படிப்பு செலவிற்காக மாங்காய் பறிக்க போனீங்களே!.. தர்மபுரி லாரி விபத்தில் பலியான 6 மாணவர்களின் கருகிபோன கல்விக்கனவு..

Posted by Unknown - -


பள்ளிக்கூட விடுமுறை நாட்கள் என்பது பணக்காரர்களுக்கு ஹாலிடேவாக இருக்கலாம் ஆனால் ஏழை மாணவர்களுக்கு  அப்பா அம்மாவிற்கு ஒத்தாசை செய்ய அல்லது படிப்பு செலவிற்கு பணம் சம்பாதிக்கவே விடுமுறை  நாட்கள் என்பது எழுதப்படாத விதியாகவே உள்ளது.

அப்படிதான் படிப்பு செலவிற்காக வேலைக்கு போன  5 மாணவர்களை பாடையில் ஏற்றியிருக்கிறது  கடந்த 27 அன்று தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே நடந்த மாங்காய் லோடு ஏற்றிய லாரி விபத்து.   
இந்த விபத்து பலிகொண்ட 12 பேரில் 5 பேர் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் என்பதும் காயமடைந்தவர்களில்  12 பேர் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் என்பதுதான் பரிதாபம்.

தற்போது  வெளியிடப்பட்ட பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகளிலும், கல்வி அறிவில் பின்தங்கியுள்ள மாவட்டமாக விளங்கும் தர்மபுரி மாவட்டத்தில் ,கிராமங்களில் உள்ள பலரும் பெங்களூர் மற்றும் வெளியூர்களில் கூலி வேலை செய்துவருகிறார்கள். சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே உழைப்பை மட்டுமே நம்பி இருப்பவர்களாக காணப்படுகிறார்கள்.

குடும்பத்தில் பெரியவர்களின் வருமானம் போதுமானதாக இல்லாத  நிலையில் இங்கு காணப்படுவதால், பள்ளிக்கூட குழந்தைகள்  படிப்பு செலவுக்காக விடுமுறை நாட்களில் மாங்காய் பறிக்கும் வேலைக்கு சென்று சம்பாதித்து வருவது வழக்கம்.

இதன் மூலம் இந்த மாங்காய் காய்க்கும் சீசன் பருவத்தில் மாணவர்கள் ஒவ்வொருவரும் ரூ. 5 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை சம்பாதித்து,  அந்த பணத்தை கொண்டு பள்ளி, கல்லூரி செலவுக்கு பயன்படுத்தி வந்திருக்கிறார்கள்.  ஆனால்  சில பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை வேலைக்கு செல்லவேண்டாம்  என்றாலும், அதை கேட்காமல் மாணவர்கள் தங்களுடன் படிக்கும் சக மாணவர்களுடன் சேர்ந்து வேலைக்கு சென்றுவிடுவார்கள்.  அப்படிதான் அந்தோணி, ஞான சவுந்தரரும் சினேகிதமாக வேலைக்கு சென்றார்கள்.

ஆனால்  கடந்த 27.05.2012 அன்றும் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் மாங்காய் பறிக்கும் வேலைக்கு சென்றுவிட்டு  லாரியில்  ஏற்றப்பட்ட லாரியிலேயே வீடு திரும்பும் போது, மலைப்பாதையில், லாரி கவிழ்ந்ததால்  20வதுக்கும் மேற்ப்பட்ட கூலி தொழிலாளர்கள் சிக்கி பலியானார்கள்.


தினமும் செய்தித்தாள்களிலும், தொலைக்காட்சிகளிலும்,  விபத்துக்களால் கொத்து கொத்தாக உயிர்கள் பலியாவதை படித்தோ, பார்த்தோ பலகிப்போன நமக்கு, இந்த மாங்காய் லாரி கவிழ்ந்த செய்தி உங்களுக்கு கிடைத்ததும் அப்படிதான் நகர்ந்திருப்பீர்கள்..

ஆனால் அந்த பலிகளின் பட்டியலில்   பள்ளி மாணவி சோனியா காந்தி, மாணவர்கள் அந்தோணி, ஞான சவுந்தர் மற்றும் கல்லூரி மாணவிகள் செல்வி, உமா ஆகியோர் இறந்துள்ளனர் என்பதுதான் நெஞ்சை உருக்கும் பரிதாபம். அதில் பலியான  செல்வி கிருஷ்ணகிரி அரசு கல்லூரியில் பி.ஏ முடித்துவிட்டு இப்போது பி.எட் படித்து வருகிறார். மேலும்  உமா கிருஷ்ணகிரி அரசு மகளீர் கல்லூரியில் பி.பி.ஏ படித்து வருகிறார். சோனியாகாந்தி, அந்தோணி, ஞானசவுந்தர் ஆகிய மூவரும் கதிரிபுரம் அரசு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்துவருகிறார்கள்.

மேலும் படுகாயம் அடைந்துள்ள 31 நபர்களில் அருண், மாரிமுத்து, ராஜசேகர், அருள், செல்வன், கார்த்திக், சக்திவேல் ஆகிய ஏழு மாணவர்களும், சிவரஞ்சனி, பவித்ரா, சத்தியா, ஷாலினி, சரண்யா  ஆகிய ஐந்து மாணவிகளும் பத்து மற்றும் பனிரெண்டாம் வகுப்பு படித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
வட்டாம்பட்டியை சேர்ந்த கல்லூரி மாணவியான உமாவுக்கு இன்னும் திருமணம் ஆகாத காரணத்தால், அவர்கள் குல வழக்கப்படி உமாவின் உடல் ஊர் எல்லையில் வைத்து அந்த பெண்ணின் தாய்மாமன் முறையில் உள்ளவர்கள் வாழை மரத்துக்கு தாலி கட்டிய பின்னர்தான் வீட்டுக்கு எடுத்து செல்லப்பட்டு பின்னர், கிராம வழக்கபடி வீட்டில் நடத்தப்படும் சடங்குகள் நடத்தி முடிக்கப்பட்டு முறைப்படி  அங்குள்ள மயானத்தில் கொண்டு போய் எரியூட்டப்பட்டதோடு கருகிபோனது ஏழை மாணவர்களின் கனவுகள்…

பதில் சொல்லப்போவது யார்?

உயர்கல்வி எங்கள் உரிமை 
நன்றியுடன்
வெளிச்சம் மாணவர்கள்.

நீங்களும் மற்றவர்களுக்கு உதவ நினைக்கிறீர்களா?

இங்கே கிளிக் செய்யுங்கள்: ...........................................................................

Leave a Reply