குழந்தையின் படிப்புக்கு அம்மாவே ரோல் மாடல்

Posted by Unknown - -


குழந்தைகள் படிப்பில் தந்தையை விட தாயின் வழியை பின்பற்றுகின்றன என்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது.இதுபற்றி இங்கிலாந்தில் பேராசிரியர் அயன் வாக்கர் தலைமையில் நடந்த ஆய்வில் வெளியான தகவல்கள்:

Velicham students
                         பொதுவாக குழந்தைகள் அம்மாவின் நிழலில் வளர்வதால் அவரிடம் ஈர்ப்பு அதிகமாகிவிடுகிறது. அப்பாக்கள் கொஞ்சம் கடுமையாக நடந்து கொள்வதாலும், பெரும்பாலும் வீட்டில் இல்லாமல் போவதும் தாயின் தயவை தேடி குழந்தைகள் செல்ல காரணம். சிறு வயதில் ஏற்படும் இதுபோன்ற தாக்கங்கள் பெரியவர்களானாலும் மனதில் பதிந்து விடுகின்றன.

அம்மாவை தங்களது ‘ரோல் மாடல்’ ஆக குழந்தைகள் பார்க்கின்றனர். அம்மா செய்யும் ஒவ்வொரு செயல்களும் அவர்களை கவர்கிறது. இது படிப்பிலும் பிரதிபலிக்கிறது. இதோ, லண்டனில் 13 ஆண்டுகள் 43,000 இளைஞர்களிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்விலும் இதுதான் வெளிப்பட்டுள்ளது.

‘குழந்தைகள் பள்ளியில், கல்லூரியில் படிக்கும்போது, குடும்பத்துக்குள் தங்களது சந்தோஷங்களை பகிர்ந்து கொள்வது உட்பட எல்லாவற்றிலும் அம்மாவின் பிரதிபலிப்பு வெளிப்படுகிறது. இந்த விஷயத்தில் தாய், மகள் உறவு மிகவும் வலிமையாக உள்ளது.

ஆனால், தாய், மகன் உறவில் கொஞ்சம் வேறுபாடு இருக்கிறது. அம்மாவை விட அப்பா அதிகமாக படித்திருந்து, அதிகமாக சம்பாதித்தாலும் அம்மாவின் படிப்பும், செயல்களும்தான் குழந்தைகளுக்கு பிடித்து விடுகின்றன. குறிப்பாக பெண் குழந்தைகள் அம்மாவை பின்பற்ற பாலின சமத்துவமும் ஒரு காரணம்’ என்று ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
 நன்றி: தினகரன் 23.9.10

Leave a Reply