.
புன்னகையுடன் |
வெளிச்சம் மாணவர்களின் கல்வி பயணத்தில் இந்த சந்திப்பை ஒரு அங்கிகாரமாகவே கருதுகிறோம்...
இருவாரங்களுக்கு முன்பு சென்னை வேல்ஸ் பல்கலைகழகத்தில் நடைபெற்ற 18வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் சிறப்பு விருந்தினராக கல ந்து கொள்ள வருகை தந்திருந்த அவரின் சார்பாக அவரது நண்பர்கள் வெளிச்சம் மாணவர்களிடம் இந்த தகவலை சொன்னபோது நாம் நம்மை கிள்ளிகூட பார்த்தோம்.ஏதுமற்ற நிலையில் நிற்கும் நம் பணியை மதித்து அழைத்தது 2018ல் நிலவிற்க்கு சுற்றுலா செல்ல சந்திராயன் கையருகே நிலவு அய்யா.மயில்சாமி அண்ணாதுரை அவர்கள் என்பதால்...
சரியாக மாநாடு முடித்த சிறிது நேரத்தில் நம்மை தொடர்புகொண்ட அரிமா டாக்டர்.சிவக்குமார். உங்களை முதலில் அய்யா சாப்பிடசொன்னார் என சொன்னபொழுது காலையில் இருந்து சாப்பிடாமல் இருந்த மாணவர்களின் பசியை அறிந்த தாய்தான் நமக்கு ஞாபகத்தில் நிற்க.. நாம் நகர்ந்தோம் சாதாரணமானவர்கள் கூட கொஞ்சம் அலட்டிகொள்ளும் காலத்தில் எதார்த்த மனிதர்களைபோல் எளிமையாய் புன்னகையோடு நம்மை வரவேற்றார். முன்பின் தெரியாத மாணவர்கள் அவரின் எளிமையை கண்டு ஆச்சிரியப்பட்டார்கள்..
சாப்பாட்டை முடித்ததும் வேல்ஸ் பல்கலைகழகத்தின் நூலகத்தில் சரியாக 2.30 மணிக்கு நம் மாணவர்களை சந்தித்தார்..
மாணவர்கள் வலியை சொல்லும்போது |
வெளிச்சம் மாணவர்களின் செயல்பாடு மிகச்சிறப்பாக இருக்கிறது. இது இந்தியாவில் கல்விக்கான மக்கள் இயக்கமாக வளரும் என்கிற நம்பிக்கை இருக்கிறது என்று வாழ்த்தினார்..
மாணவர்களுடன் |
ஒரு மணி நேர உரையாடலில் வெளிச்சம் மாணவர்களின் வலிகளை உணர்ந்தவராய் தன்னுடன் வந்திருந்த பேசியபடி நகர்ந்தார்..
வலிகளை உணர்தவர்கள் மட்டுமே சிறந்த வழிகாட்டியாக இருக்கமுடியும் என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டுகளில் இவரும் இவர் நண்பர்களும் அடங்குவர் ..
மொத்த படங்களை பார்க்க:
மொத்த படங்களை பார்க்க:
Mylsamy Annadurai with Velicham Students |
உங்கள் பயனம் இனிதே தொடர வாழ்த்துக்கள்!
வெளிச்சம் சிறக்க வாழ்த்துக்கள்
இணையங்களில் இலக்கியம் படித்து மகிழுங்கள் .
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
www.eraeravi.com
www.kavimalar.com
eraeravi.wordpress.com
eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் செய்வோம் !!!!!
All the best....
உங்கள் பயனம் இனிதே தொடர வாழ்த்துக்கள்