(வெளிச்சத்தின் கல்வி பயணத்தில் மேலும் ஓர் வெற்றி செய்தி)
ஏழை மாணவர்களின் வாழ்வை மாற்றிட கண்ணீரையும்,வலிகளை மட்டுமே சுமக்கிறது என்பது வெளிச்சத்தினை நன்கு அறிந்தவர்களுக்கு நன்றாக தெரியும் கூடவே மாணவர்களின் வாழ்கையை வசந்தமாக்குவது தான் வெளிச்சத்தின் லட்சியம் என எண்ணி வலிகளையெல்லாம் தாங்கிக்கொண்டு வெளிச்சம் பயணிப்பதை நீங்கள் அறிவீர்...மேலும் முதல்தலைமுறை மாணவர்களின் வாழ்வை மாற்ற வெளிச்சம் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் அற்புதமானவை என்பதை உங்களிடம் நிரூபிக்க கடமை பட்டுள்ளோம்..அதற்காகவே சில வெளிச்சத்தின் இடைவிடாத போராட்டங்களை இங்கு பதிவு செய்கிறோம்...
2004 ம் ஆண்டு முதல் வெளிச்சத்தின் கல்விகாண பணிகளின் அறுவடையாய் செந்தில் இன்று ஜூனியர் சைண்டிஸ்ட் என்பதையும் பதிவுசெய்கிறோம்.
2008 ம் ஆண்டு 30 மாணவர்கள் கல்லூரியை விட்டு ரோட்டில் நின்றதை வெளிச்சம் டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிக்கையில் செய்தி வெளியானது அதன் மூலம் அந்த மானவர்களின் கல்விக்கு உதவியது...
அதன்பிறகு 2009 ம் ஆண்டு 50 மாணவர்கள் கல்விக்கட்டாணம் செலுத்தமுடியாமல் படிப்பை இழக்க இருந்த சூழலில் வெளிச்சம் நிதி உதவிக்காக காத்திருக்கும் முதல்தலைமுறை ஏழை மாணவர்கள் என்கிற செய்தியை வெளியிட்ட தினமனி நாளிதழின் பேருதவியால் சில மாணவர்கள் படிப்புக்கு வழி பிறந்தது..இப்படியே மாணவர்களின் எண்ணிக்கை150 தொட்டபோது முதன் முதலாக வெளிச்சத்தின் முழு தகவலும் 16.1.09 அவள் விகடன் இதழ் கல்வி இல்லை என்பதும் ஊனம்தான் என செய்தி வெளியிட்டது என்பது மகிழ்ச்சிக்குறிய விசயம்...
அதன் பிறகு வெளிச்சம் தரும் மனுசி என குமுதம் நாளிதளிலும் செய்தியானது..ஒன்று இரண்டாகி இன்று 486 மாணவர்களின் கல்விக்கு வெளிச்சம் வழிகாட்டுகிறது..
அதிகமாகிபோன மாணவர்களின் கல்வியை காப்பாற்ற வெளிச்சம் மாணவர்களால் முதல் தலைமுறை மாணவர்களின் படிப்பை பாதுகாக்க திரைப்பட நடிகர் ஜெயம் ரவி அவர்களோடு சென்னை பத்திரிக்கையாளர் சந்திப்பு நடத்தியது அதற்கும் பலன் கிடைக்க வில்லை..ஆனால் கல்லூரிகள் கல்விக்கட்டணம் செலுத்தமுடியாததால் மாணவர்களை படிக்க விடாமல் கல்லூரியை விட்டு வெளியே அனுப்ப இருக்கிற சூழலில் வேறு வழியில்லாமல் 40 வெளிச்சம் மாணவர்கள் சென்னை போலீஸ் கமிஸ்னரிடம் தமிழகம் முழுக்க உண்டியல் குழுக்கிட அனுமதி வாங்கினோம்..அதன் படி சென்னை முழுக்க உண்டியல் ஏந்தினோம்..இச்செய்தி தமிழக அரசியல்,டெக்கான் குரேனிக்கல்,என்.டி,டிவி யிலும் செய்தியானது..வெளிச்சம் டிசம்பர் மாதம் முழுக்க ஏந்திய உண்டியல் செய்தி முதல்வரின் காதுகளில் விழுந்ததோ என்னவோ..ஜனவரி -6 ம் தேதி முதல்தலைமுறை ஏழை மாணவர்களின் கல்வியை அரசே ஏற்க்கும் என்று அறிவித்தார்கள்..அதனை தொடர்ந்து முதல்வருக்கு நன்றி தெரிவித்த முதல் அமைப்பு வெளிச்சம் தான்...
ஆனாலும் வெளிச்சம் பணி வேறு வழியில் தேடியது..அதன்படி தேவைப்பட்டது முதல்தலைமுறை ஏழை மாணவர்களின் கல்வியை அரசே ஏற்க்கும் அறிவிப்பில் அனைத்துக்கட்டனங்களையும் அரசே ஏற்க்க வேண்டும் என கோரிக்கை வைத்தது அச்செய்தி தினமனியில் ஜனவரி 17 அன்று செய்தியானது...ஆனால் 91 மாணவர்கள் கல்லூரியை விட்டு அனுப்பப்படுகிற சூழலில் வெளிச்சம் மாணவர்கள் அரியலூரிலும்,24 அன்று சென்னையில் பல்வேறு இடங்களில் (தலைமை செயலகம், முதல்வர் வீடு உட்பட)இந்த போஸ்டர் வெளிச்சம் மாணவர்களால் ஒட்டப்பட்டது..போஸ்டரில் வங்கி கடன் முழுவதுமாக கிடைக்காததாலும்,வறுமையால் கல்லூரிக்கட்டணம் செலுத்த முடியாததாலும் கல்லூரிப்படிப்பை இழக்க இருக்கிற முதல் தலைமுறை ஏழை மாணவர்களின் கல்விக்கு உதவுங்கள் என போஸ்ட்டரில் போட்டிருந்தோம்..22ம் தேதி உயர்கல்வி மானிய கோரிக்கை விவாத நாள் என்பதால் இச்செய்திவிவாதிக்க படவேண்டும் என நாம் திட்டமிட்டோம் போஸ்ட்டரில் உள்ள செய்திகளையே மனுவாக கொடுத்திருந்தோம்..
இந்த தொடர் முயற்சிகளின் அடிப்படையில் இந்த அறிவிப்பில் அடுத்த வருடம் கல்லூரியில் சேருகிற மாணவர்கள் மட்டும் தான் பயனடைவார்கள் என தமிழக அரசால் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.போராட்டங்களும்,தொடர்முயற்சிகளும் தோற்றதாக இல்லை என்பது வரலாறு...அதன்படி கல்விக்கான தொடர்பயணத்தில் வெளிச்சம் வெற்றி பெற்றுள்ளது என மகிழும் இந்த சமயத்தில் இன்னுமொரு விசயத்திற்க்காக கோரிக்கை வைக்கிறது.... அதன் கீழ் முதல் தலைமுறை மாணவர்களின் கல்வியை அரசே ஏற்கும் அரசாணையில் அடுத்த வருடம் கல்லூரியில் சேருகிற மாணவர்களுக்கு மட்டும் தான் இந்த விதிகள் பொருந்தும் ஆனால் இப்போது படித்து கொண்டிருக்கும் மாணவர்களின் வாழ்கை என்னாவது...
முதல்வரைய்யா! உங்களின் பேனா இப்போது பட்டினி கிடைப்பவனுக்கும்(கல்லூரிப்படிப்பை இழக்க இருகிற மாணவர்களுக்கும்) சேர்த்தே விதி செய்யட்டுமே...
கோரிக்கைகளோடு..
வெளிச்சம் மாணவர்கள்
(பத்திரிக்கை செய்திகளையும் புகைப்படங்களையும் http://velichamedu.wordpress.com இந்த இணைய தளத்தின் பத்திரிக்கை துளிகள் பக்கத்தில் காணலாம்)