பல லட்சம் மாணவர்களின் வாழ்க்கையை மாற்ற ஒரு போராட்டம் நடத்தி அந்த போராட்டம் வெற்றி பெற்றால் எவ்வளவு சந்தோசமிருக்குமோ அவ்வளவு சந்தோசத்தில் சிக்கித்தவிக்கிறது வெளிச்சம்… உறவுகளே! எங்களின் சந்தோசங்களை உங்களுக்கும் சமர்ப்பிக்கிறோம்.
வெளிச்சம் அமைப்பின் 7 ஆண்டுகால ஏழை மாணவர்களின் உயர்கல்விக்கான களப்பணியில் வெளிச்சம் மாணவர்களின் ஏராளமான அவமானங்களை சந்தித்திருக்கிறது ஆனால் இந்த பணியை விட்டுவிடவில்லை..
மூன்று வருடங்களுக்கு முன் வெளிச்சம் மானவர்கள் உண்டியல் ஏந்தியபோது அப்போதைய திமுக அரசுக்கு வைத்த கோரிக்கையை பரிசீலனை செய்து முதல்தலைமுறை மாணவர்களின் கல்விகட்டணத்தை அரசே ஏற்றது.. அதோடு நமது வேலை முடிந்துவிட்டது என்று நாம் முடங்கிவிடாமல் இனியும் பணம் எந்த மாணவர்களின் கல்வியையும் பாதிக்ககூடாது என கழுகு பார்வையோடு கண்காணித்த வெளிச்சம் ஏழைகளின் உயர்கல்விக்காக தொடர்ந்து போராடி வருகிறது… இந்த தொடர்பயணத்தில் 1000 க்கும் மேல் மதிப்பெண்கள் பெற்ற பல மாணவர்கள் பணமில்லாமல் தவித்ததை வெளிச்சம் ஆய்வு செய்து கீழ்கண்ட விசயங்களை முன் வைத்து 21.07.11 அன்று சென்னை பத்திர்க்கையாளர்கள் மன்றத்தில் 1000 த்திற்கும் மேல் மதிப்பெண் பெற்று கல்லூரிக்கட்டணம் செலுத்த முடியாமல் இருந்த 25 மாணவர்களை கொண்டு வெளிச்சம் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பை நடத்தியது வெளிச்சம்.. மேலும் இதன் தொடர்ச்சியாக தமிழக முதல்வர் மற்றும் உயர்கல்வித்துறை அமைச்சர்கள் கவனத்திற்கு எமது கோரிக்கையை கொண்டு சென்றோம். எமது கோரிக்கையை உயர்கல்வித்துறை அமைச்சர் திரு பழனியப்பன் அவர்களிடம் நேரடியாக எடுத்துரைத்தோம். எமது கோரிக்கையின் நியாயத்தை புரிந்துகொண்ட அமைச்சர் பரிரீலனை செய்வதாக உறுதி அளித்தார்…( முதல்வருக்கும், உயர்கல்வி அமைச்சருக்கு வெளிச்சம் அனுப்பிய மனுவின் நகல்கள்… )
அமைச்சரின் சந்திப்பிற்கு அவரின் மேல்நடவடிக்கைகளுக்காக காத்திருந்தோம்… ஒரு நல்ல விசயங்களுக்காக காத்திருந்தால் எல்லாம் நல்லதே நடக்கும் என்பது போல் நமக்கு நல்ல செய்து உயர்கல்வித்துறையிலிருந்து கிடைத்தது அது என்ன வெனில் ஆகஸ்ட் 9 தேதியான நேற்று தமிழகத்தின் பல்கலைகழக துணை வேந்தர்கள்,கல்லூரி முதல்வர்கள்,வங்கி மேலாளர்கள், உட்பட்ட பல உயரதிகாரிகள் கலந்துகொண்டதாகவும் தமிழகத்தின் ஏழை மாணவர்களின் கல்விக்காக உத்தரவு பிறப்பிக்கப்படும் என வெளிச்சத்திற்கு தகவல் கிடைத்தது… அதன் பின் நமக்கு கிடைத்த தகவல்கள் என்ன வெனில் வெளிச்சத்தின் அனைத்து கோரிக்கைகளின் அம்சங்களும் அப்படியே விவாதிக்கப்பட்டதாகவும் அவை அனைத்தும் அமல்படுத்தப்படபோவதாகவும் தகவல் சொன்னார்கள் இப்போ சொல்லுங்க உங்களுக்கும் சந்தோசம் தானே…நமக்கு கிடைத்த செய்தியை உறுதி செய்தது இன்றைய தினமல்ர் (9.8.11) செய்தி.. (அரசின் உத்தரவாக தினமலர் செய்தி) தமிழகத்தின் பல்லாயிரங்கணக்கான ஏழை மாணவர்களின் வாழ்க்கையை காப்பாற்ற வெளிச்சம் முன்வைத்த வெளிச்சம் அமைப்பின் கோரிக்கை ஏற்ற அமைச்சருக்கும், தமிழக முதல்வருக்கும் ஒட்டுமொத்த மாணவர்களின் உறவுகளாக வெளிச்சம் நன்றியை முன் வைத்து இந்த அறிவிப்பை அரசு உத்தரவாக்கிட வேண்டுமென இன்னொரு கோரிக்கையை முன் வைக்கிறது வெளிச்சம்… இது போன்ற நியாயமான கோரிக்கைகள் வெல்ல துணை நின்ற பத்திரிக்கையாளர்களின் போனாக்களின் எழுத்துக்களை வெளிச்சம் வணங்குவதோடு….. எம் நியாயமான கோரிக்கைகளுக்கு துணை நிற்கும் உறவுகளே உமக்கும் நன்றி நன்றி நன்றி……
நன்றியுடன்
ஏழைகளின் கல்விக்கன களப்பணியில்
வெளிச்சம் மாணவர்கள்
நமது கோரிக்கை மனு:
பத்திரிக்கையாளர்கள் சந்திப்பின் படங்கள்:
பத்திரிக்கை செய்திகள்: