Archive for 2010
பாத் ரூமில் பிறந்த பாலகன் |
மாணவர்கள் ஆசிரியர் மன நிலையை பற்றியதாக இருக்க வேண்டும்....
உளுந்தூர்பேட்டையை அடுத்த சேந்தமங்கலம் காலனியை சேர்ந்தவர் உதயகுமார், விடுதி சமையல்காரர். இவரது மகள் பரணி (வயது 17). உளுந்தூர்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளியின் பிளஸ்-2 மாணவி.
இவர் வழக்கம்போல் காலையில் பள்ளிக்கு சென்றார். சிறிது நேரத்தில் உடல் நலக்குறைவால் மயங்கி விழுந்தார். பயந்துவிட்ட ஆசிரியர்கள், பரணிக்கு மயக்கம் தெளிவித்து சில மாணவிகள் துணையுடன் ஒரு ஆட்டோவில் அவரது வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால் பரணி வீட்டுக்கு செல்லாமல் உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றார். புறநோயாளிகள் பிரிவில் உள்ள கழிவறைக்குள் சென்று கதவை சாத்திக்கொண்டார்.
சிறிது நேரத்தில் அவரது சத்தம் கேட்டு ஓடிவந்த ஆஸ்பத்திரி ஊழியர்கள் கழிவறை கதவை திறந்து பார்த்தபோது பரணிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்திருந்தது தெரிய வந்தது. உடனடியாக தாய்க்கும்-சேய்க்கும் சிகிச்சையளிக்கப்பட்டது. 2 பேருடைய உடல் நிலையையும் டாக்டர்கள் கண்காணித்து வருகின்றனர்.
இது குறித்த தகவலின் பேரில் கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதில் பரணிக்கும், அந்த பகுதி வாலிபர் பாலமுருகனுக்கும் ஏற்பட்ட காதலில் பரணி கர்ப்பமடைந்ததாக தெரிய வந்தது.
இதைத்தொடர்ந்து பாலமுருகன், பரணியின் குடும்பத்தினரும் ஊர் முக்கியஸ்தர்கள் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் பால முருகனுக்கும்,பரணிக்கும் திருமணம் செய்து வைக்க முடிவு செய்யப்பட்டது. ஆஸ்பத்திரியில் இருந்து பரணி “டிஸ்சார்ஜ்” ஆகி வந்ததும் திருமணம் நடைபெறும் என்று தெரிகிறது.
நன்றி: மாலைமலர்
தமிழகம் முழுவதும் உள்ள வேலை வாய்ப்பு அலுவலகங்களில் 62 லட்சம் பேர், தங்கள் கல்வித் தகுதிகளை பதிவு செய்துவிட்டு, அரசு வேலைக்காக காத்திருக்கின்றனர். வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி இயக்குனரகம் வெளியிட்ட புள்ளி விவரத்தில் இந்த திடுக்கிடும் தகவல் தெரிய வந்துள்ளது.
தமிழகத்தில், பல்வேறு அரசுத் துறைகளில் காலியாக உள்ள இடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன. குறிப்பாக, கல்வித்துறை, சுகாதாரத்துறை, உள்ளாட்சித்துறை ஆகிய துறைகளில் அதிகளவில் புதிய பணி நியமனங்கள் செய்யப்பட்டுள்ளன. தி.மு.க., அரசு அமைந்தபின், கடந்த நான்கரை ஆண்டுகளில் ஐந்து லட்சம் பேருக்கு அரசுத் துறைகளில் வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக, முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார். அப்படியிருந்தும், வேலை வாய்ப்புக்காக காத்திருப்பவர்களின் எண்ணிக்கை மள மளவென உயர்ந்துள்ளது.
கடந்த ஆண்டு வரை, வேலை வாய்ப்புக்காக காத்திருப்போரின் எண்ணிக்கை 55 லட்சத்திற்குள் இருந்தது. ஆனால், கடந்த மார்ச் 31ம் தேதி நிலவரப்படி 62 லட்சமாக உயர்ந்து உள்ளது. இதில், பெண்கள் எண்ணிக்கை மட்டும் 29 லட்சமாக உள்ளது. மார்ச் மாதத்திற்குப் பின், மே மாதத்தில் பள்ளி பொதுத்தேர்வு முடிவுகள், அதன்பின் ஆசிரியர் தேர்வு முடிவுகள் என, பல்வேறு படிப்புகளுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. அந்த வகையில், எட்டு லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள், வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்திருப்பர். ஆனால், இந்த விவரங்கள் அரசின் புள்ளி விவரத்தில் சேர்க்கப்படவில்லை. மார்ச் 31ம் தேதி வரையான புள்ளி விவரங்களை மட்டும், வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி இயக்குனரகம் வெளியிட்டுள்ளது. ஆதிதிராவிடர் பிரிவில், இன்ஜினியரிங் பட்டதாரிகள் மட்டும் 12 ஆயிரத்து 449 பேர், அரசு வேலைக்காக காத்திருக்கின்றனர். பழங்குடியினர் பிரிவில் 186 இன்ஜினியரிங் பட்டதாரிகளும் அரசு வேலைக்காக காத்துக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி: தினமலர்
வெளிச்சம் மாணவர்களின் போஸ்டரின் வலிகள்.. விளக்கிய தினமலர் செய்தி
ஊரிலேயே,வீட்டிலேயே பஸ்ட் படிச்சி வேலைக்கு போனோம்.அதோடு சரி எல்லாம் மறந்து போனார்கள் எங்கள் போன தலைமுறை… ஆனால் இப்போதிய மாணவர்களின் நிலை மிக மோசமாக போனது…
கடந்த வாரம் வெளிச்சம் மாணவர்களால் சென்னையெங்கும் ஒருவருடத்திற்கு பிறகு மீண்டும் ஒட்டப்பட்ட போஸ்ட்டரின் வலியை 29.12.2010 தினமலர் செய்திதாள் செய்தியாக்கியது…தினமலருக்கு நன்றி சொல்ல கடமை பட்டவர்களாய் முதல்தலைமுறை ஏழை மாணவர்களின் உயர்கல்விக்காக வெளிச்சம் மாணவர்களின் போராட்டத்தினை உங்களுக்கு சமர்ப்பிக்க வேண்டிய கட்டாயமிருக்கிறது…
மாணவர்களின் கல்வியை காப்பாற்றுவதற்காக வெளிச்சம் மாணவர்களால் முதல் தலைமுறை மாணவர்களின் படிப்பைப் பாதுகாக்க “திரைப்பட நடிகர் ஜெயம் ரவி” அவர்களோடு சென்னை பத்திரிக்கையாளர் சந்திப்பு நடத்தியது அதற்கும் பலனடையவில்லை..ஆனால் கல்லூரிகள் கல்விக்கட்டணம் செலுத்தமுடியாததால் மாணவர்களை படிக்க விடாமல் கல்லூரியை விட்டு வெளியே அனுப்ப இருக்கிற சூழலில் வேறு வழியில்லாமல் 40 வெளிச்சம் மாணவர்கள் தமிழக காவல்துறை இயக்குநரிடம் தமிழகம் முழுக்க உண்டியல் குலுக்கி நிதி வசூலிக்க அனுமதி வாங்கினோம்..அதன்படி சென்னை முழுவதும் உண்டியல் ஏந்தினோம்..இச்செய்தி “தமிழக அரசியல்”,”டெக்கான் குரேனிக்கல்”,”என்.டி,டிவி” போன்ற ஊடங்கங்களிலும் வெளியானது.. அதன் பின் தான் தமிழக அரசால் முதல் தலைமுறை ஏழை மாணவர்களுக்கான இலவச உயர்கல்விக்கான அரசாணை வெளியிடப்பட்டது.GO_First_Graduate
கல்விக்கட்டணம் மட்டுமல்லாமல் ஏழை மாணவர்களின் அனைத்து கட்டணங்களையும் அரசே ஏற்க வேண்டும் எனவும்..நாம் மேலும் போராடினோம்.. நம் பயத்தினை தினமணி நாளிதழ் செய்தியாக்கியது.. படிக்க
ஊரிலேயே,வீட்டிலேயே பஸ்ட் படிச்சி வேலைக்கு போனோம்.அதோடு சரி எல்லாம் மறந்து போனார்கள் எங்கள் போன தலைமுறை… ஆனால் இப்போதிய மாணவர்களின் நிலை மிக மோசமாக போனது…
கடந்த வாரம் வெளிச்சம் மாணவர்களால் சென்னையெங்கும் ஒருவருடத்திற்கு பிறகு மீண்டும் ஒட்டப்பட்ட போஸ்ட்டரின் வலியை 29.12.2010 தினமலர் செய்திதாள் செய்தியாக்கியது…தினமலருக்கு நன்றி சொல்ல கடமை பட்டவர்களாய் முதல்தலைமுறை ஏழை மாணவர்களின் உயர்கல்விக்காக வெளிச்சம் மாணவர்களின் போராட்டத்தினை உங்களுக்கு சமர்ப்பிக்க வேண்டிய கட்டாயமிருக்கிறது…
மாணவர்களின் கல்வியை காப்பாற்றுவதற்காக வெளிச்சம் மாணவர்களால் முதல் தலைமுறை மாணவர்களின் படிப்பைப் பாதுகாக்க “திரைப்பட நடிகர் ஜெயம் ரவி” அவர்களோடு சென்னை பத்திரிக்கையாளர் சந்திப்பு நடத்தியது அதற்கும் பலனடையவில்லை..ஆனால் கல்லூரிகள் கல்விக்கட்டணம் செலுத்தமுடியாததால் மாணவர்களை படிக்க விடாமல் கல்லூரியை விட்டு வெளியே அனுப்ப இருக்கிற சூழலில் வேறு வழியில்லாமல் 40 வெளிச்சம் மாணவர்கள் தமிழக காவல்துறை இயக்குநரிடம் தமிழகம் முழுக்க உண்டியல் குலுக்கி நிதி வசூலிக்க அனுமதி வாங்கினோம்..அதன்படி சென்னை முழுவதும் உண்டியல் ஏந்தினோம்..இச்செய்தி “தமிழக அரசியல்”,”டெக்கான் குரேனிக்கல்”,”என்.டி,டிவி” போன்ற ஊடங்கங்களிலும் வெளியானது.. அதன் பின் தான் தமிழக அரசால் முதல் தலைமுறை ஏழை மாணவர்களுக்கான இலவச உயர்கல்விக்கான அரசாணை வெளியிடப்பட்டது.GO_First_Graduate
கல்விக்கட்டணம் மட்டுமல்லாமல் ஏழை மாணவர்களின் அனைத்து கட்டணங்களையும் அரசே ஏற்க வேண்டும் எனவும்..நாம் மேலும் போராடினோம்.. நம் பயத்தினை தினமணி நாளிதழ் செய்தியாக்கியது.. படிக்க
இன்னும் ஓர் கோரிக்கை முதல்வரய்யா….என்கிற தலைப்பில் நாம் எழுதிய கோரிக்கை மனுவினை உங்களிடம் வைக்கிறோம்..http://velichamedu.wordpress.com/2010/04/24/110/
அதை சென்னை முழுக்க போஸ்ட்டர் ஒட்டினோம்..கடந்த பிப்ரவரி 22ம் தேதி உயர்கல்வி மானிய கோரிக்கை விவாத நாள் என்பதால் இச்செய்தி விவாதிக்கப்பட வேண்டும் என நாம் திட்டமிட்டோம் போஸ்டரில் உள்ள செய்திகளையே மனுவாகவும் சில சட்டமன்ற உறுப்பினர்களிடம் கொடுத்திருந்தோம்..(மனுவின் நகலை இணைத்துள்ளோம்)
அதை சென்னை முழுக்க போஸ்ட்டர் ஒட்டினோம்..கடந்த பிப்ரவரி 22ம் தேதி உயர்கல்வி மானிய கோரிக்கை விவாத நாள் என்பதால் இச்செய்தி விவாதிக்கப்பட வேண்டும் என நாம் திட்டமிட்டோம் போஸ்டரில் உள்ள செய்திகளையே மனுவாகவும் சில சட்டமன்ற உறுப்பினர்களிடம் கொடுத்திருந்தோம்..(மனுவின் நகலை இணைத்துள்ளோம்)
இதற்காக நாம் பலவகையான முயற்சிகளை நாம் மேற்கொண்டும்..அரசு மாணவர்களுக்கு ஒதுக்கிய 50 கோடி ரூபாய் மாணவர்களின் கல்விக்கு போய்சேருகிறது என்பதை கண்காணிக்கவும்,திட்டம் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 65 நாட்கள் வெளிச்சம் மாணவர்கள் தமிழகம் முழுக்க பிரச்சாரப்பயணம் மேற்கொண்டார்கள்..அதன் தொடர்ச்சியாகத்தான் மாணவர்கள் உதவி எண் 9698151515 துவங்கி மாணவர்களுக்கு உதவிவருகிறோம்…
நாம் என்ன பயந்து இந்த பணியை செய்தோமோ. அது நடக்க துவங்கியது.. என்னவெனில் ஆளுநர் சுர்ஜித்சிங் பர்ணாலா அவர்கள் கடந்த2010 ஜனவரி 6 ம் தேதி அறிவித்த அறிவிப்பில் மொத்த கட்டணத்தையும் அரசே ஏற்கும் என இருந்தது. இதை நம்பி அப்பாவியான 78883 முதல்தலைமுறை மாணவர்கள் பொறியியல் கல்லூரி கவுன்சிலிங்கிக்கு விண்ணப்பித்தார்கள்.. ஆனால் கவுன்சிலிங் நடைபெற்று கொண்டிருந்தபோது தான் அரசு முதல்தலைமுறை மாணவர்களுக்கான அரசாணை நிர்ணயித்த தொகையை வெளியிட்டார்கள்..குறிப்பாக அரசு பொறியியல் கல்லூரிகளில் சேரும் மாணவர்களுக்கு ரூ 5000 ம்.. சுயநிதி கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு ரூ 20000 என அறிவிக்க… இதனால்கவுன்சிலிங்க் விண்ணபித்த 78883 முதல்தலை முறை மாணவர்களில் நாற்பத்தியெட்டாயிரம் மாணவர்கள் மட்டுமே கல்லூரியில் சேர்ந்தார்கள்.அரசை நம்பி கல்லூரி கனவு கண்ட மற்ற மாணவர்கள் கனவுகள் கருகிபோனது.. ஏனெனில் இந்த மாணவர்களின் கல்விக்கு உதவ வேண்டிய அரசு குறைந்த பணத்தினை ஒதுக்கிவிட்டு தனது கையை விரித்து கொண்டது..
இது ஒருபுறமிருக்க கல்லூரிகளில் சேர்ந்த மாணவர்களின் நிலமை மோசமானது… கல்லூரியில் சேர்ந்த மாணவர்களிடமிருந்து நம்மை உருகுலைய வைத்தது..கல்லூரி நிர்வாகங்கள் பணம் கவர்மெண்ட் கொடுக்கிறப்போ நாங்க திருப்பி தருகிறோம்.. நீங்க பணத்தை கட்டுங்க என கல்லூரிகள் மிரட்டுகிறார்கள் என்றும், கட்டணத்தை விட அதிகமாக பணம் கேட்பதாக நம் students Help line 9698151515 ல் தகவல் வந்துகொண்டே இருக்கிறது… விடாது பயணித்தோம்…ஏனெனில் வெளிச்சம் என்பது முதல்தலை மாணவர்களுக்கான கல்வி இயக்கமாக அறிவித்தோம்..இன்று வரை வெளிச்சம் மாணவர்கள் 515 மாணவர்கள் முதல்தலை முறை மாணவர்கள் என்பதையும் உங்களுக்கு தெளிவு படுத்துகிறோம்..
நாம் பயந்ததை போன்று பிரச்சனையை வெளியிட்ட தினமலர் கட்டுரை
தலைப்பு: கல்வி உதவித் தொகை வழங்க அரசு தாமதம்: கல்லூரி நிர்வாகம் கெடுபிடி
http://kalvimalar.dinamalar.com/tamil/NewsDetails.asp?id=8812
தலைப்பு: கல்வி உதவித் தொகை வழங்க அரசு தாமதம்: கல்லூரி நிர்வாகம் கெடுபிடி
http://kalvimalar.dinamalar.com/tamil/NewsDetails.asp?id=8812
எதை எதையோ பேசும், அறிக்கையாக்கும்,போராட்டமாக்கும் கட்சிகளே,இயக்கங்களே,ஒத்தகருத்துடைய சிந்தனையாளர்களே..இந்த விசயத்தில் மட்டும் உங்கள் கவனம் படவே யில்லையா…
சுதந்திரமடைந்து இவ்வளவு காலங்களில் நாங்கள் தான் முதன்முதலில் கல்லூரிகளில் சேர்ந்தோம் என்பது எங்களுக்கு பெருமை..இந்த நாட்டின் முன்னேற்றத்திற்க்கான கேள்விகுறி…எப்போதுதான் எமக்காகவும் உம்குரல் எழும்ப போகிறது….பார்ப்போம்..
ஏழைகளின் உயர்கல்விக்கான பணியில்
வெளிச்சம் மாணவர்கள்
வெளிச்சம் மாணவர்கள்
(இணைப்புகளை இடையிடையே போட்டதற்க்கு மன்னிக்கவும்…எங்கள் வலிகள் அப்படியே பதிவு செய்ய முனைந்தோம்)…
இணைப்புகள்:
பிரச்சாரப்பயணப்படங்கள்:http://velichamedu.wordpress.com/%E0%AE%
பிரச்சாரப்பயண பத்திரிக்கை செய்திகள்:
http://velichamedu.wordpress.com/%E0%A
வெளிச்சம் மாணவர்கள் சட்ட மன்றத்தில் கொடுத்த மனு:http://velichamstudents.blogspot.com/2010/04/22.html
பிரச்சாரப்பயணப்படங்கள்:http://velichamedu.wordpress.com/%E0%AE%
பிரச்சாரப்பயண பத்திரிக்கை செய்திகள்:
http://velichamedu.wordpress.com/%E0%A
வெளிச்சம் மாணவர்கள் சட்ட மன்றத்தில் கொடுத்த மனு:http://velichamstudents.blogspot.com/2010/04/22.html
அதிர்ந்து போகிறவர்கள் இதை படிக்க வேண்டாம் என்கிற ஒற்றைச் வார்தைகளோடு நம் மாணவர் உதவி எண்ணில் நம் மனதை பிழிந்த இந்த பெரியவரின் வலிகளை பதிவு செய்கிறோம்..
சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த கன்னியாகுமாரி மாவட்டத்தை குலஞ்சம்புலை கிராமத்தை சேர்ந்த சாமுவேல் என்பவரை அந்த பகுதியில் இருந்த ஆட்டோ டிரைவர்கள் சிலர் வெளிச்சம் மாணவர் உதவி எண் 9698151515 ணை குறித்து கொடுத்து, வெளிச்சத்துக்கு போங்க என்று சொல்லி ”மனிதநேயத்தோடு, அவர்களே ஆட்டோவில் அழைத்து வந்து நமது அலுவலம் அருகிலேயே வந்து விட்டு வெளிச்சம் அலுவலகத்திற்க்கு போங்க என வழிகாட்டிய எழுத படிக்க தெரியாத அந்த ஆட்டோகாரர்களை நாம் தலைவணங்குகிறோம்.
கஸ்டங்களை கேட்கும் வெளிச்சம் |
கலைப்பான அவரிடம் மெல்ல பேசினோம். டெய்லர் வேலை செய்தேன் மக்களே, எனக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கு அதுகளை எல்லாம் கல்யாணம் கட்டி கொடுத்தேன்..பின்னால திருமணத்திற்க்கு வாங்கிய கடனுக்கு நான் துணி தைத்தோம், என் மனைவி மீன் விற்றும் கடன்கட்டி வந்தோம் மக்களே.. நான் கடனடைக்கனும்னு ரொம்ப கஸ்டப்பட்டு உழைச்சப்போ கொஞ்ச காலத்திற்க்கு முன்ன என்னோட பாதத்தில் சின்ன காயம் மாதிரி வந்தது, நான் அதை அப்படியே விட்டுவிட்டு மெடிக்கலில் மருந்து வாங்கி சாப்பிட்டுவிட்டு வந்த அவருக்கு ஐந்து வருடத்திற்க்கு முன் சர்க்கரை நோயும் சேர்ந்துடுச்சு..சில நேரம் வலிகளின் வேதனை தாளாமல் துடிப்பேன்..எனக்கு இப்படியாச்சேன்னு கஸ்ட்டப்பட்டுடே மனைவிக்கும் சுவாதினமில்லாம போச்சு..கொஞ்சகாலம் சொந்தங்க பார்த்தாங்க..சரி சென்னை போனால் கவர்மெண்ட் ஆஸ்பத்திரியில காட்டலாமுன்னு அவளும் நானும் சென்னை வந்தோம்.. ஸ்டான்லி ஹாஸ்பிட்டல்ல சேர்ந்தேன்..கையில வச்சிருந்த எல்லா காசும் தீர்ந்து போக. என்னோட நிறம் மாறிடிச்சினு சொல்ல, மாணவர்கள் வலிகளை உணர்ந்தவர்களால் நின்றோம்..
அந்த பச்சை துண்டால் மூடப்பட்ட காலினை வலிதாங்கமுடியாமல் கால் மேல் கால்தூக்கி வைத்தார் பெரியவர்.. அந்த காயத்தின் ரணங்களில் வழிந்த ரத்ததில் கசிந்தது நம் ஈரக்குலை..
மேலும் அவரிடம் பேசமுடியாத்தவர்களால்...பசியில் இருந்த அவருக்கு பிஸ்கட் பாக்கெட் வாங்கி கொடுத்து அங்கேயே இருக்க சொல்லி விட்டுட்டு நம் மாணவர்களை நான் ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பினோம்..
நம்மிடம் பேசிய மருத்துவமனை ஊழியர்,
வலி தாங்க முடியாமல் துடிச்சிக்கிட்டு இருந்தார் கூடவே அவரோட மனைவி இருந்துச்சி சாப்பாட்டுக்கே காசில்லாம தவிச்சாங்க இங்கயிருக்கிற முனியாண்டிவிலாஸ்ல ஒருவேளை சாப்பாடு வாங்கி மூணுவேளை சாப்பிடுவாங்க..அந்தம்மா ரொம்ப முடியாம போக வைச்சிருந்த சூட்கேசை வித்து இருநூறுவாயும், இங்க இங்கிருந்தவங்க சிலரும் அந்தம்மாவை ஊருக்கு அனுப்பி வைச்சாங்க..அவருக்கு பத்து வருசத்துக்கு முன்னால கால்ல ஆணி குத்தியிருக்கு கவனிக்காம விட்டுட்டாங்க போல இப்ப துடிக்கிறாங்க..ரெண்டு வாரமா அவரு பாத்ரூமுகிட்டயே போட்டுட்டாங்க அவரால நடக்க முடியல இங்கிருந்தவங்க கொண்டுவர்ற சாப்பாட்டை கொடுப்போம் சாப்பிட்டு இருந்தார்..இங்க இருக்கிற நர்சுங்க எல்லாம் இரக்கப்பட்டு மாத்திரைங்க மட்டும் கொஞ்சம் அதிகமா கொடுத்தாங்க, ஊருக்கு போறதா சொல்லிட்டு காலையில போயிட்டாருங்க.. நீங்க என நம்மை கேட்ட அந்த அம்மாவிடமிருந்து நகர்ந்தோம்... ஏழை மாணவர்களின் உயர்கல்விக்காக மட்டும் உழைத்துவரும் வெளிச்சம் மாணவர்கள் இது போன்ற விசயங்களில் பெரும்பாலும் கவனம் இயலவில்லை என இருந்த மன நிலையை உலுக்கி எடுத்தது..இந்த கொடூர ரணங்கள்..
ரத்தம் வழிந்தோடும் ரணம் |
நம்மிடம் பேசிய மருத்துவமனை ஊழியர்,
வலி தாங்க முடியாமல் துடிச்சிக்கிட்டு இருந்தார் கூடவே அவரோட மனைவி இருந்துச்சி சாப்பாட்டுக்கே காசில்லாம தவிச்சாங்க இங்கயிருக்கிற முனியாண்டிவிலாஸ்ல ஒருவேளை சாப்பாடு வாங்கி மூணுவேளை சாப்பிடுவாங்க..அந்தம்மா ரொம்ப முடியாம போக வைச்சிருந்த சூட்கேசை வித்து இருநூறுவாயும், இங்க இங்கிருந்தவங்க சிலரும் அந்தம்மாவை ஊருக்கு அனுப்பி வைச்சாங்க..அவருக்கு பத்து வருசத்துக்கு முன்னால கால்ல ஆணி குத்தியிருக்கு கவனிக்காம விட்டுட்டாங்க போல இப்ப துடிக்கிறாங்க..ரெண்டு வாரமா அவரு பாத்ரூமுகிட்டயே போட்டுட்டாங்க அவரால நடக்க முடியல இங்கிருந்தவங்க கொண்டுவர்ற சாப்பாட்டை கொடுப்போம் சாப்பிட்டு இருந்தார்..இங்க இருக்கிற நர்சுங்க எல்லாம் இரக்கப்பட்டு மாத்திரைங்க மட்டும் கொஞ்சம் அதிகமா கொடுத்தாங்க, ஊருக்கு போறதா சொல்லிட்டு காலையில போயிட்டாருங்க.. நீங்க என நம்மை கேட்ட அந்த அம்மாவிடமிருந்து நகர்ந்தோம்... ஏழை மாணவர்களின் உயர்கல்விக்காக மட்டும் உழைத்துவரும் வெளிச்சம் மாணவர்கள் இது போன்ற விசயங்களில் பெரும்பாலும் கவனம் இயலவில்லை என இருந்த மன நிலையை உலுக்கி எடுத்தது..இந்த கொடூர ரணங்கள்..
மனித நேயமிக்கவர்கள் கொடுத்த உதவி |
நாம் அந்தபுரி எக்ஸ்பிரசில் ஊனமுற்றோர் பிரிவில் அவரை அமரவைத்து அனுப்பினோம்..மக்களே என்று சொன்ன அந்த குரலில் வலிகள் பதிந்த ரணத்தோடு திரும்பினோம்...
நம்மை நம்பிய அந்த ஆட்டோகாரர்களின் மனிதாபிமானம் நம்மை இயக்கியது....இன்னும் மிச்சமிருக்கிறது....ஏழைகளிடம் மனித நேயம்....
எங்கள் வார்த்தைகளின் வலிமையை உணர்ந்து உதவியவர்கள்.. நம் பயணத்தில் நம்மை ஏளனபடுத்தியவர்களூக்கும் நன்றி...
வெளிச்சம் மாணவர்கள்
That Poster |
Higher education has been a distant dream for an auto driver’s daughter in India who struggle to make both ends meet. In practical, the complex formalities centered around getting an educational loan drives away many simple people like Gayathri’s father from getting it accomplished. As many other needy people who fall as prey into the hands of indenters who charge unpayable interest rates, Gayathri’s father too borrowed money to join her daughter in a college where she wished to pursue her higher studies.
Gayathri’s father could manage for 2 years and gayathri was studying with big dreams in her eyes. All was going fine until a fine morning when the indebter seized the auto for not paying the interest in time. The family came to a financial standstill, needless to mention about gayathri’s unpaid college fees and all her big dreams suddenly became a question mark. She strived hard to find any possible means and had managed to contact VELICHAM STUDENT HELPLINE NO. 9698151515.
She was in VELICHAM office next day with eyes full of hope and tears. Her urgent requirement of Rs.10,000 tuition fees was taken to the notice of affordable and kind-hearted people in the VELICHAM network by Ms.Sherin. The cause was taken due care of by concerned people who got to know about VELICHAM through its posters circulated around the Chennai city. Soon there were donations from them who do not even wish to reveal about their identity in this post. VELICHAM diverted the full final year fees for Gayathri’s studies in no time.
Now, Gayathri is back in her John Bosco Arts & Science college with all those big dreams and added happiness that she will come out with flying colors in next few months.
VELICHAM STUDENTS take this opportunity to express their unboundful gratitude to those who devoted their time and money to this noble cause.
ஓட்டுக்கு மூக்குத்தி,சாராயம்,பிரியாணி,படவை,தண்ணீர் குடம் என துவங்கி கடையாக ஒரு ஓட்டுக்கு 1500 வரை தாரை வார்க்கப்பட்டது என்றனர்..இந்த "திருமங்கலம்' பார்முலா, வரும் சட்டசபை தேர்தலில் இன்னும் அதிகமாக கூடும் என எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள் ஓட்டை காசாக்கும் கயவர்கள்...ஆனால் காலகாலமாக ஒட்டு போட்டதில்லை என்கிறார்கள் சாயல்குடி மக்கள்,
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி வி.வி.ஆர்., தெருவில் 17 குடும்பங்கள் வசித்து வருகின்றன. ஒரே சமூகத்தைச் சேர்ந்த இவர்கள், சிமென்ட் வேலைப்பாடுகளை செய்யும் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். அங்கு உற்பத்தி செய்யும் பொருட்களை, வெளியில் சென்று விற்று வருவது வழக்கம்.
இவர்கள், இதுவரை ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட எதையும் வாங்கவில்லை. இதை பரம்பரையாக தொடர்ந்து கடைபிடித்து வருகின்றனர். ஓட்டு சீட்டையே பார்க்காத எத்தனையோ பெரியவர்கள் இன்றும் இங்கு உள்ளனர். அரசின் இலவசங்களான "டிவி', காஸ் உள்ளிட்ட எதையும் வாங்காமல் காலம் கடத்தி வந்துள்ளனர். "வாக்காளர் அடையாள அட்டை என்ற ஒன்று இருப்பதே இவர்களுக்கு தெரியவில்லை. வேலைக்குச் சென்ற இடத்தில் இவர்களின் புலம்பலை கேட்டு, ஒருவர் கூறிய அறிவுரைக்குப் பின், ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை மூலம் கிடைக்கும் "திருமங்கலம்' பார்முலா பயன்கள் குறித்து தெரிந்தது.
இதைத்தொடர்ந்து, கடந்த இரண்டு மாதங்களுக்கு முன், ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டைகேட்டு கடலாடி தாலுகா அலுவலகம் சென்றவர்களுக்கு சரியான பதில் கிடைக்கவில்லை. இதனால், நேற்று ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம் வந்து, வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு கேட்டு அதிகாரிகளிடம் மனு அளித்தனர்.
60 வயதான முதியவர் மனோகரன் கூறியதாவது தேர்தலைப் பற்றி எங்களுக்கு எதுவும் தெரியாது. பொருள் விற்க போன இடத்தில் கிடைத்த அறிவுரையை வைத்து, எங்களுக்கும் ஓட்டு போட ஆசை வந்துள்ளது. 75 வயதை கடந்த நிறைய பேர் எங்கள் தெருவில் உள்ளனர். அனைவருக்கும் வாக்காளர் அட்டை மற்றும் ரேஷன் கார்டு கேட்டு மனு அளித்துள்ளோம், என்கிறார்.
ஓட்டுரிமை குறித்து அறியாத இவர்களிடம் உள்ள ஓட்டுகள் குறித்து அரசியல்வாதிகள் இதுவரை கண்டுகொள்ளாமல் இருந்தது ஆச்சரியமாக உள்ளது.
நன்றி: தினமலர்
கிராமப்புற மாணவர்களின் மனதுக்கு தெம்பூட்டும் விதமாக டாக்டர் அப்துல் கலாம் பகிர்ந்து கொள்ளும் கருத்துக்கள் இதோ...
மன எழுச்சி அடைந்துள்ள
இந்தியாவில் மொத்த மக்கள் தொகையில்
இதுவே வளமான இந்தியா
கிராமத்துக்கும் நகரத்துக்கும் இடையிலான சமூக
விவசாயம் தொழில் மற்றும் சேவைத் துறைகள் ஒருங்கிணைந்து முன்னேற்றப் பாதைக்கு மக்களை அழைத்து செல்லும் நாடாக இந்தியாவை மாற்ற வேண்டும்
சமூக
விஞ்ஞானிகளுக்கும்
ஒரு பொறுப்பான வெளிப்படையான
வறுமை முற்றிலும் ஒழிக்கப்பட்டு
ஓர் இனிமையான வளமான
உலகிலேயே வாழ்வதற்கு ஏற்ற அருமையான நாடாகவும் வளமான இந்தியாவை நோக்கி வழி நடத்தி செல்லக்கூடிய தலைவர்களைப் பெற்ற நாடாகவும் இந்தியாவை மாற்றுவோம்
நண்பர்களே
வாழ்க்கையில் லட்சியத்தை மேற்கொள்வோம்
- டாக்டர் அப்துல் கலாம்
நன்றி: கல்விமலர்
“இண்டர் நெட்” பயன்படுத்துவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
சென்னை நகரில் மட்டும் செல்போன் பயன்படுத்துவோர் எண்ணிக்கை ஒரு கோடியை தாண்டியுள்ளது. தற்போது செல் போன்களிலும் “இண்டர்நெட்” இணைப்பு வழங்கப்படுகிறது.
இதை பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சென்னையில் மட்டும் 4 லட்சம் பேர் செல்போனில் “இண்டர்நெட்” பார்க்கிறார்கள்.
2 லட்சம் மாணவ- மாணவிகள் சென்னை நகரில் உயர்நிலைப்பள்ளிகளில் படிக்கிறார்கள். இதில் 20 சதவீதம் பேர் செல்போன் மூலம் “இண்டர்நெட்” பயன்படுத்துவது தெரிய வந்துள்ளது.
இதுதவிர கம்ப்யூட்டர் மையங்கள், வீடுகளில் உள்ள “இண்டர்நெட்” இணைப்புகள் மூலமும் மாணவ- மாணவிகள் “இண்டர்நெட்” பார்க் கிறார்கள். சென்னையில் மட்டும் 80 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவ- மாணவிகள் “இண்டர் நெட்டை” பயன்படுத்தி பாடங்களில் ஏற்படும் சந்தேகங்களை போக்கிக் கொள்கிறார்கள். இதுதவிர பாடங்களை பதிவு செய்தல், பொழுதுபோக்கு அம்சங்கள், “வீடியோகேம்” போன்ற வற்றுக்கும் இதை பயன் படுத்துகிறார்கள்.
13 முதல் 17 வயது வரை உள்ளவர்கள் வயது வந்தோர் மட்டும் பார்க்க கூடிய “சைட்”களை பயன்படுத்தி “செக்ஸ்” காட்சிகளையும் பார்க்கிறார்கள் என்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது. பொதுவாக 20 வயது முதல் 30 வயது வரை உள்ள வர்களே அதிக அளவில் “இண்டர் நெட்”டை பயன்படுத்துகிறார்கள்.
செல்போனில் “இண்டர் நெட்” பயன்படுத்துகிறவர்கள் வரிசையில் டெல்லி முதல் இடத்தில் உள்ளது. அங்கு 10 சதவீதம் பேர் பயன்படுத்துகிறார்கள். மும்பையில் 6.4 சதவீதம் பேர் செல்போனில் “இண்டர்நெட்” பார்க்கிறார்கள்.
சென்னைக்கு இதில் 3-வது இடம் கிடைத்துள்ளது. இங்கு செல்போன் வைத்திருப்பவர்களில் 4 சதவீதம் பேர் “செல்போன் இண்டர்நெட்” வசதியை பயன்படுத்தி வருகிறார்கள். 20 சதவீதம் பேர் “ஆன்லைன்” வர்த்தகம் செய்கிறார்கள். இதுதவிர செல்போனில் எப்.எம்., மெமரி கார்டில் பதிவு செய்த பாடல்கள் கேட்போர் எண்ணிக்கையும் பலமடங்கு அதிகரித்துள்ளது.
நன்றி: மாலைமலர்..21.12.10
நன்றி: மாலைமலர்..21.12.10
நிகழ்ச்சியில் உணவியல் நிபுணர் |
தமிழ்நாடு சமூக நல வாரியம் சார்பில், தாய்ப்பாலின் முக்கியத்துவம் குறித்த கருத்தரங்கம் சென்னையில் நேற்று நடந்தது. கருத்தரங்கை தமிழக ஊரக வளர்ச்சி துறை இயக்குனர் உதயசந்திரன் துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் யுனிசெப் அமைப்பின் உணவியல் நிபுணர் மீனாட்சி மெஹார் பேசியதாவது: தாய்ப்பாலில் 70 சதவீதம் நீர் உள்ளதால், பிறந்த குழந்தைகளுக்கு முதல் ஆறு மாதம் தாய்ப்பால் மட்டுமே தர வேண்டும். இதன் மூலம் வயிற்றுப்போக்கு, சுவாசக் கோளாறு, கிருமிதொற்று உள்ளிட்ட நோய்களிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கலாம்.
கடந்த ஆண்டின் தேசிய குடும்ப நல ஆய்வறிக்கைபடி, தமிழகத்தில் முதல் ஆறு மாதம் குழந்தைகளுக்கு தாய்ப்பால் மட்டும் தருவோர் எண்ணிக்கை, 2006ம் ஆண்டை ஒப்பிடும்போது, 39 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாக குறைந்துள்ளது. இதனால், குழந்தைகளுக்கு 1.5 வயதிலேயே ஊட்டச்சத்து குறைபாடு ஏற்பட்டு, அவற்றின் மூளை வளர்ச்சி பாதிக்கப்படுகிறது.
பிறந்த முதல் ஒரு மணி நேரத்தில், குழந்தைகளுக்கு தரப்படும் தாய்ப்பாலில், "கொலோஸ்ட்ரம்' எனும் சரிவிகித ஊட்டச்சத்துக்கள் அடங்கிய வேதிப்பொருள் உள்ளது. இதை தருவதால், குழந்தைகளின் இறப்பு விகிதத்தை கணிசமான அளவு குறைக்கலாம். தற்போது 100 சதவீத பிரசவங்கள் மருத்துவமனைகளில் நடைபெறுவதால், இவ்வழிமுறையை பின்பற்ற வேண்டியதன் அவசியத்தை மருத்துவர்களும், செவிலியர்களும் உணர்ந்து செயல்பட வேண்டும். இவ்வாறு மீனாட்சி மெஹார் பேசினார்.
தமிழ்நாடு சமூக நல வாரிய தலைவர் சல்மா பேசும்போது, ""குழந்தைகளின் ஆரோக்கிய வளர்ச்சிக்கும், பெண்களுக்கு வரும் மார்பக புற்றுநோயை தடுக்கவும், இயற்கை கருத்தடை முறைக்கும், தாய்ப்பால் தருவது அவசியம். மேலைநாடுகளில் இதன் அவசியம் உணரப்படும் நிலையில், நம் நாட்டில் இதன் முக்கியத்துவம் குறைந்து வருவது வருந்தத்தக்கது,'' என்றார்.
கருத்தரங்கில், கல்லூரி மாணவிகள், குழந்தைகள் காப்பக பணியாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நன்றி: தினமலர் 16.12.2010
கோவில்பட்டி அருகே மாணவர்களை அவதூறு பேசியதாக புகார் கூறி, ஆசிரியரை இடமாற்றம் செய்ய வலியுறுத்தி, பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டனர்.
கோவில்பட்டி அடுத்த காமநாயக்கன்பட்டியில், அரசு நிதி உதவி பெறும் "புனித அலாய்சியஸ்' நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்கு பணியாற்றிய ஆசிரியை தனத்தை நிர்வாகம், கசவன்குன்று கிராமப் பள்ளிக்கு இடம் மாற்றி உத்தரவிட்டது. ஆனால், அவர் அங்கு செல்லவில்லை. இந்நிலையில், தனத்திற்கு ஆதரவாக, அப்பள்ளி ஆசிரியர் தவமணி செயல்பட்டார். அவர் வகுப்பறையில் மாணவர்களையும், குறிப்பிட்ட சமூகத்தையும் அவதூறாக, இழிவாக பேசியதாக புகார் எழுந்தது. அதுகுறித்து மாணவர்கள், தங்கள் பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, அப்பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர் 100க்கும் மேற்பட்டோõர் நேற்று காலை, பள்ளியை முற்றுகையிட்டனர். அவதூறு பேசிய ஆசிரியர் தவமணியை வேறு பள்ளிக்கு இடமாற்றம் செய்ய வேண்டும், ஆசிரியை தனத்தை ஏற்கனவே இடமாற்றம் செய்யப்பட்ட பள்ளிக்கு அனுப்ப வேண்டுமென வலியுறுத்தி கோஷமிட்டனர். அவர்களுடன், காமநாயக்கன்பட்டி ஆலய பங்குத் தந்தை அந்தோணிசாமி, போலீசார் பேசினர். அதன் முடிவில், ஆசிரியை தனம் ஏற்கனவே இடமாற்றம் செய்யப்பட்ட கசவன்குன்று பள்ளிக்கு உடனடியாக அனுப்பப்பட்டார். பாளை மறை மாவட்ட ஆயரிடம் பேசி அவரது உத்தரவுப்படி, ஆசிரியர் தவமணியை உடனடியாக வேறு பள்ளிக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்படுமென உறுதியளிக்கப்பட்டது. இதையடுத்து, 2 மணி நேரத்திற்குப் பின் முற்றுகை முடிவுக்கு வந்தது.
மாணவர்களின் அக்கறை கொண்டு நாம் வெளியிட்ட கட்டுரைகள்:
பழைய செய்தி |
நன்றி:தினமலர் 14.12.10