ஏழைகளின் உயர்கல்விக்கான பொதுநல வழக்கில் வெற்றி… மகிழ்ச்சியை உம்மோடு பகிர்ந்து கொள்கிறோம்….

Posted by Unknown - -


கடந்த ஆகஸ்ட் மாதம் 16ம் தேதி சென்னை உயர்நீதி மன்றத்தில் இரு பொதுநல வழக்குகளை வெளிச்சம் பதிவு செய்த இரு வழக்குகளில் ஒரு வழக்கில் வெளிச்சம் வெற்றி பெற்றுள்ளது.. என்பதை தங்களுக்கு மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்வதோடு…. வழக்கில் வெற்றிக்கான நிமிடங்களையும், அனுபவங்களையும் உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியாக கருதுகிறோம்.
வழக்குகள் விபரம்:
முதல்தலைமுறை மாணவர்களின் கல்விக்கான வழக்கு ஒன்று,மற்றொன்று தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கான உயர்கல்விக்கான வழக்கு. இந்த இரு வழக்குகளிலும் வழக்கறிஞரி வைக்காமல், எங்களின் கல்வித்தாய் வெளிச்சம் செரின் அவர்கள் வாதாடினார். இதை முதல் வெற்றி எனும் பதிவில் தங்களுக்கு தெரிவித்திருந்தோம்.. (படிக்க: முதல்வெற்றி).. மற்றும் (படிக்க: வழக்கு குறித்த முழு விபரத்தையும் )
திருப்பங்களை கொண்டு வந்த எமது வாதங்கள்;
இந்த வழக்குகளில் தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கான கல்விக்கட்டணத்தை அரசே ஏற்கும் எனும் அரசாணையை செயல்படுத்த கோரிய இரண்டாவது வழக்கில்..  ஆகஸ்ட் 28ம் தேதி தமிழ்நாடு ஆதிதிராவிடர் நலத்துறை எதிர்வாதம் செய்தது. அப்போது  தமிழகத்திலுள்ள கல்லூரிகள் அரசாணை எண் 6ஐ ஏற்றுக்கொள்ள மறுப்பதாகவும் எடுத்துரைத்தனர்.
இதை மறுத்த வெளிச்சம் செரின் அவர்கள், அரசாங்கத்தின் ஆணையை மக்களாட்சி நடக்கும் இந்த ஜனநாயக நாட்டில் அரசாணையை தனியார் நிறுவனங்கள் ஏற்க மறுக்கிறது என்பதை எந்த சாதாரண மனிதனும் ஏற்கமாட்டான். இது ஜனநாயத்திற்கான அச்சுறுத்தல் இந்த நிலை நீடித்தால் கல்வி வியாபாரமான இந்த சூழலில், அரசாங்கத்தை இந்த தனியார் நிறுவனங்கள் மிரட்ட்டக்கூடும் என வாதிட்டோம்.
இதை ஏற்றுக்கொண்ட தலைமை நீதிபதி.இக்பால் அவர்கள், பதிலளிக்க அரசுக்கு நோட்டீஸ் அனுப்பினார். நீதி மன்றத்தில் பதிலளிக்க தடுமாறிய அரசு தரப்பு சுற்றறிக்கையை அனைத்து தனியார் சுயநிதிகல்லூரிகளுக்கும் அனுப்பியது. இதையடுத்து நீதிமன்றத்தில் நடந்த வாத, பிரதிவாதங்களுக்கு இடையே எமது கோரிக்கையான தெளிவான அரசாணை வெளியிட வேண்டும் எனும் வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதியரசர் தெளிவான அரசு அரசாணை வெளியிட வேண்டும் என உத்தரவிட்டார்.
அதன்படி 1.09.2012 அன்று அரசாணை எண்: 92 ஐ அரசு வெளியிட்டுள்ளது அதில், வெளிச்சம் மனுவில் குறிப்பிட்டது போல, 11வது அறிவுறுத்தலில், நீதிபதி என்.வி. பாலசுப்பிரமனியன் கமிட்டி வரையறுத்த, கல்லூரிக்கட்டணங்களை எந்த கல்லூரியும், வசூலிக்கக்கூடாது, மேலும் முதல்தலைமுறை மாணவர்ளுக்கு கல்விக்கட்டணத்தை அரசிடமிருந்து பெறுவதை போன்று தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கான கட்டணத்தை அரசே வழங்கும் என அறிவுறுத்தப்பட்டுள்ளதுதான்.. எங்களுக்கு பெரும் மகிழ்ச்சியை கொடுக்கிறது..
அந்த மகிழ்ச்சியை தங்களிடம் பகிர்ந்து கொள்வதோடு…. இந்த அரசாணையையும் தங்கள் பார்வைக்கு சமர்ப்பிக்கிறோம்.. இந்த ஆணையை பல மாணவர்களின் கல்விகாக பரவலாக்குங்கள்..உங்கள் நண்பர்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்..
இந்த வழக்கின் வெற்றிக்காக நீங்கள் கொடுத்த வழிகாட்டுதலும், ஊக்கமும் தான் எங்களை இன்னும் பலமடங்கு பயணப்பட வைக்கிறது…  அதே நம்பிக்கையில் தான்… முதல்தலை முறை மாணவர்களின் உயர்கல்விக்கான பொதுநல வழக்கில் வெற்றி பெற உழைக்க்கிறோம்.. அந்த வெற்றிச்செய்தியை உங்களுடன் விரைவில் பகிர்ந்து கொள்வோம்..

நன்றியுடன்
வெளிச்சம் மாணவர்கள்
(கல்வி என்பது கடைச் சரக்கல்ல… அது ஒரு சமூக மாற்றத்திற்கான ஆயுதம் )

SUMMARY :

Won Poor Students Higher education Public Litigation Case…
Velicham is a movement which helps the first generation poor students or their higher education. We helped more than 700 students for making them as an engineer, doctor, teacher etc., During this year, more than 300 application came us for asking help for their higher education.
As per the Tamilnadu government ordered on April 16, 2010. That order for the government will reimburse the education costs of a college student if he comes from a family which has never had a graduate.
According to GO No.6, the govt will pay the fees on behalf of the students to the institutions from 2012 onwards. Students who got admission through management quota and govt quota in private colleges are also eligible for this scholarship.
But the colleges insist on the full payment of the fee at the time of admission. Due to their family economical status, most of the students are not able to pay full fee at the time of admission. This results in several students are not able to use this scholarship to pursue in their higher education.
We spoke to the colleges and requested to admit the students in their respective courses without demanding the fees mentioned in fee structure list fixed by the government appointed “fee fixing committee for self-financing institutions and mentioned about the said GO. But they are informed that they have not received any such Govt orders.
So we have filed two Public Litigation cases in the Chennai High court on August 16, 2012. We wanted the court to direct the institutions to admit students without insisting on full payment initially. On August 28, 2012 counter party said that the Tamilnadu Adi Dravidar and Tribal welfare Department didn’t send any circular to the colleges. But that department sent a circular mentioned that not to collect fee from SC/ST/Converted Christians on August 24, 2012. We brought this news to the court’s notice.
Finally we won one of our cases is for SC/ST/Converted Christian students. High court gave a direction stated that the Government and other authorities not to insist on payment of fees at the time of admission and to know about the government orders to the students, a copy of the same has to be displayed in the notice board.  Our another case is for first generation student is going on. We will win this case too for helping them for their higher studies.

With regards
Velicham

One Response so far.

  1. வாழ்த்துக்கள் ... வெளிச்சம் இன்னும் பாயட்டும்...

Leave a Reply