செலுத்த முடியாமல் தவிப்பு
சென்னை : முதல்தலைமுறை மாணவர்கள் நிர்ணயிக்கப்பட்ட குறுகிய நாட்களில் பி.இ சேர்க்கை கட்டணம் செலுத்த முடியாமல் தவித்து வருகின்றனர். அரசு வழங்கும்
ணி 20,000 உதவித் தொகையை அரசு உத்தரவாதமாக கருதி, கட்டணம் வசூலிக்காமல் கல்லூரிகளில் சேர்க்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து வெளிச்சம் அமைப்பின் தலைவர் டி.செரின் கூறியதாவது: தமிழக அரசு தொழிற்கல்வி பயிலும் முதல் தலைமுறை ஏழை மாணவர் களுக்கு கல்வி உதவித்தொகையாக ணி 20,000 தொடர்ந்து வழங்கப்படும் என்று அறிவித்தது. இந்த தொகையானது கல்லூரிகளில் சேர்ந்த பின்னரே, பல மாதங்கள் கழித்துதான் வழங்கப்படுகிறது.
இதனால் முதல் தலைமுறை மாணவர்கள் கல்லூரிகளில் சேர்க்கை கட்டணம் செலுத்த முடியாமல் தவித்து வருகின்றனர்.
அதாவது, கவுன்சலிங் மூலம் கல்லூரிகளில் அட்மிஷன் கிடைத்தவுடனே முன்பணமாக ணி 5000 மற்றும் அடுத்த 10 அல்லது 20 நாட்களில் அந்த ஆண்டுக்கான முழு கல்வி கட்டணத்தை செலுத்த வேண்டும் என நிபந்தனை விதிக்கின்றனர். அப்படி குறிப்பிட்ட நாளில் கட்டணம் செலுத்தாவிட்டால் அவர்கள் கல்லூரிகளில் பயில அனுமதிப்பதில்லை.
இதேபோல் தமிழ்நாட்டில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் பிளஸ் 2 தேர்வில் 1000க்கும் மேல் மார்க் எடுத்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் நொந்துபோன மாணவர்கள் 8க்கும் மேற்பட்டோர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர்.
எனவே தொழில் கல்லூரிகளில் கவுன்சலிங் மூலம் அட்மிஷன் பெறும் முதல் தலைமுறை ஏழை மாணவர்களுக்கு அரசு வழங்கும் ணி 20,000 உதவித் தொகையை அரசின் உத்திரவாதமாக கருதி, மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்காமல் கல்லூரிகளில் சேர்த்துக்கொள்ள வேண்டும். மேலும் கல்வி கடன் பெறுவதற்கு ஏதுவாக போனபைடு (நம்பக) சான்றிதழ் உடனே வழங்க அரசு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
பாதிக்கப்பட்ட மாணவர்கள் ஆர்.ராஜா (தலைவாசல்) கூறுகையில், ÔÔஎன் பெற்றோர் கூலி வேலை செய்யும் தொழிலாளிகள். எனது தாயாருக்கு இருதய கோளாறு உள்ளது. தற்போது தந்தை மட்டுமே கூலி வேலை செய்து வருகிறார். டாக்டர் ஒருவரின் உதவி மூலமே நான் பிளஸ் 2 வரை படித்து முடித்தேன். தற்போது திடீரென 10 நாட்களில் ணி 20 ஆயிரம் கல்வி கட்டணமும், விடுதி கட்டணம் ணி 30,000 கேட்டால் நான் எங்கு செல்வது. கடனை சுமந்து, கல்லூரி படிக்க நினைத்தாலும் அதற்கு வங்கிகள் உடனே கல்வி கடனை தர மறுக்கின்றன. இதற்கு அரசு தான் ஏதாவது நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால், எங்களை போன்ற மாணவர்களின் வாழ்க்கை கேள்வி குறிதான்ÕÕ என்றார்.
பி.ராஜாகோபால் (தலைவாசல்) கூறுகையில், ÔÔகவுன்சலிங் வரும்போது, ணி 5000 முன்பணமாக கொண்டு வர வேண்டுமென தெரிவித்துள்ளனர். அவ்வளவு தொகைக்கு நான் எங்கு போவது. இதுவரையில் என் தாய் கூலி வேலை செய்து காப்பாற்றி வருகிறார். அவரும் தற்போது உடல்நலக்குறைவால் வீட்டிலேயே உள்ளார். நல்லா படித்து 1025 மார்க் எடுத்தும் மேல் படிப்பு படிக்க முடியவில்லையே என்ற மனவேதனையுடன் இருக்கிறேன். நான் கவுன்சலிங் கலந்து கொள்ள வெளிச்சம் அமைப்பு தான் செலவு செய்ததுÕÕ என்றார்.

நன்றி: தினகரன்