Archive for 2009

     ல்வியைக் காசாகவும், கருணையை ஓட்டாகவும் மாற்றுகிற”- இக்காலத்தில் கருணையைக் கல்வியாக்க பெருமுயற்சி செய்து வருகின்றனர் வெளிச்சம் அமைப்பினர்.ஆயிரம் மதிப்பெண் எடுத்தும் அரசு ஒதுக்கிய தொகையையும், ஹாஸ்டல் தொகையையும் கட்ட முடியாமல் தவித்துக்கொண்டிருக்கும் கிராமத்து முதல் தலைமுறை ஏழை மாணவர்கள் குறித்து 19.8.09 தேதியிட்ட ஜுனியர் விகடனில் மார்க் இருக்கு; ஸீட் இருக்கு... என்ற தலைப்பில் எழுதியிருந்தோம். அதன் மூலம் பயனடைந்த மாணவர்கள் தங்களுக்கு உதவியவர்களுக்கும், சமுதாயத்துக்கும் "நன்றியை" திருப்பிச் செலுத்தும் விழாவினை 15.11.09 அன்று லயோலா கல்லூரி வளாகத்தில் சிறப்பாகக் கொண்டாடியதோடு முதல் தலைமுறை கிராமபுற மாணவர்களுக்காக பத்திக்கையாள்ர் சந்திப்பையும் ஜெயம் ரவியை வைத்து நடத்தினார்கள்.



   திரும்பி சமூகத்திற்கு செய்வது பணியல்ல நமது கடமை! என்பதே இந்த வெளிச்சம் மாணவர்களது தாரக மந்திரம்.மாணவர்களுக்கு மனமுள்ளவர்கள் உதவ பத்திரிக்கையாளர் சந்திப்பில் திரைப்பட நடிகர் ஜெயம் ரவி கலந்துகொண்டு நான் எத்தனையோ பத்திரிக்கையாளர் சந்திப்புகளில் கலந்து இருக்கிறேன். ஆனால் என் வாழ் நாளிலேயே இன்றைக்குதான் நல்ல நிகழ்ச்சியில் நல்ல நோக்கத்துக்காக உங்களை சந்திக்கிறேன்..இந்த ஏழை மாணவர்களுக்கு உதவுங்கள்,இவர்களின் வாழ்கை வெளிச்சமாக உங்கள் பேனாவின் வரிகளால் மட்டும் தான் முடியும் என பத்திரிக்கையாளர்களிடம் ரவி சொன்ன போது மாணவர்களூம்,பத்திரிக்கையாளர்களும் மனமகிழ்ந்து போனார்கள்"

பத்திக்கையாளர் சந்திப்பில் பேசிய பெற்றவர்கள் இல்லாமலும் பார்வையில்லாமலும் படிப்பை வெளிச்சத்தால் கற்கும் மதுரை ஆண்டோ....  என்னுடைய பிறப்பென்பது என்னைப் போன்ற ஏழை மாணவர்களுக்கு உதவுவதாகவே இருக்கும்" என்பதோடு,  நான் பி.ஏ. படித்துவிட்டு மேல்படிக்க வழியில்லாமல் கிடைத்த வேலைகளை செய்து கொண்டிருந்தேன் ஆனால் இன்று வெளிச்சம் அமைப்பின் முயற்சியால் உதவி பெற்று  பி.எட்.படிப்பு படித்து வருகின்றேன் "கண்ணுடையார் என்பர் கற்றோர்" பார்வையற்ற எனக்கு இன்று கல்விக்கண்ணைத் தந்திருக்கின்றனர். " என்றார்.


    சென்னை பத்திரிகையாளர்கள்  சந்திப்பில் கலந்துகொண்ட ஜெயம்ரவி அவர்களிடம் நாம் பேசினோம்.." பல மாணவர்கள் வாழ்க்கையில் வெளிச்சம் அமைப்பு வெளிச்சம் ஏற்றி வைக்கிறதை பார்க்க முடிகிறது .கல்விச் செல்வம் இருந்தும் பொருட்செல்வம் இல்லாமல் தவிக்கும் இந்தஏழை மாணவர்களுக்காக பல ஸ்பான்சர்களின் உதவிகளை நாடிகொண்டிருக்கிறார்கள், ஸ்பான்சர்களே இந்த மாணவர்களுக்கு நேரடியாக உதவிகளை செய்திடுவதால் இங்கு தவறுகள் நடந்திட வாய்ப்பேயில்லை..வெளிச்சம்  பாலமாக மட்டுமே இருக்கிறது.இந்த மாபெரும் சேவையினை எந்தவித சிறுபயனையும் எதிர்பாராமல் செய்து வருகின்றனர். என்னால் முடிந்த உதவியினை இப்போது உதவி கேட்டு வந்திருக்கும் மாணவர்களுக்கு செய்ய இருக்கிறேன்.. மனமுள்ள  எல்லோரும் இம்மாணவர்களின் கல்விக்கு உதவி செய்ய வேண்டும் "என்றார்.

நன்றி அறிவிப்பு விழாவில் ஜூனியர் விகடனால் கல்லூரியில் சீட் கிடைத்து கல்வி பெறும்  மூன்று மாணவர்கள் சார்பாக ஜூனியர்விகடனுக்கு மாணவர்கள் நன்றிசெலுத்தினர்..

நம்மிடம் பேசிய  அறிஞர் அண்ணா  பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும் விஜயலெட்சுமி, நான் 917 மார்க +2 வில் எடுத்தேன். எனக்கு  செயின் ஜோசப் எஞ்ஜினியரிங் காலேஜில சீட் கிடச்சது.. பணம் கட்டமுடியாததுனால காலேஜி சேரமுடியல..அப்பதான் ஜீனியர் விகடன்ல அந்த கட்டுரை வந்துச்சி.. காலேஜில இருந்து உங்க ஆபிசுக்கு போன் பண்ணினாங்க அதனால தான் வெளிச்சம் அமைப்பு மூலமாக அறிஞர் அண்ணா  பொறியியல் கல்லூரியில சேர்ந்தேன்..இன்னைக்கு நான்,மதுரை ராஜேஸ்கண்ணா,திருவள்ளூர் அரினா, திருவாரூர் அருணா நாங்கள்லாம் படிக்கிறேன்னா அது உங்களாலயும்,வெளிச்சம் அமைப்பாலயும் தான் என கண்ணீர் மல்க முடித்தார்...

விழாவில் பேசிய தெய்வ நீதி என்கிற பச்சையப்பன் கல்லூரி மாணவர்....


எனக்கு அப்பா இல்லை.. பண்ணிரெண்டாம் கிளாஸ் முடிச்சதும்,என்னோட தம்பி கோயம்பேடு மார்கெட்ல  நான் படிக்க மூட்டை தூக்கினான்.. நானும் படிச்சேன்.  யூஜி முடிச்சதும் கோயம்பேடு மார்கெட்ல மூட்டை தூக்க நானும் வந்தேன்..அப்பதான் வெளிச்சம் அமைப்ப கேள்விப்பட்டேன்..நாடிபோனேன் பி.எட் படிச்சேன்.. இப்ப நான் காலையில 4 மணியில இருந்து 8 மணிவரைக்கும்  மார்கெட்ல மூட்டை தூக்கிட்டு கல்லூரிக்கு பேகிறேன் என்னை மூட்டை தூக்கி படிக்க வைச்ச தம்பியை நான் மூட்டை தூக்கி படிக்க வைக்கிறேன் இப்ப அவன் அரியலூர் ஆர்ட்ஸ் காலேஜில கெமிஸ்ட்றீ மூன்றாவது வருசம் படிக்கிறான்னு சொல்லிட்டு  நான் வெளீச்சத்துக்கு இந்த வருடம்  மார்க் எடுத்தும்,படிக்க முடியாமல் போக இருந்த பத்து மாணவர்களை கண்டுபிடிச்சி தந்தேன். என்ன மாதிரி நீங்களும் மத்தவங்களுக்கு பெத்தவங்களுக்கும் உதவியா இருக்கனும்னு சொல்லி அனைவரையும் கலங்க வைத்து விட்டார்..

நாம் பேசிய இன்னொறு மாணவன் கருப்பையா,
                          எனக்கு சொந்த ஊர் பெரம்பலூர் பக்கத்துல இருக்கிற சிறு நிலா கிராமம்.. எனக்கு ரெண்டு காலும் ஊனம் அதனால பண்ணிரெண்டாம் வகுப்புல 882 மார்க் எடுத்தேன் வெளீச்சம் அமைப்பின் மூலமா இப்போ அரியலூர் அண்ணா யுனிவர்சிட்டியில படிக்கிறேன்.. நான் தங்கிபடிக்க  வசதியில்ல மாசாமாசம்  ஹால்டல் பீஸ் கட்ட வசதியில்ல நான் எல்லாத்துக்கும் மனுகொடுத்தேன்.பலனில்லை இப்போ வெளிச்சம் ஆபிஸ்ல தங்கிட்டு தினம் 9 கிலோமீட்டர் வண்டியில வந்துட்டு போறேன்..ரொம்ப கஸ்டமாயிருக்கு.. வறுமையின் காரணமாக தினம் ரெண்டு வேலைகூட சாப்பிடாத்துனால வண்டிய ஓட்டவும்,படிக்க  முடியாம உடம்பு டயாடாகிடுதுனா..ஆனாலும் கஸ்ட்டபட்டாவுது படிக்கிறேண்ணா..பீஸ்கட்ட மேடம்  நிறையபேர்க்கிட்ட போறாக பரிச்சைவேற வந்திடிச்சி..பணம் கட்டாத்துனால பிள்ளைங்களுக்கு ஹால் டிக்கட் தராம பரிச்சைக்கு விடமாட்டேங்குறாங்கனா..நீங்கதான் நாங்கயெல்லாரும் படிக்க எதாவது பண்ணனும்னா.என்றான்

விழாவில் பேசிய பேராண்மைபட இயக்குனர் ஜெனநாதன்..

விழாவில் டைரக்டர் ஜனநாதன்
        வெளிச்சத்தை போல எனக்கு வெளிச்சம் கிடக்கல.. எங்க வீட்டுல மொத்தம் ஏழு பேர் அதுல நான் மட்டும் தான் அந்த காலத்து பியூசி படிச்சேன்..மத்தவங்க எல்லாரும் மூனாவது நாளாவது தான் படிச்சிருந்தாங்க..எங்க அம்மா நான் படிக்கனும்னு நினச்சாங்க..அது போலதான் வெளிச்சம் பிள்ளைகள படிக்கனும் அதுக்கு பணம் தடையில்லன்னு நெனைக்குது என்றவர்.. எங்கம்மாவுக்கு  சாவுர வரைக்கு  பேரே வைக்க  கிடையாது..எல்லா  கிராமத்து பிள்ளைகளல போல எங்கம்மாவுக்கு கட்டச்சி,மொட்டச்சின்னு பேருதான் நிலைச்சது.. அதுபோல போக இருந்த பிள்ளைகளுக்கு உதவியை நாடுது வெளிச்சம்..பணமில்லாத காரணத்தால் அறிவிருந்தும் இவர்களின் பார்வை பறிபோக கூடாது என்றார்.

வெளிச்சம் அமைப்பின் நிறுவனர் செரீன் கூறுகையில் ..
விழா படித்த மாணவர்கள் படிப்பதற்கு காரணமாக இருந்தவர்களுக்கு நன்றி செலுத்தினர்.   அந்தவகையில்தான் மார்க் இருக்கு சீட் இருக்கு கட்டுரை வந்தபிறகு ராஜேஸ்கண்ணாவிற்கு பீஸ் கலெக்ட் பண்ணி காலேஜில சேர்த்தோம்.. 
விஜயலெட்சுமி.அருணாஅரினா எல்லாம் படிக்க ஜீவிதான் காரணம்... மேலும் இந்த விழாவில் இயக்குனர் ஜென நாதன் மாணவ சமூகமே- "உனக்குள்?" என்கிற மாணவர்களின் சமூக -உளவியல் குறித்த மாநில அளவிலான பிரச்சார பயணத்தை மாதங்கள் துவங்கிவைத்திள்ளார்... இந்த பிரச்சாரம் சமீபகாலமாக அதிகரித்து வரும் மாணவர்களின் தற்கொலைகள்,  குறைந்து கொண்டிருக்கிற பெற்றவர்கள்- பிள்ளைகளுக்குமான உறவின் மகத்துவத்தை எடுத்துரைக்கவும் செய்யும்.. அதோடு இந்த வருடம் 188 கிராமத்து முதல் தலைமுறை மாணவர்களுக்கு நிதி உதவி தேவைப்படுகிறது. இதில்  66 பொறியியல் மாணவர்கள் மருத்துவ மாணவர்கள் உட்பட எல்லோரும் முதல் தலைமுறைமாணவர்கள். ஊரிலேயே அல்லது தலைமுறையிலேயே இவர்கள்தான் முதன்முதலாக கல்லூரிக்கு போகிறவர்கள்.. இவர்கள் அனைவரும் பல படிப்புகளிலும் சேர்ந்துவிட்டு பணம்கட்டமுடியாமல்  படிப்பைத் தொடர வழியில்லாமல் தவிக்கின்றனர்.  பருவதேற்வு சிலறுக்கு வந்துட்டுபணம் கட்டாத்தால ஹால் டிக்கட் கிடைக்காமல்பரிட்சை எழுதமுடியாமல் கஸ்ட்டப்படுறாங்க.. இதுல கொடுமை என்னான்னா எக்சாம் நம்பர் வந்தாதான் படிப்பை தொடரமுடியுமாம்.. இவர்களுக்குத் தேவைப்படும் நிதியினைப் வெளிச்சத்தால் பயன்பெற்ற மாணவர்கள் பலதரப்பட்ட மக்களிடமும் உதவியாகக் கேட்கவுள்ள்ளனர்.. குறிப்பாக  மக்களிடம்  உண்டியல் குழுக்கவும்நன்கொடையாளர்களை  சந்தித்து கல்லூரிகளுக்கே நேரடியாக பணத்தை செலுத்தவும் வழிசெய்து இம்மாணவர்களுக்கு உதவி செய்ய இருக்கிறோம். என்றார்..
இடஒதுக்கீடுகள்உள் ஒதுக்கீடுகள் எல்லாம் பொருள் ஒதுக்கீடு அற்றவர்கள் வாழ்க்கையில் எந்த ஒரு மாற்றத்தையும் ஏற்படுத்தாது போலிருக்கிறது?!  மனமுள்ளவர்களின் ஒதுக்கீடாவது இம்மாணவர்களுக்குக் கிடைக்குமா?  

 மேலும் சில படங்கள்: