பல தலைவர்களை உருவாகிய வரலாறு கொண்ட சென்னை மாநில கல்லூரி மாணவர் பேரவை தேர்தலில் கத்திக்குத்து கலவரம் என செய்தி நமக்கு கிடைத்த சில நிமிடங்கள் அதிலிருந்து மீளவே முடியவில்லை..
ஜனநாயகம் எனும் வார்த்தையை காப்பதற்காக கொண்டுவரப்பட்ட இந்த தேர்தல் முறைக்காக எத்தனையோ பேர் இரவு பகல் பாராமல் கஸ்டப்பட்டிருப்பார்கள். அதையெல்லாம் இளைய தலைமுறை தெரிந்து கொள்ளக்கூடாது என நினைக்கும் நேற்றைய மாணவர்களும் இன்றைய தலைவர்களுமாக இருக்கிறவர்களே இதற்கு காரணம் எனலாம்.
காலத்தை கொஞ்சம் பின்னோக்கி தள்ளிபாருங்கள். சென்னை டாக்டர் அம்பேத்கர் சட்டக்கல்லூரியில் படித்த வைகோ, தேர்தலில் வெற்றி பெற்றார். திமுகவின் தலைமை பொறுப்பேற்கும் அளவுக்கு வளர்ந்தவர் இன்று மதிமுக எனும் அரசியல் இயக்கத்தை நடத்தி வருகிறார். மேலும் அதே கல்லூரியில் நடந்த ராதாரவி போட்டியிட்டபோது வன்முறை வெடித்தது, அதுவே கடைசி தேர்தல்.
இந்தி எதிர்ப்பு போராட்டத்திற்கு மாணவர்கள் தேவைப்பட்டார்கள் ஆனால் அதன்பிறகு மாணவர்கள் போராடவே கூடாது என எம்மை ஆண்டவர்கள் நினைப்பதுபோல், தங்களை தலைவர்களாக்கிய கல்லூரி தேர்தல்களை அரசியலாக்கினார்கள் அரசியல்வாதிகள்.
கடந்த 2000ல் திருச்சி ஈவேரா கல்லூரி தேர்தலில் ஒரு மாணவர் வெட்டி கொல்லப்பட்டபோது, இந்த தேர்தல் தமிழகமெங்கும் பேசப்பட்டது அதன்பிறகு தேர்தல் குறித்து எந்த பேச்சும் இல்லை.
இப்போதும் கூட சென்னையில் உள்ள கிருஸ்டியன் கல்லூரி, நியூ கல்லூரி, ஜெயின் கல்லூரி போன்ற கல்லூரிகளில் மாணவர் சங்க தேர்தல் நடக்கிறது. அந்த மாணவ பிரதிநிதிகள் மாணவர்களுக்கும் கல்லூரி நிர்வாகத்திற்கு பாலமாக இருக்கவேண்டும்.. ஆனால் இவர்கள் அரசியல் வாதிகளை பார்த்து கற்றுக்க்கொண்ட பந்தாவை கல்லூரியில் காட்டுவதால் பிரச்சனை ஆரம்பமாகிறது. ( இந்த வருடம் நியூ கல்லூரியில் நடந்து முடிந்த மாணவர்கள் தமிழகத்தின் முக்கிய தலைவர்களை சந்தித்தார்கள் அப்ப அடுத்த வருசத்துல இருந்து இங்கேயும் பிரச்சனை வரலாம் என்கிறார்கள் ஆளும்கட்சியினர், ஏனெனில் ராணிமேரி கல்லூரியில் நடந்த போராட்டங்களை கொச்சை படுத்தியவர்கள் தான் இவர்கள்)
கல்லூரி தேர்தலும் பொது தேர்தலும்..
கோட்டர்,பிரியாணி, பணம் என மாறுப்போன பொதுதேர்தல் முறைபோல, ஏரியா பாலிடிக்ஸ், ரூட் பாலிடிக்ஸ், டிப்பார்ட் மெண்ட் பாலிடிக்ஸ் இருக்கும், குறிப்பா ஹாஸ்டல் என்றால் டிஸ்டிக்ட் பாலிடிக்ஸ் என இடைத்தேர்தல் கணக்கான ஆயிரம் பிரச்சனைகள் வலம் வரும் கல்லூரிதேர்தல்களில்..
சென்னை கடற்கரை சாலையில் உள்ள மாநில கல்லூரி மாணவர் பேரவை தேர்தல் என்பது பல தலைவர்களை உருவாகிய கவரலாறு கொண்ட கல்லூரி.
இங்கேயும் ரூட் பிரச்சனை அடிக்கடி இருக்கிறது. சிலவருடங்களுக்கு முன்னால் போலீஸாரால் சுட்டுக்கொல்லப்பட்ட அயோத்தியா குப்பம் வீரமணி தீர்மானிக்கும் சிலர் கல்லூரி தேர்தலில்ல் வெற்றி பெற்றார்கள் என்பது பலருக்கு தெரியும்.
ஆனால் இந்த வன்முறை இன்று நேற்று திணிக்கப்பட்டதல்ல. மாணவர் சமூகத்தின் போராட்ட குணத்தை அழிப்பதற்காக புகுத்தப்பட்டது. விதையாய் விழுந்து இன்றூ கத்தி குத்துவரை மரமாய் வளர்ந்து நிற்கிறது.
கடந்த 31-ந்தேதி நடந்த தேர்தலில் மொத்தம் உள்ள 2106 வாக்குகளில் ஞானகார்த்திக் 1487 வாக்குகள் பெற்று மாணவர் ஞானகார்த்திக் தலைவராக வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட ஜெயகிருஷ்ணன் தோல்வி அடைந்தார்.
தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டதும் வெற்றி பெற்ற ஞானகார்த்திக் ஆதரவு மாணவர்கள் வெற்றியை கொண்டாடினர். இதை பொறுத்து கொள்ளாத தோல்வியடைந்த மாணவர் ஜெயகிருஸ்ணனின் ஆதரவாளர்கள் கல்வீச்சு நடத்தினர். பதில் தாக்குதல் தொடரவே, கடந்த 1 முதல் 4ம் தேதி வரை கல்லூரிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் 4.9.12 அன்று காலை தடுப்பு சுவர் மீது ஏறி குதித்த சில மாணவர்கள் கல்லூரிக்குள் எதையோல் ஒளித்து வைப்பதை பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் கவனித்து, அவர்களை சோதித்தபோது 5 பட்டாக்கத்திகள் இருந்தது. கத்திகளை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
நேற்று பெருங்களத்தூரை சேர்ந்த மாணவி செவ்வந்தி உடல்நலமின்றி இறந்ததால் கல்லூரிக்கு விடுப்பு அளிக்கப்பட்டது. தகவல் தெரியாமல் வழக்கம்போல மாணவர்கள் கல்லூரிக்கு வந்தனர். விடுமுறை என்று தெரிந்து வீடுகளுக்கு புறப்பட்டனர். அப்போது தேர்தலில் தோற்ற கோஷ்டிக்கும் வெற்றி பெற்ற கோஷ்டிக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது. அதுவே கைகலப்பாகி மோதலானது. மறியலில் ஈடுபட மாணவர்கள் சிலர் முயன்றனர். பாதுகாப்பு பணியிலிருந்த போலீசார் அவர்களை கல்லூரிக்குள் அனுப்பினர். அங்கிருந்து வெளியே வந்த சில மாணவர்கள் சாலையோர கடைகளில் இருந்த கரும்பு, குச்சிகளை கொண்டு எதிர் கோஷ்டியினரை தாக்க தயாரானார்கள். ஆனால் ஏற்கனவே மறைத்து வைத்த (போலீஸாரின் கண்ணில் படாத கத்திகளை ) கொண்டு குத்தியதில் ஒரு மாணவர் கத்தி குத்து விழுந்தது. மேலும் 2 பேர் காயமடைந்தனர்.
மாணவர்கள் கையில் பேனாவிற்கு பதிலாக கத்தி வந்ததற்கு யார் பொறுப்பு..
எம்புள்ள படிக்கும்னு கஸ்டப்படும் பெற்றோர்கள் நிச்சயமில்லை.. எல்லாம் பாழாபோன அரசியல்தான்…
தொகுப்பு: வெளிச்சம்-நந்தினி.
( மாணவர்கள் வன்முறையல்லாத அரசியல்வாதிளாகவும், மக்கள் நலனுக்காக மாணவர்கள் போராட வேண்டும் என்பதுதான் வெளிச்சம் அமைப்பின் கொள்கைகளில் ஒன்று )
இதிலிருந்தே தெரிகிறது நமது பாரதம் எங்கே செல்கிறது என்று!!!!
நன்றி,
மலர்
http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)
வலைப்பூ தலையங்க அட்டவணை
info@ezedcal.com
http//www.ezedcal.com