என் தங்கம் என்னுரிமையா ? –புரட்சி விளம்பரத்தை கேள்வி கேட்கும் மாணவர்கள் ...

Posted by Unknown - -

கடந்த 13 அன்று சரியாக 11 மணியளவில் வேலூர் வாலாஜா நகராட்சி அரங்கத்தில் பெண்கள் சிசுவை  கொல்வதற்காக தன் மனைவியிடம் ஒருவர் தகறாறு செய்து கொண்டிக்க  அவன் காலை பிடித்து குழந்தையை  உயிரோடு இருந்து போகட்டும் என கெஞ்சி கதறி கொண்டிருந்தாள் அவனின் மனைவி..

அப்போது அங்கே ஓடி வந்த பெண்  எங்க வீட்டு மாடு பசு கண்ணு போட்டிருக்கு, எங்க வீட்டுல ஆடு பொட்ட குட்டி போட்டிருக்கண்ணு சொல்ல பக்கத்து வீட்டு ரஞ்சிதம்  பொம்பளை பெத்துட்டான்னு வெசன த்தோடு நின்றுகொண்டிருக்க அடுத்தடுத்த நிகழ்வுகள் பெண்களுக்கு எதிரான எதார்த்தமான அடக்கு முறைகளில் விளக்க அந்த நிகழ்வு . என் தங்கம் என்னுரிமை விளம்பரம் முதல் எல்லாவற்றையும் அம்பலபடுத்தியது..

தினம் தினம் அரங்கேற வரிசையாக உட்கார்ந்திருந்த பெண்கள் பொம்பளை சிரிச்சா போச்சாம் புகையிலை விரிஞ்சா போச்சுன்னு பழமைமொழியை சொல்லி எங்க வாய கட்டிட்டாங்கன்னு ஒரு பொண்ணு கத்த, படி தாண்டினா பத்தினியில்லைன்னு சொல்லி வீட்டுகுள்ளேயே போட்டிங்க அதையும் மீறி  வெளியில கிளம்பினா எங்கள வேசின்னு சொல்லுறீங்க...

சாப்பாட்டுல கூட பெண்களுக்கு வித்தியாசம் காட்டுறீங்க உங்களையறியாமலே பெண்பிள்ளைக்கு பாசம் வைப்பதில் கூட ஓரவஞ்சனை செய்றீங்க... பாசத்துக்கு ஏங்கும் ஒரு பொண்ணு பேசனாகி போன காதலுக்கு மயங்கி ஐஞ்சி நிமிச பழக்கம் அடுத்து பத்தாவது நிமிசத்துல தன்னை இழக்குற தொலைக்காட்சியும்,சினிமாவும் சொல்லுவதை நிஜமென நம்பி காதல் போதையில் மயங்கி சீரழிவது தான் பெண்களுக்கான நாகரீகமா இதை உருவாக்கியது யார்?

வரதட்சனை கொடுத்து கல்யாணம் செய்து கொண்ட பெண்ணொருத்தி அதன் பின்னால் அனுபவிக்கும் கொடுமைகளை அனுபவித்து அழுது நிற்க  மெல்லிய ஒரு குரல்....

 பூமுடிச்சி பொட்டு வச்சி பொன்னகையும் போட்டுவச்சு கல்யாணம் முடிச்சி வச்ச அம்மா நான் கண்கலங்கி திரும்பு றேனே அம்மா சீதனமா நீ எனக்கு நூறுவகை தந்தாலுமே பேராசை பிடிச்ச கூட்டம் அம்மா என்னை பிச்சு புடிங்கி எரியுறாங்க அம்மா
                                    எனும் வரிகள் ஒலிக்க தங்க விலை தினம் தினம் ஏறுது கையல இருக்கு தங்கம் கவலை விடுடா சிங்கம்னு விளக்கும் விளம்பரத்துல விஜயும்,விக்ரமுன்னு எல்லா நடிகர்களும் போட்டி போட்டுகிட்டு  நடிச்சி தங்கம் வாங்கணும்கிறாங்க, இதுல ஒருபடி மேல போன பிரபு என் தங்கம் என்னுரிமைன்னு சொல்லி முடிக்கும் விளம்பரத்துக்கு அடுத்ததாகவே அதே விளம்பரத்தில் அடகு வைப்பதற்கு வழி சொல்லும் முத்தூட் பைனாஸ் விளம்பரம்..  தங்க புரட்சியை டாராக்கினார்கள் வெளிச்சம் மாணவர்கள்.. அந்த காலத்துல  யார்ரா வரதட்சணை கொடுத்து கல்யாணம் பண்ணுனா  பொம்பளைங்க எல்லாரும் வரதட்சனை கொடுத்து கல்யாணம் செய்யமாட்டோனா என்ன பண்ணுவாங்க இந்த ஆம்பளைங்க புதிய விசயத்தை பற்றவைக்க நமக்கு பகீர்ன்னு தூக்கி வாரி போட்டது..

பொம்பளை பிள்ளைகிட்ட எந்த விசயத்துலயும்  விருப்பமிருக்குதான்னு கேக்குறதும் முடிவெடுக்குற உரிமை அவர்களுக்கு கொடுக்கறதே இல்லை அதுவும் வீட்டுல சின்ன பையன் தன்னோட அம்மாவை உனக்கு ஒன்னு தெரியாதும்மா கம்முனு கிடன்னு சொல்லுறதும் எதார்த்தம் ஆனால் பெண்களுக்கு தெரியாமலேயே நீ அடிமையாக கிடக்கிறாய் எனும் அடிமை விலங்கு பூட்டப்பட்டிருக்கிறது இதை எதார்த்தமான விசயங்களில் கூட காணலாம் குறிப்பாக பெம்பளைபுள்ள பெறப்புல இருந்து இறக்குற வரைக்கும் எங்களை ஒதுக்குறதும், அடிக்கறதும்,கொடுமை படுத்த படுறதும், தொடர்கதையாக கிடக்கிறது இந்த கொடுமைகள் இன்னைக்கு வன்கொடுமைகளாக மாறி நிற்கிறது, இதை மாற்றிட பெண்ணினமே விழித்தெழு சரித்திரம் உன் காலடியில் என குழு பெண்கள் ஒலிக்க ஒவ்வொரு பெண்ணாக  

நான் தலைமைத்துவத்துடன் இருப்பேன்,
நான் சுய சிந்தனையுடன் இருப்பேன்
நான்  பெண்ணான எனது வலியை ஆண்களுக்கு உணர்த்துவேன்
நான்  விழிப்புணர்வுடன் இருப்பேன்
நான்  நாட்டை முழுமையாக ஆளுவேன்
நான்  என் திறமைகளை வெளிப்படுத்துவேன்
நான்  ஒழுக்கத்துடன் இருப்பேன்
            என்ற சொல்ல பெண்கள் விழித்தெழுந்தால் சரித்திரம் உண்டாகும்.... என முடிவடைந்தது அந்த நிகழ்வு...

தொடர்ந்து பேசிய வெளிச்சம் செரின் அவர்கள் இந்தியா நம் தாய் நாடுங்குறோம் நாம பெத்த தாயை மதிக்கறோமான்னு யோசிச்சு பாருங்க ஒவ்வொரு பெண்ணும் இந்த சமூகத்தை உருவாக்குகிற மாபெரும் சக்தி அவர்களை பூஜை செய்ய சொல்ல குறைந்த பட்சம் உணர்வுகளுக்கு அங்கிகாரம் கொடுங்கண்ணு சொல்லுறோம் என்று பேசி முடித்ததும்..

பார்வையாளர்கள் வரிசையிலிருந்து மேடைக்கு வந்த சுகந்தி என்கிற பெண் இது நாள் வரை  நாளு பேருக்கு முன்னால நான் பேசியது கூட இல்லை இப்பதான் மைக்கே பிடிச்சி பார்க்கிறேன்னா பாருங்க கண் கலங்கிய படி தன் வலிகளை பதிவு செய்ய ஆண்களும் உணர்ந்தார்கள்..

இறுதியாக பெண்களின் தலைமைதுவம் &  பெண்கள் அனுபவிக்கும் வன்கொடுமைகள் என்ற தலைப்பில் வெளிச்சம் மாணவர் அமைப்பின்  விழிப்புணர்வு  நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வேலூர் நகராட்சியின் 8 ஆண் கவுன்சிலர்கள் 4 நாளு பெண் கவுன்சிலர்களும், சேர்மென்,டி.எஸ்.பி, உட்பட்ட பலரும் கலந்து கொண்டார்கள். அவர்கள்  ஆண்கள் இது வரை எங்களை அறியாமல் நடந்து கொண்டிருந்த தவறான புரிதலுக்கு நாங்கள் வருந்துகிறோம், இனி என் மகளை என் மனைவியின் உணர்வுகளுக்கு நிச்சயம் மதிப்பளிப்பேன்னு வருந்தி சொல்ல  மாற்றம் அங்கிருந்தே ஆரம்ப மானது...
  
நிகழ்ச்சி தொகுப்பு :
வெளிச்சம் நந்தினி..





இந்த பதிவை பற்றி உங்கள் விமர்சனம் வரவேற்கிறோம்..
ஏன்னா இது எங்களுக்கான பணியல்ல சமூகத்துக்கான பணி..
உங்கள் விமர்சனம் எம்மை பக்குவ படுத்தும்..

நாம் இணைவோம்: படிவம்



பாராட்டு
முதன் முதலில் மைக் பிடித்து பேசும் பெண்

இசைப்பயணம்
பயணங்கள் முடிவதில்லை

3 Responses so far.

  1. Unknown says:

    திருமணத்தில வரதட்சன மட்டுமே பெண்ணடிமைத்தனம் இல்ல... திருமணங்கள்ள இருக்குற பெண்ணடிமைத்தனத்தோட முதுகெலும்பு 'தாலி'-தான். பெண்ணடிமைத்தனத்த உடைக்கனும்னா அதோட முதுகெலும்பா இருக்குற தாலியை உடைக்கனும்... பெண்கள்/நீங்கள் தயாரா??

  2. Unknown says:

    Viduthalai R. Regina அவர்களுக்கு உங்கள் கேள்வி சரியானதுதான்.... உங்களுக்கு தெரியுமான்னு தெரியல வெளிச்சம் செரின் அவர்கள் திருமணமாகியவர் அவரிடம் தாலி,மெட்டி, போன்ற ஏன் பெண் இப்படிதான் இருப்பார் என்கிற மாயை உடைக்கும் தோன்றம் எண்ண முடியவர்... அவரின் வளர்ப்பு நாங்கள்..... தயாராக இருக்கிறோம்

  3. Unknown says:

    மகிழ்ச்சி...மகிழ்ச்சி...மகிழ்ச்சி!!! :)

Leave a Reply