சத்துணவு இல்லாமல் சாகும் குழந்தைகள்- இந்தியாவை தலைகுனிய வைத்த யுனிசெப்..

Posted by Unknown - -


பெண்கள் வாழ தகுதியற்ற நாடு இந்தியா என உலகநாடுகள் மத்தியில் அவமானப்பட்டோம்..  அடுத்ததாக சத்துணவு இல்லாமல் இந்தியாவில்தான் அதிகமாக குழந்தைகள் இறக்கிறது எனும் அதிர்ச்சியையும், தலைகுனிவையும் கொடுடத்திருக்கிறது 2012 ம் ஆண்டிற்கான ஐ.நாவின் யுனிச்செப் நிறுவனத்தின்  Child Mortality Estimates  அறிக்கை.

 அரசு மருத்துவமனைகளில் குழந்தைகளை எலிகள் குதறிய சம்பவம் அறங்கேறிய அவலம் எம்தேசத்தை தாண்டி வேறெந்த நாட்டிலும் இல்லை.

 2012 ம் ஆண்டிற்காக (Child Mortality Estimates ) அறிக்கையில் சொல்லப்பட்டுள்ள அதிர்ச்சியான உண்மைகள்:

2012 ம் ஆண்டிற்காக Child Mortality Estimates அறிக்கையை யுனிசெப் வெளியிட்டது. உலகத்தில் போதிய சத்துணவின்றி ஒவ்வொரு நாளும் 5 வயதிற்குட்பட்ட 19,000  குழந்தைகள்  உயிரிழக்கிறார்கள் எனவும்,

உலகிலேயே  இந்தியா, நைஜீரியா, காங்கோ, பாகிஸ்தான், சீனா ஆகிய 5 நாடுகளில் மட்டும்தான் குழந்தைகள் இறப்பு விகிதம் அதிகமாக உள்ளது. குறிப்பாக மற்ற நான்கு நாடுகளை விடவும் அளவிற்கு அதிகமாக உணவு தானியங்களை கையிருப்பு வைத்துக்கொண்டு,  அவற்றை மட்கிப் போக செய்துகொண்டிருக்கும் இந்தியாவில்தான் குழந்தை இறப்பு விகிதம் உலகத்திலேயே அதிகமாக உள்ளது என குறிப்பிட்டுள்ளது..

இந்தியாவில்  மரணமடைந்த குழந்தைகள் எண்ணிக்கை:

2011ம் ஆண்டில் மட்டும் போதிய அடிப்படை வசதியும், சத்துணவும் இல்லாமல் உடல்நிலை பாதிக்கப்பட்டு இந்தியாவில் மட்டும் சுமார் 15.55 லட்சம் குழந்தைகள் உயிரிழந்துள்ளனர் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நைஜீரியாவில் 7.56 லட்சம் குழந்தைகளும், காங்கோவில் 4.65 லட்சம் குழந்தைகளும், மற்றும் பாகிஸ்தானில் 3.52 லட்சம்  குழந்தைகளும் உயிரிழந்துள்ளனர்.  மக்கள் தொகை அதிகமுள்ள சீனாவில்  2.49 லட்சம் குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.

குழந்தைகள் இறப்பிற்கான காரணங்கள்:

 உலக அளவில் குழந்தைகளுக்கு மரணம் ஏற்படுத்தும் காரணிகளாக ஐந்தினை யுனிசெப் பட்டியலிட்டுள்ளது. குறைப்பிரசவத்தினால் 14 சதவிகிதம் பேறும், டயாரியாவினால் 11 சதவிகிதம் பேரும், மலேரியாவினால் 7 சதவிகிதம் பேரும் எதிர்பாராத நோய்களினால் 9 சதவிகிதம் குழந்தைகளும் உயிரிழக்கின்றனர்.

பல லட்சம் கோடிகளை ஊழல் செய்து பதுக்கி வைத்திருக்கும் அரசியல்வாதிகள் வாழும்  இந்தியாவில் போதிய சத்துணவும், அடிப்படை வசதிகளும் இல்லாமல் பல லட்சக் கணக்கில் குழந்தைகள் இறப்பதை தடுக்க முடியாது.

 இந்தியாவில் குழந்தைகள் மரணிப்பதை தடுக்கவேண்டுமெனில் நாட்டின் உணவுக்கிடங்குகளில் அபரிமிதமாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் உணவுப் பொருட்களை சீராக விநியோகித்தாலே போதும்  செய்யுமா அரசு..

 குழந்தைகள் என்பது வெறும் உயிர்மட்டுமல்ல… இந்த தேசத்தின் எதிர்காலம்.

வெளிச்சம் நந்தினி

One Response so far.

  1. அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்........


    நன்றி,
    பிரியா
    http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

Leave a Reply