Archive for September 2011


 21.09.11  அன்று ஜெயா தொலைக்காட்சியின்  காலைமலர் நிகழ்ச்சியில்  வெளிச்சம் அமைப்பின் இயக்குனர்   வெளிச்சம் செரின் அவர்களின் நேர்காணல் ஒளிபரப்பானது.. நிகழ்ச்சியில்  பேசிய செரின் அவர்கள்  மாணவர்கள் உளவியல் மற்றும் செக்ஸ் சார்ந்த     பிரச்சனைகளை பற்றி  பேசினார்.. குறிப்பாக 
  • ஏன் படிக்கும் வயதில் பிள்ளைகளுக்கு  காதல் வருகிறது
  • பெற்றவர்களை ஏன் பிள்ளைகள் வெறுக்கிறார்கள்    
  • மாணவர்களுக்கு செக்ஸ் கல்வி அவசியமா?   

 1போன்ற மாணவர்கள் பிரச்சனை குறித்து விவாதிக்கப்பட்டது.  இந்த நிகழ்ச்சியை  பார்த்த  நிறைய நண்பர்கள் நம்மை தொடர்பு கொண்டு வாழ்த்தினர்.  நிறைய பேர் பார்க்க முடியவில்லை என்று வருத்தப்பட்டார்கள்.  ஒரு நண்பர் பதிவேற்றியிருக்கிறார் என  தகவல் கிடைத்தது அவருக்கு நன்றி சொல்லி கொள்கிறோம்..

நன்றியுடன்
வெளிச்சம் மாணவர்கள்





Tomorrow (21.09.11) Velicham sherin interview telecast in Jaya tv - Kalai malar Program. this program discussed about psycho- social problems and sex affair of the students


"பணம் கொடுத்தால் போதும் பட்டம் பெற்று விட முடியும்' என்ற நிலை, பி.எட்., கல்லூரிகளில் நடக்கும் தில்லுமுல்லு காரணமாக உருவாகியுள்ளது. கல்வித் துறை அதிகாரிகள் மற்றும் தலைமை ஆசிரியர்கள், தனியார், பி.எட்., கல்லூரிகளின் பண மழையில் நனைகின்றனர். பணத்தை மட்டும் கொடுத்து பி.எட்., பெறுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், எதிர்கால ஆசிரியர்களின் தரம் கேள்விக்குறியாகியுள்ளது.


பொதுவாக ஆசிரியர் பணியை, சேவை செய்ய கிடைத்த உன்னதப் பணியாகக் கருதிய காலம் மாறிவிட்டது. இன்று, அரசு ஆசிரியர் பணியில் சேர்ந்து விட்டால், மாதத்துக்கு 20 ஆயிரத்துக்கும் குறையாத சம்பளம், இதர சலுகைகள், அதிக விடுமுறை என, வாழ்க்கையில் செட்டிலாகி விடலாம் என்ற எண்ணமே அனைவரிடமும் காணப்படுகிறது.இதன் காரணமாக, சில ஆண்டுகளாக ஆசிரியர் பணிக்கு அடிப்படை தேவையான, பி.எட்., பட்டப்படிப்பை படிக்க விரும்புபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம் செயல்படுத்தப்பட்ட பின், புதிதாக 2,000 உயர்நிலைப்பள்ளிகளும், 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்களும் உருவாக்கப்படும் என, அறிவிக்கப்பட்டது.

இதனால், பி.எட்., படிக்க விரும்புவோரின் எண்ணிக்கையும் இரு மடங்காக அதிகரித்துள்ளன. தமிழகத்தில், 650க்கும் மேற்பட்ட கல்வியியல் கல்லூரிகள், கல்வியியல் பல்கலையின் கீழ் செயல்பட்டு வருகின்றன. இவற்றில், அரசு மற்றும் உதவி பெறும் கல்லூரிகளில் உள்ள இடங்கள் மட்டும் அரசு ஒதுக்கீட்டு இடங்களாக கவுன்சிலிங் மூலம் நிரப்பப்படுகின்றன. சுயநிதி கல்லூரிகளில், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களாக பூர்த்தி செய்து வருகிறது.ஓராண்டு பி.எட்., படிப்புக்கான கட்டணமாக, 1 லட்சம் ரூபாய் வரை வசூல் செய்யப்படுகிறது. அரசு சார்பில் எவ்வித கட்டணமும் நிர்ணயிக்காததால், ஒவ்வொரு கல்வி நிர்வாகமும், அவரவர் இஷ்டத்துக்கு கட்டணத்தை நிர்ணயித்து வசூல் செய்து வருகின்றனர்.அதிக வசூலுக்கு ஆசைப்படும் கல்லூரி நிர்வாகங்களில் ரெகுலர், இர்ரெகுலர் என, இரண்டு முறைகளை கடைபிடிக்கின்றனர். இதில் ரெகுலர் முறையில், கல்லூரி வேலை நாள் அனைத்திலும் வகுப்புக்கு முழுமையாக வர வேண்டும் எனவும், இர்ரெகுலர் முறையில், வகுப்புக்கு வரத் தேவையில்லை எனவும் கேன்வாஸ் செய்கின்றன.

ஆய்வு மற்றும் தேர்வு நேரங்களில் மட்டும் கல்லூரிக்கு வந்தால் போதும் என்ற நிபந்தனையுடன் இச்சேர்க்கை நடத்தப்படுகிறது. இதற்கு ரெகுலர் முறை மாணவர்களை விட, 50 ஆயிரம் ரூபாய் முதல், 1 லட்சம் ரூபாய் வரை அதிகமாக வசூல் செய்யப்படுகிறது.வேறு இடங்களில் வேலை செய்து வரும் பலரும், இம்முறையில் பணத்தைப் பற்றி கவலைப்படாமல், சேர்ந்து வருகின்றனர். இவற்றையெல்லாம் தெரிந்த அரசு அதிகாரிகள் இவற்றை கண்டு கொள்ளாமல் இருக்க தனி, "ரேட்' நிர்ணயித்துக்கொண்டனர்.பி.எட்., பட்டப்படிப்பில் ஒவ்வொரு மாணவ, மாணவியரும், 40 நாள் அரசுப் பள்ளிகளில் நேரடி ஆசிரியர் பயிற்சி எடுத்துக்கொள்ள வேண்டும். இதற்காக பி.எட்., கல்லூரிகள் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட கல்வி அலுவலரிடம் அனுமதி பெற வேண்டும். இவற்றை பெற வேண்டும் எனில், மாணவ, மாணவியரின் எண்ணிக்கைக்கு ஏற்ப, ஒவ்வொரு கல்வி நிறுவனமும், 50 ஆயிரம் முதல், 1 லட்சம் ரூபாய் வரை கல்வி அலுவலர்களுக்கு லஞ்சம் வழங்கினால் மட்டுமே அனுமதி கிடைக்கிறது. பி.எட்., கல்லூரிகள் மூலம் மட்டுமே ஆண்டுக்கு, 15 லட்சம் ரூபாய்க்கும் மேல் கல்வித் துறை அலுவலர்களுக்கு, "பரிசாக' கிடைக்கிறது.

இப்பயிற்சி பெறவில்லை எனில், மாணவ, மாணவியர் பல்கலைத் தேர்வுகளில் கலந்து கொள்ள முடியாது என்பதால், கல்வி அதிகாரிகளுக்கு வழங்கும் தொகையையும் சேர்த்து மாணவ, மாணவியரிடம் கல்லூரிகள் வசூலித்து விடுகின்றன. பள்ளிகளில் பயிற்சி எடுத்ததற்கான சான்றிதழில் தலைமை ஆசிரியர் கையெழுத்திடவும், 5,000 முதல், 10 ஆயிரம் ரூபாய் வரை தர வேண்டியுள்ளது. பயிற்சிக்கு வராமலேயே சான்றிதழ் பெற, அதற்கு தனி ரேட் நிர்ணயித்துள்ளனர்.தனியார் கல்லூரியில், பி.எட்., படிப்பின் ஒவ்வொரு அங்கமும், இப்படி பணத்தையே பிரதானமாகக் கொண்டுள்ளதால், இதில் உருவாகும் ஆசிரியர்களின் தரம் எப்படியிருக்கும் என சொல்ல வேண்டியதில்லை. இந்த முறைகேடுகளைத் தடுக்க முன் வருமா அரசு?


தமிழர்களின் போராட்டங்கள் ஏன் பரவலாக்கபடுவதில்லை..  

கடந்த 10 ம் தேதி வெளிச்சம் அமைப்பின் தலைவர் செரினை தொடர்பு கொண்டார் கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்புகுழுவின் போராட்ட இயக்க தலைவர் உதயகுமாரன் அவர்கள். சென்னையில் உண்ணாநிலை போராட்டம் நடக்கிறது ஆனால் இங்கு உண்ணாநிலையில் பங்கு பெற்று போராடுவதற்கு யாருமில்லை என்று வருத்தப்பட்டார் வலிகளை உணர்ந்ததோடு செரின் அவர்கள் தலைமையில் 30க்கும் மேற்ப்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டோம் . அங்கு வந்த தலைவர்கள் வைகோ,  தொல். திருமாவளன், ராமதாஸ்   ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். அவர்கள் பேசியதிலிருந்தும் உள்வாங்கியதிலிருந்தும் எங்கள் மனசுக்கு பட்டதை பதிவு செய்ய நினைத்ததின் விளைவுதான் இந்த பதிவு

 கடந்த சில வருடங்களாக தமிழகத்தில் தமிழருக்கான வாழ்வுரிமைப்பிரச்சனை அதிகமாகி கொண்டே இருக்கிறது ஆனால் அதை தட்டிக்கேட்க வேண்டிய மத்திய மாநில அரசுகள் வேடிக்கை பார்த்து கொண்டே இருப்பது வேதனையாக இருக்கிறது குறிப்பாக கூடங்குளத்தின் அணு உலைகெதிராக மக்கள் போராடும் போது முல்லை பெரியாறு பிரச்சனையை தேவையில்லாமல் தூசுதட்டிய செயலை என்ன வென்று சொல்லுவது  ஆனால் போராடும் நபர்களுக்கு ஆதரவு தரவேண்டாம் ஆனால் உதாசினப்படுத்தாமல் இருங்கள்..
இது ஒருபக்கமிருக்கட்டும் கூடங்குளங்குளமாயிருந்தாலும் முல்லை பெரியார் போராட்டமாயிருந்தாலும் எங்களை போன்ற மாணவர்களுக்கும் என்ன சம்மந்தம் இருக்கிறது இன்றைய இந்த பிரச்சனைகள் இன்றுள்ள பிரச்சனைகள் இல்லை எதிர்காலத்தை பாதிக்கும் என்கிறார்கள் அப்போ எங்களுக்கு எதிர்காலமே கேள்விகுறிதானா?.... 


இதை பேசிக்கொண்டிருக்கும் போது  படிக்கற வயசுல வேலையை பாருங்கப்பான்னும் சொல்லுவதும், நீ சின்ன பையன் பெரியவனான உங்களுக்கு வலி வருத்தம் தெரியும் நம்மை அலட்சிய படுத்தி நாம் செல்ல வருவதை  இதை காது கொடுத்து கேட்பதையே கேவலமாக நினைக்கிறார்கள் எங்களை விட மூத்தவர்கள்.         நாளுவருசமா  மின்தடைகளால் தவித்துக் கொண்டிருந்த போது தமிழகம் மின்சார உற்பத்திக்காக கட்டி முடிக்கப்பட்டு துவங்கும் நிலையில் உள்ள கூடங்குளம் அணு மின நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறாங்களே ஏன்னு யோசிச்சதுண்டா..

பொறியியல், அறிவியல் மோகத்தில் தனது பிள்ளைகளை படிக்க வைக்கும் மோகத்திலிருக்கும் தமிழகத்தில் தனது வாழ்வாதாரங்களையும், தனது சந்ததிகளையும் தொலைக்கக் கூடியது என தெரிந்ததும்  அது எப்பேறுபட்ட அறிவியலாயினும்
தூக்கி எறியத்  தயாராகியிருப்பது மிக சரியனதுதான்.

1986ம் ஆண்டு உருசியாவிலுள்ள செர்னோ எனும் இடத்தில் அணு உலை வெடித்தில் ஏற்ப்பட்ட கதிரியக்கத்தால்  1986 தொடங்கி 2004ஆம் ஆண்டு வரை மட்டும் 9,85,000
மக்களைக் இறந்துள்ளதை கண்டு உலகமே நடுநடுங்கிக் கிடந்த நிலையில்
1988ம் ஆண்டு உருசியாவிடம் கூடங்குளத்தில் உருசியாவின் அணு உலையைக் கட்ட இந்தியா ஒப்பந்தம் போட்டது எந்தவித்தில் நியாயம்.

கேட்டால் அணுத்துறை அறிஞர்களும் இந்திய உருசிய அரசியல்வாதிகளும், "செர்னோபில் அணு உலையிலிருந்த இருந்த குறைபாடுகளைக் கண்டறிந்து கூடங்குளம் அணு உலையில் அவ்வாறு  ஏற்படாதவாறு கட்டியிருக்கிறோம் என்று சொல்லும் போது நமக்கு பயமாகதான் இருக்கிறது,
"
இப்போதுள்ள நிலையில்  ஆலையானாலும், எந்திரங்களானாலும் ஆபத்துகள் நிறைந்தே கிடக்கின்றன இதுக்காக அணு உலையை விட்டுவிடவேண்டுமா? -என்று சில அரசியல், அறிவியல் துறைகள்  கேள்வி எழுப்புகின்றன "ஒரு தடவை வெடித்தால் -நூறு தலைமுறை அழியும் என எண்ணுபோது மனசுக்குள் ஏதோ வலியுடன் கூடிய பயம் தானாக வருகிறது.

இது ஒரு பக்கமிருக்க கூடங்குளம் அணு உலை துவங்கப்பட்ட 1086 முதல் 2007ஆம் ஆண்டு வரைக்கும் ஆன செலவு மட்டுமே 17,000 கோடி ரூபாய் இதை ஏன் மூடி மறைக்கிறது அரசுகள். இதுமட்டுமில்லாமல் கூடங்குளத்துக்கு பிறகு இந்திய அரசு அமெரிக்காவிடம் 25 ஆண்டுகளில் 20 இலட்சம் கோடிகள் செலவில் .20 உலைகளை கட்டுவதற்கு  நீண்டகால ஒப்பந்தங்களை  இந்தியா போட்டிருக்கிறது தாம்  அதாவது, கூடங்குளத்தில் 2000 மெகாவாட் மின்னுற்பத்திக்கு உலை கட்டப்பட்டிருப்பதுபோல் அமெரிக்காவொடு திட்டமிடப்பட்டுள் அணு உலைகளிலில்  20,000 மெகாவாட்டிற்கு திட்டமிடப்பட்டுள்ளதாம் . ஓவ்வொரு ஆயிரம் மெகாவாட் மின்னளவிற்கும் ஒரு இலட்சம் கோடிகளாம்.

 "எமது வாழ்க்கையையும் எமது சந்ததியையும் காவு கொடுக்கக் கூடிய ஒரு அறிவியலை
எமது நிலத்திலே எங்கள் பணத்திலே விதைக்கும் முன்னர், எம்மை ஒரு வார்த்தையேனும் கேட்டீர்களா?"  

கூடங்குளத்திலே உலை கட்டினால் 10,000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று சொல்லப்பட்டது. இந்த இத்தனை வருடங்களில் பத்தே பத்து பேரை தேடித்தான் விளம்பரங்கள் தமிழ்நாட்டில் வந்துள்ளன என்று கூடங்குளம் போராட்ட குழு தலைவர் உதயகுமார் பேசினார்  அந்வர்களுக்கு கூட  உருசிய மொழி தெரிந்திருக்க வேண்டுமாம் மாணவர்களான எங்களின் எதிர்காலமென்ன..

மிக அதிகமாக அணு உலைகளை நிறுவிவரும் சீன நாடு, புகுசிமா விபத்திற்குப் பின்னர்
7 உலைகளை தற்காலிகமாக நிறுத்தியிருக்கிறார்களாம் உலகில் பல்வேறு நாடுகளும் அணு மின் உலைகளை மறு பரிசீலனை செய்து வரும் நிலையில் நாமும் அப்படி செய்ய வேண்டியது கட்டாயம்.

கட்டிவிட்டோம் என்ன செய்வதுன்னு வருத்தப்படுபவர்கள்  என்ன செய்யலாமென யோசிக்கலாம்.

அதை விடுத்து புத்தி பேதலித்த வண்ணம் கணக்கு டீச்சர பிடிக்கலைன்னா  கணக்கே வராதுங்கற சின்னபிள்ளைகள் தனமா ? கூடங்குளத்திலும் முல்லை பெரியாறுக்காக தேனி பகுதியிலும் மக்கள் போராட்டம் நட த்துவதை தொலைக்காட்சியில் பார்த்துகொண்டு இது நமக்கான பிரச்சனை என உணராமல் கிருஸ்தவர்கள் போராட்டம் பண்ணுறாங்க இந்துக்கள் ஆதரிப்போம்னு பேசுறதும்  மாத்தி சண்டை போடுறதுல புண்ணியமில்லை. அதுவும் பாதிப்புகள்  வந்தா மதம் பார்த்து வராது.. ஒட்டு மொத்தமா அழிஞ்சிடுவோம்..

விடியலுக்காக விண்ணை நம்பியிருப்பதை விட  முடியுமென உன்னை நம்பு..
எதிர்காலம் நம்முடையதுதான் மாணவர்களே!
கடுகளவேணும் போராட தயாரவோம்..

தொகுப்பு
வெளிச்சம் மாரி

நன்றி: அணு ஆராய்ச்சியாளர்  ஜெயபாலன் அவர்களின் வலைதளம் 

 உறவுகளே! 
              வெளிச்சம் மாணவர்களின் வணக்கங்கள்..  உங்கள் வழிகாட்டுதலுடன் எமது கல்விப்பயணத்தில் இன்னொரு புதிய மைல்கல்லை தொட்டிருக்கிறது..

சென்னை பாரதி மகளிர் கல்லூரியில் படிக்கும் வெளிச்சம் மாணவி  வைசாலி  திருத்தணிக்கு அருகில் உள்ள மாத்தூர் கிராமத்தை சேர்ந்த கீதாதேவியையும் அவரது தந்தை சீனிவாசனையும் அழைத்து வந்தார்.  கீதா தேவி  வறுமையின் சூழலிலும் பன்னிரெண்டாம் வகுப்பில் 1024/1200 மதிப்பெண்ணும் பொறியியல் கட் ஆப் 180.75 எடுத்திருந்தும் தங்களுடைய தலைமுறையிலேயே முதன்முதலில் கல்லூரிக்கனவு பணமில்லாமல் படிப்பை தொடர முடியாமல் தவித்த கீதாதேவியின் வலியையும் உணர்ந்தவர்களாய் நாம் வெளிச்சத்தின் வாலண்டியர் அருண்குமார் கீதாதேவியின் பழைய வீட்டையும், நலிவடைந்த துணி தரி நெய்யும் வேலை செய்கிறார்கள் என கீதாதேவியின் குடும்பத்தினரின் இயலாமையால் பாரதி கல்லூரியில் சேர்க்கப்போனதும் தெரியவந்தது...  அப்போதுதான் நம் மாணவியை சந்தித்திருக்கிறார் கீதாதேவி...

கனவுக்கு உயிர்கொடுத்த வெளிச்சம்
                வலிகளை சுமந்தபடி வெளிச்சத்தை நாடினார் கீதாதேவி, ஆனால் வெளிச்சமோ கீதாதேவின் கனவை  நமக்கான வலியாக தமிழகத்தின் பல இடங்களில் தேடி அழைந்தனர்   வெளிச்சத்தின் கல்விக்கான வேலையை
பார்த்த  பெரியபாளையத்தில் உள்ள ஜே.என்.என் கல்லூரி கீதாதேவியை B.Tech பொறியியல் பட்டபடிப்பில் சேர்த்து கொள்வதாகவும் கீதாதேவியின் முழுகட்டணத்தையும் கல்லூரிநிர்வாகமும் ஏற்றுக்கொள்வதாகவும் உறுதியளித்து அதற்கான கடித்தை நம்மிடம் கொடுத்தார்கள்.. கடந்த ஒருவாரத்திற்கு முன் கீதாவை கல்லூரியில் சேர்த்தோம்..

இந்த நல்ல விசயத்தை வேலைபழுவின் காரணமாக பகிர்ந்து கொள்வதற்கான தாமதம் அதற்காக மன்னிப்பு கோருகிறோம்..


வெளிச்சத்தோடு இணைந்து கல்விக்கு உதவ:  விண்ணப்பம்

கல்விக்கனவை நனவாக்கிய அந்த கடிதம்:


நன்றியுடன்
வெளிச்சம் மாணவர்கள்

சில வாரங்களுக்கு முன் பெரம்பலூரில் உள்ள தனலெட்சுமி பொறியியல் கல்லூரியில் மர்மமான முறையில் அண்ணாதாசன் என்கிற மாணவன் இறந்து கிடக்க நியாயம் கேட்டு சக மாணவர்கள் எல்லா பொருட்களையும் அடித்து சேதப்படுத்தினர் நமக்கு தகவல்கிடைத்ததும் அங்கு நமது மாணவர் கணபதியை அனுப்பி வைத்தோம்.. உள்ளே விடாத கல்லூரி நிர்வாகம் கள்ளமவுனம் காத்தது எல்லா பத்திரிக்கையும் இப்பிரச்சனை குறித்து எழுதினால் கல்லூரி கொடுக்கும் விளம்பரத்தால் தங்களுக்கு  கோடிக்கணக்கில்  சம்பாதிக்கமுடியாதென பத்திரிக்கைகள் பத்திரிக்கை தர்மத்தை பறக்கவிட்டனர்.. ஆனால் ஜூனியர்விகடன் மட்டும் 8 மாவட்டத்தில் வெளியிட்டது. வெளியான புத்தகங்களை மொத்தமாக வாங்கி செய்தி பரவுவதை தடுத்தார்கள் கல்லூரி நிர்வாகம்... நமக்கு புத்தகங்கள் கிடைக்காத சூழலில் திருச்சியிலுள்ள நமது மாணவி கீழ்கண்ட நகலை இணைத்துள்ளோம்..

ஆகஸ்ட் மாதம் 18 தேதி போராட்டம் நடத்திய மாணவர்கள் கல்லூரிக்குள் இதுவரை 22க்கும் மேற்பட்ட மாணவர்கள் மர்மமான முறையில் இறந்திருக்கிறார்கள் நீதிவிசாரணை நடத்திட வேண்டும் என்றார்கள் ஆனால் காவல்துறை அனுமதி மறுத்தது...

இது கல்லூரி நிர்வாகத்தை தட்டிக்கேட்கும் மாணவர்கள் மர்மசாவுகளுக்கு ஓர் சாட்சி


காஞ்சனா  என்றால் பேய்  என்று தமிழகத்தின் பல்வேறு மூளைமுடுக்கெல்லாம் பேசிக்கொண்டிருக்கிற  பரபரப்பபான சூழலில்  காஞ்சனா திரைப்படத்தை பார்த்து ஒன்பதாம் வகுப்பு மாணவன் தீக்குளித்து ஈரோடு  அரசு மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டிருக்கிறான் என்ற தகவல் நமக்கு கிடைக்க  அதிர்ந்து போனோம்..


ஈரோடு நகரத்திற்குட்பட்ட  ராஜாஜிபுரம், மாகாளியம்மன் கோவில் தெருவில் வசித்துவரும் தண்டபாணியின் மகன் இளவரசன்   அரசுப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறான்.

இரண்டு நாளைக்கு முன்   இளவரசன் அவனது  நண்பர்களுடன்  ராகவா லாரன்ஸ் நடித்து சின்னத்திரை தமிழகத்தின்  20 வருடங்களுக்கு பின் பெண்கள் கூட்டம் என அலம்பரை செய்யும்  காஞ்சனா  திரைப்படத்தை  பார்த்துவிட்டு வந்தனர்

படம்பார்த்த  அன்று முதல் இளவரசன்  பேய் பயத்தில் தூக்கதை தொலைத்துள்ளான்   இரவில் தூங்கும் போது எழுந்து பல தடவை பயத்தில் சத்தம் போட்டு இருக்கிறான்.  எதை எதையோ சொல்லி இளவரசனை  அமைதிப்படுத்திய பெற்றோர்கள் தொடர்ந்து அவனது பயத்தை போக்குவதற்கான நடவடிக்கையாக கோவிலுக்கு சென்று திருநீர் கொண்டுவந்து இளவரசனுக்கு பூசியுள்ளனர். (காஞ்சனா திரைப்படத்தில்  சொல்லுவது போல)  ஆனாலும் இளவரசனுக்கு பிடித்த பயப்பேய்  விடவே இல்லை.. இதில்தான் இறுதியாக  கடந்த 4ம் தேதி நடந்த நிகழ்வு இளவரசனுக்கு மட்டுமல்ல எல்லோருக்கும்  அதிர்ச்சியை கொடுத்துள்ளது..

இரவில் தூங்கிக்கொண்டிருந்த இளவரசன்  எழுந்து வீட்டின் சமையலறையில் இருந்த மண்ணெண்ணையை எடுத்து தன்னுடைய உடலில் ஊற்றி தீ வைத்துக்கொள்ள  தீக்காயத்துடன்  இளவரசனை தூக்கிக்கொண்டு  ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு மருத்துவர்கள் கொடுத்த சிகிச்சை பலனளிக்காமல்  நேற்று (06.09.2011) காலை  பரிதாபமாக உயிரிழந்தான் இளவரசன் .

இளவரசனின் தற்கொலை குறித்து இளவரசனின் அப்பா தண்டபாணியிடம் பேசியபோது  படத்தை தியேட்டரில் பார்த்த  பசங்க  அதன்பின் சி.டி.யை வாங்கிக்கிட்டு  வந்து வீட்டில டிவியில  பலதடவை பார்த்தான். அதன் பிறகு  கண்முன்னாடி ஒரு உருவம்  வந்து நிற்ப்பதா உலறினான், ஸ்கூலுக்கு போனப்பகூட யார்க்கிட்டயும் பேசாம  பைத்தியம் பிடிச்சது போல இருந்திருக்கான் டீச்சர்ங்க  அப்பாவையோ, அம்மாவையோ  நாளைக்கு கூட்டிக்கிட்டு வான்னு சொல்லியானுப்பிருக்காங்க..

ஆனால்  என் புள்ளையோ என்னை கொன்னுடுங்க எனக்கு பயமா இருக்கு பயமா இருக்குன்னு சொன்னான்  ஆனால் நாங்க அவனுக்கு தைரியம் சொல்லிக்கிட்டு இருந்தோம், சம்பவத்தன்று நானும் என் மனைவியும் வெளியில் படுத்திருந்தோம், நடுராத்திரி  அலரல் சத்தம் கேட்டுது பதறி அடிச்சி  எழுந்து பார்த்தால் உள்ள படுத்திருந்த இளவரசன்  எழுந்து மண்ணெண்ணையை ஊற்றி நெருப்பு வைத்துகொண்டு வாசலுக்கு வந்து விட்டான். அதன்பிறகு  சாக்கை போட்டு மூடி  தீயை அனைத்தோம் என்று சொன்னார்.

ஆனால்  தொலைக்காட்சிகளில் இன்னமும்
ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் வெளிவந்த முனி பாகம் இரண்டு கலக்கலாகத்தான் இருக்கிறது. அவரது நடிப்பும், ஆக்ரோஷமும், திருநங்கையாக மாறியபின் அவர் காட்டும் நளினமும் பளிச். நடனத்தில் மனிதரைக் கேட்கவே வேண்டாம் பின்னி எடுத்துவிடுகிறார்.

சில காட்சிகளே வந்தாலும் நம்ம சரத்குமாரா இது என்று வாய் பிளக்க வைக்கிறார். இமேஜிற்குள் சிக்காமல் திருநங்கை வேடத்தை துணிச்சலாக ஏற்றது மட்டுமின்றி, தத்ரூபமாக நடித்தமைக்கு அவருக்கு தாராளமாக கைதட்டல் போடலாம். என சொல்லிக்கொண்டே இருக்கிறார்களே.....

நமக்கென்ன கேள்வி எனில்  காஞ்சனா திரைப்படத்திற்கு  தணிக்கைகுழு  என்ன சான்றிதழ் கொடுத்து  வெளியிட அனுமதித்தது ஏன்  எல்லா திரைப்படங்களில் போடப்படமும் U/A  என குறியீடு போடாதது ஏன்?
 U  சான்றிதழ் கொடுக்கப்படும் திரைப்படத்தில் இவ்வளவு வண்மம் தேவைதான் அதை பார்க்கும்  லட்சோப லட்சப குழந்தைகளின் எதிர்காலம்  என்ன செய்யும்…

A  சான்றிதழ் கொடுக்கப்பட்டிருந்தால்  குழந்தைகளை பார்க்க அனுமதிக்கப்பட்டது  எப்படி..  

இளவரசனை போன்ற  குழந்தைகளின்  பாதிப்பிற்கு  யார் பதில் சொல்லுவது  ?
ஆம் சினிமா  = சமூக சீர்குழைவு ..

-வெளிச்சம் ஆனந்தி         


சமூக அவலங்களுக்காக  எதிராக துடிப்பவரா நீங்கள் ?    ----------------------------------------





 சமூகத்தை பக்குவப்படுத்துகிற பொறுப்பும் கடமையும் உள்ளவர்கள் தானே ஆசிரியர்கள், அந்த ஆசிரியர்களுக்காக தத்துவார்த்தமான புனிதத்தை  தற்போதைய ஆசிரியர்கள் மறந்து போனதற்கான காரணங்களை தேடினால் விடை தெரியா கணக்காகி கிடைக்கிறது...

ஒரு பக்கம் கல்வி காசாகிப்போன சூழல் இன்னொரு பக்கம் சமச்சீர்கல்விக்கு காத்து கிடந்தது போக காயங்களுக்கு ஒட்டு போடலாம் ஆனால் புத்தகங்களுக்கு பேண்டேஞ்  போட்ட அவலமும் இங்குதான் நடக்கிறது..

எந்தவிதமான லாப நோக்கமில்லாமல் சொல்லி கொடுத்த எங்கள் ஆசிரியர்களே எங்களுக்கு கடவுளாக காட்சியளித்தாகள்... அவர்கள் எங்களுக்கு ஒழுக்கத்தை ஒழுக்கமாய் சொல்லி கொடுத்ததார்கள் அதனால் எங்களை  பலருக்கு ஆசிரியர்களே ரோல் மாடலாக இருந்தார்கள் அது ஒரு கனாக்காலம்...


இப்ப எங்க உண்மையான ஆசிரியர்கள் இருக்கா...

இந்த கேள்வி எல்லோருடைய மனதிலும் எழவே செய்கிறது அதற்கு சில காரணங்கள் இருக்கச்  செய்கிறது...

கும்பகோணம் பள்ளி  தீ விபத்தில் 94 குழந்தைகள் கருகியபோது எத்தனை ஆசிரியர்கள் காயம் பட்டார்கள்... என  சொல்ல முடியுமா?  நீங்க சொல்லலாம் வேதாரண்யம் பள்ளி வேன் விபத்தில் 11 குழந்தைகளை மீட்ட பின்னர் உயிரிழந்த ஆசிரியை சுகந்தி யை இத்தனை வருடங்களாக சுகந்தி மட்டும் தான் விதிவிலக்கு  அதன்பிறகு எத்தனை வேன் விபத்துக்கள் எத்தனை பலிகள் தமிழகம் முழுக்க இவை யெல்லாம் கல்வி பிசினஸ் ஆனதன் அடையாளம்  ...

பள்ளிக்கூட பொண்ணுங்களை சில்மிசம் செய்த ஆசிரியர்கள், பிராக்டிக்கள் மார்க் போட முத்தம் கேட்ட ஆசிரியர்கள், ஆசிரியர் பிவிசி பைப்பால் அடிச்சதால் தற்கொலை செய்து கொண்ட கல்லூரி மாணவனென படிக்க அனுப்பிய பிள்ளைகளை பாடையில் அனுப்பிய கொடுமைகள் இங்கேதான் அரங்கேறிக்கொண்டிருக்கிறது.....

 இதுமட்டுமல்லாமல்  ஆசிரியர்கள் அழககழகான விதவிதமான காஸ்டியூம்களில் புடவைகளில் காட்டும் அக்கறையை ஒரு மாணவனின் உண்மையான வளர்ச்சியில் காட்டியதுண்டா? அப்படி காட்டியிருந்தால் இளம்குற்றவாளிகள் குறைந்திருக்க கூடும்..ஆனால் இவர்கள் பாடத்தை மட்டுமே எடுக்கிறார்கள் நமக்கொன்ன ஒரு கேள்வி என்றால் வெறும் படிப்பாளிக்ள் இந்த நாட்டுக்கு தேவையா? அப்படி வெறும் படிப்பாளிகளை உருவாக்க இவங்க பள்ளிக்கூடம் நடத்துறாங்களா இல்லை தொழிற்சாலையா நடத்துறாங்களா......

மீண்டும் சொல்லுகிறோம் சமூகத்திற்கு நல்ல படிப்பாளிகளை அல்லாமல் படைப்பாளிகளை உருவாக்கிய ஆசிரியர்கள் இருந்ததால் தான் இந்த தேசம் இன்னும் இருக்கிறது...

நாம் விரும்புவது ஆரோக்கியமான தேசத்தை நல்ல எதிர்காலத்தை கட்டமைக்கிற ஆசிரியர்களைத்தான் .....

ஒவ்வொரு  நாளும் கிடைக்கும் படிப்பினைகளில்  நீங்களும்  எமக்கு ஆசிரியர்களே..

எம்மை வளர்த்தெடுக்க .
உழைக்கும் நீங்களும் எமக்கு ஆசிரியர்களே!
உங்களுக்கு 
எம் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்

நன்றியுடன்
வெளிச்சம் மாணவர்கள்








படிக்க அனுப்பப்படும் பிள்ளைகளை ஆசிரியர்கள் தங்களது சுய வேலைக்கு பயன்படுத்தப்படும் கொடுமை தமிழகத்தின் பல்வேறு கல்விக்கூடங்களில்  இன்னமும் சத்தமில்லாமல் நடந்துகொண்டே இருக்கிறது...

உதாரணமாக  தான் பயன்படுத்திய டாய்லெட்டை கழுவசொல்லுவது, கல் தூக்க சொல்லுவது, கிரவுண்ட் சுத்தம் செய்வது, டீச்சர்ஸ் சாப்பிட்ட பாத்திரங்களை கழுவ சொல்லுவது, காய்கரிகளை வாங்கிவரச்சொல்லுவது போன்ற வேலைகளை செய்ய சொல்லுவதும் மாணவர்களோ! டீச்சர்ருக்கு பிடித்த பையனாக இருக்க வேண்டும் என்பதற்காக நம்மை செய்ய சொல்லமாட்டாங்களா என அறியாமையில் கிடப்பதும் இங்குதான் நடக்கிறத்கு.... அந்தவகையில்  ஆசிரியர் சொன்ன வேலையை செய்து கொண்டிருந்த மாணவன் இறந்து போன கொடுமையும் பட்டியலில் சேர்ந்துள்ளது....

சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உளுந்தூர் பேட்டைக்கு அடுத்துள்ள  அருகே உள்ள சேப்பாக்கம் கிராமத்து  பள்ளி மாணவர்கள் எல்லாம் பள்ளிக்கு போகாமல் தேசிய நெடுஞ்சாலையை மறியலில் ஈடுபட  சுமார்  நான்கு மணிநேரம் போக்குவரத்து ஸ்தம்பித்தது..
போக்குவரத்து நெரிசலில் சிக்கிக்கொண்ட நாம் நிலைமை விசாரிக்க போனோம்.. மாணவர் பிரச்சனை என்றதும் விசாரித்தோம்…

நம்மிடம் பேசிய மாணவர்கள்
எங்க ஊர்  வெல்பர் ஸ்கூல்ல (ஆதிதிராவிடர் நல அரசு மேல்நிலைப் பள்ளி ஆனாலும் எல்லா சமூகத்து மாணவர்களும் படிக்கிறார்கள் ), பிளஸ் 2 படிக்கிற ராஜதுரைக்கு நேற்று கொமிஸ்ட்ரி லேப், லேப் முடிச்சிட்டு போன ராஜ துரையை கூப்பிட்ட டீச்சர் பாண்டியன் லேப் முழவதையும்  கிளீன்பண்ணிட்டு  பூட்டிட்டு வந்துவிடு என சொல்லிவிட்டு போனார்,  அவர் போன கொஞ்ச நேரத்துல  ராஜதுரை அலறுகிற சத்தம் கேட்டுச்சு நாங்க ஓடி போய் பார்த்தோம்  அறுந்து கிடந்த ஒயரை அப்புற படுத்தும் போது காரண்ட்  பிடிச்சி உயிருக்கு போராடினான் கொஞ்ச நேரத்துல மெல்ல மெல்ல லேசா உயிர் போறத நாங்க பார்த்தோம்  என சொல்லும் போது உயிரின் வழியை பார்க்க முடிந்தது...

சாலையில் மகனின் சாவுக்காக போராடும் பிள்ளைகளை  பார்த்து கதறிக்கொண்டிருந்தார் ராஜதுரையின் தாயும் தந்தை முருகேசனும்..

நாம் ராஜதுரையின் தந்தையான முருகேசனிடம் பேசினோம்... படிக்க அனுப்பினேன் சாமி இவங்க பாடையில அனுப்பியிருக்காங்களே இனி நான் என்ன செய்வேன் என தொடர்ந்து  பேசமுடியாதவராய் மூச்சிரைத்து போனார்..

உறவுக்காரரான கட்டிமுத்துவிடம் பேசினோம்
உடலை போஸ்மாடம் செய்ய பெற்றவர்களிடம் தகவல் சொல்லாமலே விருத்தாசலம் கொண்டு போனாங்க.. ரோட்டை மறிக்கவே விருத்தாசலம் ஆர்.டி.ஓ., ஆனந்தகுமார், தாசில்தார் (பொறுப்பு) காமராஜ், டி.எஸ்.பி.,க்கள் விருத்தாசலம் அறிவழகன், திட்டக்குடி வனிதா  ஆகியோர் பேச்சு நடத்தினர். மாணவன் ராஜதுரை குடும்பத்திற்கு உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும்; மாணவன் சாவுக்கு காரணமான தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களை கைது செய்து, பணி நீக்கம் செய்ய வேண்டும்; நிர்வாகத்தை முற்றிலுமாக மாற்றி அமைக்க வேண்டும்; இதுகுறித்து உறுதி அளிக்க கலெக்டர் மற்றும் எஸ்.பி., நேரில் வர வேண்டும் என்று கூறினோம் தொடர்ந்து நடந்த பேச்சுவார்த்தையில், தலைமை ஆசிரியர் ராஜராஜன், ஆசிரியர் பாண்டியன் ஆகியோரை தற்காலிக பணி நீக்கம் செய்திருப்பதாகவும், மற்ற ஆசிரியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுப்பதாகவும், இறந்த மாணவர் ராஜதுரை குடும்பத்திற்கு அரசின் நிவாரண உதவித்தொகை பெற்றுத் தர நடவடிக்கை எடுப்பதாகவும் அதிகாரிகள் உறுதி அளிச்சாங்க..என்றார் கட்டிமுத்து...

நிவாரணங்கள்  மட்டும்  போன உயிரை திருப்பிகொடுக்காது...
லட்சங்களை கொட்டி கொடுக்கலாம், கோடிகளில் கொட்டி கொடுக்கலாம்  பிள்ளையோடு இருந்த ஒரு பொழுதை இவர்களால் மீண்டும் கொடுக்க முடியுமா?

நீதி உங்கள் கைகளில் இணைவோம்.....Velicham Application 

.
வெளிச்சம் தீபா..