Jul 2, 2011

சென்னை வீதிகளில்


வெளிச்சம் மாணவர்கள் தங்கள் அலுவலத்தில்  வாரவிடுமுறை நாட்களில்  சென்னை மாநகராட்சி  மாணவிகளுக்கு  ஆங்கில பயிற்சி  வகுப்பு  நடத்தி வருவதை தாங்கள் அறிவீர்கள். இதன் தொடர்ச்சியாக  சீமான் தங்கராஜ் கல்வி அறக்கட்டளை   நம்மை தொடர்பு கொண்டு  நாங்களும் இந்த பணியை மேற்கொள்வதாக சொன்னார்கள்,   நாம் தொடங்கியது தொடர்ச்சியாக இருக்கனும் எனும்   நம் கொள்ளகைக்கிணங்க..  பொரும் மகிழ்ச்சியோடு வெளிச்சம் மாணவர்கள்.. அவர்களின்  அலுவலகத்திற்கு சென்றோம்.. மாணவர்களுக்கான ஆங்கில பயிற்சி வகுப்பை பற்றியும், அதன் தேவையை 

பற்றியும்,  படிக்கும்  வயதில் மாணவர்களின்  மன நிலை, உடல் நிலை மாற்றத்தினை பற்றியும், பெற்றோர்கள் இந்த  வயதில் தான்  பிள்ளைகளோடு நண்பர்களாக இருக்க வேன்டிய அவசியம் பற்றியும்  

சென்னை  திரு.வி.க  நகர் பகுதிகளின் பல தெருக்களில்,   மாணவர்களின் கல்விக்குறித்த  பிரச்சாரத்தினை  வீடு வீடாக   மேற்கொண்டனர்.   

                   நமது பிரச்சாரத்தின் போது பல பெற்றவர்கள் நம்மிடம் வந்து கையெடுத்து கும்பிட்டதும்  நடந்தது  என்ன தான் தமிழ் நாட்டின் தலைநகரமாக சென்னை  இருந்தாலும் கல்வி இன்னும் பலருக்கு கனவாக இருப்பதை இன்னமும் காணமுடிகிறது... கல்விப்பணியில் கலப்பணி வீதிவீதியாக இல்லை வீடுவீடாக மேற்கொள்ளும் நிலை வந்தாலும்  மேற்கொள்ளுவோம்… 

நன்றியுடன்

வெளிச்சம் மாணவர்கள்








1 comment:

  1. //கல்விப்பணியில் கலப்பணி வீதிவீதியாக இல்லை வீடுவீடாக மேற்கொள்ளும் நிலை வந்தாலும் மேற்கொள்ளுவோம்…// வாழ்த்துக்கள்... வணக்கங்கள்...
    உங்கள் முயற்சி தொடர்க, என்னால் முடிந்த உதிவியை எப்போதும் செய்ய தயாராய் இருக்கிறேன்....

    ReplyDelete