காதலர் தினத்தினை உலகமே கொண்டாடிய வேலையில்  கலைஞர் தொலைக்காட்சி கருத்து யுத்தம் நிகழ்ச்சியில் இன்றைய மாணவர்கள் அதிகம் முக்கியத்துவம் தருவது நட்பிற்காகவா, காதலுக்காகவா என்கிற தலைப்பில் விவாதம் நடைபெற்றது. அந்த விவாதத்தில் கலந்துகொண்ட 25 வெளிச்சம்  மாணவர்கள் கருத்துக்களால் அதிரவைத்தனர். தலைப்புகள் நம்மை யேசிக்க வைத்தாலும் வாய்ப்பினை மாணவர்களுக்கு தந்தோம்.  மைக்கை பார்த்தாலே பயப்படும் கிராமபுற மாணவர்களான நமது மாணவர்கள் பேச்சினை கண்டு பாராட்டிய உங்களுக்கும் நன்றி…

.படங்களை உங்கள் பார்வைக்காக சமர்ப்பிக்கிறோம்…

நட்பிற்க்காக

நட்பிற்க்காக


நட்பிற்க்காக


நட்பிற்க்காக

நட்பிற்க்காக

நட்பிற்க்காக

நட்பிற்க்காக

காதல் சார்பாக 

நட்பிற்க்காக


காதல் சார்பாக

காதல் சார்பாக

நட்பிற்க்காக

காதல் சார்பாக

காதல் சார்பாக


காதல் சார்பாக

நட்பிற்க்காக


 நட்பிற்க்காக

                                   வெளிச்சம் மாணவர்களின் வணக்கங்கள். மாணவர்கள் தற்கொலை குறித்து நாம் ஒரு ஆய்வு அறிக்கையை வெளியிட்டோம்.. ஆனால் அதனை அலட்சியப்படுத்தியதால்.. அண்ணா பல்கலைகழக மாணவி ஜோதி, எம்ஜி.ஆர் ஜானகி கல்லூரி மாணவி திவ்யா, உட்பட இன்னும் தற்கொலைகள் தொடர்கதையாகிறது... என விளக்குகிறது நேற்றைய விஜய் டிவி  நடந்தது என்ன  நிகழ்ச்சியில் வெளிச்சம் செரின் அவர்கள் விளக்கி பேசினார்...

நீங்களும் கொஞ்சம் பாருங்கள்: 



சமூக அக்கறை உள்ளவரா நீங்கள்
ஏழை மாணவர்களின் கல்விக்காக இணைவோம் வாரீர்…


பெற்றால்தான் பிள்ளையா? என்கிற கேள்வி வழக்கமாக சமூகத்தில் நிலவும் கேள்விகளோடு தொடர்புள்ள மற்றொரு கேள்வி “ பெற்றால் மட்டும் அன்னையா? அல்லது பெற்றோரா?”


    நல்லதொரு மாணவர் சமூகத்தை, இன்னும் சில பத்தாண்டுகளில் சமூகத்தை தாங்கி பிடிக்க போகிற, வழிநடத்த போகிற மாணவர்களின் பெற்றோர்களாக நாம் பொறுப்புள்ளவர்களாக இருக்கிறோமா? கதைகள் கேட்டு பழகிய நம் முந்தைய குழந்தைச் சமூகம், அதாவது இன்றைய பெற்றோர் சமூகம், இன்று தொலைக்காட்சி நெடுந்தொடர், குறுந்தொடர்களின் இறைச்சல்களுக்கு நடுவே தம் பொன்னான நேரத்தை குழந்தைகளிடம் செலவிடாமல் தொலைக்காட்சி பெட்டிகளோடு செலவிடுகிறது. தொடர்ச்சியாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியரை நாம் சந்தித்த பொழுது மேலே சொன்ன குற்றச்சாட்டுகள் மேலோட்டமானவை அல்ல என்பதை மாணவர்களின் உரையாடல்களும் உறுதி செய்தது. தாய், தந்தையரிடமும் பொறுப்புள்ள, திறன்படைத்த இளைய தலைமுறையை உருவாக்கும் பொறுப்பு குறித்து பேச ஆவலமாய் இருந்தோம். அதற்கு ஏற்றார் போல்  ஆரணி நகராட்சிக்கு உட்பட்ட மகளிர் சுய-உதவி குழுவை சார்ந்த பெண்களோடு உரையாடும் வாய்ப்பும் நமக்கு கிட்டியது.

நிகழ்ச்சியை நகராட்சியின் ஆணையர் சசிகலா அவர்கள் தொடங்கி வைத்தார். அதன் தொடர்ச்சியாக வெளிச்சம் மாணவர்கள் உறவுகள் அறுந்துபோன வீட்டுச் சூழலை மெய்யாகவே குறும் நாடகத்தில் கண்முன் நிறுத்திக் காட்டினர். குழந்தைகளின் மனநிலையை கருத்தில் கொள்ளாமல் குழாயடியில் கொச்சையான சொற்களில் சண்டைப் போடும் பெண்கள், பிள்ளைகளை கவனியாமல் தொடர்களுக்காக கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கும் பெண்கள், சுற்றத்தார்களின் தேவையற்ற வெறும் வாயை மெல்லும் குழப்ப பேச்சுக்களால் குழந்தைகள் மீது அழுத்தம் செலுத்தும் பெற்றோர்… என மெய்நிகர் நாடகத்தை மேடையில் நிகழ்த்திக் காட்டினர். நாடகத்திற்கு பின் வெளிச்சம் மாணவர் அமைப்பின் நிறுவனர் திரு.செரின் அவர்கள் பேசத் தொடங்கினார். நிகழ்ச்சியின் தொடக்கத்தில் குறைவாக இருந்த மகளிர் திரள் செரின் அவர்களின் உரையாடல் நீள, நீள கூட்டம் கூடிக் கொண்டே போனது. 





செரீன் அவர்கள் பெற்றோர்கள்  சந்திக்கும் அத்தனை பிரச்சினைகளை கணக்கிலெடுத்து குழந்தைகளிடம் அவர்கள் அணுக வேண்டிய முறைகளை பற்றி விரிவாக பேசினார். குழந்தைகளிடம் அதை செய்யாதே, இதை செய்யாதே என்று கண்டிப்பு காட்டும் பெற்றோர்களில் எத்தனை பேர் தன் வாழ்க்கையில் குழந்தைகள் தம்மை பின்பற்றும்படி வாழ்ந்து காட்டுகின்றனர். நாள் முழுக்க தொலைக்காட்சி பெட்டிக்கு அருகில் அமர்ந்து கொண்டு குழந்தைகளை தொலைக்காட்சி பக்கம் வராமல் இருக்கச் சொல்ல பெற்றோர்களுக்கு எப்படி தகுதி வரும்? நாம் தொடர்களில் மூழ்கி கிடந்தால், குழந்தைகள் சினிமா பாடல்களில் மூழ்கித்தான் கிடப்பார்கள். குழந்தைகளுக்கு பொது அறிவு வர செய்திகள், இயற்கை சுற்றுச்சூழல் தொடர்பான செய்திகளை, அறிவியல் செய்திகளை தாங்கி வரும் டிஸ்கவரி போன்ற தொலைக்காட்சிகளை பார்த்தால்தானே நாமும் சிலவற்றை தெரிந்து கொள்ள முடியும், குழந்தைகளின் அறிவு ஊற்றுக் கண்ணும் திறக்கும்.



கணவன் மனைவி பேசிக் கொள்ளும் போதோ, குழாயடியில் பெண்களோடு சண்டை போட்டுக் கொள்ளும் போதோ, நாம் கொச்சையான சொற்களை சரளமாக பயன்படுத்திவிட்டு, குழந்தைகள் அதுபோன்ற சொற்களை பயன்படுத்தக் கூடாது என்ற எதிர்ப்பார்ப்பு எந்தளவு சரியானதாக, நேர்மையானதாக இருக்கும்.

வீட்டோடு, இல்லறத்தை கவனித்துக் கொண்டு வீட்டிலிருக்கும் பெண்களானாலும் சரி, பணிக்கு செல்லும் பெண்களானாலும் சரி, ‘நான் இன்று அல்லது தினமும் என் குழந்தையோடு அரை மணி நேரமோ, ஒரு மணி நேரமோ ஒரு தோழியைப் போல, தோழனைப் போல பேசுவேன்’ என்று நினைத்திருப்பீர்கள், கண்டிப்பாக பெரும்பாலும் இருக்காது.  வீட்டில் தோழமை கிடைக்காத போது, வெளியே பதின் வயது உள்ளம் தேடத்தானே செய்யும், இதில் நம் வீட்டுக்குள்ளேயே வந்து ஆபாச குப்பைகளை வேறு தொலைக்காட்சிகள் கொட்டிச் செல்கின்றன. நாம் கவனமாக செயல்பட வேண்டாமா? தாய்மை என்றால் என்ன? தன் குழந்தைக்கு தேவையான உணவை சமைப்பதும், பரிமாறுவதும் மட்டும்தானா? தன் குழந்தைக்கு தேவையான உணர்வு ரீதியான ஆறுதல், அரவணைப்பு இரண்டையும் வழங்குவதுதானே…?

அதோடு, பெற்றோர்களாகிய நம் மக்கள் பெரும்பாலும் குழந்தைகளின் எதிர்காலத்தைப் பற்றி சிந்திப்பதைவிட உறவினர்கள், சுற்றத்தார்கள் என்ன நினைப்பார்கள்? என்ற சிந்தனையிலேயே தம் குழந்தையின் இயல்பை மாற்றுவதோடு மட்டுமில்லாமல், தமது இயல்பையும் இழந்து நின்கின்றனர்.. அடிக்கடி நமது சமூகத்தில் பயன்படுத்தப்படும் சொற்கள், ‘அந்த நாலு  பேரு என்ன நினைப்பாங்க’எந்த நாலு பேர்? எவன்/எவள் தன் குடும்பத்தோடு மகிழ்ச்சியோடு இருக்கும் நேரம் போக ஓய்வு நேரத்தில் ஊரார் வீட்டை பற்றி வம்படிப்பதை பிழைப்பாய் வைத்திருக்கின்றனரோ, எவனுக்கு உங்கள் குழந்தைகள் படிப்பை நிறுத்துவதால் எந்த நட்டமும் இல்லையோ, எவனுக்கு உங்கள் குழந்தை மற்றொரு நபருடன் தேவையற்ற உறவை வளர்த்துக் கொள்வதில் துளியளவு வருத்தமே இல்லையோ, எவன் உங்கள் பிள்ளையின் கல்விக்கு 50 காசளவில் உதவ முடியாதோ? அவனிடம் நமது குழந்தைகள் நற்சான்றிதழ் பெற வேண்டுமென்று மெனக்கெடும் பெற்றோரை என்ன சொல்வது. இனியாவது இன்றைய பெற்றோர்களாகிய  என் சகோதர, சகோதரிகள் தத்தமது குழந்தையின் நலனை முதன்மையாக கொண்டு சிந்திக்குமாறு மிகத்தாழ்மையோடு கேட்டுக் கொள்கிறேன். உங்கள் குழந்தையின் மேற்கல்விக்கு உதவிட , குழந்தைகளின் உளவியல் சிக்கலை  தவிர்த்திட மாணவர்கள் உதவி  எண் 9698151515 என்ற எண்ணுக்கு நீங்களோ, குழந்தைகளோ தொடர்பு கொள்ளலாம். அதோடு, கேள்விகள்  ஏதுமிருப்பின் சகோதரிகள்  கேள்வி எழுப்பலாம்.” என்று செரீன் பேசி முடித்தார்.


இதன் பிறகு, தனது கருத்தை பதிவிட்ட பெண், பெண்களை மட்டுமே குற்றம் சுமத்திக் கொண்டிருக்காமல், கொஞ்சம் எங்கள் வலிகளையும் கேளுங்கள், கணவர்கள் யாரும் பெண்களை சக மனுசியாக பார்ப்பதில்லை, சம்பளமில்லா வேலைக்காரியாகவே பார்க்கின்றனர். கணவன் துணியை இடுப்பு வலிக்க துவைத்துக் கொடுத்தாலும், கொஞ்சம் கூட பரிவு காட்டுவது, துணிகளை உலர்த்துவதற்கு கூட உதவுவது கிடையாது, நாங்கள் தொலைக்காட்சி தொடர்களில் மூழ்கி கிடப்பதாக எம்மீது குற்றம் சுமத்தப்படுகிறது, எத்தனை கணவர்கள் எம்மை நம்பி வேலைக்கு அனுமதிக்க தயாராக இருக்கிறார்கள். வீட்டுக்குள்ளே அடைத்து வைத்தால், வீடே உலகமென்றிருக்கும் சூழலில் தொலைக்காட்சி பெட்டிதான் எங்களுக்கு பொழுது போக்கு கருவியாக இருக்கிறது. மாற்று உருவாக்கி தர இதே போன்று கணவர்களிடமும் பேசுங்கள்.

   நாமும் கண்டிப்பாக ஆண்களிடமும் பேசுவோம், பெண்களிடமும் பேசுவோம், குழந்தைகளிடமும் பேசுவோம் உரையாடல் வழி ஒரு  ஆரோக்கியமான சமூகத்தை உண்டாக்குவோம் என்று வாக்குறுதி அளித்து வந்தோம்.

மாக்கோலமல்ல... கனவு  

  வழக்கமாக மக்களோடு மாணவர்களோடு பேசி அதில் பெற்றுக்கொண்ட  அனுபவங்கள் பலருக்கு பாடமாக இருக்க வேண்டும் என்பதற்காக உங்களோடு எங்கள் நிகழ்வுகளை பகிர்ந்து கொள்வதுண்டு..  இது அப்படிப்பட்ட நிகழ்வல்ல..

தஞ்சாவூர் பான் சேக்கர்ஸ் பெண்கள் அறிவியல் கல்லூரியில் இருந்து நம்மை தங்கள் கல்லூரியில் நடைபெற இருக்கும் இளைஞர் விழாவிற்கு வரும்படி  அழைக்க நாம் ஒத்துக்கொண்டோம்..
                  
     நமது சென்னை - தஞ்சை பயணத்தில் பாபநாசத்தில் நடந்த பேருந்துக்கடியில் சிக்கி மோட்டார்சைக்கிள்காரர் இறந்து போன விபத்தினை  கண்டு அங்கிருந்து நம்மால் போக முடியாமல் சிரமப்பட்டு பாதியில் நிற்க, அதனால் கல்லூரி விடுதிக்கு போக காலதாமதமானதால் பதட்டத்தோடு தொடர்ந்து விடுதி நிர்வாகத்தினர் நம்மை அழைத்தபடியே இருந்தார்கள்…
உரையாற்றிய போது
                  நமக்கு முன்னதாகவே நிகழ்ச்சி தொடங்க  கேட்டுகொண்டோம்… அதன்படி நான் காணும் நாளைய இந்தியா என்கிற தலைப்பில் நடந்து முடிந்திருந்த கோலப்போட்டியில் மாணவிகள் வரைந்த அழகான கோலங்கள் நம்மை வரவேற்றன… என்ன அழகு? கோலங்களில் புரட்சி செய்ய முடியும் என்ற எண்ணங்களை வெளிப்படுத்த முடியும் என காண்பித்திருந்தனர்..  நாம் உள்ளே நுழைந்தோம் எல்லா கல்லூரி மாணவிகளை போல பயங்கர அலும்பல் பார்டிகளாக " ஓ" போட்டார்கள் உள்ளே நுழைந்தோம்…
         
    உள்ளே நுழைந்ததும் அதிர்ச்சி காத்திருந்தது நமக்கு வெளிச்சம் மாணவர்கள் மட்டும் தான் சிறப்பு அழைப்பாளர்கள் என்றதும்.. வெளிச்சம் செரின் அவர்களை தவிர எல்லோரும் மாணவர்கள் என்பதால்  நமக்குள்ளும் படபடப்பு… வரவேற்புரை, பாடல்கள், பேச்சுப்போட்டி, ஊமை நாடகம் என  நிகழ்வுகள் தொடர்ந்து நடந்தது.
பட்டிமன்ற நடுவராக  

இன்றைய இளைய தலைமுறையினரின் வெற்றிக்கு வித்திடுபவர்கள் நண்பர்களா? பெற்றோர்களா? என்கிற பட்டிமன்றத்தின் நடுவராக  வெளிச்சம் செரின் அவர்களை திடீரென அறிவித்தார்கள்.. மேடைகளில் மட்டுமே பேசிய வெளிச்சம்  நிறுவனரை  முதல் முறையாக பட்டிமன்ற நடுவராக அறிவிக்கையில்   தீர்ப்பு தப்பா ஆகிவிட்டால்,
நாட்டாமை தீர்ப்பை மாத்துன்னு சொல்லுவாங்களே என பதட்டப்பட்டோம்..

 நண்பர்கள் தரப்பில் …
விழாவில் வெளிச்சம்
         “எல்லோர் வாழ்விலும் நட்பு இருக்கும்  மனசுக்குள் இருக்கிற வேதனையை பெத்தவங்களை தாண்டி ஒருத்தங்ககிட்ட சொன்னா அதுதான் நட்பு. அதுமட்டுமில்லாம பெத்தவங்க  பெற்றதுக்காக பாசமாக இருக்கலாம்   ஆனால் எந்த உறவுமே இல்லாம உசுரையே கொடுக்குறானே அவன் தான் நண்பன். அதுமட்டுமில்லாமல் இங்கே இருக்கிறவங்கள்கிட்ட காசு இல்லாமல் தவிச்சி ஹாஸ்டல்ல இருந்து   அப்பா அம்மாகிட்ட வீட்டுக்கு போன் போட்டு  பணமில்லம்மாண்ணு சொல்லும்போது உன் பிரண்டுக்கிட்ட இருந்தா  வாங்கி கட்டும்மா நான் அடுத்த வாரம் அனுப்புறேன்னு சொல்லுறாங்களே அது தான் பிரண்ட்சிப்பு என சொல்லும்போது கரகோசம் மட்டுமில்லாமல் விசில் சத்தங்கள் நம் காதை பிளந்தன.  தொடர்ந்த மாணவிகள்  தோழா!   தோழா! தோள் கொடு கொஞ்சம் சாஞ்சிக்கிறேன் எனும் பாடல் தொடங்கி முதல் மூழ்காத சிப்பே பிரண்சிப் தான் .. என பல பாடல்களால் எல்லார் வாழ்க்கையிலயும் காதலில்லாமல் இருப்பாங்க ஆனால் நட்பு இல்லாமல் இருப்பதில்லை.. எனக்கு ஒன்னுண்ணா எங்கம்மா அப்பாவை தாண்டி ஒருத்தன் முதல்ல துடிக்கின்றான்ணா அவன் தான் நண்பன்.. ஒருத்தருக்கு அவசரமா ரத்தம் வேணும்ணா அம்மா அப்பாவுக்கிட்ட சொன்னா ரத்தம் கொடுத்தா உடம்புக்கு என்னாகிடும்னு தடுப்பாங்க!  ஆனா நண்பர்களுக்கு சொல்லி பாருங்க வந்து நிற்பார்கள்.. நண்பன்னா தோள் மட்டுமில்ல உசுரையே கொடுப்பாங்க.. “உன் நண்பனை பற்றி சொல் நான் உன்னைப் பற்றி சொல்கிறேன்” தான் சொல்லுறாங்க ஆனா பெற்றோரை சொல்லுன்னு சொல்லை ஏன்னா  அவன் என் நண்பேன்டா! என திரைவசனம் சொல்லி எதிரணியினரை  திகைக்க வைத்தனர்..

பெற்றோர்களே தரப்பில்!
   
கருப்பாக இருந்ததற்கு கலங்கியிருக்கிறேன்
                 என்னம்மா மூழ்காத சிப்பே பிரண்ஸிப்பா எதுல பாட்டில் பார்ட்டிலையா... அவசரத்துக்கு காசு கேட்டா பிரண்டுக்கிட்ட வாங்கிக்க சொல்லுறோம் ஆனால் திருப்பி தரலைன்னா  ஓ பிரண்டு கடன் திருப்பி கொடுக்கிற வரைக்கும் மனசுக்குள்ள வலிக்கும் ஆனால் கொட்டிகொட்டி கொடுத்தும் எம்புள்ல படிக்குதுண்ணு ஊரெல்லாம் சொல்லுறாங்களே அவங்கதான்  பெத்தவங்க.. குரூப் ஸ்டடிண்ணு  நீங்க அடிக்கிற கும்மாலம் கூடாதுன்னா அம்மா, அப்பா தடுப்பாங்க தான் அதுக்காக அவங்க வில்லன்களா? சொல்லுங்க நடுவர் அவர்களே! என்றார்கள். எதிரணியினரை பார்த்து  நீங்க படிக்க வந்ததுனால தாண்டி பிரண்ட்..  அதுக்கு நாங்க வியர்வை சிந்தி  நாங்க உழைக்கனும் மாப்புள என்றனர்.. உங்களுக்கு மட்டும் தான் பாட்டு இருக்குதா…‘அம்மா என்றழைக்காத உயிரில்லையே’ முதல் ‘ஆசைப்பட்ட எல்லாத்தையும் காசிருந்தா வாங்கலாம்’ணு எங்களுக்கும் பாடல்கள் இருக்கில்ல என்றனர்.. தீர்ப்பு சொல்லுங்க நடுவரே என  வெளிச்சம் செரின் அவர்களிடம்  ஒப்படைக்க… பேச்சை  தொடங்கினார்.. தன்னுடைய பேச்சின் தொடக்கத்தில் வழக்கமான வார்த்தைகளை மாணவர்கள்  பக்கம் வீச அந்த பக்கம் அமைதி.. பெத்தவங்க கண்ணீருல வாழுற நாம  பெத்தவங்களுக்கு உண்மையா இருக்கிறோமாண்ணு யோசிச்சு பாருங்க, உலக வரலாற்றில் இடம் பெற்றவர்களை, நீங்க படிச்சி பாருங்க பெற்றோரை மதிக்காத யாரும் சாதிச்சதில்லை… தயவு செய்து யாரையும் ஏமாற்றாதீங்க, யார்கிட்டயும் ஏமாந்திராதீங்க.. என பேசி முடிக்க…

தீர்ப்பு சொல்லும் மாணவிகள்

நாட்டாமை தீர்ப்பை சொல்லுங்க என்றார்கள்… மாணவர்களை நோக்கி நண்பர்களா என கேட்க ஒரு சிலர் கரங்களை  தூக்கினார்கள். பெற்றவர்களா என  கேட்க கூடுதலாக உயர்த்தினர்.. பெற்றவர்களும்  நண்பர்களும் என சொல்ல  எல்லோரும் கரங்களை உயர்த்தினர்.. சரியான தீர்ப்பை நீங்களே சொல்லிவிட்டீர்கள் என முடித்தார் செரின்..

கருப்பாய் பிறந்த்தற்காக, கல்யாணம் செய்துகொண்டு கல்லூரி படிக்கும் மாணவி என மாணவிகளின் வலிகள் பல கோணங்களில் வெளிப்பட்டது. நான் இனி யாரையும் ஏமாற்ற மாட்டேன்… என மாணவிகள் சொல்ல  நிகழ்ச்சி முடிந்தது.. மாணவிகள் எழுதிய கடிதத்தை படிக்கும் போது நமக்கு அவர்களின் வலிகள் புரிந்தது…

( கடிதங்களை பிறகு உங்கள் பார்வைக்கு இணைக்கிறோம்..)


 தீர்ப்புகள்  தவறென்றால்    நீங்களும் சொல்லலாம்


 கல்வி உதவி தொகை தரும் மாணவர்கள்


மாணவிகள் நடுவில் 























                
            "ஏழைகளின் கல்விக்கு உதவியவன் இறைவனாவான்" என்பது  வெளிச்சம் மாணவர்களுக்குள்   எப்போதும் தாரக மந்திரமாக சொல்லி கொள்வதுண்டு...  கடந்த ஆண்டு கல்லுரிக்கட்டணம் செலுத்த முடியாமல் கல்லூரியை விட்டு வெளியே வந்த 36 கல்லூரி மாணவர்களுக்காக நாற்பது வெளிச்சம் மாணவர்கள் சென்னை நகரமெங்கும் உண்டியல் ஏந்தி கல்லூரிக்கட்டணம் செலுத்தியதை நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள். ஆனால் அப்போது பிச்சையெடுக்குறீங்களே,  உங்களுக்கு வெக்கமா இல்லையா? என்றனர் நம்மை நோக்கி. கல்லூரியை விட்டு வெளியே வந்த மாணவர்களின் வலியை யார் அறிவர்.. நாம் உண்டியல் ஏந்தியதன் விளைவாக முதல் தலைமுறை மாணவர்களுக்கான கல்விக்கட்டணத்தினை அரசே ஏற்கும் என்கிற அரசாணையினை தமிழக அரசு வெளியிட்டதை  தாங்களும் அறிவீர்கள்…

இந்த ஆண்டும் அதே பிரச்சனையில் கல்லூரியில் இருந்து துரத்தப்பட்ட மாணவர்களை அழைத்து கொண்டு பல்வேறு இடங்களுக்கு வெளிச்சம் மாணவர்கள் அலைந்தோம்.. அதில் 38 நாட்களாக கல்லூரிக்கு போகாத  நிலையில் படிப்பை இழக்கும் சூழலில் இணையத்தின் வாயிலாகவும் கோரிக்கை வைத்தோம்... ஒரு சில மாணவிகளுக்கு இணைய நண்பர்கள் உதவி செய்தார்கள்.. மேலும் இக்கட்டான சூழலில் மாணவர்களிடம் உதவும் எண்ணத்திணை உருவாக்க வேண்டும்..  உயர்கல்வி என்பது ஒரு சிலருக்கு மட்டும் கிடைத்தால் அது இந்த தேசத்தின் சாபம் எல்லோருக்கும் கிடைக்க செய்வோம் என்ற எண்ணத்தின்படி  சென்னையில் உள்ள பாரதி மகளீர் கல்லூரி, தியாகராயர் கல்லூரி போன்ற கல்லூரிகளில் மாணவர்களிடம், சக ஏழை மாணவர்களின் சூழலை சொல்லி வெளிச்சம் மாணவர்கள் உண்டியல் ஏந்தினார்கள்.  கல்லூரியை விட்டு வெளியே அனுப்பட்ட  மாணவர்களின்  பெரும்பாலான மாணவர்கள் உதவினார்கள், அதில் கிடைத்த பணத்தை St.Pal’s Nursing College ஐ சார்ந்த ஐந்து கல்லூரி மாணவிகளுக்கு அந்த பணத்தினையும் வழங்கியதோடில்லாமல் மேற்கொண்டு அந்த மாணவிகளின் கட்டண தேவை கருதி நிலைமையினை திரைப்பட தயாரிப்பாளர் ராஜன் அவர்களிடம் வெளிச்சம் செரின் அவர்கள் விளக்கி
 நன்றி: தினத் தந்தி
கூறியதன் விளைவாக ராஜன் அவர்கள் தலா ஐந்தாயிரம்  ஒவ்வொரு மாணவிகளுக்கும் என ஐந்து பேருக்கு அவர்கள் கல்லூரியின் பெயரில் டி.டி எடுத்து கொடுக்கப்பட்டது. கையிருப்பில் இருந்த பணத்தோடு வெளிச்சம் மாணவர் வேல்முருகன் சகிதம் அந்த மாணவிகளை கல்லூரிக்கு அனுப்பினோம், கல்லூரியில் நிர்வாகிகள் மாணவிகளை தற்காலிகமாக அனுமதித்தனர், அதோடு மீத பணத்தினை கட்டினால் தான் கல்லூரி தேர்வுக்கு அனுப்படுவார்கள் என நம்மை எச்சரித்து அனுப்பினார்கள். மீதம் கட்ட வேண்டிய பணத்தை கல்வியாண்டின் முடிவிற்குள் ஏற்பாடு செய்ய வேண்டிய பொறுப்போடு, உதவிக்காக காத்திருக்கும் மீதமுள்ள மாணவர்களுக்கு பொருளாதார உதவி செய்ய வேண்டியதன் தேவையை உணர்ந்த நாம் மீண்டும் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்தோம்.
    
    
ஆனந்த் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் மயில்சாமி அண்ணாதுரை அவர்கள்  சார்



    திருச்சி எம்.ஏ.எம் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியர் படிக்கும் சிவா என்கிற மாணவனை  93% எடுத்திருந்த போதும் கல்லூரிக்கட்டணம் செலுத்தாததால் வெளியே அனுப்பப்பட்டார். நிலைமையை கேட்ட சந்திராயன் மயில்சாமி அண்ணாதுரை அவர்களிடம் பதறினார். சென்னை செட்டிநாடு கல்லூரிக்கு ஒரு விழாவுக்கு வந்தவர், அங்கிருந்த  மாணவர்களிடம் சிவாவின் நிலையை கூறினார். அவர்கள் உதவினார்கள் அது மட்டுமில்லாது கடந்த 4.2.11. அன்று ஆனந்த்  இன்ஸ்டியூட் ஆப் இன்ஜினியரிங் கல்லூரில் நடைபெற்ற ஏழாம் ஆண்டு விழாவில்
சிவா , வெளிச்சம் செரின் அவர்கள்
சிவாவின் நிலையினை, “மாணவர்களே!  நீங்கள் படித்து பட்டம் பெறும் இந்த சூழலில் 
நிறைய மதிப்பெண்கள் எடுத்தபோதும் கல்வியை கனவாக கொண்டு மேற்கொண்டு தொடர முடியாமல் காத்து நிற்கும் சிவாவுக்கு உதவுங்கள்” என கோரிக்கை வைத்தார். உண்மையாகவே  மாணவர்கள் மனிதாபமுள்ளவர்கள் தான் என்பதை நிரூபித்தார்கள். மொத்தமாக உண்டியல் மூலம் கிடைத்த தொகை ரூ 12074.  அந்த பணத்தை சிவாவிடம் வெளிச்சம் மாணவர்கள் கொடுப்பதை விட ஒரு கல்லூரி மாணவர்களே கொடுக்க வேண்டும் என எண்ணினோம்.. அதற்கு ஏற்றார் போல் தஞ்சாவூர் பான் செக்காஸ் மகளிர் கல்லூரி விடுதியில் இளைஞர்கள் விழாவில் வெளிச்சம் மாணவர்கள் சிறப்பு அழைப்பாளர்களாக சென்றிருந்தோம்.
தகுதியுள்ள பாண் செகுயர்ஸ் கல்லூரி மாணவிகள்
(இந்த விழாவின் சிறப்பை பின்னர் இணைக்கிறோம்) கல்லூரி மாணவிகள் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் சிவாவிற்கு, “ மயில்சாமி அண்ணாதுரை அவர்களின் உதவியோடு திரட்டப்பட்ட நிதியினை தருவதற்கு யாருக்கு தகுதியுள்ளது என எண்ணுகிறீர்கள்” என நாம் கேட்டோம்…ஒரு பெண் வந்தார் உங்களை பற்றி சொல்லுங்கள் என்ற போது நான் இந்த கல்லூரியில்  நண்பர்கள் மூலம் காசு சேர்த்து ஒரு பொண்ணை படிக்க வைக்கிறேன்.” என சொல்ல சிவாவின் கண்களீல் கண்ணீர் வடிய அந்த தொகையை பெற்றுக்கொண்டான்... கல்லூரிக்கு வெளியே அனுபப்பட்ட சிவாவின் வலியை நிகழ்ச்சியின்  ஊடே தொலைப்பேசி வழியாக கேட்டுகொண்டார் மயில்சாமி அண்ணாதுரை அவர்கள்.  கல்லூரியில் இந்த தொகையை கட்டிவிட்டு  இப்போதைக்கு கல்லூரிக்குள் அனுப்பிவிட்டோம்..   மாணவர்களிடமிருந்து மாணவர்களால் சேர்க்கப்பட்ட நிதியை மாணவர்களால் கொடுத்து ஒரு மாணவனின் உயர்கல்வியை மயில்சாமி அண்ணாதுரை அவர்களின் நல்ல உள்ளத்தின் உதவியோடு இப்போதைக்கு காப்பாற்றியிருக்கிறோம்.. தொடர்கிறது மீண்டும் நம் பயணம்.
எவ்வளவு காலம் இப்படி உண்டியல் ஏந்த போகிறீர்கள் எனலாம்.. பேசுவதை விட முயற்சி செய்தோம் பிறர் வாழ்வில் கல்வி வெளிச்சம் கொடுக்க  நம்பிக்கையோடு பயணமாகிறோம் மீதமிருக்கும் மாணவர்களின் வாழ்க்கைகாக…
கேள்வி கேட்கும்  அன்பர்கள், ஐயமுள்ள அன்பர்கள், அக்கறையுள்ள தோழர்கள் ஆலோசனைகளை கூட்டு செயல்திட்டத்தை  முன்வைக்குமாறு தாழ்மையோடு வெளிச்சம் மாணவர்கள் சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.

நன்றியுடன்
வெளிச்சம் மாணவர்கள் 

 உண்டியல் ஏந்தும் வெளிச்சம் மாணவி





சமூக அக்கறை உள்ளவரா நீங்கள்
ஏழை மாணவர்களின் கல்விக்காக இணைவோம் வாரீர்…


கல்விக்கு உதவிட : 


ACCOUNT NAME:               " VELICHAM STUDENTS EDUCATIONAL AND WELFARE TRUST "

ACCOUNT NO:                   31654850476,
Branch Name:                     STATE BANK OF IINDIA, PERAMBUR, CHENNAI,

IFSC Code:                          SBIN 0002256

SWIFT Code:                       SBININBB458


                 
        
                   மாணவர்களின் கவனம் படிப்பிலிருந்து சிதறினால் வருங்காலம் எல்லோருக்கு பாழாய் போகுமென உணர்ந்த வெளிச்சம் மாணவர்கள் கடந்த 7 வருடமாக பல்வேறு கல்லூரிகள்  மற்றும் பள்ளிகளில்  மாணவர்கள் நலனில் அக்கறை கொண்டு பலவிதமான பயிற்சிகளை வழங்கி வருவதை தாங்கள் அறிவீர்கள். குறிப்பாக மற்றவர்களுக்கு வழிக்காட்டும் நபர்களை உருவாக்குவதுதான்  வெளிச்சத்தின் நோக்கம், இந்த பணியில் நேற்று திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பக்கம் உள்ள திருவத்திபுரம் அரசு உயர் நிலைப்பள்ளியில்  மாணவர்களுக்கு பயிற்சி வகுப்பினை எடுக்க SJSRY  திட்டத்தின் கீழ் இசைவளித்தோம்…

வழக்கமாக  நடைபெறும் அர்ச்சனையோடு நிகழ்ச்சியை தொடங்கினார்கள் சிறப்பு விருந்தினர்கள், முதல்கட்டமாக வெளிச்சம் தீபா ‘அன்புள்ளம் கொண்ட அம்மாவுக்கு’ என்கிற பாடலை பாடி நமக்காக எல்லா பாரங்களையும் சுமக்கும் தாயின் வலிகளை பதிவு செய்தார். அதனை தொடர்ந்து வெளிச்சம் மாணவர்களின்  நாடகத்தினை பார்த்து குதூகலித்தார்கள். நாடகம் மிகச்சிறப்பாக முடிவுற்ற நிலையில் மெல்ல வெளிச்சம் செரின் அவர்கள் என்னப்பா நாடகம் நல்லா இருந்திச்சா? என்றார் மாணவர்களை நோக்கி நல்லா இருந்துதுக்கா.. என்ற ஒரு மாணவர்  அவர்களுக்குள்ளாக பேசிக்கிட்டு இருந்த சந்தேகத்தினை கேட்டார்கள் அக்கா நீங்க ஆணா பொண்ணா! என்றான் அப்படியே அதிலிருந்து மெல்ல ஆரம்பமானது பேச்சு, நீயென்ன நினைக்கிறணு அவனிடம் மறுகேள்வி வைக்க பெண்ணு தானக்கா என்றான்   பலமாக சிறித்த செரின் அவர்கள், மெல்ல காமெடியாக  பொண்ணுனா எப்படி இருக்கணும் என்றார் மாணவர்களை நோக்கி, "அடக்க ஒடுக்கமா, சேலைக்கட்டிக்கிட்டு சொல்லுறதை அப்படியே கேக்கணும் என்றார்கள். இன்னும் ஒரு படி மேல போய் பொம்பலைன்னா அழகா இருக்காணும் என்றான் ஆர்வமாக, அப்படின்னா அழகா இல்லையின்னா  அவங்க பொம்பலை இல்லையாடா என கேட்டார்  செரின். கொஞ்சமாக அழகா இருக்கணும்லக்கா என்றனர் மாணவர்கள் உடனடியாக… ஆண்கள் எப்படி இருக்கணும் என பெண்கள் பக்கம் கேட்கப்பட எங்கப்பாவை போல எங்கம்மா கிட்ட எப்பவும் சண்டை போடக்கூடாது, சாயாரம் குடிக்க கூடாது. பாசாமா இருக்கணும் என்றார்கள் என்றார்கள் எதிபார்ப்போடு.... இப்படியான கூட்டத்தில் எல்லோருடைய அசையாமல் செரின் அவர்களையே கவனித்தனர், பெற்றவர்கள் தான் நம்மலோட கடவுள் ஏன்னா எல்லா தேவைகளையும் பூர்த்திகிறவர்கள் நம்மலோட பெற்றவர்கள் தானே என்றதும் உணமைதான் அக்கா என்றனர், அவங்க சாப்பாடிறதுல இருந்து  நாம போட்டுக்கிற சட்டை வரைக்கும் அவங்கள் உழைப்புல வந்ததுதான்.. எந்தம்மா அப்பாவது எனக்கு போகதான் எங்க பிள்ளைக்கு தான் சொன்னதுண்டா என செரின் அவர்கள் கேட்க இல்லைக்கா எங்களுக்கு போகதான் அவங்க எடுத்துக்குவாங்க என்றனர் சத்தமாக ஒட்டுமொத்த மாணவர்களும், அப்படிப்பட்ட அம்மா அப்பாவுக்கு நீங்க உண்மையா இருக்கோமா. அவங்க நம்மல படிக்க தானே அனுப்பிறாங்க நாம படிச்சோமா, இல்லை ஆசிரியரை மதிக்கிறோமா.. என கேட்டபடியே காதல் சார்ந்த பிரச்சனைகளையும் தொட்டார் வெளிச்சம் செரின், மொத்ததில்   மாணவர்களின் எண்ணம் எதை நோக்கி நடத்தப்பட்ட நிகழ்வு மாணவர்களின் எல்லா  கேள்விக்கும் பதிலளிக்கும் வண்ணமிருந்தது. பொத்தவங்களுக்கு உண்மையாயில்லைணா  நீங்க நல்லாவே வாழமுடியாது..  தயவு செய்து படிங்கப்பா.. யாரையும் ஏமாத்திராதீங்க! யார்கிட்டயும் ஏமாந்திராதிங்க! நீ அழுதிட்டு வீதியில நிற்கும்போது உங்கூட இருக்க போறது உங்கப்பாம்மா  தான் என சொல்லி  முடிக்கும் போது பல மாணவர்களின் கண்கள் அவர்களை மீறி வழிந்தோடியதை நம்மால் காண முடிந்தது..  கடைசியாக மாணவர்கள் தரப்பில் இருந்து பேச வந்தவர்கள் நான் இங்க வர்றதுக்கு சும்மா கிளாஸ் கூப்பிடுறாங்கச்சேன்னு கோவமா வ ந்தேன் ஆனா வாழ்க்கைய சொல்லி கொடுத்திருக்கீங்க என்றார் அந்த மாணவி…



அம்மா அப்பா படுற கஸ்டத்தை அவங்க கூட சொல்லலையேக்கா-பாரதி

                மாணவர்கள் தரப்பில் யாருமே வரவே இல்லை மாணவிகளுக்கு முன்னால் வந்து சொல்ல வெட்கப்பட்டனர்..  பல மாணவர்கள் சிரிச்சாங்க, ஆனால் ஒரு மாணவன் மட்டும் எதையும் பேசாம மொவுனமாக இருந்தான்.. மொல்ல பேச எழுந்தான் பாரதி… மெல்ல மவுனம் கலைத்து அவன் பேச, நம் கண்களிலும் நீர் வழிந்தது.. இந்த பள்ளிகூடத்திலேயே நான் தான் வால்பையன், கிளாஸ்ல எங்க பிரச்சனை நடந்தாலும் நான் தான் காரணமா இருப்பேன், இங்க வர்றதுக்கு முன்னால விளையாட்டு பீரியடாச்சே என்னடா பேசறாங்களாம், அதுள்லாம காலையில எங்க கிளாஸ்ல காலையில பிரச்சனை விசாரிச்ச ஹெட்மாஸ்டர் என்னைய திட்டினார் (தலைமை ஆசிரியரும் கூட்டத்தில் இருந்தார்) "கட்" அடிச்சிடலானு நினைச்சேன் என்றவன் படிப்பதற்கு அவன் படும்பாடுகளை விவரித்தான்.. எனக்கு தெரியாத சரக்கு (டாஸ்மார்க் அயிட்டம் தாங்க) பேரே இல்லை.. ஏன்னா எங்கப்பா அம்மா சென்னையில வேலை செய்யிறாங்க  நான் பாட்டி வீட்டுல இருக்கிறேன் எங்க மாமாஎன்ன சரக்கு வாங்கிட்டு வரசொல்லுவார் போகலைன்னா  அடிப்பார்.. அதனாலேயே நான் படிக்காமல் சுத்திக்கிட்டு இருந்தேன்.. இன்னைக்கு தான் எங்கம்மா அப்பா படுற கஸ்டங்களை உணர்ந்திருக்கேன் என்றவன்..  அவங்க கஸ்டங்களை  இதுவரை எங்களுக்கு யாரு சொன்னதில்லையேக்கா என்றான் கண்ணீருடன்…   இந்த நிகழ்ச்சிக்கு  மொத்த்தில் மாணவர்களின் மனசாட்சியை கேள்வி கேட்கும் நிகழ்ச்சியாக இருந்தது.

குறிப்பு: மாணவர்களின் பெயர், இந்த கட்டுரைகள் பல மாணவர்களின் நலன் கருதி வெளியிடப்படுகிறது..  தவறுகளை சுட்டிகாட்டுங்கள்…


நிகழ்ச்சியின் தொகுப்பை பார்க்க:


From seyyaar meeting




சமூக அக்கறை உள்ளவரா நீங்கள்
ஏழை மாணவர்களின் கல்விக்காக இணைவோம் வாரீர்…