சமூகத்திற்கு வெறும் படிப்பாளிகள் தேவையில்லை…

Posted by Unknown - -

பணம் சம்பாதிப்பதை மட்டுமே இழக்காக  கொண்டு உறவுகள் யாரையும் மதிக்காமல் பெற்றவர்களை வீதியில் விட்டுவிட்டு தான் உண்டு தன் குடும்பம் பிள்ளைகள் உண்டு என  நினைக்கும், வெறும் பணம் சம்பாதிக்கிற  படிப்பாளிகள்  சமூகத்திற்கு  இந்த தேவையில்லை என பேசினார் வெளிச்சம் செரின்..

சென்னை அப்போலோ  நர்ஸிங்  கல்லூரியில் நடந்த விழாவில் தலைமை எப்படி இருக்க வேண்டும் எனும் தலைப்பில் பேசுவதற்கு வெளிச்சம் செரின் அழைக்கப்பட்டிருந்தார். நிகழ்வை இனிதாக்கும் விதமாக கல்லூரி  உளவியல்துறை தலைவர் ஹெலன்  அவர்கள் அறிமுக உரை நிகழ்த்தினார்.. தொடர்ந்து தனது அதிரடி பேச்சை மிக பணிவாக துவங்கினார் வெளிச்சம் செரின்..  நாம் எல்லோரும் எதற்காக  இங்கே  வந்திருக்கிறோம் என செரின் கேட்க, படிக்கத்தான் என்றார்கள் பலத்த சத்ததுடன் மாணவிகள், படிச்சி என்ன பண்ண போறீங்க என்றார் மீண்டும் மாணவிகளை நோக்கி , அவர்களோ  படிச்சி வேலைக்கு போய் சம்பாதிக்கணும் அதுக்கு தான் என்றனர்…..
 நீங்களும்  வெறும் பேப்பரை சம்பாதிக்கவா படிக்க வந்தீங்க, இந்த படிப்பு உங்களுக்கு சம்பாதிக்க சொல்லி கொடுக்கும் ஆனால் சாதிக்க சொல்லி கொடுக்காது, கஸ்டப்பட்டு என் பிள்ளை என்னோட கடைசி காலங்களில் கால் வயிறு கஞ்சி ஊத்துவான்னு கண்ணு கருத்துமாக வளர்த்த பெற்றவர்களை முதியோர் இல்லங்களில் விட்டவர்களில் பெரும்பாலானர்கள் படிச்ச பட்டதாரிகள் தாங்க,  அதுக்காக எல்லா படித்தவங்களையும்   நாம் குற்றம் சொல்லவில்லை, கிராமத்தில் படிக்காத பாமரன் வீட்டில் வயசான பாட்டிகள் இன்றைக்கும் இருப்பதை நாம் கண்கூடாக பார்க்க முடியும், கிராமங்களில் இருக்கிற முதியோர்களை எந்த  முதியோர் இல்லத்தில் சேர்த்ததாக ஒரு செய்தியுண்டா இருக்காது, இன்னிக்கு  அவங்களுக்கு ஏற்படுகிற நிலைமை உங்களுக்கு வரும்  ஞாபகம் வச்சிக்கங்க என வெளிச்சம் செரின் பேச மாணவர்கள் மத்தியில் அமைதி,

பெற்றவர்களை நேசிக்காதவர்கள் மற்றவர்களை நேசிக்க முடியாது…

           வெளிச்சம் மாணவர்களின் தாரக மந்திரமான பெற்றவர்களை நேசிக்காதவர்கள் மற்றவர்களை நேசிக்க முடியாது என சொல்ல அப்படின்னா நீங்க என்றதும் பலத்த கைதட்டல்… பெற்றவர்களின் வலியை உணராமல் படிக்கிற நீங்க வாழ்க்கையில் என்னத்த  சாதிக்க போறீங்க.. மனித நேயத்தை, மனிதனை மனிதன் நேசிக்க சொல்லி கொடுக்காத இந்த படிப்பை படிச்சி நீங்களும் வெறும் பனமுள்ளமனிதர்களாக போறீங்களா, இல்லை  அளவா சம்பாதித்து அடுத்தவர்களுக்கு உதவி செய்து நல்ல மனமுள்ள மனிதர்களாய்  வாழ போறீங்களா  யோசிங்க, நமக்கான  தலைவர்கள்  சரியானவர்கள் இல்லாமல் போனதர்கள் நாம் தான் பொறுப்பேற்கணும் இலக்கில்லாத நமக்கு இலக்கில்லாதவர்கள் தலைவர்களாய் ஆவதை காட்டிலும் நான் தான் தலைவர், நான் தலைவர்ணா மற்றவர்களுக்கு ரோல் மாடலாய் இருக்கனும் அது எப்படி பட்ட ரோல்மாடல்னு முடிவு பண்ணுங்க.. படிக்கிறப்ப முடிவு பண்ணலைன்னா வாழ்க்கை “பாடு”  அவ்வளவுதான்..

 பணங்களை மட்டுமே சம்பாதிக்கிற படிப்பாளியாக இல்லாமல்  சக மனிதர்களை நேசிக்கிற  நல்ல மனிதர்களாய்,  நாளைய தலைவர்களாய் உருவாக வேண்டும் என்ற கோரிக்கையோடு முடித்தார்..

 நம்மிடம் மாணவிகள் தரப்பில் பேசியவர் : 
           நேற்றுவரை எல்லாரும் போல நானும் வந்தோம் போனோம்னுதான் காலேஜிக்கு வந்தேன், ஆனால் இன்னைக்கு தான் என்னோட  அறிவுகண் திற ந்தமாதிரி இருக்கு நிச்சயமா  நான்  பணத்த மட்டும் சம்பாதிக்கிற நர்ஸா  வருங்காலத்துல இருக்க மாட்டேன், மனிதர்களை நேசிக்கிற புனிதமான எங்க படிப்பை, வேலையை மனித நேயத்தோடு செய்வேங்க..  நல்ல மனிதனாய் வாழ்வது எப்படின்னு கத்துக்கிட்டேன் அக்காவுக்கு நன்றி….

புகைப்படங்கள்:  வெளிச்சம் இரா.ஆனந்தி

Leave a Reply