Archive for May 2012


பள்ளிக்கூட விடுமுறை நாட்கள் என்பது பணக்காரர்களுக்கு ஹாலிடேவாக இருக்கலாம் ஆனால் ஏழை மாணவர்களுக்கு  அப்பா அம்மாவிற்கு ஒத்தாசை செய்ய அல்லது படிப்பு செலவிற்கு பணம் சம்பாதிக்கவே விடுமுறை  நாட்கள் என்பது எழுதப்படாத விதியாகவே உள்ளது.

அப்படிதான் படிப்பு செலவிற்காக வேலைக்கு போன  5 மாணவர்களை பாடையில் ஏற்றியிருக்கிறது  கடந்த 27 அன்று தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே நடந்த மாங்காய் லோடு ஏற்றிய லாரி விபத்து.   
இந்த விபத்து பலிகொண்ட 12 பேரில் 5 பேர் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் என்பதும் காயமடைந்தவர்களில்  12 பேர் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் என்பதுதான் பரிதாபம்.

தற்போது  வெளியிடப்பட்ட பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகளிலும், கல்வி அறிவில் பின்தங்கியுள்ள மாவட்டமாக விளங்கும் தர்மபுரி மாவட்டத்தில் ,கிராமங்களில் உள்ள பலரும் பெங்களூர் மற்றும் வெளியூர்களில் கூலி வேலை செய்துவருகிறார்கள். சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே உழைப்பை மட்டுமே நம்பி இருப்பவர்களாக காணப்படுகிறார்கள்.

குடும்பத்தில் பெரியவர்களின் வருமானம் போதுமானதாக இல்லாத  நிலையில் இங்கு காணப்படுவதால், பள்ளிக்கூட குழந்தைகள்  படிப்பு செலவுக்காக விடுமுறை நாட்களில் மாங்காய் பறிக்கும் வேலைக்கு சென்று சம்பாதித்து வருவது வழக்கம்.

இதன் மூலம் இந்த மாங்காய் காய்க்கும் சீசன் பருவத்தில் மாணவர்கள் ஒவ்வொருவரும் ரூ. 5 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை சம்பாதித்து,  அந்த பணத்தை கொண்டு பள்ளி, கல்லூரி செலவுக்கு பயன்படுத்தி வந்திருக்கிறார்கள்.  ஆனால்  சில பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை வேலைக்கு செல்லவேண்டாம்  என்றாலும், அதை கேட்காமல் மாணவர்கள் தங்களுடன் படிக்கும் சக மாணவர்களுடன் சேர்ந்து வேலைக்கு சென்றுவிடுவார்கள்.  அப்படிதான் அந்தோணி, ஞான சவுந்தரரும் சினேகிதமாக வேலைக்கு சென்றார்கள்.

ஆனால்  கடந்த 27.05.2012 அன்றும் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் மாங்காய் பறிக்கும் வேலைக்கு சென்றுவிட்டு  லாரியில்  ஏற்றப்பட்ட லாரியிலேயே வீடு திரும்பும் போது, மலைப்பாதையில், லாரி கவிழ்ந்ததால்  20வதுக்கும் மேற்ப்பட்ட கூலி தொழிலாளர்கள் சிக்கி பலியானார்கள்.


தினமும் செய்தித்தாள்களிலும், தொலைக்காட்சிகளிலும்,  விபத்துக்களால் கொத்து கொத்தாக உயிர்கள் பலியாவதை படித்தோ, பார்த்தோ பலகிப்போன நமக்கு, இந்த மாங்காய் லாரி கவிழ்ந்த செய்தி உங்களுக்கு கிடைத்ததும் அப்படிதான் நகர்ந்திருப்பீர்கள்..

ஆனால் அந்த பலிகளின் பட்டியலில்   பள்ளி மாணவி சோனியா காந்தி, மாணவர்கள் அந்தோணி, ஞான சவுந்தர் மற்றும் கல்லூரி மாணவிகள் செல்வி, உமா ஆகியோர் இறந்துள்ளனர் என்பதுதான் நெஞ்சை உருக்கும் பரிதாபம். அதில் பலியான  செல்வி கிருஷ்ணகிரி அரசு கல்லூரியில் பி.ஏ முடித்துவிட்டு இப்போது பி.எட் படித்து வருகிறார். மேலும்  உமா கிருஷ்ணகிரி அரசு மகளீர் கல்லூரியில் பி.பி.ஏ படித்து வருகிறார். சோனியாகாந்தி, அந்தோணி, ஞானசவுந்தர் ஆகிய மூவரும் கதிரிபுரம் அரசு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்துவருகிறார்கள்.

மேலும் படுகாயம் அடைந்துள்ள 31 நபர்களில் அருண், மாரிமுத்து, ராஜசேகர், அருள், செல்வன், கார்த்திக், சக்திவேல் ஆகிய ஏழு மாணவர்களும், சிவரஞ்சனி, பவித்ரா, சத்தியா, ஷாலினி, சரண்யா  ஆகிய ஐந்து மாணவிகளும் பத்து மற்றும் பனிரெண்டாம் வகுப்பு படித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
வட்டாம்பட்டியை சேர்ந்த கல்லூரி மாணவியான உமாவுக்கு இன்னும் திருமணம் ஆகாத காரணத்தால், அவர்கள் குல வழக்கப்படி உமாவின் உடல் ஊர் எல்லையில் வைத்து அந்த பெண்ணின் தாய்மாமன் முறையில் உள்ளவர்கள் வாழை மரத்துக்கு தாலி கட்டிய பின்னர்தான் வீட்டுக்கு எடுத்து செல்லப்பட்டு பின்னர், கிராம வழக்கபடி வீட்டில் நடத்தப்படும் சடங்குகள் நடத்தி முடிக்கப்பட்டு முறைப்படி  அங்குள்ள மயானத்தில் கொண்டு போய் எரியூட்டப்பட்டதோடு கருகிபோனது ஏழை மாணவர்களின் கனவுகள்…

பதில் சொல்லப்போவது யார்?

உயர்கல்வி எங்கள் உரிமை 
நன்றியுடன்
வெளிச்சம் மாணவர்கள்.

நீங்களும் மற்றவர்களுக்கு உதவ நினைக்கிறீர்களா?

இங்கே கிளிக் செய்யுங்கள்: ...........................................................................

கோகுலம் கதிர் மாத இதழ் மே மாத இதழில் வெளியான பாலியல் கல்வி கிடைக்காததால் பாழாகும் மாணவர்கள் எனும் தலைப்பில் வெளியான கட்டுரையை உங்கள் பார்வைக்கு வைக்கிறோம்..
தமிழகத்தில் உள்ள மாணவர்கள் படும் பாட்டை விளக்கிய கட்டுரையில் பட்டணத்து மாணவர்களை விட கிராமத்து மாணவர்கள் அதிகமாக பாதிக்கப்பட்டிருப்பது தெரிகிறது. குறிப்பாக பல மாணவிகளை ஆசிரியர்களும், பெற்றெடுத்த அப்பாவுமே கற்பழித்த கொடுமை அரங்கேறியுள்ளது எனும் கொடுமையை வெளிக்கொண்டு வந்த கட்டுரையை சமர்ப்பிக்கிறோம்..

நன்றியுடன்
வெளிச்சம் மாணவர்கள்
நீங்களும் மற்றவர்களுக்கு உதவ நினைக்கிறீர்களா?

  இங்கே கிளிக் செய்யுங்கள்: ...........................................................................


Deterioration of sexual education for students
 (Our President Velicham Sherin interview on  GOKULAM KATHIR monthly magazine)

Gokulam Monthly Magazine, published in the May issue of sexual education for radiation because of the deterioration of the students are entitled to your view, published in the article ..
The deterioration of the students explained in this article, this problem than urban students, rural students is said to suffer the most. Spoiled, especially by teachers, students, dad raped daughter to uncover a great many have read the article ..
With thanks
Velicham Students  
If you like Join with Us : Just Click ...........................................................................

உறவுகளே! இன்று வெளியான நக்கீரன் வார இதழில் வெளியான கட்டுரையில், நேற்று வெளியிடப்பட்ட +2 ரிசல்ட்டில் அதிக மார்க் எடுத்த பிள்ளைகள் சாதனையாளர்களாகவும், மார்க் எடுக்காதவர்கள் உருப்பிட மாட்டார்கள் எனும் மாயை உருவாகியுள்ளது இதை உடைப்பதற்காக பன்னிரெண்டாம் வகுப்பில் தோல்வி அடைந்தவர்கள் இன்று சாதனையாளர்களாக இருக்கிறார்கள் என்பதை வெளிச்சம், நக்கீரன் வார இதழில் விளக்கியுள்ளது.....


இந்த கட்டுரையை  குறைந்த மார்க் வாங்கி திட்டு வாங்கி தூக்கமிழந்த பல்லாயிரங்கணக்கான மாணவ- மாணவியர் வாழ்க்கைக்கு சமர்ப்பிக்கிறோம்...

தவறாமல் படிங்க:

நன்றியுடன்
வெளிச்சம் மாணவர்கள்..


நீங்களும் மற்றவர்களுக்கு உதவ நினைக்கிறீர்களா?

  இங்கே கிளிக் செய்யுங்கள்: ...........................................................................




நீங்களும் மற்றவர்களுக்கு உதவ நினைக்கிறீர்களா?

  இங்கே கிளிக் செய்யுங்கள்: ...........................................................................




தமிழகத்தில் 12வது பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.  இதில் நாமக்கல் தனியார் மேல்நிலைப்பள்ளிகள்  முதல் 4 இடங்களையும் தட்டிச்சென்றன. எஸ்.கே.வி.  பள்ளி மாணவி சுஷ்மிதா  முதலிடம் பிடித்தார்.
 
இந்த பெற்றி பெரிய வெற்றியாக தமிழகத்தில் கொண்டாடப்பட்டாலும்... நமக்கு இதில் உடன்பாடில்லை...

இந்த கல்வி முறையில் நமக்கு உடன்பாடில்லை என்றாலும், எந்த வசதியுமில்லாமல் குடிசைகளில் சிமிலி விளக்கில் படித்து நல்ல மார்க் வாங்கினால் அவர்கள்தான் வெற்றியாளர்களாக வெளிச்சம் கருதுகிறது.

அந்த வகையில் வேலூர் மத்திய சிறையில் உள்ள ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தூக்குதண்டனை கைதியான முருகன், பேரறிவாளன் இருவரும் இந்த ஆண்டு தனித்தேர்வராக சிறையில் இருந்தபடியே படித்து 12வது தேர்வு எழுதினர்.

வணிகவியல் பாடத்திட்டத்தை முதல்நிலை பாடமாக எடுத்து தேர்வு எழுதியிருந்தார்கள்.  தேர்வு முடிவுகளை ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டு இருந்தார்கள். நேற்று தேர்வு முடிவுகளை அவர்களுக்கு சிறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


பேரறிவாளன் மதிப்பெண் விபரம்:

தமிழில் 185, ஆங்கிலத்தில் 169, வரலாறு 183, பொருளாதாரம் 182, வணிகவியல் 198, அக்கவுண்டன்சி 179 என மொத்தம் 1096 மார்க் எடுத்துள்ளார்.

முருகன் மதிப்பெண் விபரம்:

986 மார்க் எடுத்து வெற்றி பெற்றுள்ளார். இதில் முருகன் வணிகவியல் பாடத்திட்டத்தில் 200க்கு 200 மார்க் எடுத்து வெற்றி பெற்றுள்ளார்.

இவர்களைப்போல் சிறையில் இருந்தபடி தேர்வு எழுதிய மேலும் 4 கைதிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இதில் மகிழ்ச்சியான விசயம்ம் என்ன வெனில் சிறை தண்டனை கைதியான பேரறிவாளன், அங்குள்ள படிக்காதவர்களுக்கு ஆசிரியரைபோல் பாடங்களை நடத்தி வருகிறார்  என்பது குறிப்பிடதக்கது.


வாழ்த்துங்கள் இவர்களை...


12 ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டத்தில் இருந்து மனசுக்குள்ள ஒரு வித பயமிருந்து கொண்டே இருந்தது, அப்படியான பயம் பேரதிர்ச்சியானது.

 ஆம் பிளஸ்டூவில் தேர்ச்சி அடைந்தாலும் மதிப்பெண்கள் குறைவாக பெற்றதால் கடும் வருத்தமடைந்த மாணவி ஒருவர் தீக்குளித்து விட்டதுதான் நமது அதிர்ச்சிக்கு காரணம்.

பரமக்குடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் படித்த ஷர்மிளா என்பவரும் பிளஸ்டூ தேர்வு எழுதியிருந்தார்.

இன்று காலை ரிசல்ட்டைப் பார்த்த அவர் அதிர்ச்சி அடைந்தார். பரீட்சையில் அவர் தேர்வடைந்திருந்தாலும், 711 மதிப்பெண்கள் மட்டுமே பெற்றதால் கடும் வருத்தமும், ஏமாற்றமும் அடைந்தார்.

இதையடுத்து வீட்டுக்கு விரைந்து வந்த அவர் தீக்குளித்து விட்டார். உடல் கருகிய நிலையில் அவரை உடனடியாக மதுரைக்குக் கொண்டு சென்று அரசு மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்...




பன்னிரெண்டாம் வகுப்பு எழுதிய மாணவர்களின் வசதிக்காக ரிசல்ட் பார்ப்பதற்காக......

வெற்றி பெற எங்கள் வாழ்த்துக்கள்


நன்றியுடன்
வெளிச்சம் மாணவர்கள்








  

  














                                     




இன்று (12.5.12) வெளியான தினமலரின் பெண்கள் மலர் பத்திரிக்கையில்  மாணவர்களுக்கு வழிகாட்டும் வெளிச்சம் எனும் தலைப்பில் வெளியான கட்டுரையை கல்விக்கான களப்பணியில் எமக்கு வழிகாட்டும் உங்களுக்கு எம் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொண்டு உங்கள் பார்வைக்கு சமர்ப்பிக்கிறோம்...

நன்றியுடன்

வெளிச்சம் மாணவர்கள்




வெளிச்சத்தோடு இணைந்து 
பலருக்கு உதவ நினைப்பவரா நீங்கள் இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்.. https://spreadsheets.google.com/viewform?formkey=dFR0MFJtbllsNUNrRk9CTG82ZlJxOWc6MQ


ஒரு காலத்தில் இந்தியாவின் சுமையாக கருதப்பட்ட மக்கள் தொகை இன்றைக்கு மனித வளமாக மாறியுள்ளது. ஆம். மனித ஆற்றல் நம்மிடம்தான் அதிகமாக உள்ளது. உலக அளவில் அதிக இளைஞர்களை கொண்ட நாடாக இந்தியா உள்ளது. இந்த இளைஞர்களால் நாட்டின் வளர்ச்சி உச்சத்திற்கு செல்லும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து உலக நாடுகள், இந்தியாவை மிரட்சியுடன் பார்க்கின்றன.
இந்த காலகட்டத்தில் தற்கொலைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவது வேதனையான ஒன்று. உலகளவில் மக்கள் தொகையில் மட்டுமல்ல, தற்கொலைகளின் எண்ணிக்கையிலும் சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியா 2ம் இடத்தில் இருக்கிறது. இதில் 40 சதவீதம் பேர் இளைஞர்கள். உலகம் முழுவதும் ஆண்டுதோறும் 10 லட்சத்துக்கு மேற்பட்டவர்களும், இந்தியாவில் ஒரு லட்சத்துக்கு மேற்பட்டவர்களும் தற்கொலை செய்து கொள்கின்றனர். தமிழகத்தில் சுமார் 11 ஆயிரம் பேர், இதில் 5 ஆயிரம் பேர் மாணவர்கள். தமிழகம் மற்றும் தென்னிந்தியாவில் தற்கொலை செய்து கொள்வோர் எண்ணிக்கை அதிகம்.
தேசிய குற்ற ஆவண காப்பக தகவல்படி, கடந்த 2010ம் ஆண்டு ஒரு லட்சத்து 35, 599 பேர் இந்தியாவில் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதில், 50,755 பேர் 29 வயதுக்குட்பட்டவர்கள். 3,130 பேர் 14 வயதுக்குட்பட்டவர்கள் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் தற்கொலை செய்து கொள்வோரில் 51 சதவீதம் பேர் பட்டதாரிகள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் அல்லது இளைஞர்கள்.
குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவர்களிடம் ஏற்படும் மன அழுத்தத்தால் தற்கொலைகளின் எண்ணிக்கை ஒருபக்கம் அதிகரித்து வருகிறது. பள்ளி மாணவர்களில் 20 சதவீதம் பேர் மன அழுத்தத்தால் பாதிக்கப்படுகின்றனர். கடந்த 2009ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, தேர்வு தோல்வியினால் தமிழகத்தில் 223 பேர் உட்பட நாடு முழுவதும் 2010 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்றெல்லாம் புள்ளி விவரங்கள் புளியைக் கரைக்கின்றன. இதன் சமீபத்திய உதாரணங்கள்தான் சென்னையில் பொறியியல் மாணவர்களின் தற்கொலைகள்.
உணவளிக்கும் விவசாயிகளில் தொடங்கி, எதிர்காலத்தை நிர்ணயிக்கும் மாணவர்கள் வரை தற்கொலை செய்து கொள்வதை தடுக்க வேண்டும். நம் மனித வளத்தை காக்க வேண்டும் என்று கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் குரல் கொடுக்கின்றனர்.
திருச்சி அண்ணா தொழில்நுட்பக் கழக பாடதிட்டக் குழு இயக்குநர் புரட்சிக்கொடி சொல்லும் கருத்து:
தற்கொலைக்கு முற்றுப்புள்ளி வைக்க பெற்றோர்கள், ஆசிரியர்கள் இணைந்து செயல்பட வேண்டும். சரியாக படிக்காத மாணவர்களை அதிகமாக கண்டிப்பதன் மூலம் அவர்களை அவமதிக்க கூடாது. அதிக மதிப்பெண் பெற வைக்க வேண்டும் என்பது மட்டும் நோக்கமாக இருக்க கூடாது. மாணவர்களின் தனித்திறனைக் கண்டறிந்து, அதை மேம்படுத்த வேண்டும். யாருடனும் ஒப்பிட்டு அவர்களை அவமதிக்க கூடாது. வகுப்பறையில் ஏற்படும் மன அழுத்தத்தை போக்க பள்ளி, கல்லூரிகளில் மாணவர் ஆலோசனை மையங்கள் (கவுன்சிலிங் சென்டர்) அமைக்கப்பட வேண்டும். நீதிபோதனை, விளையாட்டில் மாணவர்களை ஈடுபடச் செய்ய வேண்டும். இவ்வாறு புரட்சிக்கொடி கூறினார்.
வெளிச்சம் அமைப்பின் நிறுவனர் ஷெரின்:
வெளிச்சம் மாணவர்கள் ஆய்வுகளின்படி, 54 சதவீதம் பேர் காதல் தோல்வியாலும், 26 சதவீதம் பேர் மனதில் இனம்தெரியாத வேதனையாலும், 15 சதவீதம பேர் தாழ்வு மனப்பான்மை மற்றும் ஆங்கிலம் தெரியாமையாலும், 3 சதவீதம் பேர் சக மாணவர்களால் புறக்கணிக்கப்படுவதால், 3 சதவீதம் பேர் ராகிங்கால் தற்கொலை செய்து கொள்கின்றனர். �நான் பேசுவதைக் கேட்க யாருமில்லை. என்னை யாருமே புரிந்து கொள்ளவில்லை� என ஏங்கும் மாணவர்கள் அதிகம் உள்ளனர்.
தோளுக்கு மேல் வளர்ந்த பிள்ளையிடம் நாம் பேச வேண்டாம் என்று பெற்றோர்கள் ஒதுங்குவதாலும் தற்கொலைகள் அதிகரித்து வருகிறது. பெருகி வரும் மாணவர்கள் தற்கொலையை தடுக்கும் வகையில் 2010ல் மாணவர் ஆலோசனை மையம் (ஹெல்ப் லன் & 96981 51515) தொடங்கப்பட்டுள்ளது. இதில் 21 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் தொடர்பு கொண்டுள்ளனர். இதில் கல்வி நிறுவனங்கள் கொடுக்கும் நெருக்கடியால் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக பலர் தெரிவித்துள்ளனர். மேலும் 100 சதவீத தேர்ச்சி, நன்கொடையை மட்டுமே குறிக்கோளாக செயல்படும் கல்வி நிறுவனங்களும் தற்கொலைக்கு காரணமாகின்றன. எனவே மாணவர்கள் தற்கொலை என்பதை தேசத்தின் பிரச்னையாக கருதி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மனித வள ஆலோசகர் மற்றும் முன்னாள் எஸ்.பி கலியமூர்த்தி:
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு மனித உயிர் மலிவானதல்ல. எத்தகை துன்பத்திற்கும் தற்கொலை தீர்வாக இருக்க முடியாது. இதைத் தடுக்க வேண்டியது பெற்றோர்கள், ஆசிரியர்களின் கடமை. மாணவர்கள் எதையும் எதிர்கொள்வோராக, எந்த பிரச்னைக்கும் தீர்வு காண்போராக உருவாக்கப்பட வேண்டும். நீதிநெறி, தன்னம்பிக்கை கதைகள் சொல்லித் தரப்பட வேண்டும். வெறும் மதிப்பெண் பெறுவது மட்டும் கல்வியல்ல. காரணம் மதிப்பெண்ணை விட ஒரு உயிர் உயர்வானது, உன்னதமானது என்பதை உணர வேண்டும். ஆங்கிலம் கற்க முடியாமல் தற்கொலை செய்து கொள்வது முட்டாள்தனம். ஆங்கிலம் என்பது ஒரு அந்நிய மொழி. அது தெரியவில்லை என்பதற்காக வெட்கப்படத் தேவையில்லை. ஒரு முறை தற்கொலைக்கு முயன்றால், அடிக்கடி அந்த எண்ணம் வரும். எனவே தற்கொலை எண்ணமே மனதில் இருக்க கூடாது.
�நம்பிக்கை� தற்கொலை தடுப்பு மைய இயக்குநர் ராமகிருஷ்ணன்:
குடும்ப பிரச்னை, மன அழுத்தம் உள்ளிட்ட காரணங்களால் தற்கொலை எண்ணத்தை தூண்டும் மனச்சோர்வு நோய் ஏற்படுகிறது. 100ல் 12 பேருக்கு மனச்சோர்வு நோய் ஏற்பட்டுள்ளது. வரும் 2020ல் உலகளவில் அதிகளவில் இந்நோய் இருக்கும் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இதைத் தவிர்க்க கல்வி நிறுவனங்கள் மட்டுமின்றி, பிற அரசு நிறுவனங்களிலும் ஆலோசனை மையங்கள் அமைக்க வேண்டும். மற்ற நோய்களுக்கு சிகிச்சைக்கு செல்வது போல் மன அழுத்தம், மனச்சோர்வுக்கும் மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும். இதில் வீண் தயக்கம் தேவையில்லை. தேர்வு நேரத்தில் ஏற்படும் பயம் மற்றும் தற்கொலை எண்ணத்தை போக்க 98424 22121 என்ற தொலைபேசி எண்ணில் 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம். அவர்களுக்கு இலவச ஆலோசனை வழங்கப்படும்.
ஆவணப்படம் தயாரிப்பு:
பல்வேறு காரணங்களால் மாணவர்களின் தொடர் தற்கொலை வேதனையளிக்கிறது. எனவே, மாணவர்கள் தற்கொலையைத் தடுக்கவும், அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அன்பாலயம் நிறுவனம் சார்பில் ஆவணப்படம் தயாரிக்கிறோம். இதில் இளம் சாதனையாளர்களின் விபரம், தற்கொலைக்கான காரணங்கள், இளைஞர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் குறித்த விபரங்கள் தொகுக்கப்பட்டுள்ளது. இந்த ஆவணப்படத்தை வரும் கல்வியாண்டில் பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று மாணவர்கள் மத்தியில் ஒளிபரப்பி, விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிட்டுள்ளோம் என்று அன்பாலயம் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.
- ஜோ.மகேஸ்வரன்
நன்றி: தினகரன் 6.5.12



 ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட பணியிடங்களுக்கான மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத் தேர்வில் (யு.பி.எஸ்.சி.) அதாவாது ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ். உள்ளிட்ட பணிகளுக்கான சிவில் சர்வீசஸ் தேர்‌வி‌ல் 910 மாணவர்கள் தேர்வு பெற்றுள்ளனர். அதில் தமிழகத்திலிருந்து 68 பேர் வெற்றி பெற்றுள்ளனர் ..

2011-12 ஆம் ஆண்டுக்கான யு.பி.எஸ்.சி. தேர்வு முடிவுகள் நேற்று (மே 4) வெளியிடப்பட்டன. நாடு முழுவதும் தேர்வு எழுதிய 2 லட்சத்து 40 ஆயிரம் பேரில் 910 மாணவ, மாணவியர் மட்டும் வெற்றி பெற்றனர்.

இதில், தில்லியைச் சேர்ந்த சேனா அகர்வால் அகில இந்திய அளவில் முதலிடம் பெற்றுள்ளார். தில்லியிலுள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் (எய்ம்ஸ்) எம்.பி.பி.எஸ். பட்டம் பெற்றவர் இவர்.

மும்பையில் உள்ள டாடா இன்ஸ்டிடியூட் ஆஃப் சோஷியல் சயின்ஸில் எம்.ஏ. பட்டம் பெற்ற ருக்மணி ரியார் 2-வது இடத்தையும், தில்லி ஐ.ஐ.டி.யில் எம்.டெக். படித்த பிரின்ஸ் தவாண் என்ற மாணவர் 3-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

ராமாநாதபுரத்தைச் சேர்ந்த விவசாய விஞ்ஞானியான எஸ்.கோபால் சுந்தரராஜ், அகில இந்திய அளவில் 5-வது இடத்தைப் பிடித்துள்ளார். போடி நாயக்கனூரைச் சேர்ந்த எம்.சுந்தரேஷ் பாபு 38-வது இடத்தையும், புதுக்கோட்டையைச் சேர்ந்த கே.செந்தில்ராஜ் 57-வது இடத்தையும்,  அழகுவார்சினி 77வது இடத்தையும், ஆர்த்தி 190வது இடத்தையும் பிடித்துள்ளனர்.


தமிழக மாணவர்கள் யு.பி.எஸ்.சி. தேர்வில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு குறைவான எண்ணிக்கையிலேயே வெற்றி பெற்றுள்ளனர். மொத்தம் 910 மாணவர்களில் 68 பேர் தமிழக மாணவர்கள். கடந்த ஆண்டு இந்தத் தேர்வில் 96 மாணவர்கள் வெற்றி பெற்றிருந்தனர்.

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். பணியிடங்களுக்கான முதல் நிலைத் தேர்வு கடந்த ஜுன் 12-ம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்வுக்கு 4.7 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். அதில் 2.4 லட்சம் மாணவர்கள் மட்டுமே இந்தத் தேர்வில் பங்கேற்றனர்.

இவர்களில் 11,984 மாணவர்கள் பிரதானத் தேர்வுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். பிரதான தேர்வு எழுதியவர்களில் 2,417 மாணவர்களுக்கு நேர்முகத் தேர்வு 2012 மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெற்றது. நேர்முகத் தேர்வில் பங்கேற்றவர்களில் 183 பேர் தமிழக மாணவர்கள். அதன்பிறகு, முடிவுகள் இப்போது வெளியிடப்பட்டுள்ளன.

மொத்தம் 910 பேர் பணிக்கு தேர்வுசெய்யப்பட்டு இருக்கிறார்கள். அவர்களில் 420 பேர் பொதுப்பிரிவினர், 255 பேர் ஓ.பி.சி. வகுப்பைச் சேர்ந்தவர்கள், 157 பேர் எஸ்.சி. பிரிவையும், 57 பேர் எஸ்.டி. வகுப்பையும் சேர்ந்தவர்கள்.

முதல் 25 இடங்களைப் பிடித்தவர்களில் ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., எய்ம்ஸ் உள்ளிட்ட புகழ்பெற்ற நிறுவனங்களில் படித்த மாணவர்களும் இடம்பெற்றுள்ளனர்.

தேர்ந்தெடுக்கப்பட்ட 910 பேரில் 195 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.