ஏழை மாணவர்களின் உயர்கல்விக்காக மட்டும் பாடுபடுவதுதான் வெளிச்சம் மாணவர்களின் நோக்கம் மட்டுமல்ல. குழந்தைகள், பெண்கள், இளைஞர்கள், பெரியவர்கள் என பல பகுதிகளான சமூகத்தின் உறவுகளோடு இணைந்து சமூக மாற்றத்திற்கு பாடுபடவேண்டும் என்பதுதான் நமது லட்சியம். விழுப்புரம் மாவட்டத்தில் வெளிச்சம் மாணவர்கள் பல்வேறு கல்லூரி மாணவர்களை சந்திக்கும் வாய்ப்பு விழுப்புரம் நகராட்சி வாயிலாக கிடைத்து 50க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்ட நிகழ்வி கலந்துரையாடல்
பெயர்களை மாணவர்கள் நலன் கருதி குறிப்பிடாமல் பதிவு செய்கிறோம்…
மணவர்களை நோக்கி, நீங்க உங்க வாழ்க்கை லட்சியமென்ன என வெளிச்சம் செரின் அவர்கள் கேட்க: அழகான பொண்ணை பார்க்கனும் காதலிக்கணும், சந்தோசமா இருக்கணும் வாழ்க்கை பூரா என்ஜாய் பண்ணனும் அவ்வளவுதான் வாழ்க்கை என்றனர் மாணவர்கள்..
மீண்டும் செரின் அவர்கள் நீ கல்யாணம் பண்ணிக்க போற பெண்ணு எப்படி இருக்கனும் என்ற கேள்வியை முன்வைத்தார்,
கண்ணு அழகா இருக்கணும், அவளை பார்த்துக்கிட்டே இருக்கணும், சும்மா கலரா நச்சுன்னு இருக்கணும் என்றார் ஒரு மாணவர். அவனை மடக்கி நீங்க காதலிக்கிறீங்களா என்றார் செரின் விடாது. ஆமாம் அக்கா நான் 8 ம் வகுப்பு படிக்கும் போதுதான் காதலிக்கணும்னு தோணுச்சி, அப்ப ஒரு பிகரை பார்த்தேன் பிடிச்சிருந்துச்சி காதல சொன்னேன், காதலிச்சோம் வீட்டுல பிரச்சனையாச்சி அவ பெத்தவங்க பேச்சை கேட்டுட்டு என்னை மறந்துட்டு போயிட்டா, கொஞ்ச நாள் அவளோட நினைப்பா சுத்திக்கிட்டு திரிஞ்சேன், இதை பார்த்துட்டு வேற ஒரு பொண்ணு என்னை காதலிக்கிறன்னு, அவளா! வந்து சொன்னா, நானும் முதல்ல வேணாம்னு சொன்னேன் பிறகு ஒரு பொம்பல புள்ளையே நம்மல பிடிக்கும் சொல்லும் போது நாம வேணாம்னு சொன்னா நம்மல அந்த பொண்ணு என்ன நினைக்கும் சரி விடு,விட்டுடு போனவள விட்டுத்தள்ளு, வர்றது வரவுன்னு நானும் ஒத்துக்கிட்டேன்.. காதலிச்சோம் சந்தோசமா இருந்தோம். நாம கல்யாணம் பண்ணிக்கிலாமான்னு கேட்டேன், அவ என்னை கல்யாணம் பண்ணிக்க முடியாது நான் உன்னை காதலிச்சேன் அவ்வளவு தான்னு சொல்லிட்டாள் அப்புறமென்னக்கா இப்போ இன்னொரு பொண்ணுக்கு ரூட் போடுறேன் பிக்கப் ஆக மாட்டங்குது.. எத்தனை முறை தோற்றாலும் காதல் ஒரு வகையான சுகம் அதனால தான் காடஹ்லிச்சி கல்யாணம் பண்ணனும் விரும்புறேன்… பிகரோட கண்ணப்பாத்து பேசுற சுகமிருக்கே அது தனி சுகம் அதுக்காக தான்என்ன மாதிரி எல்லா பசங்களும் ஏங்குறாணுங்க என்றான்..
அடுத்ததாக பேசிய மாணவர்கள் தனக்கு வர்ற மனைவி அல்லது காதலி எப்படி இருக்கனும் என்கிற கேள்விக்கு மீனா மாதிரி கண்ணு இருக்கணும், அழகா இருக்கனும். நச்சினு இருக்கனும், நாட்டு கட்டையா இருக்கணும் என்றார்கள் வாலிப வயசு கனவுகளோடு….
இதே கேள்வியை மாணவிகளிடம் (தங்களுக்கு வரபோகிற கணவர் அல்லது காதலன் எப்படி இருக்கனும்) கேள்விக்கு கேட்டோம்…
நல்லவரா இருக்கணும், நல்ல கேரக்டரா இருக்கணும், சந்தோசமா வச்சிருக்கரவரா இருக்கணும் என்றார்கள் மிக பொறுப்புடன், மைக்கை வாங்கிய அந்த பொண்ணு, அக்கா நாளுனாள் நம்ம பின்னாடி சுத்துறாங்க நாங்க பிடிக்களைன்னா அவ நல்லவ இல்லைண்ணு சொல்லுறது எந்த விதத்துல நியாயம் அக்கா?, பொண்ணுங்க நாளுபசங்கள்கிட்ட பேசினா பல் இழிக்கிறாங்கண்ண்னு சொல்லுறதும் ஏன்னு தெரியல, நாளு நாள் நல்லா பேசினா அஞ்சாவது நாள் ஐ லவ் யூ சொல்லுறீங்களே ஏன்..எங்களுக்கு பிடிச்சா பிடிச்சிருக்குண்ணு சொல்லுவோம் இல்லைன்னா பிடிக்கலைண்ணு தானே சொல்ல முடியும்,கம்பல் பண்ணுனா காதல் வராது...வெறுப்புதான் வரும் என்றார் தன்னை கம்பல்பண்ணியவர் கூட்டத்தில் இருந்தவருக்கு பதிலளித்தவராக…
இதற்கு பதிலளித்த வெளிச்சம் செரின்:
காதலிக்ககூடாதுண்ணு சொல்லலை அப்பா, அம்மா காசுல காதலிக்ககூடாதுண்ணுதான் சொல்லுறேன். பிள்ளை படிக்கிதுண்ணு கனவுகாணுகிற அம்மா, அப்பாவுக்கு என்ன தர போறீங்க… கண்ணீரையா? தெரியாம கேட்குறேன் கண்ணு பிடிச்சிருக்கு வாய்பிடிச்சிருக்கு,அது பெருசா இருக்குன்னு சொல்லுறீங்களே.. கொஞ்சம் கண்ணமூடி மீனா மாதிரி கண்ணை இன்னும் உற்று பாருங்க.. வெறும் சதையா,ரத்தமா இருக்கும். நீங்க சதைக்க்கு ஆசை படுறீங்களா...இல்ல? என்று பேசி முடித்தார்..
இறுதியாக:
அனைவரின் பேச்சை உன்னிப்பாக கவனித்த ஒரு மாணவன் நிகழ்ச்சி எப்படி இருந்து என பேசுவதற்காக மைக்கை வாங்கினான், வார்த்தைகளை மீறி கண்ணீர் தழும்பி வெளியேறியது.. அனைவரும் கூர்மையாக கவனிக்க ஆரமித்தனர் கூட படித்தவரின் குரலை கேட்க, நான் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போதிருந்தே ஒரு பொண்ணை காதலிச்சேன், நான் தொட்டது கூட இல்லை, நான் பன்னிரெண்டாம் வகுப்புல கம்மியான மார்க்கு எடுத்தேன், அவ பாண்டிச்சேரியில காலேஜ் படிக்கிறா, அவ என்னை பாக்குறதில்லை, அப்ப தான் என்னோட பிரண்ட்ஸ் சொன்னாங்க, நான் இத்தனை வருசமா காதலிச்சும் அவளை ஒரு முறை கூட தொடலையாம் அதனால நான் ஆம்பளையே இல்லைன்னு சொன்னாளாம்.. பிரட்ண்ஸ் காதலிக்கும் போது தொட்டு பேசரது பேசனா இருக்கலாம், ஆனா அது நாகரீகமில்ல பிரண்ட்ஸ், அவளுக்காக நான் வீணடிச்ச காலத்த நினைச்சாதான் தானா அழுகைவருது, நான் சந்திச்ச சம்பவத்தை நான் சொல்லனுமுனு தோணுது பிரண்ட்ஸ்.. நாளுவருசத்துக்கு முன்ன வளவனூர்க்கு போர வழியிலயே இருக்குற சவுக்கு காட்டுல இருந்து என்னோட பிரண்ட் போன்பண்ணி அவரசரமா சொன்னான்.. பதறிபோய் பைக்ல போனேன்.. அங்க போனதும் தான் தெரிஞ்சது அவன் அவன் லவ்பண்ணுற பொண்ணோட அங்க போயிருக்கான், அவங்க இரு ந்த இடத்துக்கு வந்த ஆறு பேர் அவனையும், உதவிக்கு போன என்னையும் பிடிச்சிக்கிட்டாங்க, அந்த பொண்னையும் எங்களோட கண்ணுமுன்னாலயே கெடுத்தாங்க,எவ்வளவே கதறினோம் விடலை, இப்ப அவங்க எங்க இருக்காங்கண்ணே தெரியல ஆனா நிச்சயமா உயிரோட இருக்கமாட்டாங்க, ஏன்னா சம்பவத்தை நேர்ல பாத்ததுனால சொல்லுறேன்.. காதலிக்கும் போது தெரிஞ்சோ தெரியாமலோ தப்புமட்டும் பண்ணிடாதீங்க என கையெடுத்து கும்பிட்டான் அந்த மாணவன்..
ஒரு பையன் எத்தனை பொண்னை காதலிச்சோம் என்பதும், ஒரு பொண்ணு எத்தனை பையன்கள தன் பின்னால சுத்தவிட்டிருக்கு என்பதும் பந்தாவா இருக்கலாம்.. ஆனால் உருப்படியா பெற்றோரின் கண்ணீரை துடைக்க என்ன செய்தோம் என்பது தான் மாணவர்களின் தலையாய கடமை…
இங்கு பள்ளிக்கு சென்று கல்வி கற்பது கண்டிப்பாக, வாழ்க்கையை கற்று தருவதில்லை...பன்னாட்டு நிறுவனங்களுக்கான இயந்திரங்களை உருவாக்குவதற்கே கல்விச்சாலைகள் பயன்படுகின்றன....
வாழ்க்கையை எல்லா பருவத்தையும் கடந்துதான் வரவேண்டும், வாழ வேண்டும்...அந்தந்த பருவத்திற்கேற்ற பக்குவத்தை தர கல்விச்சாலைகளிடம் போதாமை...ஆனால், அதே வேளையில் ஊடகங்கள் தமது பொறுப்பற்ற தன்மையோடு, போகிற போக்கில் கற்பனை அள்ளி தெளித்துக் கொண்டு போகின்றது...
ஆனால், பிள்ளைகளை மட்டும் குற்றம் சொல்லி சமூகம் தப்பித்துக் கொள்கிறது...
இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் பாலுறவு கொள்வதற்கான வயதை எது என்று தீர்மானித்திருக்கிறது, கல்வி முடிந்த பிறகென்றா...?
தம் உடலில் ஏற்படும் பௌதீக மாற்றத்தை குறித்து புரிந்து கொள்ளும் ஆற்றலை வளர்த்தெடுக்கும் செக்ஸ் கல்வி அவசிய தேவை...
இங்கிருக்கிற இந்துத்வ பண்டாரங்கள்....கோயில்களை ஆபாசங்களை சிற்பங்களாக வைத்துக் கொண்டு, காமசூத்ரா படைத்துக் கொண்டு களியாட்டம் ஆடிவிட்டு, ஒழுக்கத்தை உழைக்கும் மக்களிடம் மட்டும் எதிர்ப்பார்க்கின்றனர்...
இன்னும் இன்னும் விரிவான தளத்திற்கு இந்த பதிவு சென்றால் மகிழ்ச்சி
தகவல்கள் பயனுள்ளவை. உங்கள் பகிர்வுக்கு நன்றி.
//இங்கிருக்கிற இந்துத்வ பண்டாரங்கள்....கோயில்களை ஆபாசங்களை சிற்பங்களாக வைத்துக் கொண்டு, காமசூத்ரா படைத்துக் கொண்டு களியாட்டம் ஆடிவிட்டு, ஒழுக்கத்தை உழைக்கும் மக்களிடம் மட்டும் எதிர்ப்பார்க்கின்றனர்...//
உண்மைதான்..................