தொடரும் தமிழர்களின் வாழ்வுரிமை போராட்டங்களில் மாணவர்களின் பங்கென்ன

Posted by Unknown - -

தமிழர்களின் போராட்டங்கள் ஏன் பரவலாக்கபடுவதில்லை..  

கடந்த 10 ம் தேதி வெளிச்சம் அமைப்பின் தலைவர் செரினை தொடர்பு கொண்டார் கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்புகுழுவின் போராட்ட இயக்க தலைவர் உதயகுமாரன் அவர்கள். சென்னையில் உண்ணாநிலை போராட்டம் நடக்கிறது ஆனால் இங்கு உண்ணாநிலையில் பங்கு பெற்று போராடுவதற்கு யாருமில்லை என்று வருத்தப்பட்டார் வலிகளை உணர்ந்ததோடு செரின் அவர்கள் தலைமையில் 30க்கும் மேற்ப்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டோம் . அங்கு வந்த தலைவர்கள் வைகோ,  தொல். திருமாவளன், ராமதாஸ்   ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். அவர்கள் பேசியதிலிருந்தும் உள்வாங்கியதிலிருந்தும் எங்கள் மனசுக்கு பட்டதை பதிவு செய்ய நினைத்ததின் விளைவுதான் இந்த பதிவு

 கடந்த சில வருடங்களாக தமிழகத்தில் தமிழருக்கான வாழ்வுரிமைப்பிரச்சனை அதிகமாகி கொண்டே இருக்கிறது ஆனால் அதை தட்டிக்கேட்க வேண்டிய மத்திய மாநில அரசுகள் வேடிக்கை பார்த்து கொண்டே இருப்பது வேதனையாக இருக்கிறது குறிப்பாக கூடங்குளத்தின் அணு உலைகெதிராக மக்கள் போராடும் போது முல்லை பெரியாறு பிரச்சனையை தேவையில்லாமல் தூசுதட்டிய செயலை என்ன வென்று சொல்லுவது  ஆனால் போராடும் நபர்களுக்கு ஆதரவு தரவேண்டாம் ஆனால் உதாசினப்படுத்தாமல் இருங்கள்..
இது ஒருபக்கமிருக்கட்டும் கூடங்குளங்குளமாயிருந்தாலும் முல்லை பெரியார் போராட்டமாயிருந்தாலும் எங்களை போன்ற மாணவர்களுக்கும் என்ன சம்மந்தம் இருக்கிறது இன்றைய இந்த பிரச்சனைகள் இன்றுள்ள பிரச்சனைகள் இல்லை எதிர்காலத்தை பாதிக்கும் என்கிறார்கள் அப்போ எங்களுக்கு எதிர்காலமே கேள்விகுறிதானா?.... 


இதை பேசிக்கொண்டிருக்கும் போது  படிக்கற வயசுல வேலையை பாருங்கப்பான்னும் சொல்லுவதும், நீ சின்ன பையன் பெரியவனான உங்களுக்கு வலி வருத்தம் தெரியும் நம்மை அலட்சிய படுத்தி நாம் செல்ல வருவதை  இதை காது கொடுத்து கேட்பதையே கேவலமாக நினைக்கிறார்கள் எங்களை விட மூத்தவர்கள்.         நாளுவருசமா  மின்தடைகளால் தவித்துக் கொண்டிருந்த போது தமிழகம் மின்சார உற்பத்திக்காக கட்டி முடிக்கப்பட்டு துவங்கும் நிலையில் உள்ள கூடங்குளம் அணு மின நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறாங்களே ஏன்னு யோசிச்சதுண்டா..

பொறியியல், அறிவியல் மோகத்தில் தனது பிள்ளைகளை படிக்க வைக்கும் மோகத்திலிருக்கும் தமிழகத்தில் தனது வாழ்வாதாரங்களையும், தனது சந்ததிகளையும் தொலைக்கக் கூடியது என தெரிந்ததும்  அது எப்பேறுபட்ட அறிவியலாயினும்
தூக்கி எறியத்  தயாராகியிருப்பது மிக சரியனதுதான்.

1986ம் ஆண்டு உருசியாவிலுள்ள செர்னோ எனும் இடத்தில் அணு உலை வெடித்தில் ஏற்ப்பட்ட கதிரியக்கத்தால்  1986 தொடங்கி 2004ஆம் ஆண்டு வரை மட்டும் 9,85,000
மக்களைக் இறந்துள்ளதை கண்டு உலகமே நடுநடுங்கிக் கிடந்த நிலையில்
1988ம் ஆண்டு உருசியாவிடம் கூடங்குளத்தில் உருசியாவின் அணு உலையைக் கட்ட இந்தியா ஒப்பந்தம் போட்டது எந்தவித்தில் நியாயம்.

கேட்டால் அணுத்துறை அறிஞர்களும் இந்திய உருசிய அரசியல்வாதிகளும், "செர்னோபில் அணு உலையிலிருந்த இருந்த குறைபாடுகளைக் கண்டறிந்து கூடங்குளம் அணு உலையில் அவ்வாறு  ஏற்படாதவாறு கட்டியிருக்கிறோம் என்று சொல்லும் போது நமக்கு பயமாகதான் இருக்கிறது,
"
இப்போதுள்ள நிலையில்  ஆலையானாலும், எந்திரங்களானாலும் ஆபத்துகள் நிறைந்தே கிடக்கின்றன இதுக்காக அணு உலையை விட்டுவிடவேண்டுமா? -என்று சில அரசியல், அறிவியல் துறைகள்  கேள்வி எழுப்புகின்றன "ஒரு தடவை வெடித்தால் -நூறு தலைமுறை அழியும் என எண்ணுபோது மனசுக்குள் ஏதோ வலியுடன் கூடிய பயம் தானாக வருகிறது.

இது ஒரு பக்கமிருக்க கூடங்குளம் அணு உலை துவங்கப்பட்ட 1086 முதல் 2007ஆம் ஆண்டு வரைக்கும் ஆன செலவு மட்டுமே 17,000 கோடி ரூபாய் இதை ஏன் மூடி மறைக்கிறது அரசுகள். இதுமட்டுமில்லாமல் கூடங்குளத்துக்கு பிறகு இந்திய அரசு அமெரிக்காவிடம் 25 ஆண்டுகளில் 20 இலட்சம் கோடிகள் செலவில் .20 உலைகளை கட்டுவதற்கு  நீண்டகால ஒப்பந்தங்களை  இந்தியா போட்டிருக்கிறது தாம்  அதாவது, கூடங்குளத்தில் 2000 மெகாவாட் மின்னுற்பத்திக்கு உலை கட்டப்பட்டிருப்பதுபோல் அமெரிக்காவொடு திட்டமிடப்பட்டுள் அணு உலைகளிலில்  20,000 மெகாவாட்டிற்கு திட்டமிடப்பட்டுள்ளதாம் . ஓவ்வொரு ஆயிரம் மெகாவாட் மின்னளவிற்கும் ஒரு இலட்சம் கோடிகளாம்.

 "எமது வாழ்க்கையையும் எமது சந்ததியையும் காவு கொடுக்கக் கூடிய ஒரு அறிவியலை
எமது நிலத்திலே எங்கள் பணத்திலே விதைக்கும் முன்னர், எம்மை ஒரு வார்த்தையேனும் கேட்டீர்களா?"  

கூடங்குளத்திலே உலை கட்டினால் 10,000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று சொல்லப்பட்டது. இந்த இத்தனை வருடங்களில் பத்தே பத்து பேரை தேடித்தான் விளம்பரங்கள் தமிழ்நாட்டில் வந்துள்ளன என்று கூடங்குளம் போராட்ட குழு தலைவர் உதயகுமார் பேசினார்  அந்வர்களுக்கு கூட  உருசிய மொழி தெரிந்திருக்க வேண்டுமாம் மாணவர்களான எங்களின் எதிர்காலமென்ன..

மிக அதிகமாக அணு உலைகளை நிறுவிவரும் சீன நாடு, புகுசிமா விபத்திற்குப் பின்னர்
7 உலைகளை தற்காலிகமாக நிறுத்தியிருக்கிறார்களாம் உலகில் பல்வேறு நாடுகளும் அணு மின் உலைகளை மறு பரிசீலனை செய்து வரும் நிலையில் நாமும் அப்படி செய்ய வேண்டியது கட்டாயம்.

கட்டிவிட்டோம் என்ன செய்வதுன்னு வருத்தப்படுபவர்கள்  என்ன செய்யலாமென யோசிக்கலாம்.

அதை விடுத்து புத்தி பேதலித்த வண்ணம் கணக்கு டீச்சர பிடிக்கலைன்னா  கணக்கே வராதுங்கற சின்னபிள்ளைகள் தனமா ? கூடங்குளத்திலும் முல்லை பெரியாறுக்காக தேனி பகுதியிலும் மக்கள் போராட்டம் நட த்துவதை தொலைக்காட்சியில் பார்த்துகொண்டு இது நமக்கான பிரச்சனை என உணராமல் கிருஸ்தவர்கள் போராட்டம் பண்ணுறாங்க இந்துக்கள் ஆதரிப்போம்னு பேசுறதும்  மாத்தி சண்டை போடுறதுல புண்ணியமில்லை. அதுவும் பாதிப்புகள்  வந்தா மதம் பார்த்து வராது.. ஒட்டு மொத்தமா அழிஞ்சிடுவோம்..

விடியலுக்காக விண்ணை நம்பியிருப்பதை விட  முடியுமென உன்னை நம்பு..
எதிர்காலம் நம்முடையதுதான் மாணவர்களே!
கடுகளவேணும் போராட தயாரவோம்..

தொகுப்பு
வெளிச்சம் மாரி

நன்றி: அணு ஆராய்ச்சியாளர்  ஜெயபாலன் அவர்களின் வலைதளம் 

Leave a Reply