்விக்கணைகளை வீசிய தலைமை நீதியரசர் இக்பால் அவர்கள், ஏன் இதை பொதுநல வழக்காக
பதிவு செய்ய அவசியம் என்ன என்றார்… கீழ்கண்ட அட்டவணையின் அடிப்படையில் கடந்த வருடம்
கல்லூரில் சேர்ந்துள்ள தாழ்த்தப்பட்ட மாணவர்களின் வாழ்க்கைக்காக இந்த வழக்கை ஏற்றுக்கொள்ள
வேண்டும் என வாதிட்டோம்.
Number of Seats available on TNEA 2011 counseling
College
|
OC
|
BCM
|
BC
|
MBC
|
SCA
|
SC
|
ST
|
Total
|
Anna University
|
2347
|
265
|
2005
|
1517
|
227
|
1143
|
77
|
7581
|
Govt Aided
|
1404
|
160
|
1201
|
915
|
139
|
686
|
46
|
4551
|
Self-financing
|
39092
|
4419
|
33438
|
25252
|
3789
|
18932
|
1264
|
126186
|
Total
|
42831
|
4844
|
36644
|
27684
|
4155
|
20761
|
1387
|
138318
|
Category Reservation
Under category reservation the following percentage of seats are alloted
for each category.
Category
|
OC
|
BC
|
BCM
|
MBC
& DC
|
SC
|
SCA
|
ST
|
Total-100%
|
31%
|
26.50%
|
3.5%
|
20%
|
15%
|
3%
|
1%
|
(OC - Open Competition; Backward Class - 26.50%; Backward Class Muslim -
3.50%; Most Backward Class & Denotified Communities - 20%; Scheduled Caste
- 15%; Scheduled Caste (Arunthathiyars) - 3%; Scheduled Tribes - 1%)
நமது வாததை ஏற்றுக்கொண்ட நீதியரசர் தமிழக அரசை ஐந்து தினங்களுக்குள் பதிலளிக்க
உத்தரவிட்டுள்ளார். அதே போல்
முதல்தலைமுறை
பட்டதாரி மாணவர்களிடம் கல்வி நிறுவனங்கள் முன்னதாகவே கட்டணம் வசூலிப்பதை எதிர்த்து
தொடரப்பட்ட வழக்கில் ,
கல்லூரிகளில்
சேருவதற்கே கஷ்டப்படும் மாணவர்களுக்காகத்தான் இந்த உதவியை அரசு செய்து வருகிறது. ஆனால்,
பணத்தை மாணவர் சேர்க்கையின்போதே கட்ட வேண்டும் என்று பல கல்லூரிகள் நிர்பந்தம் செய்கின்றன.
இதன் மூலம் ஏழை மாணவர்கள் கல்லூரிகளில் சேர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, முதல்
தலைமுறை மாணவர்களுக்கு கல்வி நிறுவனங்கள் சேர்க்கையின்போது கட்டணம் வசூலிக்கக் கூடாது
என்று உத்தரவிட வேண்டும் என வாதிட்டோம்..
இந்த
மனுக்கள் தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள் இந்த மனுக்கள் மீது தமிழக அரசு 2 வாரங்களுக்குள் பதில்
மனு தாக்கல் செய்யுமாறு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.
மேலோட்டமாக
பார்த்தால் இது இவை வெறும் வழக்காக தெரியும்.. ஆனால் பல்லாயிரம் கணக்கான மாணவர்களின்
வாழ்க்கையில் உயர்கல்வி கிடைக்க செய்யும் நீதிபோராட்டம்…
உங்களை
போன்ற உறவுகள் இருக்கிறீகள் எனும் நம்பிக்கையில் தான் ஒற்றை பெண்மணியாக வெளிச்சம் செரின்
நீதிமன்றத்தில் வழக்காடுகிறார்.
எம்மோடு
பயணிக்கும் உறவுகளே… !
(பெட்டிசன் பிரிப்பரேசன் போன்ற
வழக்கு செலவுக்கு உதவுங்கள்)..
உதவிதொகைகளுக்கான வழக்கம்
போல அதற்கான ரசீது தங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்)
உதவ
நினைத்தால் velicham.students@gmail.com
க்கு ஒரு மெயில் போடுங்கள்…
நன்றியுடன்
வெளிச்சம் மாணவர்கள்
உங்களுக்கு ஏழைகளின் கல்விக்கு ஏதவாவது வகையில் உதவ விருப்பமா? ..................……… கிளிக் செய்யுங்கள்.
English:
‘Colleges create hurdles in students getting fee-waiver’
The Tamil Nadu government's schemes to reimburse education costs of first generation college-goers from poor families and SC/ST students is being undermined by educational institutions, two PILs filed in the Madras high court said.
The first bench comprising Chief Justice M Y Eqbal and Justice T S Sivagnanam, before whom the PILs filed by D Sherin Asha of service organization Velicham came for hearing, issued notices to the state government and several educational institutions.
In the first petition, Asha said that the government came out with an order on April 16, 2010 providing for reimbursement of education costs of a college student if he hails from a family which has never had a graduate. It implied that his tuition fees would be borne by the government, which would make the payment to the educational institution concerned.
Asha pointed out that the order whittled down the government's intention by stating that the entire amount would not be reimbursed and said the fee was not being paid during admission. While colleges insist on the full payment of the fee at the time of admission, the government pays the sum only later. This delay results in several beneficiaries failing to avail themselves of the scheme, she said. She wanted the court to direct the authorities to pay the sum at the time of admission itself or direct the institutions to admit students without insisting on full payment initially.
In the second PIL, Asha named seven students, who had to pay a fee from Rs 30,000 to Rs 3.36 lakh for their engineering and medical courses. Though these students are eligible for reimbursements, they are unable to join the courses because the institutions said that they would be allowed only upon payment of full amount.
என்னுடைய பெயர் ர.இந்திராணி, ஈழத்திலுள்ள கிளிநொச்சி ஜெயபுரம்தான் எனக்கு சொந்த ஊர். 1990ம் ஆண்டு போரின் காரணமாக அகதிகளாய் தமிழகத்திற்கு வந்தோம். தமிழகம் வந்த எங்களுக்கு புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள லேனா விளக்கு முகாமில் இடம் ஒதுக்கினார்கள். ஈழத்தில் சொந்த நிலத்தில் தலைநிமிர்ந்து வாழ்ந்த நாங்கள் முகாம்களில் அடைக்கப்பட்டோம். எங்கள் முகாமில் மொத்தம் 315 குடும்பங்கள் வசிக்கிறார்கள்.
வாழ்வதற்ககே கஸ்டப்படும் நாங்கள் படிப்பதற்காக பட்ட துயரங்களை சொல்ல வார்த்தையில்லை. எல்லோரும் பெயின்ட் அடிக்கும் வேலைக்கும் சென்று அதில் சம்பாதிக்கும் பணத்தில் குடும்பம் நடத்தவே முடியாத நிலை தொடர்ந்தது.
2ம் உலகத்தமிழ் அமைப்பு மாநாட்டில் பேசும் இந்திராணி |
அந்த சமயத்தில் ஈழத்தின் இறுதிகட்ட போரில், என்ன நடக்கிறது என்று தெரியாமல் தவித்த நிலையில் எனது சித்தப்பா,மாமா,அக்கா ஆகிய மூவரையும் இழந்தோம். ஒரு பக்கம் உயிரிழப்புகள் இன்னொரு பக்கம் படிப்பு என கஸ்டத்தை உணர்ந்து படித்த நான் ,
கடியாப்பட்டியில் உள்ள உலகப்பர் மேல்நிலைப் பள்ளியில் படித்து 12ம் வகுப்பில் 1200க்கு 802 மதிப்பெண் பெற்றேன்.
வறுமையின் காரணமாக குடும்பத்தில் யாரும் படிக்கவில்லை என்பதால் . நான் கல்லூரி படிப்பதற்கு ஏகப்பட்ட நெருக்கடிகள். ஒரு வழியாக புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் உள்ள அற்புதா கலை & அறிவியல் கல்லூரியில் இளநிலை வணிகவியல்(B.com) சேர்ந்து படித்தேன். தினசரி கல்லூரிக்கு போய்வருவதற்கு கூட வசதியில்லாமல் படித்தும், கல்லூரியில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றேன்.
படித்து தணிக்கையாளர் (Auditor) ஆகவேண்டும் என்பதுதான் என் ஆசை.
என் ஆசையை பெற்றோர்களிடம் சொன்னபோது உன்னை படிக்க வைக்க முடியாது வீட்டோடு இரு என்று என்னை திட்டினார்கள். அப்போதுதான் எனக்கு வெளிச்சம் அமைப்பை பற்றி கேள்விப்பட்டேன். அவர்களோடு தொடர்பு கொண்டு என் கனவை சொல்லி அழுதேன்.
நான் இப்போது சென்னை எழும்பூரில் உள்ள ICWAI – SOUTHERN INDIA REGIONAL COUNCIL ICW படித்து வருகிறேன்.
நன்றியுடன்
ர.இந்திராணி
இந்த ஈழ
மாணவியின்
கல்விக்கு
உதவுங்கள்…
இது
போன்ற ஏழை மாணவர்களின் கல்விக்கு
உதவிட : https://spreadsheets.google.com/viewform?formkey=dFR0MFJtbllsNUNrRk9CTG82ZlJxOWc6MQ