சுதந்திர தினம் குடியரசு தினங்கள் வந்தால் கொடியை ஏற்றி மிட்டாய் கொடுத்துவிட்டு, கொஞ்சம் காசு அதிகமிருந்தால் நோட்டு புத்தகங்களை வாங்கி கொடுத்துவிட்டு தன் கடமை முடிந்து விட்டதாக ஒதுங்கி ஓரமாய் நின்றுகொண்டு.. இது என் தாய் நாடு இந்தியா… நாமெல்லாம் இந்தியர்கள் ஒரு தாய் பிள்ளைகள் என சொல்லி கொள்ளவது தவறு… சக மனிதன் பாதிக்கப்பட்டால் நமக்கு ஏன் வம்புன்னு நிற்காமல் நாமும் துடிக்க வேண்டும்… ஒரு “பய” திருந்த மாட்டான்னு நாமும் வேதாந்தம் பேசாமல், நமக்கான பணியை தொடங்கிய வெளிச்சம் மாணவர்களின் கல்வி பயணத்தில் எந்த நிகழ்ச்சியையும் பெயருக்காக நடத்துவது கூடாது என்றும் மாறாக அதில் மக்களுக்கு கல்வி சார்ந்த நிகழ்வுகள் இருக்க வேண்டும் என்பதே நம் இலக்கு.. அந்த வகையில் குடியரசு தினத்தினை இன்று காலை 9.30 மணிக்கு சென்னை கொரட்டூரில் சீமான் தங்கராஜ் அறக்கட்டளை அவர்கள் ஒருங்கிணைத்த குடியரசு தினவிழா நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக வெளிச்சம் மாணவர்களின் கல்வித்தாய் வெளிச்சம் செரின் அவர்கள் கலந்து கொண்டார்…. அரசு பள்ளி மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்களை வழங்கி பேசிய செரின் அவர்கள்… கல்வி என்பது தான் ஒரு மனிதனின் தலையெழுத்தை மாற்றக்கூடிய சக்தி படைத்தது.அதனால் நாம் படித்தோம், வேலைக்கு போனோம் குடும்பத்தை பார்த்தோம் என்றில்லாமல், சமூகத்திற்க்கும் என்ன செய்தோம் என நாம் தான் பார்க்க வேண்டும் ஏனெனில் உயர்கல்வி என்பது தகுதியுள்ளவனுக்கு கிடைக்காமல் சிலருக்கு மட்டும் கிடைப்பது இந்த நாட்டின் சாபமே! என்று செரின் அவர்கள்
பேசினார்..
பேசினார்..
படங்கள் உங்கள் பார்வைக்காக..
வெளிச்சம் தகவல் அருமை! வாழ்த்துக்கள்
நட்புடன் இளங்கோவன், சென்னை
வெளிச்சம் எங்கள் பகுதியிலும் பிரகாசிக்கவேண்டும்.
வாழ்த்துக்கள்.