என் “பறக்கும் “ கனவை பணம் தீர்மானிப்பதா? – அப்துல்கலாம் கரங்களில் இளம் சாதனையாளர் விருது வாங்கியவரின் போராட்டம்..

Posted by Unknown - -


அப்துல்கலாம் அய்யா கனவுகான சொன்னீர்கள்.. நானும்  பறக்கும் கனவு கண்டேன். ஆம் வறுமைக்கு பிறந்த அல்லிமுத்துவின் ஆசை என்பது பைலட்  ஆகி "பிளைட்"  ஓட்டனும் என்பதுதான் அவர் கனவு. ஆனால் என் கனவை காசு தீர்மானித்தது.. இன்று வெளிச்சம்  மாணவர்கள் என் கனவுக்கு உயிர் கொடுத்திருக்கிறார்கள் என்கிறார்  கோயம்புத்தூரை சார்ந்த இளைஞர் அல்லி முத்து.  தமிழகத்தின் பல உதவும் அமைப்புகளையும், அரசியல் அமைப்புகளையும் சந்தித்து தனக்கு உதவிட கோரியிருக்கிரார் அல்லிமுத்து.. ஆனால் அனைவராலும் அலட்சியப்படுத்தபட்ட  நிலையில் கடந்த ஆண்டு தனது கனவுக்கு உயிர் கொடுக்க  நம்மை தொடர்பு  கொண்டு தனது கனவின்  தன்மையும் தான் பட்டபாடுகளையும் பகிர்ந்து கொண்டார்

பிளைட் ஓட்டும் அல்லிமுத்து
                 யாரும் என் கனவுக்கு பணங்காசு தந்து உதவ வேண்டாம் ஆனால் வங்கி கல்விக்கடனுக்கு சூரிட்டி மட்டும் போட்டால் போதும் என் கனவு  உயிர் பெறும் அதுக்கு நீங்கள் தான் உதவ வேண்டும் என்றார் அல்லிமுத்து. வெளிச்சம் மாணவர்கள்  மேற்கொண்ட   பல முயற்சிகளில் ஒன்றாக தமிழக அரசியல் இதழில்  ஏழை மாணவரின் பறக்கும் கனவு:எட்டிப் பிடிக்க உதவுவார்களா நல்ல உள்ளங்கள்? என்கிற தலைப்பில் ஒரு கட்டுரை வெளியானதுஅல்லி முத்துவிற்க்கு நம்பிக்கை துளிர்விட்டது.

அல்லி முத்து தன்னுடைய கனவுக்காக பட்ட பாடுகளை விளக்கினார்…..
      ‘‘கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் பக்கத்துல பிரஸ்காலனி பகுதியில இருக்கேன். எங்க அப்பா கோயமுத்தூர்ல ஒரு கம்பெனியில அச்சுல வார்க்குற இரும்பை வெட்டி எடுக்கும் தினக் கூலி வேலை பாக்குறாரு. ஆனா அவர் கஷ்டப்பட்டு என்னைப் படிக்க வச்சாரு. பி.எஸ்.சி. படிக்கும்போது என்.சி.சி.யில சேர்ந்தேன். நான் நல்லா ப்ராக்டிஸ் பண்றதைப் பாத்துட்டு ‘ஏர் விங்கில் சேர்த்தாங்க.

ஏர் விங்ல சிறப்பா செயல்பட்டதுக்காக முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம்,முன்னாள் தமிழக ஆளுனர் ராம்மோகன் ராவ் ஆகியோரிடம் விருதுகள் வாங்கியிருக்கேன். சின்ன வயசுலயே எனக்கு விமானம் ஓட்டணும்னு ரொம்ப ஆசை. அப்துல் கலாம் ஐயா கையால விருது வாங்கினதால அது வெறியாயிடுச்சு. இதுவரை சுமார் 30 மணி நேரம் விமானத்தை ஓட்டிப் பறந்திருக்கேன்’’ என கண்கள் விரியப் பேசிய அல்லிமுத்து அடுத்தடுத்துப் பேசும்போது பரிதாபப் பள்ளத்தில் விழுந்தார்.

‘‘இந்தியாவுல மொத்தம் 42 விமானப் பயிற்சி கல்லூரிகள் இருக்கு சார். தமிழ்நாட்ல சேலத்துலயும்சென்னையிலயும் ஃப்ளையிங் ஸ்கூல் இருக்கு. எனக்கு சேலம் ஸ்கூல்ல இடம் கிடைச்சிருக்கு. இப்ப எனக்கு கமர்ஷியல் ஃப்ளையிங் ஸ்கூல்ல படிக்க வாய்ப்பு வந்திருக்கு.ஆகஸ்ட் ரெண்டாவது வாரத்துலேந்து கோர்ஸ் ஆரம்பிக்குது எப்போ வந்து சேரப் போறீங்க?’ன்னு கேக்குறாங்க. ஆனா அதுக்கான வசதி இல்ல சார்.

எனக்கு சுதான்னு ஒரு தங்கச்சி இருக்கு. வீட்ல யாராவது ஒருத்தரைத்தான் படிக்க வைக்க முடியும்கிற நிலைமை. அதனால சுதா, ‘அண்ணே நீ நல்லா படிண்ணேன்னு சொல்லி தன் படிப்பையே நிறுத்திட்டு வேலைக்கு போய் சம்பாதிச்சு எனக்கு கொடுத்துச்சு. விமானத்தை ஓட்ட ட்ரைனிங் எடுக்கணுமே. மொத்தக் கட்டணம் 18 லட்ச ரூபாய்.

இதுக்காக நான் வங்கிக் கடன் வாங்கலாம்னு முடிவு பண்ணி அதுக்கு விண்ணப்பிச்சேன். என் காலேஜ் கேம்பஸ்ல இருக்குற ‘ஸ்டேட் பேங்க் ஆஃப் இண்டியா’ வங்கியிலேர்ந்து எனக்கு கடன் தர சம்மதம் சொல்லிட்டாங்க. ஆனால்18 லட்ச ரூபாய் பெரிய அளவுங்குறதால அதுக்கு இணையான அசையா சொத்துக்கான பத்திரம் கொடுத்தாதான் கல்விக் கடன் வழங்கப்படும்னு சொல்லிட்டாங்க. கலெக்டருக்கு மனு கொடுத்தும் அது நிராகரிக்கப்பட்டதுன்னு லெட்டர் வந்துச்சு. இப்ப வானத்துல விமானம் பறக்குறதப் பாத்தாலே மனசு கெடந்து அடிச்சுக்குது. ஆனாகையில காசு இல்லையே...’’ என தன்னைத் தானே நொந்துகொண்டார் அல்லிமுத்து..

அல்லிமுத்து கல்வி உதவி கேட்டு கலெக்டருக்கு அனுப்பிய மனுகலெக்டரை சுற்றியுள்ள அதிகாரிகளால் நிராகரிக்கப்பட்டிருந்தது..‘கல்விக் கடன் 5 லட்ச ரூபாய் வரை எந்த ஷ்யூரிட்டியும் தேவையில்லை. அதனால் 5 லட்ச ரூபாய்க்குள் இருந்தால்இப்போதே வழங்குமாறு வங்கிக்கு உத்தரவிட்டு விடுவேன். ஆனால் 18 லட்ச ரூபாய் என்றால் வங்கிகள் ஷ்யூரிட்டி கேட்கத்தான் செய்வார்கள். இருந்தாலும் அல்லிமுத்துவுக்கு கல்வி கடன் கிடைக்க ஏதாவது வகை செய்யமுடியுமாஎன்பதை நானே நேரடியாக ஆராய்ந்து கல்விக் கடன் கிடைக்க என்னால் முடிந்ததை விரைவாக செய்து கொடுக்கிறேன்னு சொன்னார் கலெக்டர் உமாநாத் அவர்கள்ஆனாலும் எதும் நகராததால் இன்னும்  கடினமாக தமிழக அரசியல் ஆசிரியர் குழுவும்  வெளிச்சமும் இணைந்து  அல்லிமுத்துவின் கனவை நனவாக்க  துடித்தோம்.. அதற்காக கடினமாக  உழைத்தோம் . அந்த சம யத்தில்  தினமலர்  நாளிதழில்  அல்லிமுத்துவின் கனவு குறித்தும், அது கலைந்து போவதற்கான சாத்தியம் செய்தி ஒன்று வெளியானது.. இந்த முயற்சிக்கு பிறகு, கல்விக்கடனாக 15 லட்சம் ரூபாய் தர வங்கி ஒப்புக் கொண்டார்கள் ஆனால் இன்னும் பிராசஸ்ல இருக்குமேலும் பெயரை வெளியிட வேண்டாம் எனும்  மனிதனேயமுள்ளவர்  1.50 லட்ச ரூபாய் அல்லிமுத்துவின் கல்விக்காக உதவுவதற்கு வழங்கியிருக்கிறார். எனும் அல்லிமுத்து ….


Bone fide
  கண்முன்னே ஒரு இளைஞனின் கனவு கருகிவிட கூடாது எனும் வெளிச்சத்தின் லட்சியத்தின் அடிப்படையில்  அல்லிமுத்துவோடு உழைக்கின்றோம்… இன்று அல்லி முத்து  சேலம் சதர்ன் பைலட் ட்ரயிங்  அகாடமியில்  தன்  கனவு நினைவாக்கியிருக்கிறார். ஆம்  பயிற்சி வகுப்பில் தினமும் பயிற்சி விமானத்தில் 4500 அடி உயரத்தில் பறக்கிறார். இன்னமும் கிடைக்காத வங்கிகடனை நம்பி சேர்த்தோம்.. கண்டிப்பாக 15 தருவதாக உறுதி அளித்துள்ளனர்.. வங்கிகடன் கிடைக்கும் என்கிற நம்பிகையில் பயிற்சி எடுக்கிறார்.  

என்னை போல் கனவுகளை சுமந்து கொண்டு திரியும் எண்ணற்ற இளைஞர்களை கண்டறிந்து வெளிச்சத்தின் மூலம்  சாதனையாளர்களை உருவாக்குவேன் என சொல்லும்போது அல்லிமுத்து 4500 அடி உயரத்தில் விமானத்தில் பறக்கிறார் சந்தோசத்தில்….   ‘வெளிச்சம்’ எடுத்த முயற்சியில்  நிஜமாகும் கனவுகளோடு விண்ணில் பறக்கும்  அல்லிமுத்து வலிகளை உணர்ந்தால்  மனமிருந்தால்  நீங்களும் உதவலாம்..

நன்றியுடன்
வெளிச்சம் மாணவர்கள்




Leave a Reply