(ஜூலை 16, 2007)
சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா
அருகாது அகலாது தீக்காய்வார் போல
கருஅணுவில் மின்சக்தி ஆக்கு
 
முன்னுரை: இருபதாம் நூற்றாண்டின் முப்பெரும் பேரழிவு நிகழ்ச்சிகளில் ஜப்பானில் ஹிரோஷிமா, நாகசாக்கி அணுகுண்டுகள் வீழ்ச்சிக்குப் பிறகு அடுத்த இடத்தைப் பெறுவது, போபால் இராசயனக் கூடத்தில் 1984 ஆண்டு வெளியேறிய விஷ வாயுத் தாக்குதலின் கோர விளைவுகளே! நிகழ்ச்சிகளில் மூன்றவது நிலையைப் பெறுவது, சோவியத் ரஷ்யாவின் செர்நோபிள் அணு உலை வெடிப்பு! அணு யுதங்கள் வெடித்து, ஜப்பானில் இறந்தவர் எண்ணிக்கை 300,000 பேரைத் தாண்டி விட்டது! அங்கு காயம் உற்றோர், கதிரடி பெற்றோர், சந்ததி ஊனமுற்றோர் எண்ணிக்கை கணக்கில் அடங்கா!  செர்நோபிள் விபத்தில் உடனே இறந்தவர் 31 நபராயினும், மிகையானக் கதிரடியில் பாதிக்கப் பட்டவர் 600,000 மேல் என்றும் பின்னால் அவர்களில் மரணம் அடைந்தவர் எண்ணிக்கை யிரக் கணக்கில் ஏறிக்கொண்டு போவதாயும் அறியப் படுகிறது!  அண்டை ஊர்களில் பொழிந்த கதிர்த் தீண்டலால், சுமார் 135,000 மக்கள் வேறு ஊர்களில் குடியேற ராணுவப் பஸ்களில் தூக்கிச் செல்லப் பட்டனர்! பல வருடங்கள் கழித்துக் கதிர் ஐயோடினில் [Radioiodine] பாதிக்கப்பட்ட 1800 குழந்தைகள் தைராய்டு புற்றுநோயில் தாக்கப் பட்டதாகவும், அந்தக் குழுவில் பத்துக் குழந்தைகள் இறந்து விட்டதாகவும் இப்போது அறியப் படுகிறது!
உலக வரலாற்றில் ஜப்பானிலிட்ட அணு ஆயுத வீச்சுகளுக்கு அடுத்தபடியாக, ஆனால் அவற்றை விட 400 மடங்கு பேரழிவு மிகையாக விளைவிக்கும் ஒரு கோர கதிரியக்கத் தீங்கு நிகழ்ச்சியாக, செர்நோபில் அணு உலை விபத்து கருதப் படுகிறது!  செர்நோபில் நிலையத்தில் சிதைந்து முறிந்த கட்டடங்களைத் தாண்டிக் கதிரியக்கத் துணுக்குகளும், தூசுகளும், மாசுகளும் காற்றில் பரவி கிழக்கே ஜப்பானிலும், மேற்கே கனடா வரையிலும் பயணம் செய்து கருவிகள் மூலம் பதிவாகின! செர்நோபில் அணு உலை வெடிப்பால் இதுவரை 65 பேர் உயிரிழந்தனர் என்று அறிய வருகிறது! கதிர்த் தீண்டலாகி 20 மைல் சுற்றளவில் வாழ்ந்த பிரிபயாட் நகர மக்கள் [45,000 பேர்] உள்பட மற்ற அண்டை ஊர்களிலும் வசித்த 116,000 நபர்கள் கட்டாயமாகப் புலப்பெயர்ச்சி செய்யப் பட்டனர். னால் வெடித்துச் சிதறிய கதிர்வீச்சுத் துணுக்குகள் பல மைல் சுற்றளவில் பரவிப் படிந்துள்ளதால், அடுத்துச் சுமார் 9000 பேர் பல்லாண்டுகளில் மரணம் அடைவார் என்று ஐக்கிய நாடுகளின் அணுசக்திக் கண்காணிப்புப் பேரவை [UNESCO-IAEA] கணித்துள்ளது!
ஆனால் சமீபத்தில் 2007 ஜூலை 16 ஆம் தேதி நேர்ந்த ஜப்பான் நிலநடுக்கமும், அதனால் தூண்டப்பட்ட காஷிவாஸாகி-கரிவா அணுமின்சக்தி நிலையத் [Kashiwazaki- Kariwa Nuclear Power Plant] தீவிபத்தும், கதிரியக்கக் கழிவுநீர்க் கசிந்து கடலில் சேர்ந்ததும், மற்ற விபத்துக்களோடு ஓப்பு நோக்கினால் மிகச் சிறிய விளைவு என்றுதான் அகில உலக அணுசக்திப் பேரவை (IAEA) முடிவு செய்கிறது !   
ஜப்பான் நிலநடுக்கமும் அதிர்ச்சி விளைவுகளும்
2007 ஜலை 16 ம் தேதி ஜப்பானின் வடமேற்குப் பகுதியில், தலைநகர் டோக்கியோவிலிருந்து 250 கி.மீடர் [150 மைல்] தூரத்தில் உள்ள நைகாடா நகரத்தை நடுக்க மையமாகக் [Epicentre] கொண்டு 6.8 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம் காலை 10:13 மணிக்கு (01:13 GMT) உண்டாகியது.  அதன் விளைவால் இதுவரை 9 பேர் மரித்தார் என்றும், 1000 பேருக்கு மேல் காயமடந்தார் என்றும் 13,000 பேர் தமது வீட்டை விட்டு ஓடி 100 பாதுகாப்பு இல்லங்களில் தங்கினார் என்றும் அறியப்படுகிறது.  150 மைல் தூரத்தில் இருக்கும் டோக்கியோவின் மாட மாளிகைகள் கூட டினவாம் !  நைகாடா நகரத்துக்கு அருகே உள்ள உலகப் பெரும் காஷிவாஸாகி அணுமின் நிலையத்தின் ஏழு தனிப்பட்ட அணு உலைகள் நில அதிர்ச்சியை உணர்ந்த கணமே தானாகப் பாதுகாப்பாக நிறுத்தம் அடைந்தன என்று அறியப்படுகின்றது ! 
யுரேனிய எரிக்கோல்கள் உள்ள அணு உலைக்கு எந்த இடருமின்றி, அருகில் இருந்த தீய்ந்த எரிக்கோள்கள் சேமித்து வைக்கப் பட்டுள்ள காங்கிரீட் நீர்த் தடாகத்தில் மட்டும் சில பிளவுகள் உண்டானதாகத் தெரிகிறது.  வெளியே உள்ள டிரான்ஸ்ஃபார்மர் ஒன்றில் தீப்பற்றி அது உடனே அணைக்கப் பட்டது. மேலும் வெளியே வைக்கப்பட்டுள்ள தணிவுக் கதிரியக்கத் திரவமுள்ள ஓர் இரும்புக் கலம் உடைந்து கழிவுநீர் கசிந்தோடிக் கடலில் கலந்தது என்பது பலரும் அலறும் குறிப்பிடத்தக்க நிகழ்ச்சி.  வியன்னாவில் உள்ள அகில நாட்டு அணுசக்திப் பேரவை [International Atomic Energy Agency, (IAEA) Vienna Austria] ஜப்பானிய அதிகாரிகளின் வேண்டுகோள்படி ஆறு பேர் அடங்கிய ஆய்வுக் குழுவைச் சமீபத்தில் நிலநடுக்க விளைவுகளை நேரடியாக அறிந்துவர அனுப்பியுள்ளது.  அவரது ஆய்வு அறிக்கை இன்னும் சில நாட்களில் வெளியிடப்படும்.  அந்த அறிக்கை அகில வலைகளில் வெளியானதும் நான் எனது தொடர்க் கட்டுரையில் எழுதுகிறேன்.      
நிலநடுக்கங்கள் அடிக்கடி குலுக்கும் ஜப்பான் தேசம்
உலக நாடுகளிலே ஜப்பான் தேசம் ஒன்றுதான் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படும் நிலையற்ற கடற்தளம் மீது ஒட்டியும் ஒட்டாத தீவுகளாய்ப் பல்லாயிரம் ஆண்டுகள் நிலைத்து வருகிறது.  ஒவ்வொரு ஐந்து நிமிடமும் எழும் நிலநடுக்க நாட்டில் ஜப்பானியர் மிக விரைவாய்ச் செல்லும் இரயிலில் அனுதினம் பயணம் செய்து கொண்டு, நிலநடுக்கச் சிதைவுகளைச் சகித்திக் கொண்டு வாழ்கிறார்.  புல்லெட் டிரெயின் எனப்படும் வேக வாகனங்கள் நிலநடுக்கம் ஏற்பட்ட சில நிமிடங்களில் தானே நின்று விடுகின்றன.  ஜப்பானில் 30% பங்கு மின்சார ற்றல் பரிமாறிவரும் 55 அணுமின் நிலையங்கள் நிலநடுக்கத்தால் பேரழிவுகள் நேராதவாறு பாதுகாப்பாக நிறுத்தமாகி, நிலைமை சரியான பிறகு இயங்கின்றன.  அதே நைகாடா பகுதியில் 2004 ஆம் ஆண்டு அக்டோபரில் உண்டான 6.8 ரிக்டர் அளவு நிலநடுக்கத்தால் 65 பேர் மரித்தனர்.  இதுவரை நிகழ்ந்த நிலநடுக்கத்திலே மிகப் பெரும் நடுக்கம் 7.3 ரிக்டர் அளவில் 1995 ண்டில் கோப் நகரப் பகுதியில் [Kobe City] நேர்ந்தது.  அந்தக் கோர நடுக்கத்தில் 6400 பேர் உயிரிழந்தனர் !
காஷிவாஸாகி அணுமின் நிலையத்தில் நேர்ந்த விளைவுகள்:
டோகியோ மின்சார வாரியம் [Tokyo Electric Power Company (TEPCO)] மேற்பார்வை செய்து நடத்தி வரும் காஷிவாஸாகி அணுமின் நிலையம் ஏழு தனி உலைகளைக் கொண்ட உலகத்திலே மிகப் பெரிய நிலையம் அது !  அது ஜப்பானின் வடமேற்குப் பகுதியில் நைகாடா நகருக்கு அருகில் 4.2 சதுர கி.மீடர் பரப்பில் அமைக்கப் பட்டுள்ளது. அந்த ஏழு அணுமின் யூனிட்டுகளும் கொதிநீர் அணு உலைகள் [Boiling Water Reactors] ஆகும்.  அவை அனைத்தும் இயங்கினால் மொத்தம் 8212 MWe மின்சார ஆற்றல் பரிமாறத் தகுதியுள்ளது.  அந்த தளத்தில் ஏழு அணு உலைகள் உள்ளதோடு ஓர் அணுவியல் பயிற்சிக் கூடம், பொதுநபர் அணுசக்தித் தகவல் கூடம் மற்றும் தணிவு நிலை கதிரியக்கக் கழிவுச் சேமிப்புக் கிடங்கு [Low Level Radioactive Waste Storage Facility] ஒன்றும் அமைக்கப் பட்டுள்ளன.  மேலும் சிறப்பாக கொதிநீர் உலை இயக்குநர் பயிற்சிக்காக இரண்டு போலி அணுமின் உலை அரங்குகள் [Simulators in BWR Operator Training Centre] அங்கே நிறுவகமாகி யுள்ளன.

 
நிலநடுக்கமான அன்றைய தினத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் அணுமின் உலைகள் யாவும் சுய இயக்கு நிலநடுக்க உணர்வுக் கருவிகள் மூலம் [Seismic Sensors] நுகரப்பட்டு உடனே நிறுத்தம் யின.  அதாவது அந்த நிலையத்திலிருந்து வெளியாகும் மின்சாரப் பரிமாற்றம் துண்டிக்கப்பட்டு நிலையங்கள் யாவும் பாதுகாப்பான நிலைக்கு கொண்டு வரப்பட்டன.  ஆனால் நிலநடுக்கத்தில் ஏற்பட்ட உலோக உராய்வால் ஒரு மின்னழுத்த மாற்றியில் [Electric Transformer] தீப்பற்றியது.  அதன் மூலம் மின்சாரப் பரிமாற்றம் முன்பே நிறுத்தமானதால் தீங்குகள் எதுவும் நிகழாமல் புகை மட்டும் மூண்டு பரபரப்பான டெலிவிஷன் காட்சியாக உலகைக் கவர்ந்தது.  ஜப்பான் தீயணைப்புப் படையினர் உடனே தீயை அணைத்துப் பரவாமல் தடுத்தனர்.    
(தொடரும்)
***********************
தகவல்:
Picture Credits: 
1.  IAEA Team to Report on Kashiwazaki Kariwa Nuclear Power Plant Examination (Aug 16, 2007)
2.  Japan Earthquake Triggers Nuclear Plant (Transformaer) Fire
3.  Earthquake Spills Radioactive Water at Japanese Nuclear Plant (July 17, 2007)
4  Nuclear Waste (Water) Leak Fear after Japan Quake By: Justin McCurry (July 18, 2007) Tokyo
5.  Japan Earthquake Caused Nuclear Waste (Water) Spill.
6.  Japanese Earthquake Sparks Nuclear Plant (Transformer) Fire By: AP (July 16, 2007)
7.  Japan Nuclear Power Plants and Earthquakes (August 2007)
 
******************
 நன்றி- -ஜெயபாரதன் கனடா விஞ்ஞானி...

 (குறிப்பு: கட்டுரையாளர் வெளிச்சம் மாணவர்களின் கல்விக்கு உதவி செய்ய முன் வந்திருக்கிறார்)


அப்துல்கலாம் அய்யா கனவுகான சொன்னீர்கள்.. நானும்  பறக்கும் கனவு கண்டேன். ஆம் வறுமைக்கு பிறந்த அல்லிமுத்துவின் ஆசை என்பது பைலட்  ஆகி "பிளைட்"  ஓட்டனும் என்பதுதான் அவர் கனவு. ஆனால் என் கனவை காசு தீர்மானித்தது.. இன்று வெளிச்சம்  மாணவர்கள் என் கனவுக்கு உயிர் கொடுத்திருக்கிறார்கள் என்கிறார்  கோயம்புத்தூரை சார்ந்த இளைஞர் அல்லி முத்து.  தமிழகத்தின் பல உதவும் அமைப்புகளையும், அரசியல் அமைப்புகளையும் சந்தித்து தனக்கு உதவிட கோரியிருக்கிரார் அல்லிமுத்து.. ஆனால் அனைவராலும் அலட்சியப்படுத்தபட்ட  நிலையில் கடந்த ஆண்டு தனது கனவுக்கு உயிர் கொடுக்க  நம்மை தொடர்பு  கொண்டு தனது கனவின்  தன்மையும் தான் பட்டபாடுகளையும் பகிர்ந்து கொண்டார்…

பிளைட் ஓட்டும் அல்லிமுத்து
                 யாரும் என் கனவுக்கு பணங்காசு தந்து உதவ வேண்டாம் ஆனால் வங்கி கல்விக்கடனுக்கு சூரிட்டி மட்டும் போட்டால் போதும் என் கனவு  உயிர் பெறும் அதுக்கு நீங்கள் தான் உதவ வேண்டும் என்றார் அல்லிமுத்து. வெளிச்சம் மாணவர்கள்  மேற்கொண்ட   பல முயற்சிகளில் ஒன்றாக தமிழக அரசியல் இதழில்  ஏழை மாணவரின் ‘பறக்கும்’ கனவு:எட்டிப் பிடிக்க உதவுவார்களா நல்ல உள்ளங்கள்? என்கிற தலைப்பில் ஒரு கட்டுரை வெளியானது… அல்லி முத்துவிற்க்கு நம்பிக்கை துளிர்விட்டது.

அல்லி முத்து தன்னுடைய கனவுக்காக பட்ட பாடுகளை விளக்கினார்…..
      ‘‘கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் பக்கத்துல பிரஸ்காலனி பகுதியில இருக்கேன். எங்க அப்பா கோயமுத்தூர்ல ஒரு கம்பெனியில அச்சுல வார்க்குற இரும்பை வெட்டி எடுக்கும் தினக் கூலி வேலை பாக்குறாரு. ஆனா அவர் கஷ்டப்பட்டு என்னைப் படிக்க வச்சாரு. பி.எஸ்.சி. படிக்கும்போது என்.சி.சி.யில சேர்ந்தேன். நான் நல்லா ப்ராக்டிஸ் பண்றதைப் பாத்துட்டு ‘ஏர் விங்’கில் சேர்த்தாங்க.

‘ஏர் விங்’ல சிறப்பா செயல்பட்டதுக்காக முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம்,முன்னாள் தமிழக ஆளுனர் ராம்மோகன் ராவ் ஆகியோரிடம் விருதுகள் வாங்கியிருக்கேன். சின்ன வயசுலயே எனக்கு விமானம் ஓட்டணும்னு ரொம்ப ஆசை. அப்துல் கலாம் ஐயா கையால விருது வாங்கினதால அது வெறியாயிடுச்சு. இதுவரை சுமார் 30 மணி நேரம் விமானத்தை ஓட்டிப் பறந்திருக்கேன்’’ என கண்கள் விரியப் பேசிய அல்லிமுத்து அடுத்தடுத்துப் பேசும்போது பரிதாபப் பள்ளத்தில் விழுந்தார்.

‘‘இந்தியாவுல மொத்தம் 42 விமானப் பயிற்சி கல்லூரிகள் இருக்கு சார். தமிழ்நாட்ல சேலத்துலயும், சென்னையிலயும் ஃப்ளையிங் ஸ்கூல் இருக்கு. எனக்கு சேலம் ஸ்கூல்ல இடம் கிடைச்சிருக்கு. இப்ப எனக்கு கமர்ஷியல் ஃப்ளையிங் ஸ்கூல்ல படிக்க வாய்ப்பு வந்திருக்கு.‘ஆகஸ்ட் ரெண்டாவது வாரத்துலேந்து கோர்ஸ் ஆரம்பிக்குது எப்போ வந்து சேரப் போறீங்க?’ன்னு கேக்குறாங்க. ஆனா அதுக்கான வசதி இல்ல சார்.

எனக்கு சுதான்னு ஒரு தங்கச்சி இருக்கு. வீட்ல யாராவது ஒருத்தரைத்தான் படிக்க வைக்க முடியும்கிற நிலைமை. அதனால சுதா, ‘அண்ணே நீ நல்லா படிண்ணே’ன்னு சொல்லி தன் படிப்பையே நிறுத்திட்டு வேலைக்கு போய் சம்பாதிச்சு எனக்கு கொடுத்துச்சு. விமானத்தை ஓட்ட ட்ரைனிங் எடுக்கணுமே. மொத்தக் கட்டணம் 18 லட்ச ரூபாய்.

இதுக்காக நான் வங்கிக் கடன் வாங்கலாம்னு முடிவு பண்ணி அதுக்கு விண்ணப்பிச்சேன். என் காலேஜ் கேம்பஸ்ல இருக்குற ‘ஸ்டேட் பேங்க் ஆஃப் இண்டியா’ வங்கியிலேர்ந்து எனக்கு கடன் தர சம்மதம் சொல்லிட்டாங்க. ஆனால், 18 லட்ச ரூபாய் பெரிய அளவுங்குறதால அதுக்கு இணையான அசையா சொத்துக்கான பத்திரம் கொடுத்தாதான் கல்விக் கடன் வழங்கப்படும்னு சொல்லிட்டாங்க. கலெக்டருக்கு மனு கொடுத்தும் அது நிராகரிக்கப்பட்டதுன்னு லெட்டர் வந்துச்சு. இப்ப வானத்துல விமானம் பறக்குறதப் பாத்தாலே மனசு கெடந்து அடிச்சுக்குது. ஆனா, கையில காசு இல்லையே...’’ என தன்னைத் தானே நொந்துகொண்டார் அல்லிமுத்து..

அல்லிமுத்து கல்வி உதவி கேட்டு கலெக்டருக்கு அனுப்பிய மனு, கலெக்டரை சுற்றியுள்ள அதிகாரிகளால் நிராகரிக்கப்பட்டிருந்தது..‘கல்விக் கடன் 5 லட்ச ரூபாய் வரை எந்த ஷ்யூரிட்டியும் தேவையில்லை. அதனால் 5 லட்ச ரூபாய்க்குள் இருந்தால், இப்போதே வழங்குமாறு வங்கிக்கு உத்தரவிட்டு விடுவேன். ஆனால் 18 லட்ச ரூபாய் என்றால் வங்கிகள் ஷ்யூரிட்டி கேட்கத்தான் செய்வார்கள். இருந்தாலும் அல்லிமுத்துவுக்கு கல்வி கடன் கிடைக்க ஏதாவது வகை செய்யமுடியுமா? என்பதை நானே நேரடியாக ஆராய்ந்து கல்விக் கடன் கிடைக்க என்னால் முடிந்ததை விரைவாக செய்து கொடுக்கிறேன்னு சொன்னார் கலெக்டர் உமாநாத் அவர்கள்,  ஆனாலும் எதும் நகராததால் இன்னும்  கடினமாக தமிழக அரசியல் ஆசிரியர் குழுவும்  வெளிச்சமும் இணைந்து  அல்லிமுத்துவின் கனவை நனவாக்க  துடித்தோம்.. அதற்காக கடினமாக  உழைத்தோம் . அந்த சம யத்தில்  தினமலர்  நாளிதழில்  அல்லிமுத்துவின் கனவு குறித்தும், அது கலைந்து போவதற்கான சாத்தியம் செய்தி ஒன்று வெளியானது.. இந்த முயற்சிக்கு பிறகு, கல்விக்கடனாக 15 லட்சம் ரூபாய் தர வங்கி ஒப்புக் கொண்டார்கள் ஆனால் இன்னும் பிராசஸ்ல இருக்கு… மேலும் பெயரை வெளியிட வேண்டாம் எனும்  மனிதனேயமுள்ளவர்  1.50 லட்ச ரூபாய் அல்லிமுத்துவின் கல்விக்காக உதவுவதற்கு வழங்கியிருக்கிறார். எனும் அல்லிமுத்து ….


Bone fide
  கண்முன்னே ஒரு இளைஞனின் கனவு கருகிவிட கூடாது எனும் வெளிச்சத்தின் லட்சியத்தின் அடிப்படையில்  அல்லிமுத்துவோடு உழைக்கின்றோம்… இன்று அல்லி முத்து  சேலம் சதர்ன் பைலட் ட்ரயிங்  அகாடமியில்  தன்  கனவு நினைவாக்கியிருக்கிறார். ஆம்  பயிற்சி வகுப்பில் தினமும் பயிற்சி விமானத்தில் 4500 அடி உயரத்தில் பறக்கிறார். இன்னமும் கிடைக்காத வங்கிகடனை நம்பி சேர்த்தோம்.. கண்டிப்பாக 15 தருவதாக உறுதி அளித்துள்ளனர்.. வங்கிகடன் கிடைக்கும் என்கிற நம்பிகையில் பயிற்சி எடுக்கிறார்.  

என்னை போல் கனவுகளை சுமந்து கொண்டு திரியும் எண்ணற்ற இளைஞர்களை கண்டறிந்து வெளிச்சத்தின் மூலம்  சாதனையாளர்களை உருவாக்குவேன் என சொல்லும்போது அல்லிமுத்து 4500 அடி உயரத்தில் விமானத்தில் பறக்கிறார் சந்தோசத்தில்….   ‘வெளிச்சம்’ எடுத்த முயற்சியில்  நிஜமாகும் கனவுகளோடு விண்ணில் பறக்கும்  அல்லிமுத்து வலிகளை உணர்ந்தால்  மனமிருந்தால்  நீங்களும் உதவலாம்..

நன்றியுடன்
வெளிச்சம் மாணவர்கள்





பெண்குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகளுக்கு எதிராக வெளிச்சம் மாணவர்கள்  விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதற்காக  நாம் பல முயற்ச்சிகளை மேற்கொண்டோம்…(எடுத்துகாட்டு)… மேலும் கோவை மாநகரம் மற்றும் தமிழக மேற்கு மண்டல போலீஸ் எல்லைக்குள் கடந்த ஆண்டில் மட்டும் 26 பெண் குழந்தைகள் பாலியல் சித்ரவதைக்கு உள்ளாகியுள்ளனர். இதுபோன்ற கொடூர செயலில் ஈடுபடும் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ள போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகம் மறக்காத சம்பவம் கோவையில் கொள்ளப்பட்ட அக்கா, தம்பி

கடத்தல், கற்பழிப்பு, பாலியல் சித்ரவதை வன்முறைகள் பெண்கள் மீது மட்டுமின்றி, ஏதுமறியா பெண் குழந்தைகள் மீதும் நடத்தப்படுகின்றன. பெரும்பாலான சம்பவங்கள் பெற்றோராலும், உறவினர்களாலும் மறைக்கப்படுகின்றன. வெளியில் தெரிந்தால் அவமானம் நேரிடும் எனக்கருதி சம்பவத்தை மூடி மறைப்பதால், சட்டத்தின் பிடியில் இருந்து குற்றவாளிகள் எளிதில் தப்பிவிடுகின்றனர். பாலியல் சித்ரவதைக்கு உள்ளாகும் பெண் குழந்தைகளுக்கு கொடூர மரணம் நேரிடும்போது மட்டுமே வெளிச்சத்துக்கு வருகின்றன. கடந்த ஆண்டில், கோவை நகரில் பள்ளிக்குச் செல்லவிருந்த 11 வயது பெண் குழந்தையும், உடன் 9 வயதான தம்பியும் கால் டாக்சி டிரைவரால் கடத்தப்பட்டு பாலியல் சித்ரவதைக்கு பின் கொடூரமாக கொல்லப்பட்டனர். தமிழகத்தையே உலுக்கிய இத்துயர சம்பவத்தில் தொடர்புடைய கால் டாக்சி டிரைவர் மோகனகிருஷ்ணன், போலீஸ் "என்கவுன்டரில்' சுட்டுக்கொல்லப்பட்டான். இச்சம்பவத்துக்கு பிறகாவது, குழந்தைகளை பாலியல் சித்ரவதை செய்யும் நபர்கள் மத்தியில் அச்சம் ஏற்படுமென போலீசாரும், பொதுமக்களும் கருதினர். ஆனால், யாரும் எதிர்பாராத நிலையில் கோவை மாநகராட்சி பள்ளியில் மூன்றாம் வகுப்பு பயிலும் 8 வயது சிறுமி, தனது மாமாவால் கடத்தப்பட்டு பாலியல் சித்ரவதைக்கு பின் கொலை செய்யப்பட்டாள்.

இதுபோன்ற சம்பவங்கள் பெண் குழந்தைகளின் பெற்றோரிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன. உண்மையில், மேற்கண்ட சம்பவங்கள் கொலையில் முடிந்ததால்தான் விஷயம் வெளியுலகுக்கு தெரியவந்தது. வெளியுலகுக்கு தெரியாமலும் பல சம்பவங்கள் நடந்துகொண்டே இருக்கின்றன.கடந்த ஆண்டில், கோவை மாநகரில் 4 பெண் குழந்தைகள் பாலியல் சித்ரவதைக்கு உள்ளாகினர். ஈவு இரக்கமின்றி குழந்தைகளின் மீது பாலியல் வக்கிரத்தை காட்டிய நான்கு பேர் கைது செய்யப்பட்டு, அவர்கள் மீதான வழக்கு விசாரணை கோர்ட்டில் உள்ளது. அதே போன்று, தமிழக மேற்கு மண்டலத்தில் நடந்த குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பாக மொத்தம் 26 வழக்குகள் பதிவாகியுள்ளன. கடந்த ஆண்டில் கோவை மாவட்டத்தில் 2, ஈரோட்டில் 5, நீலகிரியில் 1, திருப்பூரில் 5, சேலத்தில் 2, நாமக்கல்லில் 3, தர்மபுரியில் 1 முறையே பெண் குழந்தைகள் பாலியல் சித்வதைக்கு உள்ளாகினர். தவிர, குழந்தைகள் கடத்தல், பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக 3 வழக்குகள் போலீசாரால் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதனால், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான சட்டப்பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ள மாநகர போலீஸ் கமிஷனர் சைலேந்திரபாபு, தமிழக மேற்கு மண்டல ஐ.ஜி., சிவனாண்டி ஆகியோர் போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளனர்.

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் குறித்து வக்கீலும், கோவை பாரதியார் பல்கலை செனட் உறுப்பினருமான சண்முகம் கூறியதாவது:                     
சிவணான்டி ஐ.பி.எஸ் 
                                 பனிரெண்டு வயதுக்கு உட்பட பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகள், பெரும்பாலும் அறிமுகமான நபர்களாலேயே நடக்கின்றன; அறிமுகமில்லா நபர்களுடன் பெண் குழந்தைகள் செல்வதில்லை. கோவையில் பள்ளிக்குழந்தைகள் இருவர் காரில் கடத்தி கொல்லப்பட்ட சம்பவம், நன்கு அறிமுகமான டாக்சி டிரைவரால் நடந்தது. சவுரிபாளையத்தில் 8 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றவர், அந்த சிறுமியின் மாமா முறை உறவினர்.ஏற்கனவே, தங்களுக்கு அறிமுகம் உள்ளதால் பெண் குழந்தைகள் தங்களுக்கு நேரிடப்போகும் ஆபத்தை உணராமல் உடன் சென்றுவிடுகின்றனர். இதுபோன்ற சம்பவங்களை தவிர்க்க பெண் குழந்தைகள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். "சாக்லெட் வாங்கித்தருகிறேன், விளையாட்டு பொருள் வாங்கித்தருகிறேன் என யாராவது அழைத்தால் உடன் செல்லக்கூடாது' என, அறிவுறுத்த வேண்டும். கூடுமானவரை பெண் குழந்தைகளை வீட்டில் தனியே விட்டுச் செல்வது; உறவினர் வீடுகளில் விட்டுச் செல்வது, போன்ற செயலை தவிர்க்க வேண்டும். குழந்தைகள், தங்களை தற்காத்துக்கொள்வதற்கான வழிமுறைகள் குறித்து பள்ளியில் ஆசிரியர்களும், வீட்டில் பெற்றோரும் சொல்லித்தர வேண்டும். பாலியல் வன்முறைகளை போலீசாரால் தடுப்பதற்கான வாய்ப்பு மிக, மிக குறைவு; ஆனால், பெற்றோரும், குழந்தைகளும் விழிப்புணர்வுடன் செயல்பட்டால் தவிர்க்க முடியும். இவ்வாறு, வக்கீல் சண்முகம் தெரிவித்தார்.

நன்றி: தினமலர்

வெளிச்சம் வெளிக்கொண்டு வந்த மாணவி பிரச்சனை ஓர் இணைய தளத்தில்: http://tamizachi.com/index.php?page=echoarticle&rubrique=01&article=2270

நாடு முழுவதும் மொத்தம் 21 போலி பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன என்று யு.ஜி.சி. அடையாளம் கண்டுள்ளது.
யு.ஜி.சி. சட்டத்தை(1956) மீறி செயல்படும் இத்தகைய பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் பற்றிய தகவலை மனிதவளத் துறை இணையமைச்சர் புரந்தேஸ்வரி மக்களவையில் தெரிவித்தார். இதுதொடர்பாக  அவர் கூறியதாவது, "மொத்தம் 21 போலி பல்கலைகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் 8 உத்திரப் பிரதேசத்திலும், 6 டெல்லியிலும், பீகார், கர்நாடகா, கேரளா, மத்திய பிரதேஷ், மகாராஷ்டிரா, தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் தலா 1 போலி கல்வி நிறுவனமும் உள்ளன.

மேலும் தொழில்நுட்ப கல்விக்கான அகில இந்திய கவுன்சில்(ஏ.ஐ.சி.டி.இ), நாட்டில் மொத்தம் 350 அங்கீகரிக்கப்படாத கல்வி நிறுவனங்கள் தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மை படிப்புகளை நடத்தி வருகின்றன என்று அடையாளம் கண்டுள்ளது. இது ஏ.ஐ.சி.டி.இ. விதிமுறைகளை மீறிய செயலாகும்.

இந்த 350 தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் 75 மாகாராஷ்டிரா மற்றும் டெல்லியிலும், 52 ஆந்திராவிலும், 34 மேற்கு வங்கத்திலும், 30 உத்திரப் பிரதேசத்திலும், 27 கர்நாடகாவிலும், 17 ஹரியானாவிலும், 14 தமிழ்நாட்டிலும், 9 சண்டிகரிலும், 4 குஜராத்திலும், 3 பஞ்சாபிலும், 2 பீகார், ராஜஸ்தான், ஹிமாச்சல் பிரதேஷ் மற்றும் கோவாவிலும், 1 உத்திரகான்ட் மற்றும் கேரளாவிலும் உள்ளன.

இதுபோன்ற போலி பல்கலைக்கழகங்கள், தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களின் பெயர்கள் மற்றும் விவரங்கள் யு.ஜி.சி. மற்றும் ஏ.ஐ.சி.டி.இ. ஆகிய அமைப்புகளின் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் இருப்பதோடு, அந்த அமைப்புகள் வைத்திருக்கும் பட்டியலிலும் உள்ளன. இந்த வலைத்தளங்களை பார்த்து மாணவர்கள் விழிப்புணர்வு பெறலாம்.

மேலும் சம்பந்தப்பட்ட மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளை, இந்த போலி கல்வி நிறுவனங்களின் மீது இ.பி.கோ. சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. உயர்கல்வி நிறுவனங்களில் முறையற்ற நடவடிக்கைகளை தடைசெய்யும் விதமாக, ஒரு சட்ட முன்வரைவு ஏற்கனவே நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது" என்றார்.
  நன்றி : கல்வி மலர்


சமூக அக்கறை உள்ளவரா நீங்கள்
ஏழை மாணவர்களின் கல்விக்காக இணைவோம் வாரீர்…




 தனது படிப்புக்காக செலவிடாத தந்தை மேல்  குடும்ப வன்முறை சட்டத்தின் மூலம்  வழக்கு போட்டு 18 வயது வரையிலான படிப்பு செலவுக்கான தொகையை நீதிமன்றத்தின் மூலம் பெற்றுள்ளார்  11 வயது மகன் ..

பூனே  நீதிமன்றத்தில்  சிறுவன் சார்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவில் கூறப்படுவதாவது,
“ எனது பெற்றோர்களுக்கு இடையிளான  உறவு  2002 வாக்கிலேயே கசந்து. பரஸ்பர  ஒப்புதலின் பேரில்  2005 விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர். அதன் பின் இருவரும் வெவ்வேறு நபர்களுடன் மறுமணம் செய்து கொண்டனர், ஆனால், நான் என் தாயோடு தங்கியிருந்தேன்.” என் படிப்பிற்க்காக மென்பொருள்(Software) துறையில் பணி புரிந்து கொண்டிருக்கும்   தந்தை  எனது கல்வியின் மீது அக்கரை கொள்ளவில்லை  எனவும் இருவரும் பிரிந்துவைட்ட நிலையில் என் கல்விக்கு ஆகும் செலவைஎன்னை பெற்ற தந்தை தரவேண்டும் என  தன்  தாயின் மூலமாக மாஜிஸ்திரேட்டிடம் பிப்ரவரி 4, 2010 அன்று வழக்கு தொடுத்த அந்த சிறுவனின் மனு மீதான தீர்ப்பு திசம்பர் 18,2010 அன்று வழங்கப்பட்டது. அந்த வழக்கின் மீதான தீர்ப்பு என்ன வெனில்..
     அந்த சிறுவனின் தந்தைக்கு மாஜிஸ்திரேட் உமேஷ்சந்த்ரா, சிறுவன் 18 வயதை அடையும் வரை கல்வி மற்றும் நாளாந்த செலவுக்கான பணத்தொகையை வழங்க வேண்டுமென உத்தரவிட்டார்.  சிறுவனின் தந்தை ஒவ்வொரு ஆண்டும் ரூ.12,000-த்தை ஒற்றை தவணையாக சிறுவனின் பெயரிலான வங்கி கணக்கில் கட்ட வேண்டும் எனவும். இந்த பணம் நோட்டு, புத்தகங்கள் வாங்கவும், பள்ளிக்கு பேருந்தில் செல்லவும்,  சிறப்பு வகுப்புகளுக்கு கட்டணம் செலுத்தவும், சீறுடை வாங்கவும் பயன்படுத்தப்படும். அதேவேளையில், 2010-11 க்கான ஆண்டிற்கான தொகை ரூ.23,800 என்பது குறிப்பிடத்தக்கது. இதில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பிற்கான சிறப்பு வகுப்புகளுக்கு சேர்த்தே கட்டணம் செலுத்துவிடுவதாக அவனது தந்தை நீதிமனறத்தில் ஒப்பு கொண்டுள்ளதாக  நீதிபதி கூறியிள்ளார்.

இதுகுறித்து சிறுவனுக்காக வாதாடிய வழக்கறிஞர்  ஆசிம் சரோடே கூறியதாவது,

         “குடும்ப வன்முறை சட்டம்-2005 க்கு என்பதை பெண்களுக்கானது மட்டுமல்ல, மைனர் ( இளம் சிறார்) குழந்தைகளுக்கு  எதிரான வன்முறையும், உரிமை மீறலையும் உள்ளடிக்கியதுதான்.

விவாகரத்து குறித்தான வழக்கு நடந்து வரும் வேளையில், சிறுவனின் தந்தை சிறுவனுக்கு மாதம் ரூ, ஐநூறு தரவேண்டியது என தீர்மானிக்கப்பட்டது. ஆனால், கணவன் செலவுக்கு சரியா பணமே தருவதில்லை என்று மனைவி மீண்டும் புகார் கூற…..…

மேற்ப்படி குடிம்ப வன்முறை சட்டம் பிரிவு 2 பி ன் படி“ குழந்தை என்ற பதம் பாலின வேறுபாடின்று பயன்படுத்தப்படுகிறது, மனுதாரராகிய அந்த சிறுவன் குடும்ப கட்டுப்பாட்டிற்குள்ளோ, உறவு முறைக்குள்ளோ வாழ்ந்து வந்திருக்கிறார். ஆகையால், தனக்கான உதவி தொகையை மனுதார் தன் தந்தையிடம்  பெற்றுக் கொள்ளும் உரிமைகள்  அனைத்தும் உண்டு.” கூறினார்”.



An 11-year-old boy has successfully sued his father for educational and general day-to-day expenses till the time he turns 18, by using the Protection of Women Against Domestic Violence Act of 2005.



சமூக அக்கறை உள்ளவரா நீங்கள்
ஏழை மாணவர்களின் கல்விக்காக இணைவோம் வாரீர்…


மகளீர் தின  விழாவில்  "செக்ஸ் டார்ச்சர்க்கு '  ஆளான பெண்ணை காப்பாற்றிய வெளிச்சம்

3வது மனைவிக்கு "செக்ஸ் டார்ச்சர்': தலைமை ஆசிரியர் போலீசார் கைது

புனிதாவிற்கு ஏற்ப்பட்ட கொடுமையை பிறகு பதிவு செய்கிறோம்.. அதற்கு முன்பாக தினமலர் செய்தியை படியுங்கள்  


கொளத்தூர் : மூன்றாவது மனைவிக்கு "செக்ஸ் டார்ச்சர்' கொடுத்த அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளித் தலைமை ஆசிரியரை போலீசார் கைது செய்தனர்.சென்னை கொளத்தூர் முத்தமிழ் நகர், 2வது தெருவைச் சேர்ந்தவர் கல்யாணசுந்தரம். இவரது மகன் வரதராஜன்(49). இவர், திருவொற்றியூரில் உள்ள அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளியில் தலைமை ஆசிரியராக வேலை செய்து வருகிறார். இவரது முதல் மனைவி செல்வராணி. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். உடல் நலம் பாதிப்பால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இறந்தார். இதையடுத்து வரதராஜன், சேலத்தைச் சேர்ந்த விஜயலட்சுமி(35) என்ற பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, இரண்டே மாதங்களில் விஜயலட்சுமி விவாகரத்து பெற்று பிரிந்தார்.அதன்பின், வரதராஜன் மகன், மகளுடன் வசித்து வந்தார். இந்நிலையில், கடலூரைச் சேர்ந்த புனிதா(45) என்பவர் தனக்கு மணமகன் தேவை என பத்திரிகை ஒன்றில் விளம்பரம் செய்திருந்தார். அதைக் கண்ட வரதராஜன், அவரை தொடர்பு கொண்டார். அவர் சென்னை தி.நகரில் உள்ள பெண்கள் காப்பகத்தில் தங்கியிருந்து தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். வரதராஜன், கடந்த 2010ம் ஆண்டு மே மாதம் புனிதாவை மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின் தனது குரூர விருப்பப்படி, புனிதாவுக்கு "செக்ஸ் டார்ச்சர்' கொடுத்தார். அவரை சந்தேகித்தார். பல நாள் இப்பிரச்னையை அவர் தாங்கிக் கொண்டார். நேற்று முன் தினம் வழக்கம் போல் அவர் "செக்ஸ் டார்ச்சர்' கொடுத்தார்.மேலும், புனிதாவை கண்மூடித்தனமாக தாக்கி, அறையில் தள்ளி கதவை பூட்டிவிட்டு, வெளியில் சென்று விட்டார். அறைக்குள் தவித்த புனிதா, மொபைல் போன் உதவியுடன் சென்னையில் உள்ள "வெளிச்சம்' என்ற பெண்கள் அமைப்பிற்கு தகவல் கொடுத்தார். அந்த அமைப்பினர் கொளத்தூருக்கு சென்று, புனிதாவை மீட்டனர். அவர்கள் உதவியுடன், புனிதா தனது கணவர் பற்றி, கொளத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் அவரைக் கைது செய்து எழும்பூர் கோர்ட்டில் ஆஜர் படுத்தினர். 

நன்றி: தினமலர்





சமூக அக்கறை உள்ளவரா நீங்கள்

ஏழை மாணவர்களின் கல்விக்காக இணைவோம் வாரீர்…


உறவுகளே! மகளிர் தின வாழ்த்துக்களோடு   முதல்தலைமுறை ஏழை மாணவர்களின் கல்வியின் மீது அக்கறை கொண்டிருக்கும் வெளிச்சம் மாணவர்கள் , பெண்களின் முன்னேற்றத்தில்தான் இச்சமூகம் சீர்படும் என உண்மையாக நம்புகிறோம் ,

 தற்போதைய சூழலில் இந்தியாவில் பெண்கள் தலைமைத்துவத்தை குறித்த தேசிய அளவிளான கருத்தரங்கம் (National Conference on Emerging Trends in Women Leadership in India ) திருச்சி ஹோலிகிராஸ் பெண்கள் கல்லூரியில் நடைபெற்றது. கருத்தரங்கத்தில் சிறப்பு பேச்சாரளராக வெளிச்சம் செரின் அவர்களை பெண்களின் முன்னேற்றத்தில் சமூக இயக்கங்களின் பங்கு என்கிற தலைப்பில் பேசிட அழைத்திருந்தார்கள்..

500க்கும் மேற்ப்பட்ட மாணவ- மாணாவியர் மத்தியில் பேச வெளிச்சம் செரின் அழைக்கப்பட்டார்..  மேற்க்கண்ட தலைப்பில் பேச அழைத்தமைக்கு பொறுத்தமான ஆள்தான்  அவர்..

(கண்டிப்பாக பெண் முன்னேறத்தை பேசுபர்கள் தெரிந்து கொள்ளவேண்டியவை தான் பேச்சின் சாரம்)

மகளீர் தினம் கொண்டாடுவதன் வரலாற்று பின்னனி:

 அமெரிக்கா சிக்காகோவில் உலகத் தொழிலாளர் தினமான மே தினம் பிறந்தது போல உலக மகளிர் தினமும் அமெரிக்காவில் தான் பிறந்தது. படுமோசமான பணி சுமைகளுக்கு ஆளாகிய பெண்கள், குழந்தைகளுக்கு நல்ல பராமரிப்பு தேவை ஆண்களுக்குச் சமமான வேலை உரிமையும், வாக்களிக்க உரிமையும் வேண்டும் என முழங்கிப் பல்லாயிரக்கணக்கான பெண் தொழிலாளர்கள் நியூயார்க் நகரத் தெருக்களில் 1857ஆம் ஆண்டு மார்ச் 8 அன்று வலம் வந்து தங்கள் மீதான  சுரண்டலை எதிர்த்து  போராடியதுதான் உழைக்கும் பெண்களின் முதல் போராட்டம். ஆனால் 1910 ஆம் ஆண்டு உலக சோஷலிச பெண்கள் மாநாடு நடைபெற்ற போது உலகப் பெண்களை ஒன்று திரட்டவும்,  உரிமைகளுக்காகப் போராடவும், ஒரு நாள் குறிக்கப்பட வேண்டும்.  அந்நாள் மார்ச் 8 ஆக இருத்தல் வேண்டும் என்று முடிவு செய்து.பிற்காலத்தில் அந்நாளே உலக மகளிர் தினமாக ஏற்கப்பட்டது. நாய்களைவிட மோசமாக  உழைத்தனர் பணியிடங்களில் உழைத்த பெண்கள். குடிசைகளிலும், சதுப்பு நிலங்களிலும் சாலைகளின் ஓரங்களில் உழன்று பணி செய்தும் உறங்கியும் குடும்பம் நடத்தியும் வாழ்ந்தனர். இதே 1857 ஆம் ஆண்டு மார்ச் 8ஆம் நாள் ஜெர்மனியில் சாக்சனியில் கிளாரா ஜெட்கின் பிறந்தார். தொழிலாளி வர்க்க மக்களிடைக் கல்விப் பணி செய்த முதல் ஜெர்மனியப் பெண்மணி இவரே. 

பிரடெரிக் ஏங்கெல்சின் நெருங்கிய, நம்பிக்கைக்குரிய நண்பராகவும். ஆர்வம், துணிச்சல், அர்ப்பணிப்பு மனப்பான்மை மிக்கவராகவும், சிறந்த மார்க்சிய பெண்ணியவாதியாக  அனைவராலும் பாராட்டப் பெற்றவர், சர்வதேச சோஷலிஸ்ட் மகளிர் இயக்கத்தில் சேர்ந்து அந்த மாநாட்டில் நியூயார்க் மகளிர் எழுச்சி நினைவாக மார்ச் 8 உலக மகளிர் தினமாகக் கொண்டாடப்பட வேண்டும் என்கிற தீர்மானத்தை எதிர்ப்பின்றி இயக்கத்தில் 5 இலட்சம் உறுப்பினர்கள் முன்னிலையில்  ஏகமனதாக கொண்டு வந்து.. ஈடிணையற்ற மாதர் தலைவியாக விளங்கியிருக்கிறார். 

1893 ஆம் ஆண்டுக்குப் பிறகுதான் முதன் முதலில் அமெரிக்காவிலும், ஐரோப்பிய நாடுகளிலும் பெண்களுக்குக் கல்வி கற்கும் வாய்ப்பும், முதலாம் உலகப் போருக்குப் பிறகுதான் பெண்களுக்குத் தேர்தலில் வாக்களிக்க உரிமையும் வழங்கவும், பாராளுமன்றத்திற்கும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவைகள் தான் கிளாரா ஜெட்கின் கண்ட இயக்கத்தின் பலன்கள்.

பெண், மனைவியாகவோ, தாயாகவோ பிறரைச் சார்ந்து வாழ்க்கை நடத்துபவள் என்னும் இழி நிலைமை மாறவேண்டும் என்றார் கிளாரா. ஆண்களுக்குச் சரிநிகராக வேலை செய்து கூலிபெறும் திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும். தனித்து நின்று எல்லா வழிகளிலும் சிறப்பாக வாழ வேண்டும் என்றார், பெண்கள் பொருளாதாரச் சுதந்திரம் பெற்று யாரையும் சாராது தனித்து நின்று வாழ முடியும்  பொருளாதார நிலை உறுதியாக அமைய வேண்டுமென்றார். எந்தக் காரணத்தைக் கொண்டும் மேல்தட்டு பெண்களுடன் அவரது இயக்கம் தொடர்பு கொள்ளாது கிளாரா  அவர்களின் கருத்து. குழந்தை வளர்ப்பும், குடும்பப் பராமரிப்பும் சமுதாயக் கடமைகளாக ஆக்கப்படவேண்டும். தனிமனித விருப்பு வெறுப்புகளுக்கு ஆள்பட்டவையாக இருக்ககூடாது எனவும். அவர் காலத்திலேயே அவரோடு சேர்ந்து பணியாற்றியவர்கள் பெண்கள் உழைப்பில் ஈடுபட்டால் ஆண் தொழிலாளர்கள் உரிமைகளும், ஊதியமும் பறிக்கப்படும் அல்லது பாதிக்கப்படும் என்று இவரோடு வாதாடினார்கள் அதில் வென்றார் ஜெட்கின்.   “லெனின் நினைவுக்குறிப்புகள்” என்னும் தம் நூலில் ஜெட்கின் லெனினைச் சந்தித்த போது அவர், “கலை மக்களுக்குச் சொந்தமானது என்கிறார் கிளாரா. அதன்பின்  ஹிட்லர் ஜெர்மனியில் ஆட்சிக்கு வருவதற்கு முன் ஜெர்மனியில் பாசிசம் வெற்றி பெற வாய்ப்பு இருக்கிறது. உழைப்பாளி வர்க்கம் கொடிய அடக்குமுறைக்கு ஆளாகும் நிலை ஏற்படும் என்று எச்சரித்த கிளாரா ஜெட்கின், எச்சரித்த சில நாட்களிலேயே 1933 ஆம் ஆண்டு ஜூன் திங்கள் 20 ஆம் நாளன்று மாஸ்கோவில் காலமானார். கிளாரா ஜெட்கின் நினைவாக உலக மகளிர் தினம் எல்லா நாடுகளிலும் கொண்டாடப்பட்டு வருகிறது. மே தினம் தொழிலாளர்களுக்கு எவ்வாறு புனிதமானதோ அவ்வாறு மார்ச் 8 மாதர்களுக்குப் புனித நாள். வரலாற்றுச் சிறப்பு மிக்க நாள்.

இந்திய சூழலில் பெண்கள் :

 பெண்கள் ஒரு உயிரினமாக மதிக்காத சமூகம்  இந்திய சமூகம், படிப்பதற்க்கு, பிடிப்பவரை திருமனம் செய்துகொள்வதற்கு, என  வரிசையாக பெண்ணுரிமைகள் இன்று இருப்பதற்க்கு எத்தனையோ பெண்கள் தியாகம் செய்தார்கள் என்பதுஎத்தனை பேருக்கு தெரியும் என்றார்.. பெண்கள் ஜாக்கெட் போடகூடாதுன்னு சட்டமிருந்ததும், மார்புக்கு வரிக்கட்டியதை எதிர்த்து திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் தனது  மார்பை அறுத்து வீசிய  பெண்கள் வாழ்ந்த மண் இது.. ஆனால் இப்படி பெற்ற உரிமை எப்படி இருக்கிறது.... என தனது வழக்கமான பாதைக்கு திரும்பினார் செரின்..

பெண்களின் இன்றைய நிலை:

மார்புக்கு  வரிக்கட்டனும் என்பதை எதிர்த்து  மார்பை அறுத்து வீசிய  பெண்கள் வாழ்ந்த பூமியில ஜன்னல் வச்ச ஜாக்கெட், முதுகு முழுக்க தெரியுர மாதிரி ஜாக்கெட்டு, என்ன இதுவா முன்னேற்றம், இப்படி போனாம் ஆம்பலைங்கள் என்ன பண்ணமாட்டாங்க, நாம எல்லாத்தையும் தெரியுர மாதிரி உடை போட்டா  அவங்க பார்பாங்கதான் பார்த்தா, பார்த்துட்டு போன்னு விட்டுட்டு வேலையை பாருங்க, கொடுத்துட்டா போடான்னூட்டு போ! எப்ப மாடர்னா மாறனும்னு முடிவு பண்ணிட்டியோ, மனசையும் மாடர்னா மாத்திக்கோ, நீ படிக்க வந்திருக்கீங்க, பெத்தவங்க கண்ணீருல காலேஜிக்கு வந்திருக்கீங்க... நீ தப்பு பண்ணி பாலாய் போன்னா உனக்கு பின்னாடி வர்ற பெம்பளை பிள்லைகளுக்கு யார் வழிகாட்டுவா !  ஜன்னல் வைச்ச ஜாக்கெட் நம்மளை காப்பாது, நாம் தான் நம்மை காப்பாத்திக்கனும், அழகு உன்னை வளர்க்காது அறிவுதான் உன்னை வளர்க்கும், அறிவை நம்புங்கள் என சொல்லும் போது கூட்டம் அமைதியாக கவனித்து, இதவிடுங்க  உழைக்கும்  பெண்கள் போராடி வாங்குன  தினமாக இன்னைக்கு எப்படியிருக்கு  பான்ஸ் மகளீர் தினம், பேரன் லவ் லி பெண்கள் தினம், இன்னும் இருக்கு என சொல்ல பயங்கர கைதட்டல், மேலும் பெண்களே தைரியம் வேண்டும், திமிர் வேண்டாம் என மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் வெளிச்சம் மாணவிகள் மகளீர் தினத்திற்கு  நாங்கள் ஒரு உறுதி மொழி எடுக்க போறோம் என  சொன்னாங்க...  ஏன்னு கேட்ட்துக்கு எல்லாம் எங்கம்மா எங்கப்பாவை பண்ணுற டார்ச்சர் தான் என்றார்கள்.. ஆக ஆணுக்கு சம்ம் பெண் என்பது ஆண் சிகரெட் அடிச்சா நானும் சிகரெட் அடிப்பேன் நீயென்ன செய்வேன்னு சொல்லுறதில் இல்லை.. தைரியமாக, அறிவாளியாக, யாரையும் ஏமாற்றாமல், யாரிடமும் ஏமாராமல்,   நாளு பேருக்கு நல்லது பண்ணி அதில் கிடைக்கிற சந்தோசத்துல வாழ்ந்தால் பெண்கள் தலைமை பெற்றவர்களாக விளங்குவார்கள் என்றார் இறுதியாக.....





Women need to enter politics in large numbers to clean the system, asserted speakers at the national conference on ‘Emerging trends in women leadership in India' jointly organised by the Women Studies Centres of Holy Cross and Cauvery College for Women on March 1-2011
 நன்றி: தி இந்து



சமூக அக்கறை உள்ளவரா நீங்கள்

ஏழை மாணவர்களின் கல்விக்காக இணைவோம் வாரீர்…
பதிவு செய்ய: