Archive for April 2011


சமத்துவபுரத்தில் ஜாதியை காரணம் காட்டி நரிக்குறவர் குழந்தைகளின் பள்ளியை அபகரித்ததால், 35 குழந்தைகளின் கல்வி கேள்விக்குறியாகி உள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை பெரியார் நினைவு சமத்துவபுரம் அருகே 50க்கும் மேற்பட்ட நரிக்குறவர் குடும்பங்கள் உள்ளன. இவர்களது நாடோடி வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வரும் விதமாக, 2006 ஜூனில் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் உண்டு உறைவிட பள்ளி பன்ணைவயல் கிராமத்தில் தொடங்கப்பட்டது. 35 நரிக்குறவர் குழந்தைகள் இங்கு படித்து வந்தனர். இடநெருக்கடி காரணமாக 2010 நவ.,3ல் சமத்துவபுரத்திற்கு பள்ளி மாற்றப்பட்டது. இது அங்கு வசித்த பிற பிரிவு மக்களுக்கு பிடிக்கவில்லை. திடீரென அங்கிருந்த ரேஷன் கடையை பள்ளி கட்டத்திற்கு மாற்றினர். இது குறித்து நரிக்குறவர் மக்கள் திருவாடானை தாசில்தாரிடம் புகார் தெரிவித்து, அதன் அடிப்படையில் கட்டடத்தை இரண்டாக பிரித்து ஒரு பகுதியில் ரேஷன் கடை, மறுபகுதியில் பள்ளி இயங்கியது. அதற்கும் இடையூறு ஏற்படுத்தும் விதமாக அங்கன்வாடி மையத்தை நரிக்குறவர் குழந்தைகளின் பள்ளிக்கு இடமாற்றம் செய்தனர்.


பள்ளி அபகரிக்கப்பட்ட நிலையில், 35 குழந்தைகளும் வீட்டில் முடங்கி உள்ளனர். இது குறித்து திருவாடானை தாசில்தார் சுகுமாறனிடம் புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை. இதனால் கொதித்து போன நரிக்குறவர்கள் ராமநாதபுரம் வந்து, கலெக்டர் ஹரிஹரனை அவரது வீட்டில் சந்தித்து முறையிட்டனர். மல்லிகா கூறியதாவது: எங்கள் குழந்தைகள் கல்வி கற்க கூடாது என்பதற்காக திட்டமிட்டு சதி செய்து வருகின்றனர். சமத்துவபுரத்தில் ஜாதி பார்ப்பது எந்த வகையில் நியாயம் என தெரியவில்லை, என்றார். கலெக்டர் ஹரிஹரனிடம் கேட்டபோது,"" குழந்தைகளுக்கு பாடம் எடுத்த ஆசிரியர் ஓய்வு பெற்றுவிட்டார். அவரை திரும்பவும் நியமிக்கும் கோரிக்கையின் அடிப்படையில் இப்பிரச்னை எழுவதாக தெரிகிறது. பிரச்னை சுமூகமாக தீர்க்கப்படும்,'' என்றார்.


 நன்றி: தினமலர்


           Dear friends,
           Our Educational Mother  VELICHAM D.SHERIN  celebrates her birthday  today  29.4.2011 friday so let us all wish her. Contact No : 9500162127, 


இன்று பிளஸ் டு தேர்வு எழுதி தேர்வு முடிவுக்குக் காத்திருக்கும் மாணவர்களிடையே என்ன படிக்கலாம்? எந்தக் கல்லூரியில் சேரலாம்? என்கிற கவலை ஏராளமாகத் தொற்றிக் கொண்டிருக்கிறது. அவர்களின் பெற்றோர்களுக்கும் இந்த கவலை ஒட்டிக் கொண்டு விட்டது. 

மருத்துவம் படிக்கலாமா? பொறியியல் படிக்கலாமா? வேளாண்மை படிக்கலாமா? அல்லது சமையல் கலையைப் படிக்கலாமா? எதைப் படித்தால் கை நிறையச் சம்பாதிக்கலாம்? எதைப் படித்தால் வெளிநாட்டில் வேலைக்குச் செல்லலாம்? என்று அவர்களுக்குள் ஆயிரம் கேள்விகள்...

இந்த கேள்விகளுக்கெல்லாம் விடைகளைத் தேடி சிலர் ஏற்கனவே படிப்பை முடித்து தற்போது நல்ல வேலையிலிருக்கும் உறவினர்கள் மற்றும் நண்பர்கள், அவர்களது பெற்றோர்கள் என்று தெரிந்தவர்களை எல்லாம் தேடிப் போகிறார்கள். 

தமிழ்நாட்டில் இன்று இருக்கும் கல்லூரிகளில் எந்தப் படிப்புக்கு கிராக்கி அதிகமாக இருக்கிறது? அந்தப் படிப்பு எந்தக் கல்லூரிகளில் எல்லாம் இருக்கிறது? என்று கடந்த ஆண்டு பிள்ளைகளின் படிப்புகளுக்காக அலைந்த பெற்றோர்களிடம் அவர்களுக்குத் தெரிந்த கல்லூரிகளின் பட்டியலையும் அங்கிருக்கும் படிப்புகளையும் விசாரணை செய்து தெரிந்து வைத்துக் கொள்ளும் சிலரும் உண்டு.

தங்கள் பிள்ளைகளை அடுத்து என்ன படிக்க வைக்கலாம் என்கிற விபரமே தெரியாமலும் பலர் இருக்கத்தான் செய்கிறார்கள்.

பொதுவாகப் பெற்றோர்கள் ஒரு விஷயத்தை முதலில் கவனத்தில் கொள்ள வேண்டும். அது தங்கள் பிள்ளைக்கு எந்தப் படிப்பின் மீது அதிக ஆர்வமுள்ளது என்பதுதான். அந்த ஆர்வம் உண்மையானதா அல்லது அவனுடன் படித்த நண்பர்கள் அந்தப் படிப்பின் மீது ஆர்வமாய்ச் செல்வதால் இவனும் அவனுடன் சேர்ந்து சொல்கிறானா என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் அவர்களுக்கு விருப்பப்பட்ட படிப்பைத் தேர்ந்தெடுப்பதுடன் அதில் சிறப்பாகத் தேர்ச்சி அடையவும் முடியும்.

இப்படி உண்மையிலேயே உங்கள் பிள்ளைக்கு ஆர்வமான படிப்பு என்று தெரிந்தால் அந்தப் படிப்பைப் பற்றித் தெரிந்தவர்களிடம் அந்தப் படிப்பு பற்றி முழுமையாக விசாரித்துத் தெரிந்து கொள்ள வேண்டும். அதாவது, அந்தப் படிப்பு படித்தால் கிடைக்கும் வேலைவாய்ப்பு, அதற்கான இடங்கள், சம்பளம் மற்றும் சுயதொழில் வாய்ப்பு போன்றவைகளையும் தெரிந்து கொள்ள வேண்டும். 

இதன் பிறகு, அந்த படிப்பு தமிழ்நாட்டில் எந்தெந்த கல்லூரிகளில் இருக்கிறது? அந்தக் கல்லூரி அரசுக் கல்லூரியா? அரசு உதவி பெறும் கல்லூரியா? அல்லது சுய நிதிக் கல்லூரியா? என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரி என்றால் தங்கள் தேர்வு முதலாவதாக இருக்கலாம். ஏனென்றால் அங்கு தேவையான கட்டிடங்கள், ஆய்வுக்கூடங்கள், நூலகம், இணைய வசதிகள் மற்றும் பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் உட்பட அனைத்து வசதிகளும் செய்யப்பட்டிருக்கும். 

சுயநிதிக் கல்லூரிகளென்றால் முன்பே அந்தக் கல்லூரிக்குச் சென்று, கல்லூரியில் அனைத்து வசதிகளும் செய்யப்பட்டிருக்கிறதா? கல்லூரிக்கு மத்திய / மாநில அரசின் தொடர் அங்கீகாரம் (Continuing Approval / Recognition), பல்கலைக் கழகத்தின் தொடர் இணைப்பு (Continuing Affiliation) பெறப்பட்டிருக்கிறதா? என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும். ஏனெனில் கடந்த கல்வி ஆண்டில் அங்கீகாரம் பெற்றிருக்கும் சில கல்லூரிகளில் அரசு நிர்ணயித்துள்ள போதுமான வசதிகளில்லாமல், வசதி குறைவு காரணமாக அந்தக் கல்வி ஆண்டிற்கான அங்கீகாரம் ரத்து செய்யப் பட்டிருக்கலாம்.

பல சுயநிதிக் கல்லூரிகள் கட்டிடங்களை அழகாகக் கட்டி வைத்திருப்பார்கள். அங்கு தகுதியான பேராசிரியர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் இல்லாத நிலை இருக்கும். இதை எப்படி தெரிந்து கொள்வது? என்பது என்கிற உங்கள் சந்தேகம் நியாயமானதுதான். அங்கு பயிலும் மாணவர்களிடம் விசாரித்துப் பாருங்கள். தாங்கள் தேர்வு செய்துள்ள கல்லூரியின் முதல்வராக இருப்பவர் முன்பு எங்கு பணியிலிருந்தார்? தகுதியானவர்தானா? அவர் இந்தக் கல்லூரியில் சிறப்பாகச் செயல்படுகிறாரா? தேவையான பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் நியமிக்கப் பட்டுள்ளார்களா? அவர்கள் எத்தனை ஆண்டுகளாக இந்தக் கல்லூரியில் தொடர்ந்து பணியில் இருக்கிறார்கள்? என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள். ஏனென்றால் அந்தக் கல்லூரியின் நிர்வாகம் சரியில்லாத நிலையில் பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் அடிக்கடி மாற்றமாகிக் கொண்டேயிருப்பார்கள். இப்படி அடிக்கடி மாற்றமாகிக் கொண்டேயிருக்கும் கல்லூரியில் கல்வியின் தரம் மிகவும் தாழ்ந்துதான் இருக்கும். 

சில கல்லூரிகளில் ஆய்வுக் கூடங்கள் பெயருக்குத்தான் இருக்கும். பாடத் திட்டத்திற்கு ஏற்ற கருவிகளோ, பொருட்களோ அங்கு இல்லாத நிலையிருக்கும். இதை அங்கு படித்து வரும் அல்லது படித்து முடித்த மாணவர்களிடமோ கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். இந்த கல்லூரிகளில் படிப்பதால் படித்து முடித்த படிப்புகளுக்குரிய செயல்முறைப் பயிற்சியில்லாமல் நிறுவனங்களில் நேர்முகத் தேர்வின் போது தவிக்க நேரிடும்.

இதே போல் வளாகத் தேர்வுகளுக்கு கல்லூரி நிர்வாகம் கடந்த ஆண்டு எடுத்த முயற்சிகள் மற்றும் அதில் எந்தெந்த நிறுவனங்கள் பங்கு பெற்றன? எத்தனை மாணவர்கள் பணிக்கான வாய்ப்புகள் பெற்றனர்? போன்ற விபரங்களையும் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். ஏனென்றால் சில கல்லூரிகளில் பெயருக்கு நாம் கேள்விப் படாத சிறு நிறுவனங்களின் பெயரில் வளாகத் தேர்வு நடத்தப்படுகின்றன. இதில் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு போதிய சம்பளம் அளிக்கப்படாமல் சேர்ந்த சில மாதங்களுக்குள்ளேயே அந்த நிறுவனத்திலிருந்து வெளியேற வேண்டிய நிலையிருக்கும். 

இதுபோல் சில கல்லூரிகளில் மாணவர்களிடம் தேவையில்லாமல் அடிக்கடி அபராதம் விதிக்கப்பட்டு உடனடியாகச் செலுத்தச் சொல்லும் நிலையும் உள்ளது. இங்கு கைபட்டாலும் குற்றம் கால்பட்டாலும் குற்றம்தான். நிர்வாகத்தின் பணத் தேவைகளுக்கு ஏற்ப அடிக்கடி அபராதம் விதிக்கும் கல்லூரிகளும் இருக்கின்றன. இந்த கல்லூரிகளையும் நாம் விசாரித்துத் தெரிந்து கொள்ள வேண்டும். ஏனென்றால் இது போன்ற கல்லூரிகளில்  நம் பிள்ளைகளின் படிப்பு போய்விடக் கூடாதே என்கிற நிலையில் அவர்கள் விதிக்கும் அதிக அளவிலான அபராதத் தொகையை  எந்தவித ரசீதுகளுமில்லாமல் அடிக்கடி நாம்செலுத்த வேண்டியிருக்கும். 

கல்லூரி துவங்கப்பட்ட ஆண்டு மற்றும் அதை நிர்வகிக்கும் நிர்வாகிகள் யாரென்பதையும் கூடத் தெரிந்து கொள்ளுங்கள். சில நிர்வாகங்கள் அந்த கல்லூரியில் எந்த வசதியும் செய்து கொடுக்காமல் வேறு புதிய கல்லூரி அல்லது புதிய நிறுவனத்தினை உருவாக்கும் நோக்கத்துடன் கல்லூரிக்கு வரும் பணம் அனைத்தையும் மாற்றி விட்டு கல்லூரியில் பணியிலிருப்பவர்களுக்கு கூட மாதந்தோறும் சம்பளத்தைத் தராமல் இழுத்தடிப்பதுண்டு. இதனால் பணியிலிருப்பவர்களுக்கு பணியில் ஈடுபாடில்லாமல் அந்தக் கல்லூரியில் கல்வியின் தரம் மிகவும் குறைவாக இருக்கும்.

இப்படி சுயநிதிக் கல்லூரிகளில் சில தரம் குறைந்திருந்தாலும் பல சுயநிதிக் கல்லூரிகள் அரசுக் கல்லூரிகளைக் காட்டிலும் அதிகமான வசதிகளுடன் இருக்கின்றன. படித்த அனைவருக்கும் வேலை வாய்ப்புகளையும் பெற்றுத் தந்திருக்கின்றன. இது போன்ற நல்ல சுயநிதிக் கல்லூரிகளைத் தேடித் தெரிந்து கொள்ளுங்கள். அப்போதுதான் உங்கள் பிள்ளைகளின் கல்வி சிறப்பாக அமையும். கூடவே அவர்களது வாழ்க்கையும் சிறப்பாக அமையும்.

-தாமரைச் செல்வி


எப்படா  சூரியன் மறையும்னு தவங்கிடக்கிற  பெண்களை பட்டணம் முதல் பட்டிகாடு வரை பரவலாக காணமுடிகிறது… காரணங்கள் பல  அல்ல ஒன்றே...அது சீரியல்கள் என்கின்றனர் பெண்கள்..

 திண்டிவனம் நகராட்சியில் பெண்களுக்கான பயிற்சியில் சிறப்பு பயிற்சியாளராக வெளிச்சம் செரீன் மற்றும் வெளிச்சம் மாணவர்களை  அழைத்திருந்தனர் நகராட்சி நிர்வாகம்..

தாய்மார்களுக்கும் குழந்தைகளுக்குமான உறவு குறித்து பேச தொடங்கினார் செரின் அவர்கள்..  பெண்கள் தான் சமூகத்தை பிரசவிக்கிற மொத்த பங்களிப்பை பெற்றுள்ளார்கள். சமூகத்தை சரியாக  வளர்த்தெடுக்கிற பக்குவம் ஒவ்வொரு பெண்மனிக்கும் உண்டு. ஏனெனில்  ஒரு தாய் குழந்தையை வளர்த்தெடுப்பதில் இருந்து  கடைசி காலம் வரை பெண்கள்தான்  ஆனால் பெண்கள்  இப்போது

     குழந்தைகளை வளர்ப்பதன் முக்கியத்துவத்தை  உணர்ந்திருக்கிறார்களா என்றால் இல்லை என்று தோன்றுகிறது…
          
 கலை நிகழ்ச்சிகளில் வெளிச்சம் மாணவர்கள்

குழந்தைகள் மீதான தமது பொறுப்பை தட்டி கழிக்கும் பாங்கு பெண்களுக்கு வளர்ந்திருக்கிறது, அல்லது வளர்த்திருக்கிறது இந்த சீரியல்கள். இதன் காரணமாக, பிள்ளைகளோடு பேசுவதில்லை, பிள்ளைகளை வேண்டுமென்றே டியூசன்களுக்கு அனுப்பிவிட்டு  தொடங்குகிறது சீரியல் வாழ்க்கை.. படிக்க தெரியாத  பெண்கள் தான் குழந்தைகளை டியூசனுக்கு  அனுப்புவதற்க்கு எழுத படிக்க தெரியாததால் சொல்லிகொடுக்க தெரியவில்லை என்பதை சீரியல் பார்க்க  காரணமாக சொல்கிறார்கள் என்றால்,..படித்த பெண்களும் இதே காரணத்தை சொல்வதுதான் வியப்பாக இருக்கிறது.


      இதனால்  குழந்தைகள் எல்லா வகையிலும்  சீரழிந்து போவதை காண முடிகிறது.. குறிப்பாக போன வருடம் தஞ்சாவூர் பக்கம் குடிக்க பணம் தரலைன்னு தாயை கொன்ற 5  வகுப்பு மாணவனை பற்றி படிக்கும் போது மனசுக்குள்ள படபடன்னு ஓடுகிறது..கோலங்கள் நாடகத்தோட கடைசி எபிசோட பார்க்க முடியாததல் தீக்குளிச்ச மதுரை மீனா (10 வயசு) மாணவியை மறந்துட்டீங்களா..என சொல்லும் போது தாய்மார்கள்  சிலர் அழுவதை பார்க்க முடிந்தது.. பெண்பிள்ளைகளை வளர்ப்பதை தென்னம்பிள்ளையை வளர்ப்பதை போல கண்ணும் கருத்துமாய் இருக்க வேண்டும். கொஞ்சம் தவிறினால்  இழப்பு நமக்குதான்…. உங்க மகள் அதிகமா சாப்பிடாம  கொஞ்சமா சாப்பிடுவதை பார்த்து இனி கண்டிப்பீங்களா இல்லை, அவ அதிகமா சாப்பிடமாட்டா ன்னு சொல்லி அவ எதிர்காலத்தை நாசமாக்க போறீங்கிளா?.. இனி இந்தியாவில் பிறக்க போகும் பிள்ளைகள் 100%  இரும்பு சத்து குறையா தான்  பிள்ளைகள் பிறக்கும்னு புள்ளிவிவரம் சொல்லுது என்ன செய்ய போறீங்க…என செரின் சொல்லும் போது இனி “மக” சாப்பிடலைன்னா செத்தா” என ஒரு தாய் சொல்ல, எல்லோர் முகத்திலும் புன்னகை..

கொஞ்சம் சிரிக்க விட்டு உங்க பிள்ளையை அடிப்பதை முதலில் நிறுத்துங்கள்… அவர்களுக்கு எப்படி சொன்னால்  புரியுமோ அப்படி சொல்லுங்கள் அதை கண்டுபிடிங்கள்… ஏனெனில்  குழந்தைகள் எல்லோருக்கும் முதல் எதிரி யாருன்னா அப்பா அம்மாதான்னு சொல்லுறாங்க. உங்க பிள்லை நீங்க சொன்னா கேட்காம யார் சொல்லி கேட்பாங்க…என பேச எல்லோர் முகத்திலும் பயம் தெரிந்தது..மெல்ல பேசி முடிக்க  சரவெடியைவிட அதிகமாய் கரவோசை எழ அமர்ந்தார் செரின்.. அதனை தொடர்ந்து வெளிச்சம் மாணவர்களால் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது..

 நிகழ்ச்சி குறித்து பேசிய பெண்மனி ஒருவர்:

           ஒரு தாயாய் நான் எனக்கான கடமையை இதுவரை சரியாக செய்யவில்லை என உணர்கிறேன்., வீட்டுவேலை, குடிகார வீட்டுகாரங்கிட்ட படுற அவஸ்தை, என எங்க கஸ்டத்தை போக்குதுன்னுதான் சீரியல்களை  பார்க்குறோம். அதை மணிக்கணக்கா பார்த்து கொண்டிருப்பதால் பாலாகும் குடும்ப  உறவின் புனிதத்தை வெளிச்சம் வெளிச்சமிட்டுகாட்டியது… எங்களுக்கு கிடைத்தை போல் வெளிச்சம் பரவட்டும் என்றார்....
 நன்றி சொல்லும் பெண்கள்


சமூக இடைவெளிகளால் பொதுக்கல்வியில் இடைவெளிகள் உருவாவதைத் தவிர்ப்பதுதான் நமது நோக்க மாகும். மழலையர் பள்ளியிலிருந்து உயர்நிலைப் பள்ளிவரை, 12 ஆண்டுகள் அளிக்கப்படுகின்ற கல்வி, இந்த இடைவெளிகளைக் குறைப்பதற்கும் அகற்றுவதற்குமான வாய்ப்பாக மாற வேண்டும். கல்வி துவங்கும்போது மாணவர்கள் சமமாக, சமத்துவமாக இல்லை. குடும்பப் பின்னணி, வறுமை, சாதி, வாழ்விடம் கல்விக்கான வசதி வாய்ப்புகள், ஆசிரியர்கள் எண்ணிக்கை, திறமை, அக்கறை, சமூகப் பொறுப்பு, பணிப்பொறுப்பு போன்றவற்றால் சமத்துவமற்ற மாணவர்களாகத்தான் கல்வி யின் துவக்கம் இருக்கிறது. நமது கவலை யெல்லாம் 12 ஆண்டுகள் பள்ளிப்படிப்பை நிறைவு செய்கின்ற வேளையில், இம்மாண வர்களுக்கிடையே கல்வித்தரம், திறன், வாய்ப்பு, வாய்ப்புகளைப் பயன்படுத்தும் விழிப்புணர்வு ஆற்றல் ஆகியவற்றில் நியாய மான சமத்துவத்தை நடைமுறையில் உறுதி செய்வதாக இருக்க வேண்டும்.

பல்வேறு பள்ளிக்கல்வி அமைப்புகள், நிறுவனங்கள் சமூக ஏற்றத் தாழ்வுகளின் அடிப்படையில், சமூக, பொருளாதார, பண்பாட்டு ஏற்றத்தாழ்வுகளை, இடைவெளிகளை அதிகப்படுத்துவதாக அனுபவபூர்வமாக அறிந்துள்ளேம். அதனால் தான் சமூகப் பொறுப்புடையவர்கள், கல்வி யாளர்கள், சமூக நீதி, சமூக ஒற்றுமை, ஒரு மைப்பாடு, சமூக மாற்றம், சமூக முன்னேற்றம் ஆகியவற்றில் அக்கறையும் ஆர்வமும் உடையவர்கள் சமச்சீர் கல்வி முறையை வலியுறுத்தி வருகின்றனர்.

பொதுப்பாடத்திட்டம் ஒன்றின் மூல மாகவே சமச்சீர் கல்வியை கொண்டு வந்து விட முடியும் என்ற நிலையிலான அணுகு முறை நம்மை நாமே ஏமாற்றிக்கொள்வதாகும். சுவாமி விவேகானந்தர் கூறியது போன்று, பின்தங்கிய சூழலிலிருந்து வருகின்ற மழலை யருக்கும், சிறுவருக்கும் அதிக ஆசிரியர், அதிக கவனம் (சம கவனமல்ல) செலுத்தப்படக்கூடிய அளவிற்கு பொதுக் கல்வி அமைய வேண்டும். இன்றும் தொடருகின்ற ஓராசிரியர், ஈராசிரியர், மூவாசிரியர் பள்ளிகள், சமச்சீர்க் கல்வி ஏற்றுக் கொண்டுவிட்ட நமது மாநிலத்தின் அவமானச் சின்னங்களாகும்.

குறைந்தபட்சம் மாநிலம் முழுவதும் துவக்கப்பள்ளிகளில் வகுப்பிற்கு ஒரு ஆசிரியர் என்பதை இந்தக் கல்வியாண்டிற் குள் உறுதி செய்யாவிட்டால், மிகுந்த எதிர் பார்ப்புகளை உருவாக்கியுள்ள இந்த அரசின் சமச்சீர் கல்வித்திட்டம், ஒரு கண்துடைப்பாகவும், மோசடியாகவும் மாறிவிடக்கூடும்.

நலிந்த பிரிவு மாணவர்கள் மழலைச் சிறுவர்கள் பயிலும் கிராமப்புற, பின்தங்கிய பகுதிப்பள்ளிகளில் மாணவர் ஆசிரியர் விகிதத்தை மேம்படுத்தி கூடுதல் ஆசிரியர்களை இந்தக் கல்வி ஆண்டின் இறுதிக்குள் முறையாக நியமித்திட வேண்டும். அதற்கான போதுமான நிதி ஒதுக்கீடும் அறிவிக்கப்படவேண்டும்.

சமச்சீர் கல்வியின் துவக்கம், பாடத் திட்டத்திலிருந்து துவங்குவது, அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் தருகிறது. சமச்சீர் கல்விக்கான ஒரு கல்வித்திட்டத்தை உருவாக்காமல், பொதுப்பாடத்திட்டம் என்பது வருத்தத்தைத் தருகிறது. கல்வித்திட்டம் என்பதை வகுத்த பின்னர் தான் அதன் ஒரு பகுதியான பாடத்திட்டம் பற்றி விவாதம் துவங்கியிருக்க வேண்டும்.
சமச்சீர் கல்வி என்பதை பாடத்திட்டம் என்பதாக சுருக்கிவிட்ட, கொச்சைப்படுத்தி விட்ட போக்கு, இந்திய சட்ட அமைப்பில் வழிகாட்டு நெறிகளில் வற்புறுத்தப்பட்ட ஒரு நியாயமான, முற்போக்கான சமத்துவ சமுதாய உருவாக்கத்திற்கு எதிரான சதியாகவே அய்யம் கொள்ள வேண்டியுள்ளது.

வசதியான சமூகப்பிரிவுகளை, குடும்பங்களைச் சார்ந்த மழலையருக்கு கல்வி, இரண்டரை வயதில் மழலையர் பள்ளிகளில் துவங்குகிறது. சாமானியர் ஏழைவீட்டுப் பிள்ளைகளின் கல்விப்படிப்பு 5 வயதில் ஆரம்பிக்கிறது. இந்த இரண்டரை ஆண்டு கால இடைவெளியை எங்கு, எப்படி நிறுவப் போகிறோம்? இந்த இடைவெளியை வைத்துக்கொண்டு சமச்சீர் கல்வி என்பதை எவ்வாறு அடையமுடியும்?

பொதுப்பள்ளிக் கல்வித்திட்டம்
கல்வித்திட்டம் என்பது மழலையர் சிறுவர்களின் வயது, வேறுபட்ட குடும்ப, சமூகப் பின்னணி ஆகியவற்றை கருத்தில் கொண்டு, எந்தெந்தக் கூறுகளை பொதுக் கல்வித்திட்டத்தில் இணைக்க வேண்டும் என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும்.
குறைந்தபட்ச கல்விச்சாதனத் தேவைகளையும் கல்வித் திட்டம் வரையறுக்க வேண்டும். பொதுப் பள்ளிக் கல்வி எளிமையாக, இனிமையாக, உற்சாகமூட்டக்கூடியதாக, மழலையர் சிறுவர்களின் அறிவையும், திறனையும் மேம்படுத்தக் கூடியதாகவும் இருப்பதற்கு இந்த சமச்சீர்க் கல்விக்கான கல்வி திட்டத்தினை கல்வியாளர்களுடனும் சமூக ஆர்வலர்களுடனும் கலந்து பேசி உருவாக்க வேண்டும்.
கல்வி என்பது வலிமைக்கான கருவி என்று கூறுவது இன்றைய மரபு. ஆனால், காரல் மார்க்ஸின் கருத்துப்படி, கல்வி என்பது வலிமையுள்ளவர்களின் அதிகாரப்பீடங்களின் கருவியாகவே இருந்து வந்துள்ளது. மதவாதிகள் அதிகாரத்திலுள்ளபோது மதவாத அரசு நடைபெறும் போது மதக் கல்வியினைத் திணித்து, அதன் மூலமாக தங்களை நியாயப்படுத்தவும், தெய்வீகப்படுத்தவும், வலிமைப்படுத்தவும் முனைவர்; இனவெறி அரசுகளோ (ஹிட்லரின் நாசி அரசு) இனவெறிக்கல்வியைக் கருவியாக பயன் படுத்துவர், அரச வம்சங்களோ தங்களது வம்சங்களை புனிதப்படுத்தக் கல்வி அமைப்புகளைப் பயன்படுத்தினர்.
ஆங்கில காலனியாதிக்கத்தின்போது, கல்வித்திட்டமும், பாடத்திட்டமும், ஆங்கிலேய நாகரிகத்தின் பெருமையையும், ஆங்கில ஆட்சியின் நியாயத்தையும் தேவையை யும் வலியுறுத்தவே கருவிகளாகப் பயன்பட்டன.
இதே அடிப் படையில்தான் உழைப்பே இல்லாமல், தர்மங்களின் பெயரால், உழைக்கும் மக்களைச் சூத்திரரென்றும், பஞ்சமரென்றும் முத்திரையிட்டு சுரண்டி வந்த தர்மராஜ்யங்களின் கருவி யாகத்தான் மனுஸ்மிருதி போன்ற மிருதிகளும், பிற தர்ம சாத்திரங்களும் கல்வித் திட்டத்தில் இடம்பெற்றன.

இன்று ஜனநாயக யுகம்; மக்களாட்சியில் மக்களது அதிகாரம் என்றால், மக்களுக்கு நியாயமும் நீதியும் தருகின்ற, மக்களிடையே ஏற்றத்தாழ்வுகளைக் களைகின்ற, சாதிவர்க்கபேதங்களால் பாதிக்கப்படாத, முற்போக்கான, பகுத்தறிவிற்கு இசைவான பொதுக்கல்வி, அதுதான் சமச்சீர் கல்வியாக இம்மக்களை வலிமைப்படுத்தும் கருவியாக மாற்றப்பட வேண்டும்.

ஆங்கிலம் தேவையும் மோகமும்
எனவே இந்தச்சூழலில் ஆங்கிலம் வலிமைக்கான கருவி என்ற வாசகம் சில குழப்பங்களை, சில அச்சங்களைத் தோற்றுவிப்பதாக இருக்கின்றது. ஆங்கிலத்தின் தேவையை நாங்கள் மறுக்கவில்லை. ஆனால் ஆங்கிலத்தின் மீதான மோகத்தை நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. ஆங்கிலம் வேண்டாம் என்ற கோரிக்கையும், ஆங்கிலமே பாட மொழியாக இருக்க வேண்டும் என்ற கோரிக்கையும் இரண்டுவிதமான முரண்பட்ட தீவிரத் தன்மை கொண்ட கோரிக்கைகளாகும்.

வட்டார மொழிக்கல்வியை வலியுறுத்து கிறோம். அதே நேரத்தில் ஆங்கில மொழியை சரிவரக் கையாளுகின்ற திறனை 10 வது வகுப்பு முடிவதற்குள் மாணவருக்கு உறுதி செய்யும் பொறுப்பும் நமக்கு உண்டு. மொழியும் மொழிவழிப்பாடமும் புதிய சமூக இடைவெளிகளைத் தோற்றுவிக் காமல் சமச்சீர் கல்வியை உருவாக்குவதற்கு பொறுப்பானவர்கள் சிந்திக்க வேண்டும். செயல்படவேண்டும். அடிப்படையான அடிக்களம்

சமச்சீர் கல்வி ஒரு தேசியத் தேவை. இந்தக் கோரிக்கையின் அடிப்படையான உளப்பாங்கு பரிதாப உணர்வோ, பரிவுணர்ச் சியோ அல்ல. ஏதோ இல்லாதவர்களுக்கு ஒரு கவளம் உணவை தாராள(?) மனப் பான்மையுடன் தருவதைப் போன்ற மேட்டுக்குடி அணுகுமுறை, ஜனநாயக சமத்துவ நோக்கங்களுக்கு முரணானது.

எனது சக சமூக உறுப்பினர்களும் நிறைவாக இருக்க வேண்டுமெனவும் ஒரு உளப்பாங்கு இதில் தேவை.

(27 நவம்பர் 2009 தீக்கதிர் கட்டுரையிலிருந்து)
- அ.கருணானந்தன்

நன்றி: கீற்று தளம்


சாதிகள் இல்லையடி பாப்பா என  பாடிய காலம் போய்..எங்கும் சாதிகள் எனும் தீ பரவிபோய்… சாதி பேய்பிடித்தாடுவது தான் கொடுமை..

தீண்டாமை கொடுமையால் அருகிலுள்ள பள்ளியில் பயில முடியாமல், 4.5 கி.மீ., தொலைவில் உள்ள பள்ளிக்கு செல்லும் பரிதாபமான நிலை, சத்தி அருகேயுள்ள கிராம குழந்தைகளுக்கு ஏற்பட்டுள்ளது.

சத்தி அருகே செண்பகப்புதூர் பஞ்சாயத்துக்குட்பட்டது குட்டை மேட்டூர் காலனி. இங்கு 100 குடும்பங்களை சேர்ந்த தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கின்றனர். அனைவருமே கூலித்தொழில் செய்து வரும் ஏழைகள்.இப்பகுதி மாணவர்கள் பள்ளிக்கல்வியை துவங்க வேண்டுமானால், 4.5 கி.மீ., தொலைவிலுள்ள நஞ்சப்பக்கவுண்டன் புதூர் நடுநிலைப்பள்ளிக்கு செல்ல வேண்டியுள்ளது.ஏன் இந்த கொடுமை; அருகில் ஏதும் பள்ளிகள் இல்லையா? என்ற கேள்வி எழுகிறது.காலனிக்கு அருகிலேயே 1.5 கி.மீ., தொலைவில் குண்டி பொம்மனூரில் யூனியன் நடுநிலைப் பள்ளி உள்ளது. ஆனால், அங்கு தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த குழந்தைகளை சேர்க்க, ஜாதிக் கொடுமை குறுக்கே நிற்கிறது.


குண்டிபொம்மனூரில் பெரும்பான்மையாக வசிக்கும் மக்கள், தங்கள் ஊரில் உள்ள யூனியன் பள்ளியில், குட்டை மேட்டூர் காலனியை சேர்ந்த குழந்தைகள் கல்வி பயில, எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். பல ஆண்டுகளாக தொடரும் இவர்களது எதிர்ப்பை சமாளிக்க முடியாமல், குட்டை மேட்டூர் காலனி மக்கள், வேறு வழியின்றி நஞ்சப்பக்கவுண்டன் புதூர் பள்ளிக்கு அனுப்பி வருகின்றனர். குழந்தைகளும் தினமும் ஒன்பது கி.மீ., பாத யாத்திரை செல்கின்றனர்.இப்பள்ளிக்கு செல்ல பிஞ்சு குழந்தைகள் நீண்ட தூரம் நடக்க வேண்டும் என்பதை விட, எந்நேரமும் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படும் சத்தி - கோவை தேசிய நெடுஞ்சாலை மற்றும் சத்தி - மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையைக் கடப்பதுதான் பெரும் சோதனை.


அந்தளவுக்கு குண்டி பொம்மனூரில் தீண்டாமை கொடுமை நிலவுகிறது. இங்குள்ள நடுநிலைப்பள்ளியில் 70 மாணவர்கள் கல்வி பயில்கின்றனர். இவர்களில் 64 பேர் ஒரு சமூகத்தையும், ஆறு பேர் மற்றொரு சமூகத்தையும் சேர்ந்தவர்கள். தாழ்த்தப்பட்ட மாணவர்கள் எவரும் பல ஆண்டுகளாக பயின்றதில்லை என்பது இப்பள்ளியின் வரலாறு.


இப்பள்ளி ஆசிரியர்கள் கூறுகையில், "குழந்தைகளை சேர்ப்பதில் நாங்கள் எந்த பாகுபாடும் பார்ப்பதில்லை. இங்கு நிலவும் எதிர்ப்பால், குட்டைமேட்டூர் காலனி மக்கள் இங்கு குழந்தைகளை சேர்ப்பதை நிறுத்திக் கொண்டனர்' என்றனர்.தங்கள் குழந்தைகளுக்கு நேர்ந்த கொடுமையைப் பற்றி வெளிப்படையாக கூறவும், குட்டைமேட்டூர் காலனி மக்கள் தயங்குகின்றனர். ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் 32 மாணவர்கள் இரண்டு தேசிய நெடுஞ்சாலைகளைக் கடந்து, நான்கரை கி.மீ., நடந்து, நஞ்சப்பகவுண்டன் புதூர் பள்ளிக்கு செல்வதை பார்க்க பரிதாபமாக உள்ளது.ஜாதிய ஒடுக்கு முறை பள்ளி செல்லும் மாணவர்களைக் கூட விட்டு வைக்கவில்லை என்பது வேதனைக்குரியது.


  நன்றி: தினமலர்



கல்லூரி மானவர்கள்
 
கல்வித் தரம் சிறப்பாக உள்ளது என  நம் ஆட்சியாளர்கள் மார்தட்டிக் கொள்கின்றனர். பள்ளிக் கல்வியானாலும், உயர் கல்வியானாலும் கல்வியின் தரம் பாதாளத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என பட்டியலிடுகிறார், அண்ணா பல்கலையின் முன்னாள் துணைவேந்தரும், மத்திய அரசு பணியாளர் தேர்வாணையக் குழு முன்னாள் உறுப்பினருமான பாலகுருசாமி., மோசமான உள்கட்டமைப்பு, தரமில்லாத பாடத்திட்டம், தேர்வில் முறைகேடு என, குறைகள் பல உள்ளதால், கற்பிக்கும் கல்வியில் தரம் இல்லை. தனி மனிதனின் வளர்ச்சி தான் சமூக வளர்ச்சி; சமூக வளர்ச்சி தான் நாட்டின் வளர்ச்சி. வளர்ந்த நாடுகளில் உயர்கல்வி பெறுவோர், 40-50 சதவீதம். நம் நாட்டில் இது, 10 சதவீதம் மட்டுமே. இதை அடுத்த ஐந்தாண்டுகளில், 15 சதவீதமாக உயர்த்த நிறைய கல்லூரிகளும், பல்கலைக்கழகங்களும் தேவை. பள்ளிக் கல்வியை முடிக்கும் மாணவர் சதவீதத்தை உயர்த்த, அரசு நடவடிக்கை எடுத்தால் தான், உயர்கல்வியில் சேருபவர் எண்ணிக்கை உயரும்.  அதற்கேற்ப ஆசிரியர்கள், அர்ப்பணிப்பு உணர்வுடன் பாடம் நடத்த வேண்டும். ஆழமாக கற்பிக்க வேண்டும்; நுனிப்புல் மேயக் கூடாது.

 ஆசிரியர் பற்றாக்குறை


 

பாலகுருசாமி

தனியார் பள்ளிகளில் குறைந்த சம்பளம்; அதிக பொறுப்புகள்; இதனால் தேர்ச்சி சதவீதம் அதிகம். அரசுப் பள்ளிகளில் அதிக சம்பளம் பெறும் ஆசிரியர்களில் பலர், தங்கள் பொறுப்பை உணர்வதே இல்லை. இன்று கல்வித் தரம் வீழ்ச்சி அடைய, அர்ப்பணிப்பு உணர்வு இல்லாத ஆசிரியர்களே காரணம்.பள்ளியானாலும், கல்லூரியானாலும், ஆசிரியர்களுக்கு திறமைக்கேற்ப சம்பளம், ஊக்க ஊதியம் நிர்ணயிக்க வேண்டும். மதிப்பெண்ணை இலக்காக கொண்ட தேர்வு முறைகள் மாற்றப்பட வேண்டும். நல்ல பண்புகள் இல்லாத கல்வி, வாழ்க்கைக்கு உதவாது. கல்விக்கு ஒதுக்கப்படும் தொகையை செலவாக கருதாமல், முதலீடாக கருதி, உயர்கல்விக்கான பட்ஜெட் ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும்.  தமிழக பொறியியல் கல்லூரிகளில் படித்து முடிக்கும் மொத்த மாணவர்களில், 15 சதவீதத்தினர் மட்டுமே வேலைக்கு தகுதியானவர்களாக உள்ளனர். இலவசங்களை அளிப்பதற்கு பதிலாக, கல்வி, மருத்துவ மையங்களின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தலாம்.  வேலை தரும் நிறுவனங்களால் நிராகரிக்கப்படும், பி.இ., பட்டதாரிகள், தனியார் பொறியியல் கல்லூரிகளில் குறைந்த சம்பளத்தில் ஆசிரியர்களாக சேரும் அவலம் உள்ளது.

இவர்களிடம் படிக்கும் மாணவர்களின் தரம் எப்படி இருக்கும்? பள்ளி, கல்லூரி படிப்பின் போதே, ஆங்கிலத்தில் பேசும் திறன், குழு கலந்தாய்வு, மேடைப் பேச்சு, தலைமை பண்பு ஆகிய திறன்களை வளர்க்க பயிற்சி அளித்தால், படித்து முடிக்கும் அனைவராலும் வேலை பெற முடியும். ஆசிரியர் பயிற்சி மற்றும் நியமனத்துக்கு நீண்டகால திட்டம் வகுத்து, முதலில் தரமான ஆசிரியர்களை உருவாக்க வேண்டும்.தமிழில் பொறியியல் படிப்பு கொண்டு வருவதில் எனக்கு உடன்பாடு கிடையாது.அதற்கான பாடத் திட்டம், புத்தகங்களை முதலில் உருவாக்க வேண்டும். தமிழகத்தில் படிப்பை முடிப்பவர்கள் அனைவருக்கும் இங்கேயே வேலை கிடைப்பதில்லை. தேசிய அளவிலும், உலகளவிலும் கொட்டிக் கிடக்கும் வேலை வாய்ப்புகள், மாணவர்களின் இலக்காக இருக்கும் போது, தமிழில் மட்டுமே பொறியியல் பாடங்களை படிப்பது, வேலை பெற எந்த வகையிலும் உதவாது.

தொழில் துறையினரின் தேவைகளை கேட்டறிந்து, அதன் அடிப்படையில் பாடங்களை வடிவமைப்பது வேலையில்லா திண்டாட்டத்தை போக்கும்.நம் கல்லூரி, பல்கலைகள் மீது மக்களுக்கு நம்பகத்தன்மை இல்லை. மக்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகளுக்கு எந்த பல்கலையும் தீர்வு காண முன்வராததே காரணம்.பல்கலை துணைவேந்தர்கள் மக்கள் பணத்தில் அடிக்கடி வெளிநாடு செல்ல தடை விதிக்க வேண்டும். காரணம், வெளிநாடு சென்று திரும்புபவர்கள், ஆராய்ச்சியை மேம்படுத்தவோ பாடத்திட்டங்களில் புதுமையை புகுத்தவோ முயற்சிப்பதில்லை.பல்கலை துறைகளின் புதிய கண்டுபிடிப்பு, பதிவு செய்துள்ள காப்புரிமை எண்ணிக்கை, தேர்ச்சி சதவீதம் உள்ளிட்ட விஷயங்கள் குறித்து ஒவ்வொரு ஆண்டு இறுதியிலும் துணைவேந்தர்களை அரசு கேள்வி எழுப்ப வேண்டும். சிறப்பாக செயல்பட்ட துணைவேந்தர்களுக்கு மட்டும் அனைத்து சலுகைகளும் வழங்கலாம்.அரசுக்கு நெருக்கமான யார் வேண்டுமானாலும் துணைவேந்தராகும் அவலத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். கல்வித் துறை மட்டுமல்ல, அனைத்து துறைகளின் செயல்பாடுகளும் வெளிப்படையானதாக இருக்க வேண்டும். குறிப்பாக, மாணவர் சேர்க்கை, ஆசிரியர் நியமனம், பதவி உயர்வு, பாடத்திட்டம் வடிவமைப்பு, விடைத்தாள் மதிப்பீடு, நிதி நிர்வாகம் ஆகியவை வெளிப்படையாக இருக்க வேண்டும். இது அரசின் மீது மக்களுக்கு நம்பிக்கையை வரவழைக்கும்.

 நன்றி: தினமலர்

''என் கணவர் வெளிநாட்டில் பணிபுரிகிறார். இரண்டு மகன்கள் பள்ளி செல்கிறார்கள். சமீபத்தில் அவர்களின் கல்வி மற்றும் பொது அறிவுப் பயன்பாட்டுக்காக எங்கள் வீட்டு கம்ப்யூட்டரில் நெட் கனெக்ஷன் கொடுத்தோம். சென்ற மாத இன்டர்நெட் பயன்பாட்டுக்கான பில் தொகை ஆச்சர்யப்படும்படி உயர்ந்திருப்பதைப் பார்த்தேன்.
ஏழாம் வகுப்பு படிக்கும் என் இளைய மகன், பின்னிரவில்.. யாரும் அறியாத நேரத்தில்.. ஆபாச வலைதளங்களைப் பார்ப்பதை சென்ற வாரம்தான் கண்டுபிடித்தேன். அவனிடம் ஏதும் கேட்கவில்லை. ஆனால், அன்றில் இருந்து ரிப்பேர் என்று சொல்லி இன்டர்நெட் செயல்பாட்டை முடக்கி வைத்திருக்கிறேன். அவனோ, அதைச் சரி செய்யச் சொல்லி தினமும் நச்சரித்தபடியே இருக்கிறான். கணவரிடமும் இன்னும் தகவலைச் சொல்லவில்லை.
இத்தனை சின்ன வயதில் இவ்வளவு மோசமான படங்களைத் தேடும் அளவுக்கு அவன் மனம் கெட்டு விட்டிருக்கிறது. இது அவன் வாழ்க்கையையே சிதைத்து விடுமோ என்று பயமாக இருக்கிறது. இதிலிருந்து அவனை எப்படி மீட்பது? மோசமான வலை தளங்களைப் பார்க்க முடியாதபடி இன்டர்நெட் சேவையை மாற்ற முடியுமா? வழி காட்டுங்களேன்!''

தே.ரன்தீப் ராஜ்குமார், மருத்துவ உளவியல் நிபுணர், திருச்சி:


''ஏழாம் வகுப்பு மாணவன் ஆபாசப் படம் பார்க்கிறான் என்பது நமக்கு வேண்டுமானால் அதிர்ச்சியான செய்தியாக இருக்கலாம். ஆனால், இந்தக் காலத்தில் இது மிக மிக சாதாரணமான ஒன்றுதான். இந்தக் கால உணவு முறை மற்றும் பழக்க வழக்கங்களால் பெண் குழந்தைகள் சீக்கிரமே பருவம் அடைந்து விடுவது இல்லையா? அப்படித்தான் இதையும் பார்க்க வேண்டும்.


குழந்தையும் அல்லாத, வளர்ந்த வாலிபனும் அல்லாத வயது, உங்கள் மகனுக்கு. இந்த வயதில் இப்படிப்பட்ட விஷயங்களைத் தெரிந்துகொள்வதில் அளவு கடந்த ஆர்வம் இருப்பது இயல்புதான். அந்த ஆர்வம் உங்கள் மகனுக்கு வந்து விட்டது. இனி, ஆபாசப் படங்கள் பார்க்கக் கூடாது என்று அவனைக் கட்டுப்படுத்துவதோ, இன்டர்நெட்டைத் துண்டிப்பதோ கூடாது. வீட்டில் அது கிடைக்காவிட்டால் தெருவுக்குத் தெரு இருக்கும் பிரவுஸிங் சென்டர்களுக்குப் போய் அதைப் பார்க்க அவனுக்கு அதிக நேரம் ஆகாது.

அந்தக் காலத்திலும் இந்தப் பருவத்துக் குழந்தைகளுக்கு இதே ஆர்வம் இருந்திருக்கும். ஆனால், பாலியல் எண்ணங்களைத் தூண்டும் விதமான மஞ்சள் பத்திரிகைகளோ, அயல்நாட்டில் இருந்து வரும் இதற்கான பத்திரிகைகளோ அத்தனை சுலபமாக அவர்கள் கையில் கிடைக்காது. ஆனால், இந்தக் காலத்தில் இணையத்தின் புண்ணியத்தில் எல்லோருக்குமே அது எளிமையாக.. இலவசமாகக் கிடைக்கும் நிலை வந்துவிட்டது. தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் ஏற்பட்டிருக்கும் பக்க விளைவு இது. இதை நாம் ஏற்றுக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.
இணையதளம் மட்டுமல்ல.. பாலியல் உணர்வுகளைத் தூண்டும் விதமான சினிமாக்கள், டி.வி நிகழ்ச்சிகள், பத்திரிகைகள் போன்றவற்றை இன்றைய தலைமுறைகள் 'ஜஸ்ட் லைக் தட்' பார்த்துவிட்டு எந்த பாதிப்புமின்றி சகஜமாகத்தானே இருக்கிறார்கள். அப்படி சகஜமாக உங்கள் மகனும் இருந்துவிட்டால், கவலைப்படு வதற்கு ஒன்றுமில்லை.
ஆனால், ஒன்று.. இணையத்தில் காணக்கிடைக்கும் ஆபாசக் காட்சிகளில் பல, மிருகத்தனமான உடலுறவுக் காட்சிகளாகவும் இருக்கலாம். சிறு வயதுப் பிள்ளைகள் அதைப் பார்க்கும்போது அவர்களின் எண்ணம் முழுக்க அந்தக் காட்சிகள் நிறைந்து, அவர் களது இயல்பு வாழ்க்கையே பாதிக்கப் பட்டு விடக் கூடும்.
எனவே, வாலிப வயதுக்குள் காலடி வைக்கத் துடிக்கும் உங்கள் மகனின் ஆர்வக் கோளாறுக்கு சரியான வடிகால் வேண்டும். எப்படியேனும் அவன் தெரிந்துகொள்ளவிருக்கும் பாலியல் உண்மைகளை முறையாக நீங்களே அவனுக்குத் தெரியப்படுத்துங்கள். எப் படி என்கிறீர்களா?
முறையான பாலியல் கல்விப் புத்தகங்களை அலமாரியில் அடுக்கி வையுங்கள். இணைய தளங்களுக்கான உங்களது ஃபேவரிட் ஃபோல்டரில் முறையான பாலியல் கல்வியைத் தரும் இணையதள முகவரிகளை சேகரித்து வையுங்கள். மறைப்பதும் மறுப்பதும்தான் வளரும் பருவத்தினருக்கு அர்த்தமற்ற ஆர்வத்தைத் தூண்டிவிடும்.
இது தவிர, பிள்ளைகளின் உடலையும் மனதையும் சீராக வைத்திருக்க யோகா, தியானம், உடற்பயிற்சி, விளையாட்டுகள் போன்றவற்றில் சேர்த்துவிட்டு, அவனுடைய கவனத்தை திசை திருப்புங்கள்.
இதுவரை அவனிடம் நீங்கள் வெளிப்படையாக எதையும் கேட்காதது நல்லது. இனியும் அப்படியே இருங்கள். பிள்ளைகளின் படிப்பு, சமூக உறவு, தனி மனித ஒழுக்கம் ஆகியவற்றில் பிறழ்வு இல்லாதவரை அவர்கள் இப்படிப்பட்ட சின்ன சின்னத் தடுமாற்றங்களுக்கு உள்ளாவதில் குற்றம் ஒன்றுமில்லை. வயதில் சிறியவர்கள் என்றபோதும் அவர்களுக்கான அந்தரங்கமும் புனிதமானதுதானே!''

'தொழில்நுட்ப ரீதியில் இதற்குத் தீர்வு காண முடியுமா?' என்ற கேள்விக்கு பதில் தருகிறார், பி.பிரகாஷ் அருள்ராஜ், இணைய ஆலோசகர், திருச்சி:
''இன்டர்நெட் இணைப்புக்கான 'மோடம்'-ஐப் பெறும்போது, சற்று கூடுதலாக செலவிட்டு 'net gear route' என்ற உபகரணத்தையும் பெற்றுக் கொள்ளுங்கள். இது அலுவலகங்களில் இணைய பயன்பாட்டை முறைப்படுத்த உதவும் கருவி. தேவையான தளங்களை மட்டும் வைத்துக் கொண்டு விரும்பத்தகாத தளங்களை துண்டிக்க இது வழி வகுக்கும்.
குழந்தைகளின் பயன்பாட்டுக்கு ஏற்றவகையில் பிரௌசிங்கை முறைப்படுத்த இலவச மற்றும் கட்டண சாஃப்ட்வேர்கள் இணையத்திலேயே ஏராளமாகக் கொட்டிக் கிடக்கின்றன.
இணையத்தின் பிரபல ஸர்ச் இன்ஜின்கள் அனைத்துமே ஆபாச வெப்சைட்டுகளை நம் முன் தேடிக் கொட்டும். உங்கள் பிரௌசரில் அதற்கு வழி தராமல், பி.பி.சி போன்ற பாதுகாப்பான சர்ச் இன்ஜினை மட்டுமே தேடலுக்கு நிறுவுங்கள்.
கம்ப்யூட்டரை எப்போதும் ஹாலில் வையுங்கள். பெட்ரூம், ஸ்டடி ரூம் போன்றவை தவறு செய்யத் தூண்டும். இன்டர்நெட் சேவையை வழங்கும் நிறுவனங்கள் மூலம் இன்டர்நெட் பயன்பாட்டை ஒழுங்குபடுத்தும் வசதி முறை மிக விரைவிலேயே நம் நாட்டில் வர இருக்கிறது. இதுபோன்ற பெற்றோர்களின் கவலைக்கு அப்போது முழுமையான விடிவு பிறக்கும்.''

நன்றி: அவள் விகடன்

 தமிழகத்தில் எழுத்தறிவு விகிதம் 6.8 சதவீதமாக அதிகரித்துள்ளது. இந்தியா அளவில் எழுத்தறிவில் தமிழகம் 13-வது இடத்தில் உள்ளது.


2011-ம் ஆண்டு மக்கள் தொகை கண்க்கெடுப்பின்படி இந்தியாவில் அதிக மக்கள் தொகையுள்ள மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் 7-வது இடத்தை தக்க வைத்துள்ளது. 

பெண்கள் எண்ணிக்கை அதிகரிப்பு

தமிழகத்தில் ஆயிரம் ஆண்களுக்கு 995 பெண்கள் விகிதம் உள்ளது. இதுவே கடந்த 2001-ம் ஆண்டில் ஆயிரம் ஆண்களுக்கு 987 பெண்களாக இருந்தது.

இந்திய மக்கள் தொகை 17.64 சதவீதம் அதிகரித்துள்ளது. தமிழகத்தின் மகக்ள் தொகை 15.60 சதவீதம் அதிகரித்துள்ளது. தற்போதைய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி மாநிலத்தில் உள்ள பெண்களை விட 1 லட்சத்து 78 ஆயிரத்து 784 ஆண்கள் அதிகம் உள்ளனர். 

குழந்தைகள் எண்ணிக்கை குறைவு

தமிழகத்தில் 3 கோடியே 61 லட்சத்து 58 ஆயிரத்து 871 ஆண்களும், 3 கோடியே 59 லட்சத்து 80 ஆயிரத்து 87 பெண்கள் உள்ளனர்.கடந்த 2001-ம் ஆண்டில் தமிழகத்தில் 6 வயதுக்குட்பட்ட குழந்தைகள் 72 லட்சத்து 35 ஆயிரத்து 160 பேர் இருந்தனர். ஆனால் தற்போது 68 லட்சத்து 94 ஆயிரத்து 821 பேர் தான் இருக்கின்றனர். 

இது தவிர தமிழகத்தில் எழுத்தறிவு விகிதம் 6.8 சதவீதமாக அதிகரித்துள்ளது. இந்தியா அளவில் எழுத்தறிவு விகிதத்தில் தமிழகம் 13-வது இடத்தில் உள்ளது.
Tamil Nadu literacy rate has increased 6.8%. According to census 2011, TN has retained its position as the seventh most populous state in the country. The male population in the state has outnumbered the female population.