இழந்த உரிமைகளை இலவசமாக பெறமுடியாது

Posted by Unknown - -

         சமூக அவலங்களை தீர்ப்பதும் சமூகத்திற்காக வேலை செய்து என்பது சலுகைகளாலோ அல்லது நாற்காலிகள் மீது அமர்ந்து கொண்டு கனவு காண்பதால் சாத்தியபடும் என்று கனவுகண்டால் உங்கள் கற்பனையை தூக்கியெறியுங்கள்..
மனித உரிமைகள் தினமான 10.12.11 அன்று பாண்டிச்சேரி பல்கலை கழக சமூக பணித்துறை மாணவர்கள் ஒருங்கிணைத்த பெண்கள் உரிமை பற்றிய விழா  விழுப்புரம் மாவட்டம்  கொடுர் கிராமத்தில்  நடந்தது. விழாவின் சிறப்பு அழைப்பாளரான வெளிச்சம்  செரின் அவர்கள்  தனக்கு வழங்கப்பட்ட தலைப்புகளின் கீழ் பெண்கள் உரிமை,கிராம மக்களின் வாழ்நிலை, தாழ்த்தப்பட்டோர் உரிமைகள் ஆகிய தலைப்புகளில் மூன்று மணி நேரத்திற்கு மேல் உரையாற்றினார். செரின் அவர்கள் பேசி முடித்த பின் இறுதியாக பேசிய பல்வேறு மாநிலத்தை சேர்ந்த மாணவர்கள் பெரும்பாலானவர்கள் சமூகத்தை பற்றிய தங்களின் தவறான புரிதலை மாற்றிகொள்வதோடு இதுவரை கொண்டிருந்த தவறான புரிதலுக்கு வெட்கப்படுவதாகவும் நிகழ்ச்சியின் இறுதியில் பேசியவர்கள் இனி சமூகத்திற்கு வெறும் விளம்பரத்திற்காகவும்,சம்பளத்திற்காக மட்டும் பணியாற்றாமல் சமூகத்திற்கு உண்மையாக உழைப்போம் என மனமுவந்து பேசினார்கள்...

(வெளிச்சம் செரின் அவர்களின்  ஆங்கில உரையை தங்களுக்கு தமிழில் மொழிப்பெயர்த்து வழங்குவதில் மகிழ்கிறோம்..)
                                  
சமூக மாற்றம் குறித்து பேசுபவர்கள் முதலில் தன்னளவினான மாற்றத்திற்கு முதலில் தயாராகவேண்டும் அப்படி மாறலைன்னா இந்த தலைப்புகள் எல்லாம் வெறும் பேச்சாவேதான் இருக்கும் இங்கே நடக்கிற போராட்டங்களை போல் இங்கிருக்கிற சில தலைவர்கள்  ஊழலுக்கு எதிரா குரல் கொடுக்கிற இன்றைய காந்திகள் மாறி போராடுரவங்க பெரும்பாணமையான மக்களின்  பிரச்சனைகளை குறித்து பேச மறுப்பது காலகாலமாக இந்தியாவிலிருக்கிற இருக்கிற பிரச்சனை..

 குறிப்பா தன்னோட வீட்டுல தனக்கு பிரச்சனை வந்தா பிரச்சனையாகவும் பக்கத்து வீட்டுல பிரச்சனை வந்த நமக்கு ஏன் வம்புன்னு வீட்டுக்குள்ள போய் கதவடைத்து கொள்கிற நிலை சமீப காலமாகதான் அதிகரித்துள்ளது. குறிப்பாக தமிழர்களுக்கான பிரச்சனையானாலும், கூடங்குளப்பிரச்சனை,முல்லை பெரியாறு பிரச்சனையானாலும் மக்கள் தங்களுக்கான  பிரச்சனையாக இன்னும் உணரவில்லை அப்படி உணருவதை சிலர் விரும்பவில்லை,  தலைவர்களெல்லாம் தனக்கு பின்னால் ஒரு கூட்டம் வருனும் நினைக்கிறாங்களே தவிர மக்களிடம் போய் பிரச்சனைகளை விளக்கி  மக்களை உசுப்பி ஒரே குடையின் கீழ் நிறுத்தி போராட வைக்காதது தான் நமக்கு வேதனையளிக்கிறது..

கிராம வாழ்வு முறை மற்றும் சாதியம் குறித்து பேசியதாவது...

   இந்த நாட்டின்  பெரும்பாண்மையான  பகுதி கிராமங்களை கொண்டது விவசாயமே நவீன மயமாதலில் எல்லாம் தொலைத்துவிட்ட நாம் விவசாயத்தையும் இழந்துவிட்டோம் அதுபோல் நாம் இங்கு நிலங்களை போல உரிமைகளும் சிலரின் பாக்கெட்டுக்குள்  கிடக்கிறது

மனித உரிமைன்னா என்னான்னே தெரியாத நபர்கள் இன்னமும்  இருக்கிறார்கள்  ஆனால் அவர்களுக்கு எல்லா நடிகர்கள்  பத்தியும் தெரிந்திருக்கும்,  இன்னைக்கு கிராமத்தில  இருக்கிற சூழலே வேற   மக்கள் தங்களோட தினசரி வாழ்க்கைகே ரொம்ப கஸ்ட போது மற்ற பிரச்சனைகளை காது கொடுத்து கேட்பதோடு நிறுத்தி கொள்கிறார்கள். இது ஒரு பக்கம் நகரத்தில் வீடுகளாக பிரிந்து கிடப்பவர்கள் கிராமங்களில் சாதிகளாகவும் பிரிந்து கிடக்கிறார்கள். கல்வியிலும் சமூக பொருளதர சமத்துவம் கிடைக்காதவரை  அனைவரும் சமம் என்பது வார்த்தையாகவே தான் இருக்கும்.

அதனால் தான் சமூகத்திற்கு வேலை செய்பவர்களின் பணி இன்னும் கடுமையாக உள்ளது உண்மையான மாற்றத்தை கொண்டுவருவதுதான் நம் வேலை அதுவரை தூக்கமிருக்க கூடாது.

பெண்ணுரிமை குறித்து பேசியதாவது..

 சமூக மாற்றத்தில் பெண்களின் பங்கு மிக அவசியம் ஆனால் இந்திய சூழலில் பெண்களை ஒரு ஜடப்பொருளாய் பார்க்கும் மனோ பாவம் நாகரீக சூழலிலும்  இன்னும் மாறவில்லை இன்னும் ஒருபடி மேலே சொல்ல போனால் படிக்கிற பசங்க  கூட பெண்களை வெறும் போதை பொருளாய் பார்க்கிற  மனநிலையில் இருப்பதுதான் கேவலத்துக்குறிய விசயம். ஒரு பொம்பல புள்ளையோட  ஓரப்பார்வைக்காக  கொலை  செய்யும் அளவிற்கு போதையில் கிடக்கிறார் என்றால் இவர்களின் எதிர்காலத்தை பற்றி நினைச்சா நெஞ்சம் பதறுகிறது..
இந்த சூழல் சின்ன வயசுல குடும்பத்துல  சண்டையின்னா அப்பா அம்மாவை அடிக்கறதை அப்பாவின் வீரமாகவே பார்த்து பழகுற பசங்களுக்கு தான் காதலிக்கும் பெண் அல்லது திருமணம் செய்து கொள்ளும் பொண்ணு வாய்திறக்காகமல் உடல் சுகத்தை மட்டும் தரும் வெறும் சதைக்கூடா பார்க்கிறத முதல்ல மாத்திக்கோங்க பொம்பளைங்களும் மனுசிங்கதாண்னு நினைங்க..

பழைய வரலாற்றின் கொஞ்சம் புரட்டினா சமூகமாற்றதுல பெண்களின் பங்கு நிறைய இருந்திருக்கு ஆனால் பெண்கள அடக்க ஒடுக்கமா ஊட்டுல சோறாக்க, அடுப்பூத விட்டுட்டு இப்ப எல்லாத்தையும் வெறும் வாந்தியெடுக்கிற இந்த படிப்பை படிக்க வச்சி எல்லா பொண்ணுகளுக்கு சுதந்திரம் கிடச்சிடுச்சுன்னு டிவியில பேசுறாங்க. இதுதான் சுதந்திரமா ஆணுக்கு கொடுக்கப்படுகிற உரிமைகள் இங்கு பெண்களுக்கு கொடுக்கப்படுகிறதா கொஞ்சம் யோசித்து பார்த்தால் தெரியும் இல்லவே இல்லை.  எல்லா வீட்டுயும் செல்போன் இருக்கு ஆனா டாய்லட் இருக்கான்னு பார்த்தா இல்லை ஒரு கிராமத்து பொண்ணு டாய்லெட்  போகனும்னா எப்படா பொழுது போகும்னு காத்திருக்கனும் இந்த கொடுமை  எல்லா சாதி பொண்ணுக்கும் உண்டு பெண்களுக்கான உரிமைகளை பறிப்பதில் எல்லா  சாதி ஆண்களும் ஒரே மாதிரிதான் இருக்கிறார்கள். இதில் பெண்களுக்கு தாங்கள் பாதிக்கபடுவதே தெரியாமலிருப்பதுதான் வேதனைக்குறியது அதற்காக எல்லாத்தையும் தூக்கி மிதிங்க பெண்களேன்னு சொல்லும் அளவுக்கு நான் கேவலமானவள் அல்ல..

வலிகளை உணர்ந்தவர்களால் மட்டுமே  வழிகாட்ட முடியும் வலியை உணர்ந்த, அடுத்த சமூகத்தை படைக்கிற ஆற்றல் பெற்ற பெண்ணினம் இப்படியே கிடப்பதுதான் வலிக்கிறது.. ஆக இந்த சமூகத்திற்கு வேலை செய்ய துடிக்கிற அல்லது சமுத்திற்காக உழைக்க படிக்கிற நீங்கள் ஒரு சாதாரண என்.ஜி.ஓ வாதிகளாக யாரிடமோ பணம் வாங்கிகிட்டு வேலை செய்கிற நபர்களாய் மட்டுமில்லாமல் பெண்களை தன்னளவில் உண்மையாகவே மதிக்கிற,சமூகத்தில் சாதியை கடந்து மனிதர்களை நேசிக்கிற நபர்களாக மாறாமல் விளம்பரத்துக்காக, நான் இதெல்லாம் பண்ணினேன்னு போஸ் கொடுத்து போட்டா எடுத்துக்கலாம் அது எல்லாம் வெறும் படமாதான் இருக்கும்...

இழந்த உரிமைகளை இலவசமாகவோ அல்லது சலுகையாகவோ பெறமுடியாது போராடிதான் பெறமுடியும்  ஆம் ஒட்டு மொத்த சமூக மாற்றமென்பது தனிமனித மாற்றத்திலிருந்துதான் ஆரம்பமாகிறது..

உரை தொகுப்பு
வெளிச்சம் மாணவர்கள்

மக்களுக்காக உழைக்க நீங்கள் ரெடியா நாம் இணையலாமே...  விண்ணப்பம்






Leave a Reply